சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மனசின் பக்கம் : மனம் விட்டுப் பேசலாம் Regist11


Latest topics
» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:06

» ஜூன் மாதம் வந்தால் எனக்கு இரண்டு கவலை...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:02

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:01

» சண்டைன்னு வந்திட்டா என் கணவரை நல்லா மொத்திடுவேன்...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:00

» மனசு பேசுகிறது : முகிலினி
by சே.குமார் Sun 2 Jun 2019 - 12:55

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by பானுஷபானா Mon 27 May 2019 - 13:13

.
மனசின் பக்கம் : மனம் விட்டுப் பேசலாம் Khan11
மனசின் பக்கம் : மனம் விட்டுப் பேசலாம் Www10

மனசின் பக்கம் : மனம் விட்டுப் பேசலாம்

Go down

Sticky மனசின் பக்கம் : மனம் விட்டுப் பேசலாம்

Post by சே.குமார் on Sat 19 Nov 2016 - 17:46

டல் நலமின்மை காரணமாக பதிவுகளை வாசித்த போதும் கருத்து இட முடியவில்லை... கருத்து இட்டால்தானா... வாசித்தாலே போதுமே... என எல்லாருடைய பதிவுகளையும் ஓரளவுக்கு வாசித்தேன். எப்பவும் நான் நீண்ட கருத்துக்களை இடுவதில்லை... வாசித்தேன் என்பதைப் பதிவு செய்ய சின்னதாய் ஒரு கருத்து அவ்வளவுதான்... ஆனால் அதைக் கூட இட முடியாத நிலை... ஒரு வாரம் தூக்கமில்லாமல் நரக வேதனை...நான் தமிழ் மணத்தில் வாக்களிப்பது கூட எப்போதாவது செய்யும் அரிதான செயல்தான்... இதை கில்லர்ஜி அண்ணா அறிவார்... ஏன்னா நேற்று என்னைப் பார்க்க வந்தவரின் முன்னிலையில்தான் அவரின் தளத்துக்கு வாக்களித்து இன்னைக்குத்தான் உங்களுக்கும் வாக்களிக்கிறேன் என்றதும் சிரித்தார். அதில் 'அடப்பாவி' என்று தெரிந்தாலும் அவர் எப்பவும் 'அப்பாவி'யாய் பழகக் கூடியவர். இன்று ஓரளவு உடல் நலத்தில் முன்னேற்றம்... இடது கை டைப்ப முடியாத சூழல்... இன்று வலது கைக்கு ஓரளவு ஒத்துழைக்கிறது. இருப்பினும் இன்னும் சில நாட்கள் வாசிக்க மட்டுமே செய்வேன்... கருத்து இடவில்லை என்று நினைக்க வேண்டாம்.

கில்லர்ஜி அண்ணா பற்றிச் சொன்னதும்தான் ஞாபகத்தில் வருது... கடல் கடந்த தேசத்தில் எழுத்தின் மூலம் கிடைத்த உறவு அண்ணன்... இவ்வளவுக்கும் தேவகோட்டையில் எங்க பெரிய அக்கா வீடு இருக்கும் பகுதியில்தான் இருக்கிறார்  என்றாலும்... அத்தானை உறவு முறை சொல்லி அழைப்பார் என்றாலும்... இங்குதான் நாங்கள் இருவரும் அறிமுகம்.... இங்கு உறவாய்... நட்பாய்... அண்ணனாய்...தேடி ஓடி வரும் பாசக்கார மனிதர்... முரட்டு மீசைக்குள் அன்பு நிறைந்த மனிதர்... சில காரணங்களால் வெளிநாட்டு வாழ்க்கை துறந்து சொந்த ஊரில் குழந்தைகளுடன் வாழ முடிவெடுத்து ராஜினாமா பண்ணி விட்டார்... அடுத்த வாரத்தில் ஊருக்குப் போய் விடுவார்... மகேந்திரன் அண்ணன் போன் அடித்தாலும் எடுப்பதில்லை... இங்கிருக்கிறாரா..? ஊரில் இருக்கிறாரா...? தெரியவில்லை. அவரின் அம்மாவின் இறப்புக்குப் பின்னர் அவர் தொடர்பில் இல்லை. நல்லது கெட்டது எது என்றாலும் உரிமையோடு பகிர அருகிருந்த அண்ணன் கில்லர்ஜி அவர்களும் இனி ஊரில்... ஊருக்குப் போகும் போது பார்த்து பேசலாம் என்பது ஆறுதல்... தேவா அண்ணாவும் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டிருப்பது போல் கில்லர்ஜி அண்ணாவும் தனது முதல் புத்தகக் குழந்தையான 'தேவகோட்டை தேவதை தேவகி' வெளியீட்டு விழா வைப்பார்... தொடர்ந்து நல்ல புத்தகங்களை வெளியிடவும் அவர் விரும்பும் சந்தோஷ வாழ்க்கை அமையவும் இறைவன் அருள் புரியட்டும்.  புத்தகத்தை எல்லாரும் வாங்கிப் படியுங்கள். கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை போல் அவரின் நகைச்சுவை... எடக்கு மடக்கு... எகத்தாளம்... கிராமியம்... காதல்... கேலிகள்...  என எல்லாம் கலந்து கலவையாய் தேவதையை சமைத்திருக்கிறார்... கண்டிப்பாக வாங்கி வாசியுங்கள்... நானா.. எனக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாலயே கொடுத்துட்டார்... இன்னும் வெளியீட்டு விழா வைக்காததால் அது குறித்து விரிவாய் எழுதலை.

மனசின் பக்கம் : மனம் விட்டுப் பேசலாம் %25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AE%25B5%25E0%25AF%2581%2B%25E0%25AE%25A8%25E0%25AE%25A9%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AE%25A4%25E0%25AF%2581%2B%25281%2529


தேவா அண்ணா... துபாயில் இருந்து அபுதாபி வரும் போதெல்லாம் 'தம்பி... அபுதாபி வாரேன்... உன்னைச் சந்திக்கிறேன்...' என்று வந்து பார்த்து இருவரும் உணவருந்திப் பிரியும் வரை நிறைய இலக்கியம் பேசும் பிரியமான அண்ணன்... எங்க சிவகங்கை சீமையில் விளைந்த கில்லர்ஜி... ஜோதிஜி... தேனக்கா... இராஜாராம் சித்தப்பு... இன்னும் நிறைய எழுத்தாற்றல் மிக்க பெரியவர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்...அப்படித் தோன்றி தஞ்சையில் காலூன்றி... சென்னையில் அடியெடுத்து வைத்திருக்கும் தேவா அண்ணன் அவர்கள் இலக்கிய எழுத்துக்குச் சொந்தக்காரர்... காதலே சுவாசமாக அவர் எழுதும் எழுத்தில் காதல் வழிந்தோடும் என்பதில் சந்தேகமில்லை... வாசிக்க வாசிக்க யோசிக்க வைக்கும் எழுத்துக்கள் நம்மைக் கவர்வது போல் இவரின் எழுத்துக்கள் நம்மை அதற்குள் இழுத்துச் செல்லும்... இவரின் 'படைப்புக்கள் விற்பனைக்கு' என்ற முதல் புத்தகம் வெளிவந்திருக்கிறது... வாங்கி வாசித்துப் பாருங்கள்... கல்கி இணையாசிரியர் சூர்யா அவர்கள் இவரின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு முகநூலில் விரிவாய் எழுதியிருந்தார்.


மனசின் பக்கம் : மனம் விட்டுப் பேசலாம் 14991981_10153848390456780_2453414134351449455_n


குடந்தை சரவணன் அண்ணன் அவர்கள் தனது குடந்தையூர் தளத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரைக்கதை வடிவில் 'வா காதல் செய்வோம்' என்ற ஒரு அழகான காதல் கதையை ஆரம்பித்திருக்கிறார். வாசியுங்கள்... வித்தியாசமான ஒரு கதையை வாசித்த அனுபவத்தைப் பெறுவீர்கள்... ஆம்... திருமணத்துக்குப் பின்னர் காதல் செய்கிறார்களாம்... ரெண்டு பகுதி வெளியாகி இருக்கு... அருமையா இருக்கு...

ண விவகார திட்டமிட்ட நல்ல முடிவுதான் என்றாலும் பாதிக்கப்பட்டிருப்பது கரை வேட்டிகளும்... பண முதலைகளும் அல்ல.. அன்றாடங் காச்சிகள்தான் என்பது வேதனைக்குரியது. சிறப்பான ஒரு திட்டம் தீட்டும் போது அதே 500. 1000த்தை புதிய நோட்டு வடிவில் கொடுத்துவிட்டு பழையதை செல்லாததாக்கியிருக்கலாம். 2000 ரூபாய் நோட்டு எதற்காக போடப்பட்டது../ இப்ப ஏழைகள் சில்லரைக்கும் அலைய வேண்டிய நிலமை. இன்னைக்கு அரசியல்வாதிக ஏழை கஷ்டப்படுறான்... விவசாயி கஷ்டப்படுறான்னு நாலு பேரு உக்காந்து ஞாயம் பேசுற பஞ்சாயத்துல குந்திக்கினு குதிக்கிறானுக.. காவிரி பிரச்சினையில விவசாயிக்காக குதிக்கலையே... பணப் பிரச்சினைக்கு மட்டும் ஏன் பக்கவாத்தியம் வாசிக்கிறானுங்கன்னு பார்த்தா... இன்னைக்கு அவனோட பொழப்புக்கு மண்ணு... அதான் விவசாயியை இழுக்கிறான்... களவாணிப் பயலுக...  ஏரோட்டுல தார்க்குச்சியால குத்தணுமின்னு அரசன் முகநூலில் சொல்லியிருந்தார். கண்டிப்பாக அதைத்தான் செய்யணும்... அப்பவும் திருந்த மாட்டானுங்க... இது மிக நல்ல விஷயம் என்றாலும் இத்தனை பாதிப்பு வராமல் செய்திருக்கலாம்... 

சென்ற வாரத்தில் கனவுப்பிரியன் அண்ணா அவர்கள் இரண்டு புத்தகங்கள் கொண்டு வந்து கொடுத்துச் சென்றார் வாசிக்க... உடல் நலப் பிரச்சினையால் அவை அப்படியே இருக்கின்றன... வாசிக்கணும்... யவனராணி வாசிப்பனுவத்தை ஒரு பகிர்வாக்கணும்... முதல்ல உடல் நலம் தேறி வருகிறேன்....
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum