சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


8.என்னைப் பற்றி நான் - வெங்கட் நாகராஜ் Regist11


Latest topics
» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:06

» ஜூன் மாதம் வந்தால் எனக்கு இரண்டு கவலை...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:02

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:01

» சண்டைன்னு வந்திட்டா என் கணவரை நல்லா மொத்திடுவேன்...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:00

» மனசு பேசுகிறது : முகிலினி
by சே.குமார் Sun 2 Jun 2019 - 12:55

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by பானுஷபானா Mon 27 May 2019 - 13:13

.
8.என்னைப் பற்றி நான் - வெங்கட் நாகராஜ் Khan11
8.என்னைப் பற்றி நான் - வெங்கட் நாகராஜ் Www10

8.என்னைப் பற்றி நான் - வெங்கட் நாகராஜ்

Go down

Sticky 8.என்னைப் பற்றி நான் - வெங்கட் நாகராஜ்

Post by சே.குமார் on Thu 9 Mar 2017 - 6:24

'என்னைப் பற்றி நான்' என்று இந்த வாரம் தன்னைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார் பயணப் பகிர்வும் போட்டோக்களுமாக கலக்கும் வெங்கட் நாகராஜ் அண்ணன் அவர்கள். இவரின் புகைப்படங்கள் நம்மை ஈர்க்கும் என்றால் பயணப் பகிர்வுகள் நாம் பயணிக்காத இந்திய மாநிலங்களிடையேயும் அங்கிருக்கும் மக்களிடயேயும் நம்மையும் பயணிக்க வைக்கும் என்பதை இவரை வாசிக்கும் அனைவரும் அறிவோம்.
'சந்தித்ததும் சிந்தித்ததும்' என்ற வலைத்தளத்தில் எழுதும் வெங்கட் அண்ணா, பதிவர்கள் மத்தியில் பிரபலம். அனைவரும் விரும்பும் பதிவர். தில்லியில் பணி... வேலைப்பளுவுடன் பதிவும்... அதுவும் அவர் எடுத்த போட்டோக்கள், பயணக் கட்டுரைகள் என வித்தியாசமாய் கொடுத்துக் கொண்டிருப்பவர். இன்னுமொரு கூடுதல் விபரம் என்னவெனில் இதுவரை   இவரின் ஏரிகளின் நகரன் நைனிதால், மத்தியப் பிரதேசம் அழைக்கிறது, தேவ் பூமி - ஹிமாச்சல் பயணக் கட்டுரைகள், பஞ்ச துவாரகா என்ற நான்கு மின்னூல்கள் வெளிவந்திருக்கின்றன.

மேலும் இவரின் மனைவி திருமதி. ஆதி வெங்கட் அவர்கள் 'கோவை2தில்லி' வலைப்பதிவிலும் அன்பு மகள் ரோஷ்ணி 'வெளிச்சக்கீற்றுக்கள்' என்னும் வலைப்பதிவிலும் எழுதுகிறார். ரோஷ்ணி மிக அழகாக படம் வரைவார். ஆக மொத்தம் முக்கனிப் பதிவர்கள் இவர்கள். 
வெங்கட் அண்ணாவைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இனி அவரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.
8.என்னைப் பற்றி நான் - வெங்கட் நாகராஜ் 1

ண்பர் பரிவை சேகுமார் அவர்கள் “என்னைப் பற்றி நான்” என்ற தலைப்பில் வலையுலக நண்பர்களிடம் எழுதி வாங்கி அவரது தளத்தில் பகிர்ந்து வருகிறார்.  என்னிடமும் கேட்டிருந்தார் – என்னைப் பற்றி நானே எழுதித் தருமாறு கேட்டுசில நாட்களாகிவிட்டதுஉள்பெட்டியின் மூலம் ஒரு முறை நினைவூட்டிய பிறகும் எழுதி அனுப்ப கால தாமதமாகிவிட்டதுஇதோ என்னைப் பற்றி நான்…. 
நான்…  நான்….  ஏனோ குணா பட கமல் நான்நான் என்று கடிதம் எழுதும் போது சொல்வது நினைவுக்கு வருகிறதுகூடவே இன்னுமொன்றும்.  அது பாலகுமாரனின் புத்தகம் ஒன்றில் வந்த கவிதை
எனக்குள்ளே ஒரு மிருகம் உண்டு
அதை உன்னிடம் சொல்வதெப்போ…..
நாளை
நாளை மறுநாள்!” 
….என்று துவங்கும் அந்தக் கவிதை போல நம் எல்லோர் மனதிற்குள்ளும் மிருக குணம் ஒளிந்து கொண்டிருக்கிறது.  மிருக குணம் மட்டுமல்லபல மனிதர்களின் மனதில் அழுக்குகளும் ஒளிந்து கொண்டிருக்கின்றன.    பெரும்பாலும் முயற்சி செய்து இந்த மிருக குணத்தினை தடைபடுத்திமனதுக்குள் பூட்டி வைத்திருந்தாலும்அவை அவ்வப்போது தலைகாட்டாது இருப்பதில்லைஎனக்குள்ளும் இப்படி அழுக்குகள் இருக்கலாம் – எனக்குத் தெரிந்த ஒரு அழுக்கு/மிருகம் – எனது கோபம்!
பதிவுலகில் எழுதும் பலரும் தங்களைப் பற்றிய செய்திகளை முழுவதுமாகவெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.  இன்னும் பலர் தங்கள் பெயரைக் கூட வெளியிடாமல் புனைப்பெயரில் தான் எழுத வேண்டியிருக்கிறது.  அவர்களுக்கு அதற்கான பலமான காரணமும் இருக்கிறது.  இப்படி இருக்கையில் பதிவுலகம் மூலம் நட்பில் இருப்பவர்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள நண்பர் குமார் அவர்களின் இத்தொடர் வழிவகுக்கிறது
சரி இப்போதைக்கு தலைப்புக்கு வருகிறேன்அதாவது என்னைப் பற்றி நான் – என்ன சொல்வது?  என்னைப் பற்றிய பல விஷயங்கள் ஏற்கனவே எனது தளத்தில் எழுதி இருக்கிறேன்.  இருந்தாலும் இங்கே மீண்டும் ஒரு முறை……
பிறந்ததும் வளர்ந்ததும் நிலக்கரி நகரம் நெய்வேலியில்.  கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போதே அரசு வேலைக்காக எழுதிய தேர்வில் தேர்ந்தெடுக்கப்படகல்லூரிப் படிப்பின் மூன்றாம் ஆண்டு தேர்வுகள் எழுதி முடித்த பத்தாம் நாளே தலைநகர் தில்லி வந்து அரசுப் பணியில் சேர்ந்தாயிற்று!  இதோ இருபத்தி ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டன.  ஏதோ இன்று தான் வந்த மாதிரி இருக்கிறது.  இன்னும் பதினான்கு ஆண்டுகள் [அரசு ஓய்வு பெறும் வயதில் ஏதேனும் மாற்றம் கொண்டு வராமல் இருந்தால்பணி புரிய வேண்டும்!  இப்பொழுதே வேலை செய்ய பிடிக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும்வேலை செய்து தானே ஆகவேண்டும்……
படித்தது இளங்கலை கணிதம் – படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இல்லைஇந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு இப்படித்தான் அமைகிறது.  என்னுடைய அலுவலகத்தில் சந்தித்த ஒரு மனிதர் நினைவுக்கு வருகிறார் – கணேசன் என்று பெயர் – M.Sc Microbiology படித்தவர் – அரசுத் துறையில் வந்து சேர்ந்தார் – பிறகு வங்கிப் பணிக்கான தேர்வு எழுதி தமிழகத்தின் ஏதோ ஒரு வங்கியில் காசாளாராகப் பணியில் சேர்ந்தார்.  அவர் படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லை!
குடும்பத்தில் என்னையும் சேர்த்து மூன்று பேர்…. மூத்தவர் ஒருவரும் இளையவர் ஒருவரும்நடுவில் நான்– ஒரே மகன்திருமணம் முடிந்து ஒரே ஒரு அன்பு மகள்….. மனைவிமகள் இருவருமே வலைத்தளம் வைத்திருப்பவர்கள் என்பதால் இங்கே சொல்ல வேண்டியதில்லை
எந்த வேலையாக இருந்தாலும்ஈடுபாடுடன் செய்வது எனக்குப் பிடித்த விஷயம்.  பல சமயங்களில் குடும்பத்தினை மறந்துவெளிநபர்களுக்காகவே பணி செய்திருக்கிறேன்.  இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா… இவன் ரொம்ப நல்லவன் என்று சொல்லாமல்என்னைப் பலரும் பயன்படுத்திக் கொண்டது புரியவே பல வருடங்கள் ஆகிவிட்டதுஇப்படி ஏமாளியாக இருந்திருக்கிறேனே என்று புரிந்து கொண்டபோது நாற்பதைத் தொட்டிருந்தேன்…..   
பெரும்பாலும் எந்த வம்புகளுக்கும் போவதில்லைநான் உண்டுஎன் வேலை உண்டு என்று இருப்பதே வழக்கமாகி இருக்கிறது.  செய்யும் வேலை பிடிக்கிறதோஇல்லையோசெய்யும் வரை அடுத்தவருக்குத் தொந்தரவு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு.
சிறு வயதிலேயே வேலைக்கு வந்துவிட்டதால்அதுவும் கல்லூரித் தேர்வு முடிந்த பத்து நாட்களுக்குள் வேலைக்கு வந்துவிட்டதால் மேலே படிக்க முடியவில்லை என்பதில் வருத்தமுண்டுபடிக்க முயற்சி செய்தாலும் அத்தனை முனைப்புடன் இருக்கவில்லை என்று இப்போது தோன்றுகிறது – “கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்!
எது நடந்ததோஅது நன்றாகவே நடந்ததுஎது நடக்கிறதோஅதுவும் நன்றாகவே நடக்கிறதுஎது நடக்க இருக்கிறதோஅதுவும் நன்றாகவே நடக்கும்” என்ற கீதாசாரம் போலஎது நடந்தாலும் அதைப் பற்றி வருத்தப் படுவதில்லை – நினைப்பதில்லைஎப்போதுமே Take it easy policy தான்!  எப்போதாவது ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து எட்டிப் பார்த்து கொஞ்சம் படுத்தினாலும் விரைவில் மீண்டு விடுவது வழக்கம்.  நன்கு பழகிய ஒரு நண்பர்முதுகில் குத்தியபோது, “சரி அவனுக்குத் தெரிஞ்சது அவ்வளவு தான் விடுஎன்று இருந்திருக்கிறேன்.  அப்போது கூட எனது இல்லத்தரசி எல்லாத்தையும் எப்படி உங்களால ஈசியா எடுத்துக்க முடியுது?” என்று தான் கேட்டார்….. 
நம்மால் இயன்றவரை அடுத்தவர்களுக்குத் தொந்தரவில்லாமல் இருக்க வேண்டும்நல்லது செய்யாவிட்டாலும்மனதளவில் கூட யாருக்கும் கெடுதல் செய்யக் கூடாது என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறதுசொல்ல முடிந்த அளவில் என்னைப் பற்றி நான் சொல்லி இருக்கிறேன்சொல்லாத விஷயங்கள்சொல்ல முடியாத விஷயங்களும் உண்டு என்றாலும் சொல்ல முடியாதே!
என்றும் நட்புடன்,
வெங்கட் நாகராஜ்.
தில்லி.
*****


'என்னைப் பற்றி நான்' வாராவாரம் எதிர்பாராத வலை ஆசிரியரைப் பற்றி அறியத் தருகிறது என்பதில் திருப்தியே... அடுத்த வாரம் இவர்தான் என்று அறியாமல் இந்த வாரம் பதியும் போதே அடுத்த வாரத்துக்கான வலை ஆசிரியர் பகிர்வு எனக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி. அதுவும் கேட்டதும் அனுப்பிக் கொடுக்கும் உறவுகளுக்கு உண்மையில் நான் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தளவுக்கு இந்தப் பகிர்வு போகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. எல்லாப் புகழும் உங்களுக்கே.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1457
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum