சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார் Khan11
4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார் Www10

4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார்

Go down

Sticky 4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார்

Post by சே.குமார் on Sun 12 Feb 2017 - 19:55

4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார் NAAN
லையுலகில் நான் நேசிக்கும் ஐயாக்களில் ஒருவர்... ஊர் பெயரை தன்னோடு இணைத்துக் கொண்டவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட பிரியம் உண்டு. அதுவும் ஐயா மீதான நேசத்தை இன்னும் நெருக்கமாக்கியது. இதுவரை இணையம் மூலமே தொடர்பில் இருக்கிறோம். நான் அவர் பதிவுகளுக்குச் செல்லாவிட்டால் கூட என் பதிவுகளுக்கு  கருத்திடுவார். மிகச் சிறந்த எழுத்தாளர் ஐயா... ஆசிரியர்... கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.
வரலாற்று நிகழ்வா... நூல் விமர்சனமா... அதை ஆரம்பிக்கும் விதமும் முடிக்கும் விதமும் வேறு யாரும் எழுத முடியாத வகையில் அமையும். அவ்வளவு நேர்த்தியாக ஆரம்பித்து மெல்லப் பயணித்து சொல்ல வந்ததை இடையில் நகர்த்தி நம்மை ஈர்க்கும் விதமாக எழுதக்கூடியவர். 
பார்வை இருந்தும் குருடாய் இருக்கும் மனிதர்கள் மத்தியில் பார்வை இல்லாத நிலையில் தனிமனிதனாய் அமெரிக்காவில் படித்து ஆய்வு மேற்கொண்டு பல இன்னல்களுக்கு இடையில் சாதித்து உயர்ந்த வெற்றிவேல் முருகன் குறித்து ஐயா எழுதிய கட்டுரையை அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.
'என்னைப் பற்றி நான்' விவரம் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியதும் கொஞ்சம் வேலையாக இருக்கிறேன் அனுப்புகிறேன் என்று பதில் அனுப்பி பின்னர் எனக்கு அனுப்பி வைத்தார். அந்த அன்புக்கு நன்றி.
இனி ஐயா அவரைப் பற்றி மீட்டிய வீணை... எனை மீட்ட வலை உங்கள் பார்வைக்கு...
4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார் 1


எனை மீட்ட வலை

ரந்தை.
நான் பிறந்தது கரந்தை
தவழ்ந்தது கரந்தை
நடந்தது கரந்தை
படித்தது கரந்தை
பணியாற்றுவதும் கரந்தை.
எனக்குத் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தது கரந்தை
என்னுள் தமிழ் உணர்வை ஊட்டியது கரந்தை
ஏடெடுத்து எழுதக் கற்றுக் கொடுத்ததும் கரந்தை
கரந்தை என் உலகு.
இவ்வுலகிற்கு உள்ளேயே வலம் வந்த எனக்கு, உழைத்தது போதும் என்ற ஞானத்தை ஊட்டியதும் கரந்தை.
இருபது வருடங்களுக்கும் மேலாக, குடும்பம் என்பதைத் துறந்து, எனக்கும் மனைவி மக்கள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து, ஓயாது உழைத்திருக்கிறேன், ஊர் ஊராய் சுற்றியிருக்கிறேன்.
தன்னலமற்றுத்தான் உழைத்திருக்கிறேன்.
யாசகம் என்று எதையும் இதுவரை யாசித்ததில்லை.
சலுகைகள் எதையும் அனுபவித்ததில்லை.
ஆயினும் பல கசப்பான நிகழ்வுகள். 
என்றென்றும் ஆறாத மனக் காயங்கள். 
இதயத்தை ரணமாக்கி உதிரத்தை உதிர வைத்த, வேதனைமிகு வார்த்தைகள்.
என்னை யோசிக்க வைத்தன.
யோசித்தேன்.
கரந்தை மண்ணில் அமர்ந்து யோசித்தேன்.
கரந்தையே எனக்கு போதிமரமும் ஆனது.
கரந்தை உன் உலகாயிருக்கலாம், ஆனாலும் நின் மனைவி மக்களுக்கு, நீதான் உலகு.
பொட்டில் அறைந்தாற்போல் புரிய வைத்தது.
புது உலகின் வழி திறந்தது.
எழுந்து நடந்தேன்.
ஆயினும் ஓய்வு நேரங்கள், என்னை வாட்டி வதைத்தன.
ஓய்வின்றி உழைத்துவிட்டு, ஓரிடத்தில் அமர்ந்திருப்பது மனதுள் வெறுமையை வளர்த்தது.
கரந்தை என்றால் மீட்டல் என்று ஒரு பொருளுண்டு.
தமிழையே மீட்டெடுத்த கரந்தை, என்னை மீட்காதா, கரை சேர்க்காதா.
கரந்தை எனை மீட்டது, கரை சேர்த்தது.
இணையம் என்னும் வற்றாத தமிழ்க் கடலின் கரையில் என்னை நிறுத்தியது.
என் பெயருடன், தன்னையும் இணைத்து, வலைப் பூ என்னும் படகில் ஏற்றி, எழுதுகோலைத் துடுப்பாய் தந்தது.
இணையக் கடலில் துடுப்பைச் சுழற்ற, சுழற்ற, திரும்பும் திசையெல்லாம், நேசம் தவழும் பாசமிகு வரவேற்புகள்.
வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த உறவுகள், நேசக் கரம் நீட்டி அரவணைத்துக் கொண்டன.
உடன் பிறந்த சகோதரி இல்லையே, என்ற என் நெடு நாளைய ஏக்கம், பஞ்சாய் பறந்து போனது.
பல்வேறு நாடுகளில் இருந்தும், காற்றில் மிதந்து வரும், எண்ணற்ற உடன் பிறவாச் சகோதரிகளின் பாச மழையில் நனைகின்றேன்.
நண்பர்கள்.
முகமறியா இணைய நண்பர்களின் குரலை, அலைபேசி வழி, கேட்கும் பொழுதெல்லாம் உள்ளம் குளிர்ந்து போகிறது.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஜெயக்குமாரா என நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது.
இணையம் என் இதயம்.
கரந்தை மண், 
கந்தக மண் - தமிழுணர்வு 
வெப்பமாகத் 
தகிக்கின்ற மண்.
                                               -ஈரோடு தமிழன்பன்


***************

ஐயாவின் எழுத்தை வாசித்திருப்பீர்கள்... அவரைக் குறித்து அறிந்திருப்பீர்கள்... அய்யாவுக்கு தங்களின் மேலான கருத்துக்களை வழங்குங்கள்.
'என்னைப் பற்றி நான்' என வலை ஆசிரியர்கள் தொடர்ந்து பேசுவார்கள்.

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum