சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி Khan11
டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி Www10

டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

Go down

Sticky டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

Post by rammalar on Wed 1 Nov 2017 - 8:12

டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 201711010354493594_IndiaNew-Zealand-crash-is-the-first-of-the-20-overs-cricket_SECVPF
-
புதுடெல்லி,

கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 1–2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்றிரவு நடக்கிறது.

ஒரு நாள் தொடரில் நியூசிலாந்தின் சவாலை முறியடித்து தொடரை வசப்படுத்திய இந்திய அணி, அதே போன்று 20 ஓவர் தொடரிலும் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்நோக்கி உள்ளது. ஆனால் 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து மிகவும் பலம் வாய்ந்த அணியாகும்.

முன்னாள் உலக சாம்பியனான இந்திய அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போன்ற முன்னணி அணிகளை எல்லாம் வீழ்த்தி இருக்கிறது. ஆனால் ஏனோ, நியூசிலாந்தை மட்டும் இதுவரை போட்டுத்தாக்க முடியவில்லை.

நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள 5 இருபது ஓவர் போட்டிகளிலும் இந்தியாவுக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது. கடைசியாக கடந்த ஆண்டு உலக கோப்பையில் தோற்று இருந்தது.

இந்த நீண்ட கால சோகத்துக்கு விராட் கோலி தலைமையிலான படையினர் முடிவு கட்டும் வேட்கையில் இருக்கிறார்கள். ஒரு நாள் தொடரில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா சதங்கள் அடித்து அசத்தினர். பந்து வீச்சில் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் பார்மில் உள்ளனர். ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, டோனி, தவான், கேதர் ஜாதவ் ஆகியோரும் நல்ல நிலையில் இருப்பது இந்திய அணியை வலுவானதாக காட்டுகிறது.

இந்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹராவின் கடைசி சர்வதேச போட்டி என்பதால், அனேகமாக புவனேஷ்வர்குமார் வெளியே உட்கார வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 18 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் நீடித்த 38 வயதான நெஹரா சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் விடைபெறுகிறார். அவரை வெற்றியுடன் வழியனுப்பவும் இந்திய வீரர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை ஒரு நாள் தொடரில் அவ்வளவு எளிதில் பணிந்து விடவில்லை. குறிப்பாக கடைசி ஒரு நாள் போட்டியில் 338 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வெற்றியை நெருங்கி வந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிடில் வரிசையில் ராஸ் டெய்லர், டாம் லாதம், நிகோல்ஸ் ஆகியோரின் பேட்டிங், கேப்டன் வில்லியம்சனுக்கு மிகுந்த திருப்தி அளித்துள்ளது.

தங்களது பிடியை விட்டுக்கொடுக்காமல் 20 ஓவர் தொடரிலும் மிரட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். இது குறுகிய வடிவிலான போட்டி என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, டோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், பும்ரா அல்லது புவனேஷ்வர்குமார், நெஹரா, யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், கனே வில்லியம்சன் (கேப்டன்), காலின் முன்ரோ, ராஸ் டெய்லர், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், காலின் டி கிரான்ட் ஹோம், சான்ட்னெர், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, சோதி

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை 
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

---------------------
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum