சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சிறுநீரக கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு  Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சிறுநீரக கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு  Khan11
சிறுநீரக கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு  Www10

சிறுநீரக கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு

Go down

Sticky சிறுநீரக கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு

Post by நண்பன் on Wed 17 Aug 2016 - 8:50

சிறுநீரக கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு :-

தற்போதுள்ள காலகட்டத்தில் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மனித உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது.
சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய்.
சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.
வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.
உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிறுநீரக கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு

Post by rammalar on Wed 17 Aug 2016 - 17:32

பயனுள்ள தகவல் பகிர்வு
-
சிறுநீரக கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு  08-1428473251-7-plantain-stem-juice
உங்கள் கவனத்துக்கு...
-
சிறுநீரை அதிகரிக்கச் செய்யும் என்பதால், 
வயதானவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் 
கொள்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது. 
-
வாழைத்தண்டை வாரத்தில் மூன்று நாள்களுக்கு 
மேல் சேர்த்துக் கொள்வது உசிதமல்ல. 
-
வாழைத்தண்டு குளிர்ச்சி யானது என்பதால், 
அதை உண்ணும் நாட்களில் மற்ற 
குளிர்ச்சியான பொருள்களைக் குறைத்துக்கொள்ளவும்.
---
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: சிறுநீரக கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு

Post by நண்பன் on Wed 17 Aug 2016 - 18:36

வாழைத்தண்டின் மருத்துவக் குணங்கள்..!

என்ன சத்துக்கள்?

அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது.

பலன்கள்

கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.

ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும்.

அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.

இரண்டு ரெசிபி

1) வாழைத்தண்டு ஜூஸ்
வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

2) வாழைத்தண்டு மோர்
வாழைதண்டு- 6
தயிர்- 1 லிட்டர்
இஞ்சிச் சாறு- 1 ஸ்பூன்
எலுமிச்சை இலை - 5 அல்லது 6
பெருங்காயத்தூள்- சிறிது
உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:

வாழை தண்டிலிருந்து நாரினை நீக்கவும்.

வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும். மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ்போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும்.இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும்.

இஞ்சிச்சாறு, உப்பு, பெருங்காயத்தூள்சேர்க்கவும்.

எலுமிச்சை இலையை கசக்கி மோரில் போடவும்.

வயிற்று உப்பிசம், வயிற்று கோளாறு நீங்கும். கிட்னி ஸ்டோன் உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த பலனை தரும். நீர் கடுப்பு நோய் உள்ளவர்களுக்கு உபாதைகளை நீக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிறுநீரக கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு

Post by சுறா on Sat 20 Aug 2016 - 19:38

ஹோமியோபதி மருந்தான clearstone இந்த வேலையை தான் செய்கிறது. இங்கு குறிப்பிட்ட பொருட்களால் தான் இதுவும் இயற்கை முறைப்படி தயாரிக்கப்படுகிறது. இரண்டு நாட்களில் கல் கரைவது உறுதி.

சாட்சி : நான் தான். எனக்கு இரண்டு கற்கள் இருந்தது லேசர் செய்ய 20000 செலவு என்று டாக்டர் சொன்னார்.  

நான் 100 ரூபாய் கொடுத்து மேற்சொன்ன மருந்தை வாங்கி 3 நாட்கள் பயன்படுத்தினேன் அவ்வளவே. கல் இன்று வரை இல்லை

இது நடந்து 5 வருடங்கள் ஆகிறது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சிறுநீரக கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு

Post by நண்பன் on Sun 21 Aug 2016 - 23:03

சுறா wrote:ஹோமியோபதி மருந்தான clearstone இந்த வேலையை தான் செய்கிறது. இங்கு குறிப்பிட்ட பொருட்களால் தான் இதுவும் இயற்கை முறைப்படி தயாரிக்கப்படுகிறது. இரண்டு நாட்களில் கல் கரைவது உறுதி.

சாட்சி : நான் தான். எனக்கு இரண்டு கற்கள் இருந்தது லேசர் செய்ய 20000 செலவு என்று டாக்டர் சொன்னார்.  

நான் 100 ரூபாய் கொடுத்து மேற்சொன்ன மருந்தை வாங்கி 3 நாட்கள் பயன்படுத்தினேன் அவ்வளவே. கல் இன்று வரை இல்லை

இது நடந்து 5 வருடங்கள் ஆகிறது.
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிறுநீரக கற்களை வெளியேற்றும் வாழைத்தண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum