சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பேருந்தில் வந்த கவிதை... Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பேருந்தில் வந்த கவிதை... Khan11
பேருந்தில் வந்த கவிதை... Www10

பேருந்தில் வந்த கவிதை...

Go down

Sticky பேருந்தில் வந்த கவிதை...

Post by selvakumarm on Fri 22 Jan 2016 - 7:14

முக்கால்வாசி
இரவை விழுங்கும்
சொந்த ஊர்
பயணம்.

ஒவ்வொரு தடவையும்
ஏதேனும்
ஓரிடத்தில்
விசிறிப்போகிறது
மழை.

கனத்த ஒலிப்பான்களுக்கிடையே
80 களின் பாடல்கள்.

ஒரு பயணியிடம்
சத்தமிடும்
நடத்துனர்.

குறந்தபட்சம்
ஒரு
கெட்டவார்த்தையேனும்
உதிர்த்துவிடும்
ஓட்டுனர்.

சாலையைவிட்டு
கவிழ்ந்துகிடக்கும்
ஓர் வாகனம்.

சாலையிலேயே
அரைந்துகொண்டிருக்கும்
ஒரு நாயின்
கோர மரணம்.

ஊர்களின்
தொடக்கத்தில்
கண்ணீரஞ்சலிப்
பதாகைகள்.

சூலமும் வேலும்
மாறிமாறி
ஒளிக்கும்
சீரியல் விளக்கு
அம்மன்கள்.

திடீரென
முளைக்கும்
உணவகங்கள்.

சுங்கச்சாவடிகளின்
காத்திருப்பில்
கண்ணாடியூடே
நுழையும்
வளையல்
அணிந்தவர்களின்
வசூல்.

பேசிக்கொண்டேயிருக்கும்
இரண்டு பெண்கள்.

பெருநோய் விரல்களென
முன்னிருக்கை
பெண்ணின்
முதுகு சுரண்ட
மடங்கியிருக்கும்
மத்தியவயது
மனிதனின்
பொய்த்தவம்.

சோர்ந்துபோனதாய்
மடியில்
படுத்துறங்கும்
புதுக்கணவன்.

விடிந்துவிடும்
விரைவிலென்றாலும்
வீடுவந்து
புரளும் வேளை..

வந்துவிடுகிறது..
கவிதை.

ஒரு மீள்பதிவு தான்...
ஆனால்
மீண்டும் மீண்டும்
நடக்கிறது..


உங்கள்
பின்னூட்டங்களை
தளத்திலும்
தெளியுங்கள்..

Www.naanselva.blogspot.com
நான் ஒன்று சொல்வேன்...

selvakumarm
புதுமுகம்

பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: பேருந்தில் வந்த கவிதை...

Post by சே.குமார் on Fri 22 Jan 2016 - 7:33

இதுதான் நிதர்சனம் அண்ணா...
அருமை...
இது மீண்டும் மீண்டும் நடக்கத்தானே செய்யும்...
வாழ்வோடு ஒன்றிய பயணமல்லவா....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: பேருந்தில் வந்த கவிதை...

Post by Nisha on Fri 22 Jan 2016 - 10:41

என் நினைவில்  இலங்கை இந்திய பேருந்தில் அதிகமாய் பயணம் செய்த நினைவு இல்லை.அப்படியான நீண்ட தூர பயணங்களும்  மட்டக்களப்பு,கொழும்பு பயணம் தான்!அப்பா இருந்த வரை அப்பா இலங்கை போக்குவரத்து சபையில் நடத்துனர் என்பதால்... அப்பா சலுகையில் முன் சீட்டில் டிரைவர் மாமாவுக்கு பின்னால் உட்கார்ந்து போகும் செல்லப்பிள்ளை நான். 

அதனால் இந்த நெருக்கடி அனுபவம் இல்லை. சுவிஸில் உள்ளுர் பேருந்தில் பயணம்  அதிக ஆட்கள் இருக்க மாட்டார்கள், பெரும்பாலும் பாதி சிட்  காலி தான். 

கடைசியாக மட்டக்களப்பிலிருந்து கொழும்பு பத்து மணி நேரம் ,யுத்த நேரம், வாகனங்கள் ஓடவில்லை, ஸ்பெஷல் பேருந்து  புளி மூட்டை போல் ஆட்களை நிரப்பி, இராணுவ டிரக் முன்னும் பின்னும் வர பத்து மணி நேரமும் நின்றே வந்த அனுபவம் நினைவில் இருக்கிறது, உயிர்ப் பயம்,பசி கொழும்புக்கு போய் விட்டால் அப்பாவுடன் சுவிஸ் போய் விடலாம் எனும் நம்பிக்கை, அப்பா காசு அனுப்பி விடுவார் எனும் ஏக்கம் தான் அப்போது மனதில் இருந்தது. இதை தனி பதிவாகவும் தருகின்றேன்!

நான் சுவிஸ் வந்த புதிதில் நடந்த சமபவம் நினைவு இருக்கின்றது.- ஒவ்வொரு புதனும் நாங்கள் சில குடும்பங்கள் சேர்ந்து மாறி மாறி ஒவ்வொரு வீட்டிலும்   பிரே செய்வோம், இரவில்பிரே முடிந்து  வீட்டுக்கு ஒன்பது மணி  பஸ்.பத்து நிமிட பயணம்,  ஒரு வயதான மனிதன்... எப்படியும் 60 க்கு மேல வயது இருக்கும்  என் கூட வந்து பேச்சு கொடுக்க நானும் நம்ம தாத்தா வயசுன்னு  பதில் சொல்லிட்டேன். அவனும் சுவிஸ் காரன் தான் தானும் நான் இருக்க ஏரியால தான் இருப்பதா சொல்லி ஹாய் சொல்லிட்டு போயிட்டான். ர் போடாமல் ன்  போடுவதை  கவனிக்கவும். 

தீடிரென ஒரு நாள்... நான்  பிரே முடிந்து  பேருந்தில் ஏறி அமர்ந்ததும் என் பக்கம் வந்தமர்ந்தான். ஹாய் சொல்ல நானும் சொன்னேன். சட்னு தொடையில் கை வைத்தானே பார்க்கலாம். எனக்கு அப்ப  18 வயது தான். எப்படி அதை எதிர் கொள்வதுன்னு தெரியல்ல.சுவிஸ் காரன் வேற, நான் வந்து கொஞ்ச நாள் , மொழி பிரச்சனை. உடைந்த ஆங்கிலந்தான் உதவி.  சட்னு எழுந்திருக்க முடியல்ல. ஆனால் நான் ப்ரே செய்யும் அக்கா, அண்ணாவிடம் சொல்லி விட்டேன், என்னால் இரவு  பிரேக்கு வர முடியாது,  பயமா இருக்கு என. அப்புறம் இரவில் பேருந்தில் வருவதை விட்டு அந்த அண்ணா அவர் காரில் கொண்டு வீட்டில் விடுவார்கள்.

அதன் பின் நான் மொழி கற்று , இங்கே நல்லா பழகியதும்  வேலை முடிந்து நள்ளிரவில் கூட வீட்டுக்கு வருவேன். நிரம்ப தைரியம்.யாரேனும் அருகில் வந்தாலே  ஒரு பார்வை போதும். ஆரம்பத்தில் பயந்தாங்கொள்ளிதான், யாரேனும் தெருவில் உன் பெயரென்னம்மா என கேட்டாலும் எடுப்பேன் ஓட்டம், வீட்டுக்குள் போய் தான் நிற்பேன், இப்போ நினைத்தாலும் சிரிப்பு வரும். 

நம் ஊர் வளர்ப்பு அப்படி. பெண் குழந்தை என்றால் பொத்து பொத்தி வளர்ப்பது. ஆனால் நான் என் மகளை அப்படி வளர்க்கல்லப்பா,, அவள் அண்ணானுக்கும் சேர்த்து தட்டி கேட்டு வருவாள்.  

பேருந்துப்பயண கவிதை என் நினைவை எங்கே கொண்டு சென்றுள்ளது என பாருங்கள்.   

நீண்ட பயணத்தில் காண்பதை நினைவில்  கொண்டு வர செய்யும் வரிகளோடு கவிதை! அருமை செல்வா! உங்களில் பதிவுகளை சேனையில் மீளபதிவாக்குங்கள். நாங்கள் படிக்க கருத்திட முடியும். 

நன்றி!


Last edited by Nisha on Sat 23 Jan 2016 - 22:37; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பேருந்தில் வந்த கவிதை...

Post by Nisha on Fri 22 Jan 2016 - 10:43

லிங்க் இணைக்கும் போது நீங்கள் பதியும் கவிதையின் லிங்க்  இணையுங்கள். அப்போது தான் இதே  கருத்தினை அங்கும் இணைக்க இயலும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பேருந்தில் வந்த கவிதை...

Post by Nisha on Fri 22 Jan 2016 - 10:45

நான் இங்கே ஏற்கனவே கருத்திட்டிருந்தாலும் மீண்டும்  புதிய கருத்தும் இட்டேன். 

http://naanselva.blogspot.com/2015/12/blog-post_27.html?showComment=1453448668339#c7212863789926611256


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பேருந்தில் வந்த கவிதை...

Post by நண்பன் on Mon 25 Jan 2016 - 10:28

பேருந்துப் பயணத்தில் நடந்தவைகள் அனைத்தும் 
எங்கள் கண் முன்னும் கொண்டு வந்தீர்கள் 
அதற்கு அழகாய் வரிகளைக் கோர்த்தீர்கள் 
பாராட்டுக்கள் உங்கள் கவித்தகமை சிறப்பு
உங்கள் கவிதையும் தாண்டி எங்கள் மங்கையர் திலகம் நிஷா அக்காவின் பின்னூட்டத்தின் நீளத்ததையும் பார்த்து வியந்தேன் இருவருக்கும் வாழ்த்துக்கள் நினைவில் நின்றவை 
கவிதை நிதர்சனம் உங்கள் அனுபவம் போல்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பேருந்தில் வந்த கவிதை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum