சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மனசு பேசுகிறது : தையற்கடை Regist11


Latest topics
» ஹோலியும் ராதையும்
by rammalar Yesterday at 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Yesterday at 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Yesterday at 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Yesterday at 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Yesterday at 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Yesterday at 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

.
மனசு பேசுகிறது : தையற்கடை Khan11
மனசு பேசுகிறது : தையற்கடை Www10

மனசு பேசுகிறது : தையற்கடை

Go down

Sticky மனசு பேசுகிறது : தையற்கடை

Post by சே.குமார் on Tue 10 Nov 2015 - 9:16

மனசு பேசுகிறது : தையற்கடை Thaiyal%20tholil%201

தீபாவளி குறித்து கிராமத்து நினைவுகளில் நிறையப் பார்த்தாச்சு... விடிந்தால் தீபாவளி... ஊரில் அனைவருக்கும் சந்தோஷம்... இனிப்புக்களும் வெடிகளும் இன்னும் புது டிரஸூகளும் என சந்தோஷங்களைத் தாங்கிய தீபாவளி தினம் என்றும் இனிமையானதுதான். தீபாவளி குறித்தோ, வெடிகள் குறித்தோ நாம் இங்கு பேசப்போவதில்லை. புதுத்துணிகளையும் தையற்கடைக்காரர்களையும் பற்றி பேசலாம்.


சின்ன வயதில் பொங்கல், தீபாவளி என்றால் வீட்டில் அம்மா எடுக்கும் டிரஸ் மட்டுமல்லாது எனக்கும் தம்பிக்கும் அண்ணன் தைத்துக் கொண்டு வரும் டிரஸூம் உண்டு. அரவக்குறிச்சியில் இருந்து அண்ணன் எப்போது வருவார் எனக் காத்திருப்போம். வரும்போதே இருவருக்கும் டவுசர், சட்டை தைத்துக் கொண்டு வருவார். அப்போதெல்லாம் ரெடிமேட் டவுசர், சட்டை போடப்பிடிப்பதில்லை.இப்போது வரை தைத்துப் போடுவதுதான் பிடிக்கும். விடுமுறையில் ஊருக்குப் போகும்போது இரண்டு மூன்று சட்டை, பேண்டுகள் தைத்துக் கொண்டு வந்துவிடுவேன். இருப்பினும் கொஞ்சம் ரெடிமேட் துணிகளும் அணிய ஆரம்பித்தாச்சு. பெரும்பாலும் மனைவியின் விருப்பம் ரெடிமேட் பேண்ட்,சர்ட்டில்தான். இப்பல்லாம் அவர் தீபாவளி, பொங்கலுக்கு எடுத்துக் கொடுத்துவிடும் பேண்ட், சட்டை எல்லாம் ரெடிமேட்தான். அப்படியிருந்தும் இந்த முறை பேண்ட், சர்ட் துணி எடுத்து தைக்கவா என்றார். ஆசைதான்... இருப்பினும் அவரின் ஆசை ஒன்று இருக்கல்லவா அதனால் வேண்டாம் உன்னோட சாய்ஸ்ல ரெடிமேட்ல எடுத்துடு என்று சொல்லிவிட்டேன். துணிகள் எடுத்திருக்கு... தீபாவளி முடிந்ததும் நமக்கு வந்து சேரும். இங்கு தீபாவளியாவது பொங்கலாவது விடிந்தால் வேலைக்குச் செல்ல வேண்டுமே...

சரி வாங்க தையற்கடை, தையற்காரர் குறித்துப் பார்ப்போம். இப்ப ரெடிமேட் கடைகள் வந்த பிறகு தையற்கடைக்காரர்களுக்கு வேலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். பலர் கடைகளை மூடிவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்று விட்டார்கள். சிலரே இன்னும் அதே தொழிலில் இருக்கிறார்கள். தையற்காரர்களைப் பொறுத்தவரை தீபாவளி, பொங்கல்,கிறிஸ்துமஸ், நியூ இயர், ரம்ஜான், முகூர்த்த நாட்கள், பள்ளி ஆடைகள் தைக்கும் நாட்கள் இவையே மிகவும் பரபரப்பான, தூங்க நேரமில்லாத நாட்கள். இன்னும் பள்ளி ஆடைகள் மட்டும் ரெடிமேட்டில் வரவில்லை என்பதால் அந்தச் சமயத்தில் வேலை இருக்கு. அதிலும் பல பள்ளிகள் தாங்களே அளவெடுத்து துணியின் விலைக்கு மேல் பணம் வசூலித்து அவர்களுக்கு என்று வைத்திருக்கும் தையற்காரரிடம் தைத்துக் கொள்கிறார்கள்.எனவே அதுவும் இப்போது குறைந்துவிட்டது.  

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் முழு ஆண்டு விடுமுறையில் தையற்கடைக்கு வேலைக்குப் போய்விடுவேன். அம்மா வீட்டில் வைத்திருக்க விரும்பமாட்டார்கள்,ஏனென்றால் அப்போது நான், அக்கா, தம்பி மூவரும் படித்துக் கொண்டிருந்தோம்.விடுமுறை என்றால் எங்களுக்குள் அடிதடிதான்... மாடுகளை மேய்க்க வேண்டியிருந்ததால் எங்களையும் வைத்து மேய்க்க முடியாது என்பதால் ரெண்டு மாதம் எதாவது கடையில் போய் இருக்கச் சொல்வார்கள். சம்பளம் எல்லாம் தேவையில்லை. தம்பி பெரும்பாலும் போகமாட்டான். எனவே நான்தான் கடைக்கு வேலைக்குப் போவேன். ஆரம்பத்தில் அண்ணன் ஒரு தையற்கடையில் கொண்டு போய்விட, வருடாவருடம் தையற்கடைதான்... காஜா கட்டுவது, பட்டன் கட்டுவது,எம்பிங்க் பண்ணுவது, ஜாக்கெட்டுக்கு கொக்கி வைப்பது என எல்லா வேலையும் பார்க்க வேண்டும். நூல்கண்டு, பட்டன், என எல்லாம் வாங்கப் போகவேண்டும்.ஏன் டீ கூட வாங்கப் போக வேண்டும். அப்படிப் பழகி பழைய துணி தைப்பது,கைலி மூட்டுவது. சேலை முந்தி அடிப்பது என வேலையையும் கற்றுக் கொண்டேன்.

தேவகோட்டையில் நான் பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்தில் மிகப்பிரபலமான கடையாக இருந்தது, இப்பவும் நல்ல பெயரோடு இருப்பது மாமாவின் தையற்கடை. தீபாவளி, பொங்கல் என்றால் துணிகளைத் தைப்பதற்கு முடியாது என்று திருப்பிவிட்ட காலம் அது. மலைபோல் துணிகள் குவிந்து கிடக்கும்... ஏழெட்டுப் பேர் இரவு பகல் பாராது தைத்துக் கொண்டிருப்பார்கள்.மாமா துணிகளை வெட்டிக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அப்போதெல்லாம் தீபாவளிக்கு முதல்நாள் வரை இடைவிடாது வேலை இருக்கும். துணி டெலிவரி தீபாவளிக்கு முதல் இரண்டு நாள் மட்டுமே... வேலை பார்ப்பவர்களை அதற்கு நிறுத்த முடியாது என்னை என்னை வரச்சொல்லுவார்... அவரின் மைத்துனரும் வருவார்.. எங்களது வேலை கொண்டு வரும் கார்டில் நம்பர் பார்த்து துணியை எடுத்து சாம்பிளோடு சரி பார்த்துக் கொடுக்க வேண்டும். கூட்டம் கட்டியேறும்...கோபப்படாமல் பொறுமையாக எடுத்துக் கொடுக்க வேண்டும். தீபாவளிக்கு முந்திய இரவு விடிய விடிய துணிகளை எடுத்துக் கொடுத்துவிட்டு ஆட்களுக்கு கணக்குப் பார்த்து சம்பளம் கொடுக்கும் வரை நின்று விட்டு வருவேன்.

இரண்டு நாட்கள் முன்பாக கடைக்குப் போய்விட்டால் தீபாவளி அன்று அதிகாலையில்தான் வீட்டிற்குப் போவேன். பெரும்பாலும் தீபாவளி அன்று அதிகாலையில் லேசான மழையாவது பெய்து கொண்டிருக்கும். நமக்கு மழையில நனையிறதுன்னா அவ்வளவு சந்தோசமுல்ல... நனைஞ்சிக்கிட்டே போயிருவேன்.வீட்டுக்குப் போனா பலகாரம் பண்ணிக் கொண்டிருக்கும் எங்கம்மா, 'மாமா...மாமான்னு அங்க போயிக் கிடந்துட்டு நனைஞ்சிக்கிட்டு வருது பாரு எருமை...'அப்படின்னு திட்டுவாங்க. அப்புறம் அம்மாவுக்கு கொஞ்ச நேரம் பலகாரம் சுடுவதற்கு உதவியாய் இருந்து விட்டு படுக்கையைப் போட்டா காலையில எண்ணெய் தேய்த்துக் குளிக்க எழுந்திரிடான்னு யாராவது கத்துனாத்தான் எந்திரிக்கிறது. கல்யாணம் முடிந்த வருடம் தலை தீபாவளி, மாப்ள ஆளில்லை வந்திருங்கன்னு மாமா சொல்லிவிட, சரி உதவி பண்ணலாமேன்னு போனா ரெண்டு நாள் இரவு பகல் கடையிலதான்... தீபாவளி அன்று அதிகாலை அவர் தைத்துக் கொடுத்த சட்டை, ஸ்வீட் பாக்ஸ் என எல்லாம் எடுத்துக் கொண்டு மழையில் நனைந்தபடி வண்டியில் போன வீட்டில் எல்லாரும் திட்டுறாங்க...மனைவியோ எள்ளும் கொள்ளும் வெடிக்க நிற்கிறாங்க... தீபாவளிக்கு மாமனார் வீடு போயி எல்லாரும் வெடி அது இதுன்னு சந்தோஷமாக இருக்க, நாம அடிச்சிப் போட்டமாதிரி கெடந்து உறங்கியாச்சு. அடுத்த வருசம் அந்தக் கடைப்பக்கமே விடலையே.

அப்படித் துணிகள் குவிந்து கிடந்த கடையில, ரெடிமேட் கடைகள் அதிகம் வர வர.தைக்க வரும் துணிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. ஒரு மாதத்திற்கு மேலாக இரவு பகல் என தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த தையல்மிஷின்கள் எல்லாம் படிப்படியாக நாட்களைக் குறைத்து எனக்குத் தெரிய,அதாவது எட்டு வருடம் முன்பு பத்து நாள் நைட் வேலை பார்த்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டன. வீட்டிற்கே போகாமல் மனைவி சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க துணிகளை வெட்டிக் குவித்த மாமா கூட, கொஞ்சம் ஓய்வெடுக்க ஆரம்பித்தார்.

ஒரு முறை மாமாவைப் பார்க்கும் போது இப்ப எல்லாரும் ரெடிமேட்ல பேண்ட் எடுத்துடுறானுங்க... சட்டைக்கு மட்டும் இங்க வாரானுங்கன்னு எப்பவும் தைக்கிற ஆளுங்க வருது.. ஆனாலும் முன்ன மாதிரி இல்ல மாப்ள... தைக்கிறதுக்கு ஆள் கிடைக்கலை... பீஸ் ரேட்ல ஓட்டும்போது அதிகமா எதிர் பார்க்கிறாங்க...அவங்களுக்கு அவ்வளவு கொடுத்தா நமக்கு மிச்சமில்லைன்னு ரேட்டைக் கூட்டினாலும் இவ்வளவு கொடுத்து தைக்கிறதுக்கு பேசாம ரெடிமேட் எடுத்திடலாம்ன்னு நமக்கு முன்னாலே பேசிக்க்கிறானுங்கன்னு உண்மையாகவே வருத்தப்பட்டார்.

அவரிடம் வேலை பார்த்து இப்போ தனியாக கடை வைத்திருகும் உறவினப் பையன் ஒருவனும் முன்ன மாதிரி இல்லேண்ணே... நூறு சட்டை தைச்ச இடத்துல பதினைந்து இருபதே பெரிசாத் தெரியுது... இப்ப கேக்குற தையற்கூலிக்கு ரெடிமேட்லயே எடுத்திடலாங்கிற முடிவுக்கு வந்துட்டாங்க என்று ஒருமுறை பேசும்போது சொன்னார். உண்மைதான் 200 ரூபாய்க்கு பேண்ட் பிட் எடுத்துக்கிட்டுப் போனா 350 ரூபாய் தையற்கூலி, அதுக்கு இன்னும் ஒரு 200 சேர்த்து ரெடிமேட் பேண்ட் எடுத்திடலாம்ன்னு முடிவுக்கு வந்திடுறாங்க. அதுவும் நம்ம சைஸூக்கு தேவையான அளவுல கிடைப்பதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான டிசைன்களிலும் இருப்பதால் பெரும்பாலானவர்கள் அதை விரும்ப ஆரம்பித்து விட்டார்கள்.

இன்னைக்கு நிலைமையில் தையற்கடைகள் எல்லாம் காற்று வாங்க ஆரம்பித்துவிட்டன. ஏதோ சிலர் மட்டுமே இன்னும் தையற்கடைகளில் தைத்துப் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர் பட்டாளம் எல்லாமே ரெடிமேட் ஆடைகளுக்குள் ஐக்கியமாகிவிட்டன. நலிந்த கலைஞர்கள் போல் தையற்காரர்களின் தொழிலும் நலிந்து கொண்டே போகிறது.இன்னும் சில காலங்களில் தையற்கடைகள் எல்லாம் காணாமல் போய்விடும் என்பதே உண்மை.


சரிங்க... தங்களுக்கும் தங்கள்  உறவுகளுக்கும் நட்புக்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


மனசு பேசுகிறது : தையற்கடை Diwali-GIF-Animated-Images-Glitters-Live-Wallpapers-2015-5


இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

பாதுகாப்பான முறையில் சீனப் பட்டாசுகளைத் தவிர்த்து நம் சிவகாசிப் பட்டாசுகளை வெடித்து

சந்தோஷமாக கொண்டாட வாழ்த்துக்கள்.


 -'பரிவை' சே.குமார்
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1459
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது : தையற்கடை

Post by Nisha on Wed 11 Nov 2015 - 18:54

தையல் கடை அனுபவம் படித்ததும் என் நினைவுகளும் பின்னோக்கி போனது குமார்....!

நான் சின்னவளாயிருக்கும் போது கிறிஸ்மஸ்,புதுவருடம் என  அம்மா எங்க எல்லோருக்கும் எடுக்கும் புதுத்துணியில் மண்ணென்னெய்வாசனை வரும். கலர் கலரில் பூக்கள் போட்டிருக்கும் சீத்தை துணி என்பார்கள்.  நாங்க ஐந்து பெண்கள் என்பதால்  அத்தனை பேருக்கும் சட்டை தைக்க எத்தனை மீட்டர் துணி வேண்டுமோ மொத்தமாக் இரண்டு வகை  வித்தியாசத்தில் எடுத்து வருவார். 

ஒன்று கிறிஸ்மஸுக்கு, இன்னொன்று புது வருடத்துக்கு... ஆளுக்கு ஒரு சட்டை.. ஐந்து பேரும் யூனிவோம் போட்ட மாதிரி  சர்ச்சுக்கு போவோம்.  தைக்கும் அன்ரி.. கழுத்து, கையில் மட்டும் கொஞ்சூண்டு வித்தியாசம்  வைத்து தைப்பா! அத்தோட கொழும்பில் இருந்த எங்க அத்தை அப்பாவின் தங்கை ரெம்ப வசதியா இருந்ததால் அவவும் சில நேரம்  சட்டை தைத்து  அனுப்புவா.. ஆனால் எல்லோருக்கும் அனுப்ப மாட்டா!பெரும்பாலும் எனக்கு வரும். வீட்டில் மூத்த பெண் என்பதால் நான் போட்டவைகளை அடுத்து வருவோர் போடலாம் எனும் நல்ல எண்ணம் தான்.எங்க வீட்டில் அப்படித்தான் பெரும்பாலும் நடக்கும். 

தம்பிக்கு பெரும்பாலும் தவிட்டு கலரில்அல்லது டாக் நீலத்தில்  ஒரு சாட்ஸ், ரிசேட்  ரெடிமேட்டாக எடுப்பாங்க.  அப்பா வெளி நாடு வந்த பின் தான்  இந்த மாதிரி விழாக்காலத்தில் ரெட்மேட் துணி எடுக்க ஆரம்பித்தோம். அதாவது 12 வயதுக்கு முன்னாடி வரை  குடும்ப யூனிவோம் தான் எங்கள்  புத்தாடை.  

கிறிஸ்மஸ் எனில்  இறைச்சி சமைப்பாங்க.. பெரியம்ம்மா, ஆசம்மா குடும்பம் என 20, 26 பேருக்கும் மேல மதிய சாப்பாடு தடபுடலாயிருக்கும். அப்போதெல்லாம் இறைச்சி சமைத்தால் ஊரெல்லாம் மணக்குமே.. அதனால் பக்கத்து வீடு சொந்தக்காரங்க வீடுன்னு கொடுத்து தான் சாப்பிடுவது. 

கிறிஸஸ் கால க்ரோல் குழு  ... அதாவது இரவில் வீடு வீடா பாட்டு பாடி வருவாங்க... அவங்களுக்குக்கு கட்லெட் செய்வா அம்மா.. அப்போதெல்லாம் எதை பார்த்தாலும் சாப்பிட ஆசையாயிருக்கும் இப்ப எல்லாம் இருக்கும் ஆனால்சாப்பிடும் மனசு இல்லை. 

இன்றைக்கும் நாங்கள் திருமணம் போன்ற விசேஷம் எனில் தையல் காரரை தான் நம்பி இருக்கோம்பா.. கொழும்பில் போனால் கோட் சூட்  தைக்க..  ப்ளவர் கேர்ல்ஸ் எனும் குட்டிபெண்களுக்கு  ஒரே மாதிரி   நீண்ட  சட்டை தைக்க என இன்னும் தையல் காரரின்  தேவை இருக்க தான் செய்கின்றது.

கடந்த டிம்பரில் நான் எனக்கு பத்து செட்  சுடிதார் துணி எடுத்து தைக்க கொடுத்தேன்.   துணி வாங்கும் விலைக்கு அழகான சுடிதாரை வாங்கிரலாம், எக்ஸ்ராவாக லைனிங்க் துணி தையல் கூலியும் சேர்ந்தால் செலவு தான் எனினும் தையல் கூலியில் நான் பேரம் பேசுவதே இல்லைப்பா.  சொல்லும் காசை கொடுத்து விட்டு வருவேன். சேலைக்கு பிளவுஸ் தைக்கவும் இன்னும்  தையல் காரரை தானே நம்பி இருக்கோம் குமார்?

பொதுவாக என் அபிப்ராயம் என்ன வெனில் ரெடிமேட் எனில்  யூனிவோம் போல் ஒரு விழாவில் ல் ஒரே மாதிரி மாடல் பலர் போட்டு வருவார்கள். தைத்து போட்டால் நாம் மட்டும் வித்தியாசமாய் தெரிவோம் அல்லவா?தைத்து எடுப்பது கொஞ்சம் விலை ஜாஸ்தி தான் எனினும்  துணி மாடல் வித்தியாசமாய் இருப்பதனால் பெரும்பாலும் தைத்து எடுப்பது தான் இப்போதும் என் சாய்ஸ்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது : தையற்கடை

Post by சே.குமார் on Wed 11 Nov 2015 - 20:01

அன்பின் அக்காவுக்கு...

தங்கள் பால்ய கால நினைவுகள்... எல்லாருக்கும் ஒரே மாதிரியான ஆடை... எனக்கும் தம்பிக்கும் கூட பெரும்பாலும் ஒரே மாதிரி ஆடைகள்தான்... கிறிஸ்துவ பாடல் குழு... இலங்கையில் வாழ்ந்த அந்த சந்தோஷ வாழ்க்கை என நானும் தங்களின் நினைவோடையில் நீந்தி மகிழ்ந்தேன்...

எனக்கும் இன்னமும் தைத்துப் போடத்தான் பிடிக்கும்... பெண்களுக்கான தையல் கடைகள்தான் இன்று பணம் சம்பாரிக்கின்றன... 

நான் கூட நித்யாவிடம் அதுபோல் நாலும் மிஷின் போட்டு கடை போடலாமா என்று கேட்டேன்... அந்தளவுக்கு 200, 300 என சட்டைகளுக்கு கூலி...

இதை தங்களின் 'ஆல்ப்ஸ் தென்றல்' தளத்தில் பகிர்வாக ஆக்கியிருக்கலாமே... 
தனிப் பகிர்வுதான் இது....

அருமை அக்கா... அருமை.....

கருத்தாய் உங்கள் வாழ்க்கையை படித்து மகிழத் தந்தமைக்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1459
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது : தையற்கடை

Post by Nisha on Wed 11 Nov 2015 - 20:27

அருமையான ஐடியா குமார். நித்யாவுக்கு தையலில் ஆர்வம் இருக்கும் எனில் இது சூப்பர்  முதலீடும், சுய தொழில் வாய்ப்பும். கொஞ்சம் கலை உணர்வும் இருந்து விட்டால்  நன்கு சம்பாதிக்கலாம். 

எதில் நாம் நஷ்டப்பட்டாலும்  உண்ணும் உண்விலும் உடுத்தும் உடையிலும் போடும் முதலில் நஷ்டம் வராது என்பார்கள். அதற்கு ஏற்ப  உணவும் உடையும் அத்தியாவசியத்தேவை அல்லவா? 

 இங்கே திருமணமாகி புதிதாக வர இருக்கும் பெண்களுக்கு நான் சொல்லும் ஆலோசனை என்ன தெரியுமா? தையல் கற்று வாருங்கள்,  கைவேலை, மணப்பெண் அலங்காரம். கேக் அலங்காரம், மாலை கட்டுதல் போன்றவைகளை கற்று வந்தால் வீட்டிலிருந்த படியே  நன்கு உழைக்கலாம். 

என்ன தான் கற்றிருந்தாலும்  ஆர்வம், விடாமுயற்சி, பொறுமை எல்லாம் அடிப்படையாக இருக்கணும்பா..! நித்யாவிடம் நான் சொன்னேன் என சொல்லுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது : தையற்கடை

Post by நண்பன் on Sun 15 Nov 2015 - 10:53

தையல் பற்றிய குமார் அண்ணாவின் பதிவும் தீபாவளி வாழ்த்தும் கொஞ்சம் தாமதமாகத்தான் படிக்க கிடைத்தது வருந்துகிறேன் எப்படி இருந்தாலும் தையலும் அதன் பயன்களும் இன்றய கால கட்டத்தில் ரெடி மேட் ஆடைகளால் நாம் இழந்ததும் அதிகமே

நிஷா அக்காவின் அன்றய கால கட்டத்திற்குள் சென்று வந்தது போல் இருந்தது.  உங்கள் எழுத்திலும் அன்று நீங்கள் சமைத்த இறைச்சிக் கறி இன்னும் மணக்கிறது   அவ்வாறு சமைத்து குடும்ப உறவுகள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக விழாவாக சாப்பிடுவது எவ்வளவு பெரிய சந்தோசம்  

சுவாரசியமான தகவல் பகிர்வுகள் சேனையில் தொடர்கிறது என்னால்தான் படிக்க முடியிறதில்லை வருந்துகிறேன்
தொடருங்கள் அண்ணா தொடருங்கள் அக்கா
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது : தையற்கடை

Post by Nisha on Sun 15 Nov 2015 - 12:20

நாங்கள் என்றும் போல் இங்கே பதிவுகள் இடத்தான் செய்கின்றோம் அதை படிக்கத்தான் யாரும் இல்லை. அதற்கு என்ன தான் செய்வது? 

கருத்துக்கு நன்றி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது : தையற்கடை

Post by நண்பன் on Sun 15 Nov 2015 - 18:37

Nisha wrote:நாங்கள் என்றும் போல் இங்கே பதிவுகள் இடத்தான் செய்கின்றோம் அதை படிக்கத்தான் யாரும் இல்லை. அதற்கு என்ன தான் செய்வது? 

கருத்துக்கு நன்றி.

உங்கள் ஆதங்கம் புரிகிறது என்ன செய்வது
நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை ஆறுதல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மனசு பேசுகிறது : தையற்கடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum