சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


 சோக்கா எழுதுங்க... சொக்கா பரிசை வெல்லுங்க... Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
 சோக்கா எழுதுங்க... சொக்கா பரிசை வெல்லுங்க... Khan11
 சோக்கா எழுதுங்க... சொக்கா பரிசை வெல்லுங்க... Www10

சோக்கா எழுதுங்க... சொக்கா பரிசை வெல்லுங்க...

Go down

Sticky சோக்கா எழுதுங்க... சொக்கா பரிசை வெல்லுங்க...

Post by சே.குமார் on Wed 20 Apr 2016 - 20:40

"ஏட்டி... எப்பப் பார்த்தாலும் பேஸ்புக்லயே கெடக்கியே... முக்கியமான ஒரு சேதியச் சொன்னியா நீயி..." கோபமாக் கேட்டபடி வந்தமர்ந்தாள் கனகா.

"அப்புடி என்னத்த நா சொல்லலை... எல்லாத்தயுந்தான் சொல்லுறேனே..." சிரித்தபடிக் கேட்டாள் சுகன்யா.

"என்னத்த சொன்னே... சினிமா நடிகருங்க... கிரிக்கெட்டு வச்சாங்களே... அதுக்கு  இன்னிக்கு கூட்டம் கூடலையாமே.."

"ஏட்டி...அதான் இன்னக்கி நமுத்துப் போச்சேடி... எப்ப வந்து கேக்குறே... நமக்கிட்ட காசு வாங்கி அவனுகளுக்கு எல்லாம் கட்டிப்பானுங்களாம்... கேட்டா நலிஞ்ச கலைஞருகளுக்குன்னு சப்பைக் கட்டு கட்டுறானுங்க.... அதுல நமக்கு என்ன செய்வானுங்க... நாங்கூட எதிர்த்து ரெண்டு மூணு டேட்டசு போட்டேந் தெரியுமா..."  அந்த வெற்றியில் தனக்கும் பங்கிருக்கு என்பது போல் கண்களை விரித்துப் பேசினாள் சுகன்யா.

"ஆத்தாடி... பவுசுதான்டி... அஜீத்து படம் வந்தா... மொத ஆளா தேட்டருல நிப்பே... நீ எதுத்து டேட்டசு போடுறியாக்கும்..."

"மக்ககிட்ட காசு வாங்காதே... நாம சம்பாதிச்சதுலதான் கட்டணுமின்னு மொதல்ல சொன்னது அவுகதான்... இப்பனு இல்ல இதுக்கு முன்னால வெஜயகாந்து கடன அடக்க சிங்கப்பூருக்கு ஆடப் போனப்போ கூட அவரு எதுக்கத்தான் செஞ்சாரு தெரியுமா..."

"அவரு மட்டுந்தான் எதுத்தாராக்கும்...? வேற ஆரும் எதுக்கலையாக்கும்...?"

"கோடிக்கோடியா மக்களுக்குச் செய்யிற லாரன்சு அண்ணாச்சி, பீப் பாட்டு பாடி நாசமாப் போன நம்ம சிம்பு... இப்புடி நிறையப் பேரு... இன்னைக்கு கூட விஜயும் தனுசும் வரலியாம்..."

"இவுக செரி...  கமலு... ரெஜினி... இதுக்கு எதுப்பு தெரிவிக்கலையா...?"

"ஏட்டி அவுக பெரியவுக... கருத்துச் சொல்லுவாக... காசுன்னா... செரி நமக்கெதுக்கு அந்தப் பேச்சு... என்னவோ சொல்லலைன்னு வந்தியே அதை விட்டுட்டு இதைப் பேசுறே...?"

"பேச்சு அந்தப் பக்கமாப் போயிருச்சு பாரு... ஏதோ வெட்டிப் பிளாக்கராமே... அதுல கத எழுவுற போட்டி வச்சிருக்காவளாம்..."

"ஆமா... நானுந்தேன் பார்த்தேன்... அதுக்கு என்ன இப்போ...?"

"அதப்பத்தி கொஞ்ச வெவரஞ் சொல்லேன்..."

"ஏட்டி... நீ எழுவப் போறியா...? அட ஆமா நீயி கூட அப்ப அப்ப கதயின்னு கிறுக்கிவியே..."

"அதான்டி... சும்மா கிறுக்கலாமேன்னு.... பரிசு கெடச்சா அதிட்டந்தானே..."

"ஓ... அப்ப களத்துல எறங்குறதுன்னு முடிவே பண்ணிட்டே... செரி... செரி ஆரு கண்டா...போனவாட்டி நம்ம குமாரு வாங்குன மாதிரி  உனக்குக் கூட கெடைக்கலாம்..."

"அடிப்போடி... வெவரஞ் சொல்லுடி... நா எழுவிக்கிட்டு வாறே... நீ அதை பட்டி பாத்து அனுப்பி வையி..."

"ம்... எழுவு... எழுவு... கில்லர்ஜி அண்ணன், செல்வராஜூ ஐயாவெல்லாம் எதுக்கு இருக்காவ... அவுககிட்ட கொடுத்து திருத்தி வாங்கி அனுப்பிடலாம். நம்மதமிழ்வாசி பிரகாஷ் அண்ணே விவரமா எழுதியிருக்கு... இரு வாறேன் தேடி எடுத்துச் சொல்றேன்..."

"சொல்லு.... சொல்லு... அப்புடியே அந்த வாத்தியாருக ஜெயக்குமாரு ஐயா, முத்து நிலவன் ஐயாக்ககிட்ட எல்லாம் காட்டி... திருத்திக்கலாம்..."

"ஆனாலும் ரொம்பத்தாண்டி... அவுக இருக்க பரபரப்புல ஒனக்கு திருத்திக்கிட்டு இருந்தாத்தான் வாழும்... ஏந் தனபாலன் அண்ணனை விட்டுட்டே...  அப்புறம்நிஷா அக்கா, காயத்ரி அக்காவெல்லாம் விட்டுட்டே... எழுவுனதை திருத்த அண்ணனுக்கிட்டயும் ஐயாக்கிட்டயும் கேக்கலாம்ன்னா... நீ அம்புட்டுப் பேரையும் இழுக்கிறே... அதெல்லாம் புக்கு போடும்போது பாத்துக்கலாம்... செரியா... ஆனா நீயெல்லாம் கத எழுவி... இருந்தாலும் உன்னோட ஆர்வத்தை பாராட்டுறேன்டி..." என்றபடி தேடி எடுத்துக் கொடுத்தாள்.
 சோக்கா எழுதுங்க... சொக்கா பரிசை வெல்லுங்க... VETTIBLOGGER


"ஏட்டி... இதப்பத்தி விவரமா வெட்டி பிளாக்கர்ஸ்ல போட்டிருக்காங்க... பாரு... பொறுமையா வாசி... நா போயி நறுக்குன்னு காபி போட்டுக்கிட்டு வாறேன்..."

கனகா வாசித்து பேப்பரில் குறித்துக் கொள்ள, சிறிது நேரத்தில் காபியோடு வந்தாள் சுகன்யா.

"ஏட்டி வாசிச்சியா... வெவரம் புரிஞ்சதா...?"

"ஆத்தாடி எட்டாயிரமாமே...? வெவரமெல்லாம் எழுவிக்கிட்டேன்..." வாயைப் பிளந்தாள்.

"ஈ போயிறாம..."

"பாத்தியா பாக்யாவுல தொடர்கதை எழுதப்போற சரவணன் அண்ணாச்சி, பாலகணேஷ் அண்ணாச்சி, அண்ணாச்சிங்க செங்கோவி, தமிழ்வாசி பிரகாஷூ, சதீஷ், ஆவி, அரசன்,  ரஹூம், சிவக்குமார்ன்னு தெரிஞ்சவங்களா மொதச் சுத்து நடுவரா இருக்காங்க... அப்ப நமக்கு அப்படிக்கா மார்க் போட்டுருவாங்கதானே..."

"ஆளையும் மூஞ்சியையும் பாரு... ஆரு எழுவுனான்னே தெரியாமத்தான் அவுக வாசிப்பாக... மார்க் போடுவாக... அதுபோக மொத ரவுண்டுலயே இமய மலைங்க... ரெண்டாவது மூணாவது ரவுண்டெல்லாம் கேக்க வேண்டாம்..."

"அடி ஆத்தி... அம்புட்டு சிக்குரெட்டா...? அப்ப செரமந்தானோ...?"

"இங்கேரு எழுவணுமின்னு ஆச வந்திருச்சுல... எதாச்சும் எழுவு... காசா பணமா... எழுவு...  ஒரு ஆளு மூணு கத எழுவலாமாம்... உங்கூட்டுக் கத, நாத்துனாவூட்டுக் கத, பங்காளிவூட்டுக் கதயின்னு எல்லாம் கிறுக்கியா... அனுப்புவோம்... ஆனா அப்பாரைச் சுத்தி எழுவணும்... அதமட்டும் மறக்காதே... செரியா... அப்புறம் எட்டாயிரங் கெடச்சா எனக்குப் பாதி கொடுத்துறணும்... என்ன டீலு ஓகேயா..."

"செரிடி... நாளைக்கே கிறுக்கி எடுத்தாறேன்... பரிசு கெடச்சா நாராயண விலாசுல தோச வாங்கித் தாறேன்... இல்லேன்னா கீர்த்திகாவுல பிரியாணி... லெட்சுமியில சினிமா ஓகேவா..."

"ஓகேட்டி.... இங்கேரு இது சாணி அள்ளி தலயில வச்சிக்கிட்டு வயலுக்குப் போற மாரியில்ல... பொறுமையா ரோசிச்சி... ரோசிச்சி எழுவு... ஆறாவது மாசம் ஒண்ணாந்தேதி வரைக்கும் டயமிருக்கு.... பொறுமயா யோசி... செரியா... படிக்கிறவுக கண்ணுல தண்ணி வரவைக்கிற மாரி... "

"ம் அடிச்சு தூள் கெளப்பிடுறேண்டி... நீயும் எழுவலாமே..."

"எனக்கு அதெல்லாம் செரி வராது... எங்கதயே பெரிய கத... ம்... அது எதுக்கு...நானும் இதப்பத்தி ஒரு டேட்டசு போடோணும்... தமிழ்வாசி அண்ணாத்தே போடச் சொல்லி கேட்டாப்புடி... போடலைன்னா மதுரக்காரருக்கு கோவம் வந்தாலும் வந்திரும்..." என்றபடி சுகன்யா கீ போர்டில் எழுத்துக்களைத் தட்ட ஆரம்பித்தாள்.

'எல்லாரும் கலந்துக்கங்க... வெட்டிப் பிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில....'என எழுத்துக்கள் ஒவ்வொன்றாய் ஸ்கீரினில் வர ஆரம்பித்தன.

என்னங்க நீங்க எல்லாரும் கலந்துக்க...  சொல்லிப்புட்டேன்... செரியா...

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: சோக்கா எழுதுங்க... சொக்கா பரிசை வெல்லுங்க...

Post by Nisha on Sat 30 Apr 2016 - 20:28

அடிச்சிதூள் கிளம்பிருங்க குமாரு! நமக்குத்தான் ஆயிரம் ஜோலி இருக்கு, அதில சிக்கிட்டு கதையாவது கட்டுரையாவது! ஒன்னுமே எழுத தோணலை, வேலை அத்தினி கிடக்குப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum