சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 Khan11
ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 Www10

ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Go down

Sticky ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by Nisha on Sat 9 Jan 2016 - 17:52

ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 800px-LocationSwitzerland.svg
உலக வரை படத்தில் சுவிஸ்ஸர் லாந்த்
படம் நன்றி  இணையம்

பிறப்பால் இந்திய இலங்கை கலப்பிலும் வளர்ப்பால் முழு சுவிஸ் காரியாகவும்  கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக என்னுடைய வாழ்க்கையில் மூன்றில் இரண்டு பகுதியை சுவிஸ்லர்லாந்து தேசத்தில்  கழித்து  சுவிஸ் குடியுரிமையும் பெற்ற என்னிடம் உன் சொந்த நாடு எது என கேட்டால் தயக்கமில்லாமல் சொல்வேன்! என் நாடு சுவிஸ்லர்லாந்தென...!

எனக்குள் அத்தனை தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தந்து புலம்பெயர்ந்தவர்களென ஒதுக்கி வைக்காமல் எங்கள் திறமைக்கும், அறிவுக்கும் இடம் கொடுத்து எம்மை ஊக்கப்படுத்தும் அன்பான, பண்பான மக்களை கொண்ட தேசம் இது. சொந்த நாட்டில் கிடைக்காத சுதந்திரமும், நிமிர்ந்த நேர் கொண்ட பார்வையும், பாரதி சொன்ன புதுமைபெண்ணாய், எதற்கும் அஞ்சாத தைரியமும் இந்த நாடு எனக்கு தந்த அளப்பரிய பரிசில்கள்.

உன்னால் முடியும், உன்னாலும்முடியும், உன்னால் தான் முடியும் என என்னை எனக்குள் இருப்பதை வெளிக்கொணர்ந்து என்னை வானம் தொட வைத்த அன்பான நட்புக்களை கொண்ட நாடு இது.

நிறைகள் போல் குறைகளும் இருந்தாலும்  நிறைவானது வரும் போது குறைவானது மறைந்தே போகும் படியாய்  நாட்டுப்பற்றுக்கொண்ட மக்களை கொண்ட நாடு இது!

இயல்பிலேயே அன்பில் ஊறிய இம்மக்கள் வந்தாரை வாழவைக்கும் தர்மப்பிரபுக்கள் என்றாலும் மிகையில்லை.புலம்பெயர்ந்து அகதியாய் வரும் ஒருவருக்கு உலகில் எங்குமே கிடைக்காத வசதிகளையும், வாய்ப்பையும், பாதுகாப்பையும் தரும் அருமையான தேசம் இது,

இந்த நாட்டைக்குறித்தும் இதன் சிறப்புக்கள் குறித்தும் எனக்கு தெரிந்த வரை சிறு தொடராய் இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன்!

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் உறவுகளே!

இப்பதிவை படிப்பவர்கள் இந்த நாட்டை குறித்து அறியும் ஆர்வத்தோடு படித்து கருத்துக்களை இட்டால் மகிழ்வேன்.

சுவிஸ்ஸர்லாந்த்
Switzerland

ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 Switzerland
சுவிட்சர்லாந்து (Switzerland) அல்லது சுவிஸ் கூட்டமைப்பு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

சுவிஸ் நாட்டின் எல்லைகளாக வடக்கே ஜேர்மனி, மேற்கே பிரான்ஸ், தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லெய்செஸ்டீன் ஆகிய நாடுகள்உள்ளன.
ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 800px-KARTE_schweiz_verwaltungsgliederung
                           சுவிஸர் லாந்தை சுற்றி இருக்கும் தேசங்கள்...
                                                      படம் நன்றி  இணையம்

சுவிட்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு .ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது.

41,285 சதுர கிமீ பரப்பளவில் தோராயமாக 8,014,000 மக்கள் தொகை (2012) கொண்ட நாடு.1,853,400 மொத்த மக்கள் தொகையில் (23 %) வெளி நாட்டவர்களை கொண்ட நாடு!

சுவிஸ் நாடு 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி குடியரசு ஆகும்.

கூட்டமைப்பின் அதிகாரத் தலைமையிடமாக பெர்ன் நகரமும் நாட்டின் பொருளாதார மையங்களாக இரண்டு உலகளாவிய நகரங்களான ஜெனீவாவும் சூரிச்சும் திகழ்கின்றன!

ஆட்சி மொழிகளாக ஜேர்மன், பிரெஞ்ச், இத்தாலி, உரோமன் போன்ற மொழிகள் உள்ளன!

சுவிஸ் நாடு அதன் மொழிகளுக்கு ஏற்பவே ஆழைக்கப்படுகின்றது.

Schweiz..ஜேர்மன்
Suisse.. பிரெஞ்சு
Svizzera.. இத்தாலி
Svizra.. உரோமன்
Switzerland.. ஆங்கிலம்

ரோமன் கத்தோலிக்க, புரொடஸ்டான் கிறிஸ்த்தவர்களை அதிகம் கொண்ட நாடு இது!எனினும் மதவிடயத்தில் அவரவருக்காக தனிப்பட்ட சுய நிர்ணய உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடும் இதுவே!

கிறிஸ்தவ நாடென சொன்னாலும் கிறிஸ்தவர்கள் என்பதனால் சட்டங்கள் இளகுவதுமில்லை அன்னிய மதத்தார் என்பதனால் இறுக்குவதும் இல்லை.!

தனி மனித சுதந்திரம் பொது நன்மைக்கும் சட்டத்துக்கும் உறுத்தலாய் ஆகாத வரை மதங்களை மதிக்கும் மக்களை கொண்ட தேசமும் இதுவே!

சுவிஸ்ஸர் லாந்த் என்றால் சட்டென நினைவுக்கு வருவது வங்கியும் கறுப்புப்பணமும்,ஹனிமூன்  ஜோடிகளும் தான்!

அதையும் தாண்டினால் மாட்டின் கழுத்தில் கட்டும் மணி, சாக்லேட், வாட்ச் என   நினைவில் வந்து மறையும்.

தொடர்வேன்!

http://alpsnisha.blogspot.ch/2016/01/blog-post_9.html


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by நண்பன் on Sat 9 Jan 2016 - 18:28

சுவிஸ்ஸர் லாந்த் என்றால் சட்டென நினைவுக்கு வருவது வங்கியும் கறுப்புப்பணமும்,ஹனிமூன்  ஜோடிகளும் தான்!
என்றாலும் எனக்கு மிகவும் பிடித்த நாடுகளில் சுவிஸ் லாந்தும் ஒன்று அமைதியான சூழல் எங்கும் அமைதி எதிலும் அமைதி  இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் விமானம் ஏற்றவும் இறக்கவும் தடை விதித்துள்ளது என்றால் பாருங்களேன்  


சுவிஸ் பற்றி இன்னும் அறிய ஆவலாய் உள்ளோம் சுவிஸ் நாட்டு வருமானம் என்னவாக இருக்கும் அதையும் பகிருங்கள்
நன்றியுடன் நண்பன் 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by Nisha on Tue 12 Jan 2016 - 3:29

சுவிஸ் நாட்டின் குறிக்கோள்  
ஒருவருக்கு எல்லோரும் எல்லோருக்கும் ஒருவர
ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 SwitzerlandFlag

«Einer für alle, alle für einen» (ஜேர்மன்.)
«Un pour tous, tous pour un» (பிரான்ஸ்.)
«Uno per tutti, tutti per uno» ( இத்தாலி)
«In per tuts, tuts per in» (உரோமன்.)
சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?  வில் சுவிஸ்ஸர் லாந்த் என்றால் சட்டென நினைவுக்கு வருவது வங்கியும் கறுப்புப்பணமும்,ஹனிமூன் ஜோடிகளும் தான் என எழுதி இருந்தேன்!

அதையும் தாண்டினால் மாட்டின் கழுத்தில் கட்டும் மணி, சாக்லேட், வாட்ச் என   நினைவில் வந்து மறையும்.எனவும்  முடித்திருந்தேன். அதற்கு தேன்மதுரத்தமிழ் கிரேஸ்  சீஸும் கூட நினைவுக்கு வருமே என்கின்றார். 
ஆமாம் பாலும் தேனும் ஓடும் தேனாடு சுவிஸ்ஸர் லாந்த் என்றால் மிகையில்லை!

சுவிஸ்ஸர் லாந்து என்றாலே உலகின் அத்தனை கோடிஸ்வரரும்  இருக்கும் தேசமோ எனும் படியாய் நாட்டின் பெயரே பலரை ஆச்சரியமூட்டும் கனவுத்தேசமாய் இருக்கின்றது.உலகின் ஒவ்வொரு கோடிஸ்வரரும் சுவிஸ்லாந்தின் தமக்கு சொந்தமாக ஒரு குடிசையாகினும் இருக்க வேண்டும் என நினைக்கும்படியாய் சுவிஸ்ஸர் லாந்த் என்றாலே இனிமை நினைவுகள் தொடர்கின்றன!சுவிஸர் லாந்த் ஒரு சொர்க்க தேசம் என்பதில் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்த அனுபவத்தில் நானும் சொல்வேன். 
சுவிஸ் நாட்டில் வாழும் வாய்ப்பினை பெற்ற நாங்கள் பாக்கிய சாலிகள் தான். 

நாட்டின் குறிக்கோளுக்கு ஏற்ப நிறபேதம், இனபேதம் அதிகமாய் இல்லாத நாடும் இதுவே! எல்லை நாடுகளிலிருக்கும் மக்களின்  குணவியல்பை தாங்கி   மிகக்குறைந்த வீதத்தில்  நிற பேதம் வெளிப்பட்டாலும், பாடசாலை,
மருத்துவம், காவல்துறை சார்ந்த விடயங்களில் இப்பேதங்கள் காட்டப்படுவது மிக மிக அரிதே. 

இயற்கை வளங்கள் எதுவும் இல்லாமலே  சுற்றிவர ஆல்ப்ஸ் மலை கற்பாறைகளும், பனிமலைச்சிகரங்களையும் அரணாக கொண்டிருக்கும் இத்தேசத்தின் வளர்ச்சி உலகின் அத்தனை வளங்களையும் வைத்துக்கொண்டு இன்னும் வளர்கின்றோம் எனும் நம்ம நாட்டோடு ஒப்பிட்டளவில் கூட கற்பனை செய்ய இயலாதது என்பேன்! 

ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 Untitled-2

எக்காலமும் கரையாமல் ஐஸால் முடப்பட்டிருக்கும் மலைத்தொடர்கள். 

நாட்டின் அரசியலமைப்பு, பாடசாலை, பெண்கள் நிலை என ஒவ்வொன்றாக இந்த பதிவில் என்னால் இயன்ற வகை ஒரு முழுமையான பதிவொன்றினை தர இருப்பதனால்  சில நேரங்களில் பதிவு தாமதமாகலாம். மன்னித்து படித்து கருத்திட்டு என்னை ஊக்கப்படுத்துவீர்களாக!

ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 Switzerland-2
நாட்டின் தேசியக்கொடி. 

சுவிஸர் லாந்து நாடு உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருப்பதோடு உலகில் நவீன அதே நேரம் நிலையான பொருளாதாரத்தோடு  மக்களுக்கான பாதுகாப்பான காப்புறுதியையும் வழங்கும்  நாடாகவும் இருக்கின்றது.

அத்தோடு உலகத்திலேயே உயர்ந்த வாழ்க்கைத்தரத்தினை கொண்ட நகரங்களாக சுவிஸர்லாந்திலிருக்கும் சூரிச்சும் ஜெனிவாவும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவிஸர்லாந்தில் செஞ்சிலுவைச்சங்கம், உலகவர்த்தக அமைப்பு,உட்பட ஐ, நாவின் ஒருஅலுவலகமும் அமைந்திருக்கின்றது. இதுவரை எந்த போர்களிலும் கலந்து கொள்ளாமல் நடு நிலை வாதியாக காட்டிக்கொண்டிருப்பதும் 1815ஆம் ஆணிடிலுருந்து எந்த போரிலும் சம்பந்தப்படாமல் இருப்பதும் கூட இந்த நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்லாம். அதனோடு கறுப்புப்பணம் எனப்படும் உலக பணக்காரர்களின் வங்கி இருப்பும் அதன் இரகசியங்களும் எந்த சட்டத்துக்கும் ஆட்படாதவைகள். நம்பிக்கைக்கும் நாணயத்துக்கும் உத்தரவாதம் தருபவர்களாய் சுவிஸ் வங்கிகள் இருப்பதனாலும் கூட நாட்டின் வளர்ச்சி நிலை நீடிக்கின்றது. 

இன்றைக்கிருக்கும் சுவிஸ் நாட்டின் மத்திய பகுதியோடு மட்டுமே 1292 ஆகஸ்ட் முதலாம் திகதி விடுதலை பெற்று 1499 செப்டம்பர் 22 வரை அங்கீகாரமற்ற கட்டமைப்புடன் ஆட்சி செய்த போதிலும் 1648 அக்டோபர் 24 இல் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது.

மத்திய பகுதியோடு மட்டும்  ஆரம்பத்தில் உருவான  சுவிஸ் விடுதலை பெற்ற காலத்திலிருந்தே  நில அபகரிப்புகள் மூலம் தன் நிலப்பரப்பை விருத்தியாக்கியது. இறுதியில் 1848  ஆண்டில் எல்லைகள் வரையறுக்கப்பட்டு இன்றைய  நவீன சுவிஸ் லாந்து உருவானது.. 

விடுதலை பெற்ற நாளான ஆகஸ்ட் முதலாம் திகதி இந்த நாட்டுன் தேசிய தினம் என அறிவிக்கப்பட்டு வருடா வருடம் கோலாகலமாக கலாச்சார ஊர்வலங்கள், வானவேடிக்கைகள் என கொண்டாடப்படுகின்றது. 

150,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் இங்கே வாழ்ந்ததாகவும் மிகப்பழமையான விவசாய நிலங்கள் இருந்ததாகவும்  ஆய்வுகளில் கண்டு பிடித்திருக்கின்றனர். பழமையை போற்றிப்பாதுகாக்கும் மக்களாக இம்மக்கள் இருப்பதனால் நாட்டின் பெரு நகரங்களிலும் நூறாண்டுகள் தொன்மையான கட்டிடத்தொடர்கள், காலத்துக்கேற மாறுதல்கள் இன்றி பராமரிக்கப்ட்டு வருவதும் அந்தந்த இடங்களில்  வரலாற்று நிகழ்வுகள் பாதுகாக்கப்பட்டு உல்லாசப்பயணிகளின் பார்வைக்கு விடப்பட்டு வருமானம் ஈட்டப்படுவதும் இந்த நாட்டின் சிறப்பியல்பாகும். 

உலகம் எத்தனை தொழில் நுட்பத்தில் வளர்ந்தாலும் அவைகள் எங்கள் வளர்ச்சிக்கு மட்டுமே தவிர அவைகளுக்கு நாங்கள் அடிமைகள் அல்ல எனும் மிகத்திடமாக முடிவெடுத்து  இக்கால பேஸ்புக், வாட்ஸப், போன்ற நவீன தொழில் நுட்ப தொடர்பாடல்களை கூட தூர நிறுத்துவோராய் இம்மக்களில் பலர் இருக்கின்றார்கள்.

கிறிஸ்தவர்கள் இந்த நாட்டில் பெருமளவில் இருந்தாலும் அதிகார பூர்வமாய் இந்த நாடு எந்த மதத்துக்குள் உட்பட்டதாய் இல்லை என்பதனால் தனிமனித மத சுதந்திரம் பொதுமக்களுக்கு இடையூறாய் இராதவரை மதிக்கப்படுகின்றது. இஸ்லாமியர்களின் மசூதிகளும், இந்துக்களின் கோயில்களும் , புத்தமத ஆராதனைகளும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு யாரையும் வற்புறுத்தாமல் துன்புறுத்தாமல் அமைக்கப்பட்டு தம் மதத்தினை கைக்கொள்வதிலும் பரப்புவதிலும்  தடைகள் இல்லை.

சுவிஸில் பெண்களுக்காகவும் அவர்கள் வாக்குரிமை பெறவும் கூட எதிர்ப்புக்கள்இருந்தது. எதிர்ப்புக்களின் இடையே பெண்களுக்காக அரசியல் வாக்குரிமை 1971ல் வழங்கப்பட்டது- அதிலும் மிகப்பழமை போற்றும் அப்பன்சில் இண்டர்ஹோடன் மானிலத்தில் 1990 இல் இறுதியில் தான் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டது. எனினும் பெண்கள் தமக்கான உரிமை கிடைத்தபின் அரசியலில்முக்கியத்துவம் பெறும்படியாய் மிக வேகமாக தம்மை நிலை நாட்டினர்.  அதனை குறித்த விரிவான விபரம் இன்னொரு பதிவில் காண்போம். 

நம்ம நாட்டில் தான் பெண் சுதந்திரம் விடுதலை என பேசினோம் என்றால் அரைகுறை ஆடையோடு பவனி வரும் வெள்ளைத்தோல் பெண்களுக்கும் இந்த நிலையா என  யோசிக்க தோன்றுகின்றதா? 

ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 Familyfarmers
மண்ணின் மைந்தர்களாம் மக்களின் 
மிக எளிமையான தோற்றம் இதுவே!

சுவிஸ்லாந்து நாட்டுமக்களும் அதன் மொழிகளும் நமது தமிழைப்போல் மிக தொனமையானவை!எம்முடைய கலாச்சாரம் போல் கட்டுக்
கோப்பானவைகள்
பிரிசெக்ஸ், கட்டுப்பாடற்ற கலாச்சாரம், மதுபானங்கள், போதைவஸ்துக்கள் என ஐரோப்பிய நாடுகள் குறித்து நம் பார்வைக்கோணம் சுவிஸ் நாட்டின் கலாச்சாரத்தோடு ஒப்பிடும் போது மாறுபடுகின்றது. இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் மூதாதையர்கள் வழித்தோன்றலில் வழியே இன்னும் ஒருத்தனுக்கு ஒருத்தி எனுக் கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழ்பவர்களாக, தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கு தம்மை அடிமைப்படுத்தாமல் விவசாயம் செய்பவர்களாக, ஆடுமாடுகளை மேய்த்து பண்ணை விடுகளை பராமரித்து நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான பால், சாக்லேட்,காய்கறிகள் , உருளைக்கிழங்கு போன்றவற்றினை விளைவிக்கும் மண்ணை நேசிப்போராகவே இருக்கின்றார்கள்.அரசும் இப்படிப்பட்டவர்களுக்கு தகுந்த வசதிகளை செய்து கொடுத்திருக்கின்றது.

ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 WFCtVXSChwjXigIPBP4dZML8sIA
சிறுவர்களோடு ஊர்வலம். 
இளவேனில் காலங்களில் ஆடு, மாடுகளுக்கு அலங்காரமும் ஊர்வமுமாய் தெருவே அமர்க்களப்படும். மணிக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு விவயாயக்குடும்பங்கள் குழந்தைகுட்டிகளோடு  நாட்டின் கலாசார ஆடையணிகளோடுஊர்வலம் செலவது கண் கொள்ளா காட்சி!

ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 Engelberg-1
 மாடுகளுக்கு அலங்காரம் 

அன்பு செய்வதிலும் வந்தாரை வாழவைப்பதிலும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு நிகர் இவர்கள் தான்.. ஆனாலும் இந்த அன்பும், இரக்கமும், அரவணைப்பும்  கொஞ்சம் கொஞ்சமாய் அகல்கின்றது. புலம்பெயர்ந்து அகதிகளாக தம்மை இங்கே பதிவு செய்து  தாம்வந்த பாதை மறந்து குற்றச்செயல்களில்  ஈடுபடுவதோடு, வரி ஏய்ப்பு செய்வதும், வேலைகளுக்கு செல்லாமல் அரச உதவியில் வாழ்வதும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படியாமல் அஜாராகப்போக்கில் நடப்பதுமான  பலராலும், வேலையில்லா திண்டாட்டங்கள் அதிகரிப்பதும்  கடந்த  தேர்தலில் வெளி நாட்ட்வவர்களுக்கு புகலிடம் தருவதை  தவிர்க்க அல்லது குறைக்க நினைக்கும் மிகத்தீவிரமான   வெளி நாட்டவர் எதிர்ப்பு கொள்கை கொண்ட கட்சிக்கு வாக்களித்து தம் வெறுப்பினை கொஞ்சமாய் வெளிக்காட்டி இருக்கின்றார்கள்.

ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 Alpages-suisses-le-rituel-de-la-montee-en-alpage-10468278rslvr
 நாட்டின் கலாசார ஆடைகளோடு இளம் பெண்கள் 

இதனால் மக்கள் மனதில் வெளி நாட்டவர்களுக்கான வினை விதைக்கப்படுகின்றது. நம்மவர்களும் அதீத ஆடம்பரங்கள், வங்கியில் கடன் வாங்கியேனும் கொண்டாட்டங்கள், உல்லாசப்பயணங்கள் என  வீண் ஜம்பம் காட்டுவதும்  தங்களில் ஒருவராய் எம்மை பார்த்த இம்மக்கள் தங்கள் எதிரிகளென  புலம்பெயர்தோரை பார்க்கும் காலம் வருமோ எனும் அச்சமும் எழாமல் இல்லை

ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 Jungfrauregion_large
சுவிஸ் நாட்டில் மிக உயர்ந்த மலைச்சிகரம் 
ஐரோப்பாவின்   உல்லாசப்பயணிகளுக்கான ரொப் ஏரியாவும் இதுவே. 
அளவீடுகள் குறிக்கப்பட்டிகின்றது. 
இத்தொடரில் அதன் வரலாறுகளை தொகுக்கும் போது தொடர்ந்து ஆண்டுகள் வாரியாக தொகுத்தால் படிக்கும் உங்களுக்கு போரடித்து போய் விடும் என்பதனால் இயன்றவரை இம்மக்களை குறித்தும் நாட்டைக்குறித்தும் என் அனுபவங்களை இடையிடையே பகிர முயற்சிக்கின்றேன். 

படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்தே எடுக்கப்பட்டது!

தொடர்வேன்!
http://alpsnisha.blogspot.ch/2016/01/2.html


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 7:53

இன்று காலையில் முதன் முதலில் படித்ததும் சுற்றிப்பார்த்ததும் சுவிஸ் பற்றித்தான் சுவார்சியமாய் இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது   அதிலும் இலங்கையில் இருந்து அதிகளவான அகதிகளாக மக்கள் அங்கு சென்று தனக்கென்று ஒரு தொழில் வசதி பெற்று கல்வியிலும் இன்னும் அந்த நாட்டு அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கிறார்கள் என்பது இன்னும் மகிழ்ச்சியாக உள்ளது  வேற ஒரு பதில் படித்தேன் இலங்கைப் பெண் சுவிஸ் நாட்டின் அரசியல் களத்திலும் உள்ளார் என்று”

நமது மக்கள் எங்கு சென்றாலும் அவர்கள் குரங்கின் புத்தியைக் காட்டி விடுவார்கள் கடைசியில் அவர்களுக்கு அதுவே ஆப்பாகவும் வந்து முடியும் அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டீர்கள் அதைப் படிக்கும் போது கவலையாக இருந்தது 

அன்பு செய்வதிலும் வந்தாரை வாழவைப்பதிலும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு நிகர் இவர்கள் தான்.. ஆனாலும் இந்த அன்பும், இரக்கமும், அரவணைப்பும்  கொஞ்சம் கொஞ்சமாய் அகல்கின்றது. புலம்பெயர்ந்து அகதிகளாக தம்மை இங்கே பதிவு செய்து  தாம்வந்த பாதை மறந்து குற்றச்செயல்களில்  ஈடுபடுவதோடு, வரி ஏய்ப்பு செய்வதும், வேலைகளுக்கு செல்லாமல் அரச உதவியில் வாழ்வதும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படியாமல் அஜாராகப்போக்கில் நடப்பதுமான  பலராலும், வேலையில்லா திண்டாட்டங்கள் அதிகரிப்பதும்  கடந்த  தேர்தலில் வெளி நாட்ட்வவர்களுக்கு புகலிடம் தருவதை  தவிர்க்க அல்லது குறைக்க நினைக்கும் மிகத்தீவிரமான   வெளி நாட்டவர் எதிர்ப்பு கொள்கை கொண்ட கட்சிக்கு வாக்களித்து தம் வெறுப்பினை கொஞ்சமாய் வெளிக்காட்டி இருக்கின்றார்கள்.

இதனால் மக்கள் மனதில் வெளி நாட்டவர்களுக்கான வினை விதைக்கப்படுகின்றது. நம்மவர்களும் அதீத ஆடம்பரங்கள், வங்கியில் கடன் வாங்கியேனும் கொண்டாட்டங்கள், உல்லாசப்பயணங்கள் என  வீண் ஜம்பம் காட்டுவதும்  தங்களில் ஒருவராய் எம்மை பார்த்த இம்மக்கள் தங்கள் எதிரிகளென  புலம்பெயர்தோரை பார்க்கும் காலம் வருமோ எனும் அச்சமும் எழாமல் இல்லை!!


மகிழ்ச்சியிலும் ஒரு கவலை 
இன்னும் தொடருங்கள் அக்கா
நாங்களும் தொடர்கிறோம் 
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 7:55

ஆடு மாடுகளின் அலங்காரமும் அந்த நாட்டு கலாச்சார ஆடைகளும் எனக்குப் பிடித்திருக்கிறது எங்க அக்கா மகள் ஹெப்சியின் தோழிகள் சுவிஸ் குட்டிகளின் ஆடைகள் நல்ல நமது கலாச்சாரத்திற்கும் ஒப்பானது மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அக்கா இன்னும் அறிய ஆவலாய் உள்ளேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by Nisha on Tue 12 Jan 2016 - 7:58

புலம் பெயர்ந்தவர்கள் எனும் போது தமிழர்களை அல்ல.... ஐரோப்பாவிற்குள் இருந்தே... கோசோவா, செக் நாடுகள் மற்றும் சோமாலியா போன்ற ஆபிரிக்க நாட்டு மக்களும் அடக்கம். இலங்கை மக்களை பொறுத்தவரை இது வரை நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கின்றது எனினும்  நம்மவர்களின்  ஆடம்பர மோகம்  நாளடைவில் தங்களை விட தம்மை நாடி வந்தோர் வசதியாய் வாழ்வதா எனும்  வெறுப்பினை தரும் வாய்ப்ப்பை உருவாக்கும் என்பதையே அப்படி சொன்னேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 8:05

Nisha wrote:புலம் பெயர்ந்தவர்கள் எனும் போது தமிழர்களை அல்ல.... ஐரோப்பாவிற்குள் இருந்தே... கோசோவா, செக் நாடுகள் மற்றும் சோமாலியா போன்ற ஆபிரிக்க நாட்டு மக்களும் அடக்கம். இலங்கை மக்களை பொறுத்தவரை இது வரை நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கின்றது எனினும்  நம்மவர்களின்  ஆடம்பர மோகம்  நாளடைவில் தங்களை விட தம்மை நாடி வந்தோர் வசதியாய் வாழ்வதா எனும்  வெறுப்பினை தரும் வாய்ப்ப்பை உருவாக்கும் என்பதையே அப்படி சொன்னேன்.

ம்ம் புரிகிறது எல்லோரும் இல்லை ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் அதை அந்த நாடும் மக்களும் புரிந்து கொண்டால் இன்னும் பிரச்சினைகள் பொறாமைகள் இல்லாமல் இருக்கலாம்  ஐந்து விரலும் ஒரு மாதிரி இல்லைதானே  ஒரு தனி மனிதனை வைத்து அந்த நாட்டை நாம் எடை போடக்கூடாது ஒரு இலங்கை நாட்டவன் தவறு செய்து விட்டால் முழு இலங்கை நாட்டவனையும் தவறான கண்ணோட்டத்தில் காண்பது தவறு அப்படி இல்லாமல்  இப்படியும் ஒருவன்  இருக்கிறான் அவனை மாற்றி அவன் கொள்கைகள் தவறான எண்ணங்கள் திருட்டுத்தனங்கள் அனைத்தையும் மாற்ற ஆதரித்து வாழ வைக்க வேண்டும் எது எப்படியோ நீங்கள் சுவிஸ் பற்றி அதிக நல்ல விடயங்கள் பகிர்கிறீர்கள் அது மகிழ்ச்சி  ஆயிரம் நல்ல விடயங்கள் இருக்கும் போது ஒரு கெட்ட விடயம் இல்லாமல் இருக்காது குறைகளை நிறைகளாக நாம்தான் காண வேண்டும்  புரிதலுக்கு நன்றி இன்னும் எழுதுங்கள் 
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by Nisha on Tue 12 Jan 2016 - 8:06

சரிங்க சுவிஸ் பெண்களுக்கு எப்ப வாக்குரிமை கிடைத்ததுன்னு பாருங்க சாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 8:08

Nisha wrote:சரிங்க சுவிஸ் பெண்களுக்கு எப்ப வாக்குரிமை கிடைத்ததுன்னு பாருங்க சாரே!

1970-லும்---1990 ம் என்று சொல்லி விட்டீர்களே அதைப் பற்றி தெளிவான விளக்கம் இன்னொரு பதிவில் தருவதாக சொல்லியுள்ளீர்களே அதற்காக காத்திருக்கிறேன் தொடருங்கள்  சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by Nisha on Tue 12 Jan 2016 - 8:10

நம்மூர் பெண்கள் நிலை எப்படி?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by நண்பன் on Tue 12 Jan 2016 - 8:13

Nisha wrote:நம்மூர் பெண்கள் நிலை எப்படி?

உங்க நாட்டைப் பார்க்கும் போது எங்கள் நாடு எவ்வளவு முன்னேற்றம் தெரியுமா 1931 சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by Nisha on Tue 12 Jan 2016 - 8:18

ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by Nisha on Tue 26 Jan 2016 - 1:33

இந்த நாட்டின் மொத்தப்பரப்பளவு  41285 கிமீ² (136th) -15940 சது. மைல் ஆகவும் நீர் வளம் 4.2 வீதமாகவும் இருக்கின்றது!


நாட்டின் மொத்த மக்கள் தொகை  2014 ஆம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி 8,211,700 ஆக இருந்தது

மக்கள்தொகையின் 22% குடியேறிய வெளிநாட்டினரும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுமாக உள்ளனர்.இவர்களில் பெரும்பாலானோர் (60%) ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்லது EFTAநாடுகளில் இருந்து வந்தவர்கள்.


மொத்த வெளிநாட்டு மக்கள்தொகையில் 17.3% உள்ள மிகப்பெரிய தனிப்பட்ட வெளிநாட்டவர்கள் குழுவாக இத்தாலியர்கள் உள்ளனர்.


அவர்களுக்கு அடுத்துஜெர்மானியர்கள் (13,2%), செர்பியா மற்றும் மாண்டெனீக்ரோ (11,5%) மற்றும் போர்ச்சுகல் (11,3%) ஆகியவற்றிலிருந்து குடிபெயர்ந்தவர்களும் உள்ளனர்.


இலங்கையில் இருந்து குடியேறியவர்கள், அவர்களில் பெரும்பாலானோர் முன்பு வந்த தமிழ் அகதிகள், இவர்கள் ஆசியாவைச் சார்ந்தவர்களில் மிகப்பெரிய குழுவாக உள்ளனர்.


2000களில், உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் பல பிரச்சாரங்களில் அந்நியர்கள் குறித்த பயம் அதிகரித்து வருவது பற்றி தெரிவித்து இருப்பினும், நாட்டில் வெளிநாட்டு குடிமக்களின் அதிக விகிதாசாரமும், அதேபோன்று வெளிநாட்டினர் சிக்கலின்றி ஒருங்கிணைக்கப்படுவதும் சுவிட்சர்லாந்தின் திறந்த மனமுள்ள தன்மையைக் காட்டுகின்றன.


சுவிஸ்லாந்து நாட்டின் ஆட்சி மொழிகளாய் நான்கு மொழிகள் இருக்கின்றன! நாட்டின்,வடக்கு, கிழக்கும்மற்றும்மத்திய  பகுதியில் ஜேர்மன் மொழி பேசப்படுகின்றது,  ஜேர்மன் மொழி பேசப்படும் பகுதிகளிலும் சில இடங்களில் எழுத்து மொழி, பேச்சு மொழியாக சுவிஸ் ஜேர்மன், ஜேர்மன் ஜேர்மன் என இருவகை  வேறுபட்ட மொழிகளை பேச்சுக்கும் எழுத்துக்கும் பயன் படுத்துகின்றார்கள்.


அதாவது நாம்   தமிழ் மொழியை ஒவ்வொரு இடத்துக்கு ஏற்ப பேச்சுத்தமிழையும், எழுதுவதற்கு 

இலக்கணத்தமிழையும் பயன்படுத்துவது போல பேச்சு மொழி எழுத்து மொழி என இரு வேறுபட்ட உச்சரிப்புகள் கொண்டதாக சுவிஸ் ஜேர்மன் மொழியும் இருக்கின்றது.,

குழந்தைகள் தங்கள் முதல் மொழியாய்  சுவிஸ் ஜேர்மன் மொழியில் பேசவும், பாடசாலையில்  ஜேர்மனி ஜேர்மன் மொழியில் எழுதவும் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள், அன்றாட பேச்சில் சுவிஸ் ஜேர்மன் மொழியையே  பயன்படுத்துவார்கள்.

ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 Map_Languages_CH
படம் இணையம் 
மக்கள், மொழி வீதங்கள் உதவி விக்கிமீடியா 

  • வடக்கு, கிழக்கும்மற்றும்மத்திய  பகுதியில் ஜேர்மன் மொழி பேசுவோர்  65.3% 

  • மேற்குப்பகுதியில்  பிரெஞ்சு (22.4%; 23.1%)

  • தெற்குப்பகுதியில் இத்தாலியன் (8.4%; 6.1%)

  • க்ரௌபண்டென் மண்டலத்தின் தென்கிழக்கில் வசிக்கும் சிறுபான்மையினரால் அவர்களுக்குள் (0.5%; 0.6%) பேசப்படும் ரோமானிய மொழி, 


ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் மொழிகளுடன் பழமை வாய்ந்த மொழியான ரோமன்ஷ்,தேசிய மொழியாகவும்,ஆட்சி மொழியாகவும் இருக்கிறது.

அனைத்து சுவிஸ் மக்களும் மற்ற தேசிய மொழிகளில் ஒன்றை பள்ளிகளில் கற்பது கடமையாக்கப்பட்டுள்ளது என்பதனால் பெரும்பாலான சுவிஸ் மக்கள் குறைந்தபட்சம் இரட்டைமொழி அறிந்தவர்களாக உள்ளனர்.


ஆட்சி மொழிகள் நான்காய் இருப்பதனால் அந்தந்த மொழிகளுக்க்கு ஏற்ப சுவிஸ் நாட்டின் பெயரும் கீழே இருப்பது போல் சுருக்கமாக அழைக்கப்படுகின்றது!


English: Swiss,

German: Schweizer(in),
French: Suisse(sse),
Italian: svizzero/svizzera, or elvetico/elvetica,
Romansh: Svizzer/Svizra

சுவிஸ் நாட்டில் 26 மாநிலங்களாக பிரித்திருக்கின்றார்கள் . கல்வி, தொழில் நுட்ப விடயங்களில் மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு, ஒவ்வொரு மாநிலமும் தம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொழில்வளர்ச்சி,  பாடசாலைக்கல்வி விடயத்தில் தமக்கென அதிகாரங்களை கொண்டுள்ளதால் மாநில ரிதியாகவும் கல்வி முறை வேறுபடுகின்றது.


உதாரணமாக  பிள்ளைகளின் ஆரம்பபள்ளிக்கான அனுமதி  தேசிய அளவில் ஆறுவயதாக இருந்தாலும் ஜேர்மன் மொழி பேசும் பிரதேசங்களில்  ஐந்து வயதிலும், இத்தாலி, பிரெஞ்சு மொழி பேசும் பிரதேசங்களில்  நான்கு வயதிலும் கிண்டர் கார்டன்  செல்ல அனுமதிக்கின்றார்கள்.


புலம்பெயர்ந்தோராயிருப்பின் இரண்டு வருடகல்வியும் சுவிஸ் குழந்தைகளுக்கு ஒருவருடங்களாகவும்  கிண்டர்கார்டன் அனுமதி நிர்ணயிக்கப்படுவதால் புலம்பெயர்ந்தோர் பிள்ளைகள் ஒருவருடம் முன்னரே அனுமதிக்கப்படுகின்றார்கள். மொழிதெரியாத பெற்றோராயிருப்பினும் பிள்ளை  தானாய் தன் கல்வித்தேவையை சமாளிக்கும் படியான வசதி வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கின்றார்கள். பாடசாலைகளில் இன, நிற வேற்றுமைகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு புகார்களுக்கு உடனடி நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றது,


ஆனாலும்  சுவிஸ் நாட்டு குழந்தைகளை விட எம்மைபோல் புலம்

பெயர்ந்தோரான போர்த்துக்கல், செக்கோஸ்லவியா, கோசோவா, செர்பியா போன்ற நாட்டு பிள்ளைகளால் தான் பெரும் பான்மை நிற  வேற்றுமை பிரச்சனை  எழுகின்றது எனலாம்,  எமது பிள்ளைகளை சாக்லேட் என கேலி செய்வதும்  அங்கிள் பன்ஸ் என கிண்டல் செய்வதும் அவர்களே! எனினும் கொடுக்கப்படும் புகார்கள் உடனடியாக கவனிக்கப்படுவதால்  ஆரமப் நிலையிலேயே இவைகளை களையெடுக்கப்பட்டு விடுகின்றது. அங்கொன்றுமிங்கொன்றுமாய் சில பிரச்சனைகள் இருக்கலாம், எனினும் அவைகள் பெரிது படுத்தப்படும் படியாகஇல்லை எனலாம்.
ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 IV.Prof6-Zimmer
ஆரம்பப்பாடசாலை மாதிரி வகுப்பறை!

கிண்டர்கார்டன் முதல் ஆண்டு பத்து வரை பாடசாலைக்கல்வி

கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் இலவசமாகவும் வழங்கப்படுகின்றது .
இலவசம் எனும்போது பாடப்புத்தகங்களை கொடுத்து விட்டு நோட்டுப்புத்தகங்களை பெற்றோர் வாங்க வேண்டும் எனும் சுமைகள் கூட இல்லை, பாடசாலைக்குஅத்தியாவசியமான பாடப்புத்தகங்கள் நோட்டுப்புத்தங்கள்  மாநகராச்சியே இலவசமாக வழங்கி விடுகின்றது .

சுவிஸ் நாட்டில் வதிவிட உரிமையுள்ள எல்லா குடிமகனும் வரி செலுத்தவேண்டுமென்பதனால் மக்கள் செலுத்தும் வரி மீண்டும்மக்களுக்கே பயன் தரும் வகையில்பயன்படுத்தப்படுகின்றது .

வேலைக்கு செல்லும் பெற்றோராயிருந்தால் பிள்ளைகளுக்காக மதிய உணவு, வீட்டுப்பாட உதவிகள் கூட மதிய நேர உணவு இடைவேளையில்  கவனிக்கப்பட ஒழுங்குகள் செய்யப்பட்டு மிகக்குறைந்த தொகை அதற்காக பெற்றோரிடம் அறவிடப்படுகின்றது..

புலம்பெயர்ந்தோருடைய பிள்ளைகளுக்கு  தேசிய மொழிகளுக்கான் பயிற்சி விசேஷமாக கவனிக்கப்பட்டு அவர்களுக்கு என தனியேஆசிரியர்கள் அமர்த்தப்பட்டு   பாடங்களும் நடத்தப்படுகின்றது., ஒவ்வொரு மாநிலங்களிலும்  பேசப்படும் மொழி  முதலாம் வகுப்பிலிருந்து முதல் மொழியும் மூன்றாம் வகுப்பிலிருந்து  தேசிய மொழியிலிருந்து இரண்டாவது மொழியும் அதனுடன் ஆங்கிலக்கல்வியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் சுவிஸ் பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறுவர்கள்  பத்தாம் வகுப்பு முடிக்கும் போது  மும் மொழியில்  எழுத வாசிக்கவும், ஓரளவு  பேசவும் கூடியவர்களாக இருக்கின்றார்கள்,

ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 MB_Zimmer_1
ஆரம்பப்பாடசாலை மாதிரி வகுப்பறை!

கடந்த வருடம் வரை ஐந்தாம் வகுப்பிலிருந்து கற்பிக்கப்பப்ட்ட ஆங்கில மொழிப்பாடம் இவ்வருடம் முதல் மூன்றாம் வகுப்பிலிருந்தே கற்பிகப்படுவதால்   ஜேர்மன்   மொழி பேசும்  மா, நிலத்தில் வாழும் சிறுவர்கள் ஜேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் என மூம்மொழிகளை மூன்றாம் வகுப்பிலிருந்தே கற்கின்றார்கள்..


இதற்கிடையில் புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்கள் எம் தமிழை மறக்காதிருக்க  தமிழ் மொழியையும் கற்பிப்பதனாலும்  தமிழ் மொழி கற்றலும்  தேர்ச்சி அறிக்கையும்  அனைத்து பாடசாலைகளிலும் அங்கீகரிக்கப்பட்டு பிள்ளையின்   திறன் மதிப்பிடப்படுவதனாலும் தாய் மொழியில் கற்பிப்பதை வரவேற்கின்றார்கள். சுவிஸ் மொழியில்  கற்க சிரமப்படும்  சிறுவர் தாய் மொழியில்  சிறப்பாய் தேற்றினால் அவைகளும் புள்ளிகளாக்கப்படுகின்றது. .


எனவே எமது பிள்ளைகள் நான்கு மொழித்திறன்கொண்டவர்களாய் வளர்வதும் அதற்கு அவர்கள் படும் சிரமங்களும்  நாமறிவோம்.சுவிஸ் பாடசாலைகளில்  பாராட்டத்தக்க விடயம் என்ன தெரியுமா.? 
சிறுவர்கள் தினம் புத்தக மூட்டை சுமக்கும் சுமை கூலிகளாய் இல்லை என்பதே!
சுவிஸ் கல்வி தனிப்பாடப்புத்தகங்களையும் பரிட்சைகளையும் மட்டும் வைத்து மதிப்பீடப்படுவதிலை என்பது இதன் இன்னொரு சிறப்பம்சம்!


அது எப்படி என்பதை அடுத்த தொடரில் காணலாம்

தொடர்வோம். 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by Nisha on Tue 26 Jan 2016 - 16:09நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 27 Jan 2016 - 15:26

ஆர்வமான பதிவு 
ஆர்வத்தினை அதிகரிக்கிறது 
எங்களுக்கு வாய்ப்பில்லை 
வளம் வெற்ற நீங்கள் சிறப்புற வாழ்த்துகள் 
அருமையான பதிவு நன்றிகள்


ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by Nisha on Thu 28 Jan 2016 - 9:36

அது சரி.
நன்றி ஹாசிம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by பானுஷபானா on Thu 28 Jan 2016 - 15:07

varukirom nisha tikket anupunga
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by சே.குமார் on Thu 28 Jan 2016 - 16:31

பள்ளிகள் குறித்த விவரம் அருமையாக தொகுத்திருக்கீங்க அக்கா...
நிறத்தை வைத்து சாக்லெட், அங்கிள் பன் என பிள்ளைகள் பேசுவதையும் அதை உடனே நடவடிக்கைகள் மூலம் தடுத்துவிடுவது குறித்தும் மிக ஆழமாக பேசியிருக்கிறீர்கள் அக்கா.... ரொம்ப அருமை.
தொடருங்கள்... தொடர்கிறோம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by நண்பன் on Sun 31 Jan 2016 - 10:16

சுவிஸ் பற்றி அறிய வேண்டிய அரிய தகவல்கள் மிக்க நன்றி அக்கா படிக்கும் போதும் மகிழ்ச்சியாக உள்ளது  

எனக்கு சுவிஸ் நாட்டைப் பிடிப்பதற்கு ஒரே ஒரு காரணம் ஆல்ப்ஸ் மலைதான்  இன்னும் ஆசை குறைய வில்லை ஒரு நாள் சென்று வரவேண்டும் என்ற எண்ணம் என்னில் உண்டு  இன்னும் தொடருங்கள் படிக்கிறோனம் 
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 1 Feb 2016 - 10:49

நண்பன் wrote:சுவிஸ் பற்றி அறிய வேண்டிய அரிய தகவல்கள் மிக்க நன்றி அக்கா படிக்கும் போதும் மகிழ்ச்சியாக உள்ளது  

எனக்கு சுவிஸ் நாட்டைப் பிடிப்பதற்கு ஒரே ஒரு காரணம் ஆல்ப்ஸ் மலைதான்  இன்னும் ஆசை குறைய வில்லை ஒரு நாள் சென்று வரவேண்டும் என்ற எண்ணம் என்னில் உண்டு  இன்னும் தொடருங்கள் படிக்கிறோனம் 
நன்றியுடன் நண்பன்
உங்களின் அக்கா அங்கிருக்கும் போது கவலை எதுக்கு நண்பா


ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by நண்பன் on Mon 1 Feb 2016 - 11:22

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:சுவிஸ் பற்றி அறிய வேண்டிய அரிய தகவல்கள் மிக்க நன்றி அக்கா படிக்கும் போதும் மகிழ்ச்சியாக உள்ளது  

எனக்கு சுவிஸ் நாட்டைப் பிடிப்பதற்கு ஒரே ஒரு காரணம் ஆல்ப்ஸ் மலைதான்  இன்னும் ஆசை குறைய வில்லை ஒரு நாள் சென்று வரவேண்டும் என்ற எண்ணம் என்னில் உண்டு  இன்னும் தொடருங்கள் படிக்கிறோனம் 
நன்றியுடன் நண்பன்
உங்களின் அக்கா அங்கிருக்கும் போது கவலை எதுக்கு நண்பா

நானும் அந்த அக்காவை சில நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன் கண்ணில் சிக்க மாட்டேன்ங்குறாங்கப்பா  என்ன கொடுமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 1 Feb 2016 - 12:44

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:சுவிஸ் பற்றி அறிய வேண்டிய அரிய தகவல்கள் மிக்க நன்றி அக்கா படிக்கும் போதும் மகிழ்ச்சியாக உள்ளது  

எனக்கு சுவிஸ் நாட்டைப் பிடிப்பதற்கு ஒரே ஒரு காரணம் ஆல்ப்ஸ் மலைதான்  இன்னும் ஆசை குறைய வில்லை ஒரு நாள் சென்று வரவேண்டும் என்ற எண்ணம் என்னில் உண்டு  இன்னும் தொடருங்கள் படிக்கிறோனம் 
நன்றியுடன் நண்பன்
உங்களின் அக்கா அங்கிருக்கும் போது கவலை எதுக்கு நண்பா

நானும் அந்த அக்காவை சில நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன் கண்ணில் சிக்க மாட்டேன்ங்குறாங்கப்பா  என்ன கொடுமை
நம்புறமாதிரி சொல்லுங்கப்பா


ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by Nisha on Mon 1 Feb 2016 - 15:09

நம்பிருங்க ஹாசிம், நான் சொல்வதெல்லாம் பொய், மத்தவங்க சொல்வதெல்லாம் உண்மை என நம்பணும் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by நண்பன் on Mon 1 Feb 2016 - 16:15

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:சுவிஸ் பற்றி அறிய வேண்டிய அரிய தகவல்கள் மிக்க நன்றி அக்கா படிக்கும் போதும் மகிழ்ச்சியாக உள்ளது  

எனக்கு சுவிஸ் நாட்டைப் பிடிப்பதற்கு ஒரே ஒரு காரணம் ஆல்ப்ஸ் மலைதான்  இன்னும் ஆசை குறைய வில்லை ஒரு நாள் சென்று வரவேண்டும் என்ற எண்ணம் என்னில் உண்டு  இன்னும் தொடருங்கள் படிக்கிறோனம் 
நன்றியுடன் நண்பன்
உங்களின் அக்கா அங்கிருக்கும் போது கவலை எதுக்கு நண்பா

நானும் அந்த அக்காவை சில நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன் கண்ணில் சிக்க மாட்டேன்ங்குறாங்கப்பா  என்ன கொடுமை
நம்புறமாதிரி சொல்லுங்கப்பா

நீங்க நம்ப மாட்டிங்க நானும் அப்படித்தான் முதலில் நம்ப வில்லை இப்போது நம்பி விட்டேன்  அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்...சுவிஸ்ஸர்லாந் சுற்றிப்பார்க்க வாறிங்களா?-3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum