சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது Khan11

எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது

4 posters

Go down

எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது Empty எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது

Post by paransothi Wed 23 Dec 2015 - 21:32

வேட்டையாடு விளையாடு � புட்டான்

சின்ன வயசு நடந்த சம்பவங்களை இப்போ நெனச்சி பார்த்தாலும் சந்தோசமாகத் தான் இருக்குது.

கிராமம் என்றாலே அங்கே வெளையாட்டும் வேட்டையாடுதலும் இல்லாம இருக்காது.

என்னுடைய மொத வேட்டையாடுதல் எப்படி தொடங்கிச்சின்னா, புட்டான் (தும்பி) பிடிக்கிறதிலயும், கலர் கலர் ஈ பிடிக்கறதிலயும் தான்.

புட்டான் பிடிக்கும் கலையே தனிதான், செடியில் அமர்ந்திருக்கும் புட்டானை, சவுண்டே வுடாம நைசா பூனைக்கணக்கா கிட்ட போய், அதன் வாலை பிடிக்க வேண்டும், பிடித்தவுடன் உடனே அதன் ரக்கையை பிடிக்கணும், இல்லேன்னா வெட்டருவா புட்டான் கடிச்சிபுடும். நான் கடியும் வாங்கியிருக்கேன்.

புட்டான்கள் பலவகையுண்டு. சின்னதா இருப்பது கொசு புட்டான், அதை பிடிக்கிறது மகா கஷ்டம். அப்புறம் மஞ்ச நிறத்தில் இருக்கிறதுக்கு பேரு எங்க ஊரில் திருடன், ஊதா நிறத்தில் திருடன் சைசிலேயே இருக்கும் புட்டானுக்கு போலிஸ்காரன்னு பேரு, காரணம் ஊதா புட்டானை கண்டதும் மஞ்ச புட்டான் பறந்துடும். அப்புறம் டேஞ்சர் புட்டான் நம்ம வெட்டருவா தான்.

வெட்டருவா புட்டான் பச்சை நிறத்தில் போலிஸ் திருடனை விட கொஞ்சம் பெரிசா இருக்கும். மகா மோசமான புட்டான், அவன் கிட்ட போலிஸ், திருடன், கொசு இப்படி யாரு மாட்டினாலும் கடிச்சு துன்னுபுடுவான்.

அப்புறம் செல சமயம் நல்ல கலர் கலரா புட்டாங்கள் வரும், வந்துட்டா, யாரு நல்ல அழகான புட்டான் வச்சிருக்கானோ அவனுக்கு தனி மரியாதை, அந்த பயவுள்ள ராத்திரி அதை ஒரு அட்டை பெட்டியில் வைத்திருப்பான், காலையில் பார்த்தால் எறும்புங்க தின்னுட்டி இருக்கும்.

வைக்கப்டப்பு இருக்கிற இடத்துல செவப்பு நெறத்துல நிறைய புட்டாங்கள் பறக்கும், அதை நாங்க வெளக்குமாரு வைச்சி அடிச்சி புடிப்போம்.

நான் பயப்படுகிற புட்டானே, அந்த மல புட்டான் தான். அதை மலை புட்டான்னு சொல்லுறதா இல்லை மழை புட்டான்னு சொல்லுறதான்னு இன்னும் கொழப்பம் இருக்குது, சிவாகிட்ட தான் கேட்கணும்.

மழை பேஞ்சா ஒடனே வந்துடும், அய்யோ ராத்திரி லைட் மேலே மோதிகிட்டே இருக்கும், திடிரென்று ராக்கெட் வேகத்தில் கீழே பாயும், நான் பயந்து ஓடுவேன். செல சமயம், நம்ம மேலே, சட்டையில் இருக்கும், அதை தம்பி சொல்ல, அய்யோ, குய்யோன்னு சட்டையை கழட்டி போட்டு ஓடுவேன். அப்புறம் அம்மா வெளக்குமாத்தை கொடுக்க, வீராதி வீரன் என் தம்பி, தைரியமாக அதை அடித்து ஒரு கையால் பிடிச்சி வெளியே வீசிடுவான், அடுத்த நாள் எங்க வீட்டு எறும்புகளுக்கு பிரியாணி தான்.

செல சமயம், நம்ம கூட்டாளிங்க மழை புட்டானை பிடிச்சிட்டு வந்து அதன் வாலில் நூலை கட்டி விடுவான்க, அது அங்கேயும் இங்கேயும் ஓடும், செல பயலுக நூலை இழுக்க, வால் அறுந்துடும், அவனை போட்டு சாத்து சாத்துன்னு சாத்துவோம். செல சமயம் புட்டான் பறந்து வேப்ப மரத்து உச்சிக்கு போயிடும், நாங்களும் விட்டுட்டு அடுத்த் ஆட்டத்துக்கு போயிடுவோம்.

எங்க ஊரு கோயிலு கொடை வந்துட்டா போதும், கிடா வெட்டுவாங்க தானே. விழா முடிஞ்சதும், எங்க கூட்டாளிகள் எல்லாம் காட்டுக்குள்ள மண் கோயில் கட்டுவோம், மண் சட்டியில் பேப்பரை ஒட்டி, கொட்டு தயார் செய்வோம், பூவரசு எலையை எடுத்து பீப்பீ செய்வோம், ஆளுக்கு ஒரு இசைக்கருவி.

அப்புறம் சாமியாட ஒருவர், விபூதி, சாம்பிராணி, சாமி எல்லாம் தயார், அப்புறம் கிடாவுக்கு எங்கே போறது, இருக்கவே இருக்குது நம்ம புட்டான்கள்.

நாங்க புட்டான்களை புடிச்சிட்டு வந்து கொடுக்க, சாமியாடி ஆடிக்கொண்டே கிடா வெட்டுவார், நல்ல பனைமட்டை ஓரத்தில் இருக்கும் கருக்கை கத்தியாக்குவார், ஒரே வெட்டு, தல துண்டாயிடும், இப்படி 20, 30 கிடா வெட்டுவார்.

இதை ஒரு நாள் எங்க அம்மா கிட்ட யாரோ போட்டு கொடுக்க, எங்க வீட்டில் பெரிய பூசையே நடந்தது, அப்புறம் ராத்திரி ஒரு கதை சொன்னாங்க.

ஒரு முனிவராம், ரொம்ப ரொம்ப நல்லவராம், ஒரு முறை அவர் தவறே செய்யாமல் ஒரு அரசர் அவரை பிடிச்சி, மரத்தில் கட்டி வைத்து உடம்பு எல்லாம் ஈட்டியால் குத்தச் சொல்லி கொன்னுடுவார், முனிவரும் கொடுமைகள் எல்லாம் அனுபவிச்சு, செத்து சித்திரகுப்தனிடம் போவார், அங்கே போய் அவரிடம் சண்டை போடுவார், நான் ரொம்பவும் நல்லவன், எப்போவும் இறைவனையே வேண்டுபவன், எப்படி என்னை அந்த அரசன் கொடுமைப்படுத்தி கொன்றான், நான் என்ன பாவம் செய்தேன் என்று கேட்டாராம்.

அதுக்கு சித்திரகுப்தன் ரிஜிஸ்டரை எடுத்து தேதி வாரியாக சின்ன வயசில் நீர் புட்டான்களை பிடிச்சி கொன்னிருக்கீரு, அதான் உமக்கு இந்த தண்டனை என்றாராம்.

இதை சொல்லிட்டு அம்மா, அய்யா! அந்த முனிவருக்கே இந்த தண்டனை என்றால், உனக்கு எப்படி எல்லாம் தண்டனை கிடைக்கும், நினைச்சு பாரு, இனிமேல் அப்படி செய்யாதே, பாவமுண்ணு ஒரு அறிவுரையோடு கதையை முடிச்சாங்க, நானும் அத்தோடு புட்டான்களை கொல்லுறதை விட்டுட்டேன், ஆனா கருந்தேள் பிடிக்கத் தொடங்கிட்டேன். ஏன்னா, தேளை கொன்னா தண்டனைன்னு அம்மா கதை சொல்லலையே?

அது அடுத்த கதை, கருந்தேள், மஞ்ச தேளை எப்படி புடிப்போமுன்னு வெளாவாரியா அடுத்தவாட்டி சொல்றேன்.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது Empty Re: எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது

Post by Nisha Wed 23 Dec 2015 - 21:38

பூட்டான் என்றால் என்ன.? மழைக்காலங்களில் பறக்கும் தும்பியா? அட என் தும்பியை கேட்கவில்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது Empty Re: எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது

Post by paransothi Wed 23 Dec 2015 - 21:40

அதே தான், தும்பி

எங்க ஊரில் புட்டான் என்போம்.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது Empty Re: எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது

Post by Nisha Wed 23 Dec 2015 - 21:44

தும்பி குறித்த ஆராய்ச்சியும் பூட்டானுக்கு பயப்பட்டு ஓடிய உங்கள் வீர தீர பராக்கிரமங்களும் அறிந்து சிரித்து விட்டேன். 

இன்னும் எழுதுங்கள் அண்ணா..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது Empty Re: எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது

Post by paransothi Wed 23 Dec 2015 - 21:52

புட்டான் மட்டுமா பிடிச்சோம், தேள், பாம்பு, எலி, குருவி, அணில் என்று ஒரு ஜீவனையும் விட்டு வைக்கவில்லை.

paransothi
புதுமுகம்

பதிவுகள்:- : 43
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது Empty Re: எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது

Post by Nisha Wed 23 Dec 2015 - 23:49

அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது Empty Re: எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Dec 2015 - 8:02

அருமை அருமை தும்பிக்கு புட்டான் என்று சொல்வதை இப்போதுதான் அறிந்தேன் அதுவும் மழைக்காலம் வந்தால் பல வண்ண வண்ணாத்திப் பூச்சிகளைப் பிடித்து விளையாடும் நாட்கள் ஞாபகத்திற்கு வந்தது மிக்க நன்றி


எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது Empty Re: எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது

Post by நண்பன் Thu 24 Dec 2015 - 9:20

Nisha wrote:பூட்டான் என்றால் என்ன.? மழைக்காலங்களில் பறக்கும் தும்பியா? அட என் தும்பியை கேட்கவில்லை!
அக்கா அண்ணன் சொன்னது இவரையா?

எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது Dragonfly%2B%252811%2529
இதில் எது புட்டான் 

எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது Ilai_poochi


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது Empty Re: எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது

Post by நண்பன் Thu 24 Dec 2015 - 9:30

அன்று நடந்தவை அப்படியே அச்சும் பிசுகாமல் எழுதியுள்ளீர்கள் அண்ணா அருமையான பசுமையான நினைவுகள் ஆனால் அந்த நினைவுகளை இரவு பதிந்தீர்கள் நித்திரை மயக்கத்தில் நான் வாசித்தேன் கருத்திட முன்பு தூங்கி விட்டேன்  பேசிக்கொண்டிருக்கும் போதே தூங்கும் பழக்கமுடையவன் நான் என்பதை உங்கள் தங்கையிடம் கேட்டுக்கொள்ளுங்கள் ஆமா தூங்கு மூஞ்சின்னு அக்கா செல்லமாக அழைப்பார்.

உங்கள் பசுமையான நினைவுகளில் உங்கள் அம்மா உங்களுக்கு சொன்ன கதை  ஒரு முனிவராம், ரொம்ப ரொம்ப நல்லவராம், ஒரு முறை அவர் தவறே செய்யாமல் ஒரு அரசர் அவரை பிடிச்சி, மரத்தில் கட்டி வைத்து உடம்பு எல்லாம் ஈட்டியால் குத்தச் சொல்லி கொன்னுடுவார், முனிவரும் கொடுமைகள் எல்லாம் அனுபவிச்சு, செத்து சித்திரகுப்தனிடம் போவார், அங்கே போய் அவரிடம் சண்டை போடுவார், நான் ரொம்பவும் நல்லவன், எப்போவும் இறைவனையே வேண்டுபவன், எப்படி என்னை அந்த அரசன் கொடுமைப்படுத்தி கொன்றான், நான் என்ன பாவம் செய்தேன் என்று கேட்டாராம்.

அதுக்கு சித்திரகுப்தன் ரிஜிஸ்டரை எடுத்து தேதி வாரியாக சின்ன வயசில் நீர் புட்டான்களை பிடிச்சி கொன்னிருக்கீரு, அதான் உமக்கு இந்த தண்டனை என்றாராம்.

இதை சொல்லிட்டு அம்மா, அய்யா! அந்த முனிவருக்கே இந்த தண்டனை என்றால், உனக்கு எப்படி எல்லாம் தண்டனை கிடைக்கும், நினைச்சு பாரு, இனிமேல் அப்படி செய்யாதே, பாவமுண்ணு ஒரு அறிவுரையோடு கதையை முடிச்சாங்க, நானும் அத்தோடு புட்டான்களை கொல்லுறதை விட்டுட்டேன்


ஹா ஹா பாதி நித்திரையில் உங்கள் கடந்து வந்த பாதையைப் படித்துக்கொண்டிருக்கையில்  முனிவரின் கதையைப் படித்து முடித்த கனமே தூக்கம் போய் விட்டது நானும் பல தும்பிகளை பிடித்து விளையாடி கொண்டிருக்கிறேன் வாலில் நூலைக் கட்டி பறக்க விட்டிரக்கிறேன்  எனக்கும் முனிவரின் நிலைதானா என்ற சிந்தனையில் உறக்கம் போய் விட்டது.


இன்னும் இது போன்ற பசுமையான நினைவுகளைப் பகிருங்கள் அண்ணா 
கருத்தேள் பிடித்திங்களா  பயம் பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது Empty Re: எனது நினைவலைகள் - புட்டான் பிடிச்சது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum