சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே! Regist11


Latest topics
» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:06

» ஜூன் மாதம் வந்தால் எனக்கு இரண்டு கவலை...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:02

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:01

» சண்டைன்னு வந்திட்டா என் கணவரை நல்லா மொத்திடுவேன்...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:00

» மனசு பேசுகிறது : முகிலினி
by சே.குமார் Sun 2 Jun 2019 - 12:55

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by பானுஷபானா Mon 27 May 2019 - 13:13

.
ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே! Khan11
ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே! Www10

ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே!

Go down

Sticky ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே!

Post by Nisha on Fri 15 Jan 2016 - 17:02

சமீபத்தில் புற்றீசல்கள் போல் புத்தக வெளியீடுகள் வெளிவருவதால் எழுத்தாளர்களுக்கும் புத்தகவெளியீடுகளுக்கும் மதிப்பில்லாது போய் விட்டது எனும் செய்தியொன்றை இலங்கையில் புத்தக வெளியீடொன்றில்  பேசப்பட்டதாக தம்பி ஒருவர் தனது பேஸ்புக் பக்கம் இணைப்புடன் பகிர்ந்திருந்தார்!

அவரின் பதிவுக்கு கவிதை எனும் பெயரில் நான்கு வரி எழுதுவதோடு பத்து வரியில் பத்து கவிதை எழுதி விட்டால் தாமும் கவிஞர் என சொல்லி அதை புத்தகமாக வெளியிட வேண்டும் என ஆர்வப்படுவோர் குறித்தும் அவர்கள் எழுதும் போது எழுத்துப்பிழை, கருத்துப்பிழைகளையும் அர்த்தமே இல்லாத எதுகை மோனை வரிகளையும்  தவிர்க்க வேண்டும் என்பதையும் எனது கருத்தாக  அவர் பக்கத்தில்  நேரடியாக தட்டச்சிட்டு எழுத்துப்பிழை சரி பார்க்காமல் பதிந்தும் விட்டேன்.

தட்டச்சின் வேகத்தில்   நிறை குடம் தளும்பாது, குறை குடம் தளும்பும் எனும் வாக்கியத்தில் குறை என்பது குடை என தட்டச்சானதையும் தளும்பும் எனும் இடத்தில் தமுங்கும் எனவும் கவிஞ்ர்  என தட்டச்சிடும் போது மேலே புள்ளியும் விடுபட்டிருந்ததை மீள் பார்வை பார்த்து சரி செய்யவில்லை என்பதை விட விடிகாலை  தூக்கக்கலக்கத்தில் எப்படியோ   விடுபட்டு விட்டது. எனது பெரிய கருத்துப் பந்தியில் இருந்து இந்த கவனக்குறைவான தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டி நீயே பிழையாய் தானே தட்டச்சிட்டிருக்கின்றாய், நீ எப்படி மற்றவர்களை சொல்லலாம் என்பது போல் ஒருவர் எதிர்க்கேள்வி கேட்டிருந்தார்.

பதிவை இட்ட தம்பி என்னைக் குறித்து நன்கு அறிந்தவர் என்பதால்  நான் 16 வயதில் சுவிஸ் வந்ததையும்...  நான் ஒரு எழுத்தாளர் இல்லை என்ப தையும் சொல்லி விளக்கம் கொடுக்க போக.... இன்னொருவர் வந்து  16 வயதில் பத்தாம் கிளாஸ் தமிழ் படித்து விட்டு சுவிஸ் வந்து விட்டேன் எனும் அந்த தம்பியின் கூற்றை வைத்துக்கொண்டு நான் வெறும் கை நாட்டு போலவும் அவர்களை கேட்க எனக்கு தகுதி இல்லை என்பது போலவும்  விவாதித்தார்.

அதாவது தமிழ் மொழிகுறித்தும் புத்தக வெளியீடு குறித்தும் அதில் வரும் எழுத்துப்பிழைகள் குறித்தும்  விமர்சிக்க எனக்கு தகுதி இல்லை எனவும் சொல்லி விவாதத்தின் வேகத்தில் பூசணியை மரம் என தட்டச்சிட்டதை சுட்டிக்காட்டி.... பூசணியை கொடி என தெரியாத நீயெல்லாம் எப்படி  எங்களை தப்பு சொல்லலாம் என்பது போல் பதிவிட்டிருந்தார்.

இதில் கவனிக்கதக்க விடயம் நான்  இருபது தொடக்கம் ஐம்பது வரிகளில் எனக்கான விளக்கங்களோடு வேகமாக வினாடிக்கணக்கில் தமிழில் நேரடியாக தட்டச்சிட.... அவர்   சில நிமிடங்கள் எடுத்து வேறெதிலோ எழுதி  எழுத்து சரிபிழை பார்த்து இரண்டு தொடக்கம் நான்கு வார்த்தைகளை மட்டும் திரும்ப திரும்ப காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருந்தார்.

இறுதியில் எனக்கு அடிப்படை தமிழறிவே இல்லாமல் கருத்திட தகுதி இல்லை எனவும்  இம்மாதிரி கருத்துக்களை வெளியிடவும் தகுதி வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

தமிழ் மொழித்தகுதி குறித்த அவரின் பதிவுக்கு நான் எழுதிய கருத்தை இங்கே கொடுத்திருக்கிறேன்.

முதலில் தகுதியை நிர்ணயிப்பது எது என தெளிவாக்கிக்கொள்ளுங்கள். என் கேள்விகளுக்கு முழுமையாக பதில் தர முடியாமல் சமாளிப்பாய் என் கருத்தும் பொதுவானது என சொல்லும் நீங்கள் .....

நான் சொன்ன ஒரு கருத்திலிருந்த மூன்று எழுத்துப்பிழைகளை வைத்து எனக்கு அடிப்படை தமிழ் அறிவும் தகுதியும் இல்லை என சொல்வது தான் மெத்தப்படித்த அறிவுடையோர் என தங்களை சொல்லிக்கொள்வேர் செய்வது எனில் எனக்கு அப்படிப்பட்ட தமிழறிவு வேண்டாம். 


மேதைகள் எழுத்தில் பிழை விட்டதில்லை என எங்கே சொல்லி இருக்கின்றார்கள்?தவறொன்றினை சொன்னாலதை உணர்ந்து திருத்திக்கொள்ளாமல் நீ என்ன பெரிய மேதையோ என திரும்பிக்கேட்பது தான் மேதாவித்தனம் என இன்றைக்குத்தான் புரிந்திட்டேன்!


என் கருத்து பொதுவானது எனில் உங்கள் கருத்து என்னை நேரடியாக குற்றம் சுமத்தியதாய் உள்ளதே! இடை ச்செருகலாய் பூசணிச்செடியா கொடியா என தெரியாத நீயெல்லாம் தமிழ் பற்றி பேச வந்திட்டியா எனும் கிண்டல் வேறு!தமிழ் தெரியாமல்தான் தமிழில் பதில் தட்டச்சிட்டுக்கொண்டிருக்கின்றோமா? 


பூசணியை கொடி என சொல்லாமல் விட்டதனால் தகுதி இல்லாமல் போன என் கேள்விகளுக்கு பதில் தர முடியாமல் தமிழில் தகமை பெற்ற தாங்கள், ஒரே வரி பதிலையும் திரும்பத்திரும்ப ஒரே பதிவையும் காப்பி பேஸ்ட் செய்து போடுவதும் பதிலின்றி திண்டாடுவதும் தாங்கள் கூறும் தகுதி எனில் எனக்கு அதுவும் வேண்டாம்.


நாங்களெல்லாம் கற்றதும் கைமண் அளவு தான், கல்லாதது உலகளவு தான் அப்படியே இருக்கட்டும் எங்கள் தகுதி குறித்து நீங்கள் விமர்சிக்க தேவையில்லை. உங்களிடம் வந்து உங்களை நேரடியாக குற்றம் சுமத்தினால் என் தகுதி குறித்து பேசுங்கள்.எங்கேயும் நியாயம் எடுத்து சொல்ல சர்வகலாசாலை போய் படிக்க தேவையில்லை. நாலாம் கிளாஸ் படித்தவனும் கேட்கலாம். தமிழன் எனும் உணர்விருப்பவன் எவனும் கேட்கலாம்.


மேலே சொன்ன கருத்தை நான் பகிர்ந்த பின் அதற்கான பதில் அந்த தமிழ் அறிந்த மனிதரிடமிருந்து இதுவரை வரவில்லை.

எனினும் பத்தாம் வகுப்பு படித்து  புலம் பெயர்ந்தேன் என்பதனால் என் தமிழறிவு மட்டுப்பட்டதெனச் சொல்லும் அவர்களுக்காக என் தமிழறிவு
குறித்த விளக்கம் கீழே...!

பத்தாம் வகுப்போடு புலம் பெயர்ந்தாலும் நீங்கள் நினைக்கும் ஏனையோர் போல் பத்தாம் வகுப்போடு என் கல்வி  நிறுத்தப்பட்டதில்லை.  புலம் பெயர்ந்த நாட்டிற்கு என் வாழ்வாதாரத்துக்கு எது தேவையோ அதில் கற்று தேர்ச்சி பெற்றுத்தான் இருக்கின்றேன். இன்னும் கற்றுக்கொண்டும் தான் இருக்கின்றேன். புலம் பெயர்ந்த நாட்டிலும் நான் எனக்கான திறமையை வெளிக்காட்டி  அன்னிய மொழியில் தேர்ச்சி பெற்றும் படிப்பிலும் பணியிலும் சிறந்த இடத்தினை தான் பெற்றிருக்கின்றேன் என்பதை இந்த இணைப்பில்  சென்றால் அறிந்திடலாம்!
https://www.facebook.com/Hegas-Catering-Fine-Indian-Swiss-Food-Services-152352458258136/

அத்தோடு சுவிஸுலும் இலங்கையிலும் நடைபெறும் பல இலக்கியக்கூட்டங்கள், நூல் வெளியீடுகளுக்கும் நான் சுவிஸ் வந்த காலம் முதல்  அழைப்பு வருவதும்  அம்மாதிரி கூட்டங்களை  தவிர்ப்பதுமாய் பொது இடங்களில் என்னை நான் வெளிப்படுத்தாமல் எனக்கும் என் குடும்பத்துக்கும் எது அவசியம் என உணர்ந்து அவைகளுக்கேற்ப  என் வாழ்க்கையை திட்டமிட்டு கொண்டிருக்கின்றேனே தவிர நீங்கள் நினைப்பது போல் தகுதியின்மையினால் அல்ல! 


என்னுடைய முதல் ஆக்கம்  நான் வளர்ந்த ஊரான பெரிய கல்லாறு வை,எம்.சீ.ஏ யின் கையெழுத்துபிரதியாய் வெளிவந்த மாத இதழில் வெளி வரும் போது என் வயது 13! 


இலங்கையில் பிரபல்யமான வீரகேசரி வார வெளியீடு ஞாயிறு பிரதியில் உலகமகாயுத்தம் குறித்து நான் எழுதிய கட்டுரை சிறுவர்களுக்கான பகுதியில் என் பெயர், பாடசாலை பெயரோடு தாங்கி வந்த போது என் வயது 13!


சிந்தாமணி என்னும் ஞாயிறு சிறப்பிதழிலும், தினகரன் ஞாயிறு பதிப்புக்களிலும் பல  பொதுஅறிவு சம்பந்தமான செய்திகள், குட்டிக்கட்டுரைகள் எழுத, எனது எழுத்துக்கள் நான் படித்த  பாடசாலையை அகில இலங்கை முழுவதும் அறியச் செய்ததும்  அக்காலத்தில் எனக்கு தினம் பாராட்டுக் கடிதங்களைத்   தாங்கி வரும் தபால்காரருமாய் என் பள்ளிக்கால திறமைகள் என்னை சிகரத்தில் ஏற்றின. இது இப்போதும் என் பள்ளியில் அன்று எனக்கு சமூகக்கல்வி ஆசியராக இருந்து இன்று அதிபராய் இருக்கும் கந்தசாமி சாரால் நினைவு கூறப்படுகிறது என்பதை இங்கு பெருமையாக என்னால் சொல்லிக் கொள்ள முடியும்.


1991ல் என் 17-18 வயதில் பிரபல எழுத்தாளர் இந்துமகேஷ் அவர்களின் பூவரசு இதழ் ஜேர்மனிலிருந்து வெளி வந்த போது தொடர்ந்து வந்த சில இதழ்களில் என் கவிதைகள் பிரசுரமானதும், 


19 வயதில் ராஜிவ் காந்தி கொலை நடந்த போது  அது குறித்ததான என் கட்டுரைகள் சுவிஸில் வெளி வந்த பல சிற்றிதழ்களில் வெளியாகியதும். சுவிஸில் வெளிவந்த தமிழ் ஏடு பத்திரிகையில் செய்திகளை திருத்தும் பணியில் இருந்ததும், அங்கே கல்லாறு சதீஷின் அறிமுகமும், அதே பத்திரிகையில் ராஜிவ் காந்தி கொலை குறித்த என் கட்டுரையும் இன்னும் பல பதிவுகளும் அக்கால இலக்கிய கூட்டங்களும், நான் எனக்கு தேவையில்லை என விட்டு ஒதுங்கி வந்தவை!  நானே என்னை பொதுமன்றங்களிலிருந்து மறைத்து க்கொண்டேனே தவிர என் திறமையின்மையால் யாரும் என்னை  துரத்தவில்லை. எனினும் இன்று வரை அழைப்புகள் வந்தபடி தான் உள்ளது. எனினும் நான் தவிர்க்கின்றேன் என்பதை சுவிஸில் நடந்த படைப்பாளிகள் இலக்கிய கூட்டத்தினை ஒழுங்கு செய்தவர்களும் அறிவார்கள். இணைய தளங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளும் கட்டுரைப்பதிவுகளும், விவாதத்திரிகளில் பங்கெடுத்தலுமாய் எழுதி உலகெங்கும் இருக்கும் பல தமிழ் உறவுகளோடு நட்பாயிருப்பதும் இன்றும் தமிழ் மன்றம், முத்தமிழ் மன்றம், சேனைத்தமிழ் உலா போன்ற தளங்களிலும் ஆல்ப்ஸ் தென்றல் எனும் வலைப்பூவிலும் எழுதி வருவதும் இது வரை என்னைக்குறித்து நான் வெளியிடாத தகவல்கள்.  புத்தகங்களை வெளியிட்டால் தான் என் தகுதி மேம்படும் எனில் என்னால் பத்து புத்தகங்கள் கூட வெளியிட முடியும் என்பதையும் புரிந்திடுங்கள். 

பத்தாம் வகுப்புடன் விட்டு வந்ததால் என் தகுதி குறித்த கேட்ட மேதையே.... நீர் கற்ற கல்வி தமிழில்  தட்டச்சு வேகத்தில் விடப்பட்ட சிறு பிழையை பூதாகாரமாக்கியும், அதே பதிலிடும் வேகத்தில் நான் இட்ட பூசணிக்கொடிக்கான சிறுபிழையையும் சுட்டிக்காட்டி  நீர் யார் என் தகுதியை கேள்வி கேட்க வைத்ததெனில்  நான் கற்ற தமிழ்   உங்களுக்கு முன் பல வழிகளிலும் என்னை உயர்த்தி தான் இருக்கின்றது.

எனக்கு எல்லாம் தெரியும்... தமிழே என்னிடம்தான் என்ற உங்கள் மேதாவித்தனத்தைவிட நான் தமிழில் இன்னும் குழந்தைதான்... எனக்குத் தெரிந்த தமிழ் இதுதான் என்னும் அவையடக்கம் தரும் எனது தமிழறிவு எந்த விதத்திலும் குறைவில்லை... சொல்லப்போனால் எல்லாம் தெரியும் என்பதைவிட எனக்குத் தமிழ் எழுதத்தெரியும் என்ற என் எண்ணமே இங்கு உயர்ந்தது.

அத்துடன் தமிங்கிலிஸில் தட்டச்சிட்டு தமிழை கொலை செய்யும் இக்காலத்தில் தப்புத்தப்பாகவேனும் தமிழில் தட்டச்சிடுவோரை நான் ஊக்கப்படுத்தி அவர்களை எழுத வைப்பதும்... எனக்கு பின்னால் நட்பெனும் தமிழ் இளையோர் கூட்டம் இருப்பதையும் இனிமேலாவது அறிந்து புரிந்து கொள்ளுங்கள்.

புகழ், பாராட்டு, மலர்மாலை, சால்வை இவற்றை மட்டுமே கணக்கில் கொண்டு இவற்றிற்காக எழுதும் ஆள் நானில்லை... இவற்றில் எனக்கு துளியும் விருப்பமும் இல்லை. தமிழ் மேல் எனக்கு இருக்கும் காதலால் அதன் கரங்களை நான் பிடிக்க... என் எழுத்தின் வீச்சில் மகிழ்ந்த தமிழ் என்னைப் இறுகப் பற்றிக் கொள்ள... இதோ இப்போது என் எழுத்தின் பலனாக நிறைய உள்ளார்ந்த தமிழ் நட்புக்களைப் பெற்றிருக்கிறேன். உங்களைப் போல் தமிழே எனக்கு அடிமை என்று சொல்லும் கூட்டத்தை தள்ளியே வைத்திருக்கிறேன்.  இன்னும் சொல்லப்போனால் என் தமிழறிவுத் தகுதி எந்தவிதத்திலும் குறையவில்லை என்பதை நானும் அறிவேன், என் நட்புக்களும் அறிவார்கள்.

பணத்தினை வீசி  பிரபல்யமானவர்கள் அருகில் நின்று நிழற்படம் எடுத்து போடுவதும், நடிகை நடிகர்களுடன் நின்று போட்டோ எடுத்து போட்டால் பிரபல்யமானவர் என கணிப்பிடுவதும் தான் உங்கள் தமிழ் அறிவுக்கான் தகுதி எனில் எனக்கது வேண்டவே வேண்டாம்.

ஈழத்திலும், தமிழ் நாட்டிலும் இன்று படித்துக் கொண்டிருப்போர் தமிழில் தட்டச்சிட ததிங்கினதோம் போடுவதை நானறிவேன். அவர்கள் எல்லாருமே வல்லின, மெல்லிய, இடையினம் புரியாது  தவறாய் எழுதி அர்த்தங்களையே மாற்றிவிடுகிறார்கள். மேலும் அவர்களுக்கு  குறிலெது நெடிலெது என்று தெரியாமல் கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதையும் பார்த்து வருந்தித்தான் நான் இப்போது இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ இல்லை எனது 16 வயதில் சுவிஸ் வந்தேன்... ஆனால் இன்றளவும் என் தமிழில் தடுமாற்றம் இல்லை என்று சொல்லி அவர்களின் தமிழ் திருத்தமாக வேண்டும் என்பதற்காகவே என்னை வெளிப்படுத்துகிறேனே ஒழிய என்னை பிரபலப்படுத்திக் கொள்ள அல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் என்னை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்வதை கேலி கிண்டல் செய்து என் திறமை குறித்துப் பேசி, மட்டம் தட்ட  உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

சேற்றில் முளைத்த காளான்கள் போல் புத்தக வெளியீடுகள் இருப்பதும்.பணம் இருக்கின்றது என்பதற்காக அர்த்தமே இல்லாத நான்கு வரிக்கவிதைகளையெல்லாம் புத்தகமாக வெளியிட்டு கவிஞரென புகழ் பாடுவதும் என்னைப்போன்ற நிஜமான் தமிழ் ஆர்வலர்களுக்கு ஆதங்கம் தரக்கூடியது எனும் போது நாங்கள் அதை தவறென சொல்லத்தான் செய்வோம்.இனிமேலும் சொல்லுவோம்.

இலங்கையில் தமிழ்  வளர்க்கும் பொறுப்பில் இருப்பதாக சொல்லிக்கொண்டு சகிப்புத்தன்மையையும், தவறென சுட்டினால் அதை உணர்ந்து புரிந்து கொள்ளும் தகுதியும் நிதானமும் இல்லாது என் தகுதி குறித்து கேள்வி கேட்டவர்களுக்கு இப்போது புரியும் என்று நினைக்கிறேன். என் தகுதி என்ன..? தமிழ் மீது நான் கொண்ட ஆர்வம் எப்படி...? என்பதையெல்லாம் ஜிகினா மின்னும் உலகிற்குள் வலம் வரத்துடிக்கும் உங்களைப் போன்றோர் அறிந்து கொள்ள வேண்டியதில்லை என்றாலும் இதைப் படித்தால் கண்டிப்பாக என் தகுதி என்ன... என்பதை புரிந்து கொள்வீர்கள். இதற்கு மேலும் தமிழே நாங்கள்தான் என்று என் முன்னே குதிராட்டம் போட வரமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.
நன்றி.


http://alpsnisha.blogspot.ch/2016/01/blog-post.html


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே!

Post by Nisha on Fri 15 Jan 2016 - 18:20

https://www.facebook.com/permalink.php?story_fbid=805130076277218&id=100003406995837¬if_t=tagged_with_story&__mref=message_bubble

உங்கள் கருத்துக்களை இங்கும் பொங்கினால் மகிழ்வேன் மக்களே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே!

Post by நண்பன் on Sat 16 Jan 2016 - 8:54

பொதுத்தளங்களில் இது போன்ற கருத்துப்பரிமாறல்கள் வரும் அக்கா அதை நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம்   சிலர் உங்கள் வளர்ச்சி பிடிக்காமலும் தூற்ற நினைப்பார்கள் சிலர் உங்களைப் பற்றித் தெரியாமலும்  தவறான கருத்தைப் பகிர்வார்கள் கவலை வேண்டாம்  இன்று உங்களைப் பற்றித்தெரியாமல் இப்படி கருத்தைப் பகிர்ந்தவர் நாளை உங்களையும் உங்கள் எழுத்துப்பயணத்தையும் தமிழ் மீது நீங்கள் கொண்ட ஆர்வத்தையும் புரிந்து கொண்டால்  மன்னிப்புக் கேட்பார்  உங்கள் எழுத்துக்களை மக்கள் மத்தியில் அவரே கொண்டு சேர்ப்பார் கவலை விடுங்கள்

ஆனால் ஒரு சில்லறையிடம் போய் நீங்கள் உங்கள் வளர்ச்சியும் உங்கள் தமிழ் ஆர்வம் பற்றியும் நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை கிணற்றுத்தவளையின் வளர்ச்சி அவ்வளவுதான் உலகம் தெரியாமல் வளர்ந்திருக்கும் அவர்களுக்கு உங்களைப் பற்றி என்ன தெரியும்  

நீங்கள் வசிக்கும் மேலத்தய நாட்டில் தமிழுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி நாங்கள் அறிவோம்  இந்த சில்லறைக்கு நீங்கள் விளக்கம் சொல்லத்தேவை இல்லை அவனுக்கு தைரியம் இருந்தால் ஆல்ப்ஸ் தென்றல் வந்து பார்க்கட்டும் முத்தமிழ் மன்றம் வந்து பார்க்கட்டும் சேனைத் தமிழ் உலா வந்து பார்க்கட்டும் இன்னும் இதர தளங்களில் தமிழ் எழுதி தன் திறமையைக் காட்டிக்கொண்டிருக்கும் உங்களையும் தமிழுக்காக நீங்கள் செய்யும் தொண்டையும் அறிந்து கொள்ளட்டும்

முகநூலில் மாத்திரம் முகத்தைக் காட்டிக்கொண்டு கிறுத்தனமாய் ஒரே கேள்வியை பல தடவை கேட்டுக்கொண்டு ஒழுங்கா தமிழ் டைப் பண்ணத்தெரியாமல் காப்பி பேஸ்ட் பண்ணும் பண்ணாடைகளுக்கு நீங்கள் பதில் கொடுக்க தேவை இல்லை அக்கா  அவர்கள் சொல்லிய கருத்துக்களை நான் படித்த பிறகு அவர்கள் மேல் கோபம்தான் வந்தது 

உங்களையும் உங்கள் தமிழ் எழுத்துப்பயத்தையும் நாங்கள் அறிவோம் இன்னும் பல ஆயிரக்காணக்கானவர்கள் அறிவார்கள் பல லட்சக்கணக்கானோர் அறிய உள்ளார்கள் அதை நாங்கள் அறிவோம் உங்கள் எழுத்துப்பயணம் தொடரட்டும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே!

Post by சே.குமார் on Mon 18 Jan 2016 - 21:42

அன்பின் அக்காவுக்கு...

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்... நாம் போனிடெக் முறையில் எழுதும் போது எழுத்துப் பிழைகள் வரத்தான் செய்யும்... சரி செய்து போட்டாலும் சில நேரங்களில் கண்ணில் அகப்படாமல் நமக்கு தண்ணி காட்டி அது ஜெயித்துச் சிரிக்கும்... அப்படியிருந்தாலும் நம் தமிழ் அழகுதான்...

சில காலங்களுக்கு முன் அத்திபூத்தாற்போல் நடந்த புத்தகவெளியீடுகள்... பதிவுலகம் பிரபலமாய் ஆனதும் பணம் இருக்கவன்... கொஞ்சம் எழுதத் தெரிந்தவன் எல்லாம் புத்தகம் போடலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. புத்தகத்திருவிழா என்றால் ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன... நல்லா எழுதுபவர்களோடு இப்படியும் எழுதுவோம் என்போரும் களத்தில் குதிக்க... சரி... எப்படியோ நம் தமிழ் வளரட்டும்.

பத்தாவது படித்தால் கைநாட்டா... அதுசரி மெத்தப்படித்த மனிதர் தானே தமிழின் தாத்தா என்று முடிவெடுத்துவிட்டார் போல... உங்களது பதில்கள் சாட்டையடி... இவர்களுக்கு தாங்களே மேதை என்ற மமதை...

பேருக்கும் புகழுக்கும் எழுதும் இவர்கள் எல்லாம் ஆத்ம திருப்திக்காக எழுதுபவர்கள் முன்னால் நிற்க முடியுமா என்ன...? என்ன பேசினாலும்... என்ன எழுதினாலும்... பேசப்படும் என்ற நிலையில் இருக்கும் மனிதர்களில் இதுபோல் சிலர்... விட்டுத்தள்ளுங்க...

அடேயப்பா... நிஷா அக்கா மிகப்பெரிய (சின்ன வயதில்) எழுத்தாளராய் இருந்திருக்கிறார்... தபால்காரர் கட்டுக்கட்டாய் பாராட்டுக் கடிதங்களைச் சுமந்து வந்திருக்கிறார். இன்றும் பள்ளியில் அக்காவைப் பற்றி அவரின் ஆசிரியரும் இந்தாள் அதிபருமான கந்தசாமி சார் நினைவு வைத்துப் பேசுகிறார். அதுவும் வீரகேசரியில் எழுதியிருக்கிறார் என்றால் எப்படி... சாதாரணமான எழுத்தாளரா.. இன்னும் இன்னுமாய்... எங்க அக்கா பெரிய எழுத்தாளர் என்று அறிந்து மகிழ்ச்சி. படிக்காத கைநாட்டுத்தான் நான் வாருங்கள் பேசுவோம் என்று சொல்லி பதிலடி கொடுத்த அக்காவுக்கு வாழ்த்துக்கள்.

அக்கா பெரிய மனிதர் என்ற போர்வையில் எனக்கு தமிழ் அடிமை என்று சொல்லிக் கொள்ளும் அந்த மனிதருக்கு தமிழ் போதை... அது தெளியாததால்தான் இப்படி எல்லாம் கூவுகிறார்... அவருக்கு இருப்பது தமிழ்க்'கனம்' அதாவது தலையில் கனம்... தப்பா நினைக்காதீங்க... மூளையில் தமிழ் ஏறி... அந்த மமதையில் நானே அறிவாளி என்ற கனம்.. அதனால்தான் தலையில் கனம் என்று சொன்னேன்... ஆனால் எனக்கு தலைக்கனமும் வேண்டாம்... தமிழ் கனமாய் என்னுள் இருக்கவும் வேண்டாம் என்ற உங்களின் பதில் நெத்தியடி.

உங்கள் பதிவில் இருக்கும் வேகம் உங்கள் மனசின் போக்கைக் காட்டுகிறது. வலி நிறைந்த தங்களின் வாழ்வில் எழுத்து உங்களுக்கு வலிகளை மறைக்க கிடைத்த மருந்து... உங்கள் எழுத்தின் ஊக்கமே எங்களது எழுத்துக்களை எல்லாம் தட்டிக்கொடுக்கவும் சுட்டிக்காட்டவும் வைக்கிறது... உங்களால் நாங்கள் வளர்கிறோம்...

கோபங்கள் குறையட்டும்... மமதையில் பேசுவோர் பேசட்டும்...
அவர்களின் தூற்றலே உங்களின் படிக்கட்டு... அதில் பயணித்து வெற்றி என்னும் இலக்கை நீங்கள் அடையும் போது அவர்கள் உங்களுக்காக உங்களின் பார்வைக்காக படிக்கட்டின் கீழே நின்று கொண்டிருப்பார்கள்...

நல்ல பகிர்வு... இப்படித்தான் மனசுல உள்ளதை அப்ப அப்ப போட்டு உடைச்சிடணும்... இல்லேன்னா மனசு தாங்காது... தம்பி எப்படி பொங்குறேன்...

பொங்குங்க... பொங்குங்க...

இந்தப் பொங்கலில் வாழ்வு பொங்கட்டும்... வளம் பொங்கட்டும்... உங்கள் உடல் நலம் பொங்கட்டும்...

நன்றி அக்கா... 
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum