சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஆசிரியை வாக்கு அருள் வாக்கு! Regist11


Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
ஆசிரியை வாக்கு அருள் வாக்கு! Khan11
ஆசிரியை வாக்கு அருள் வாக்கு! Www10

ஆசிரியை வாக்கு அருள் வாக்கு!

Go down

Sticky ஆசிரியை வாக்கு அருள் வாக்கு!

Post by rammalar on Sat 27 Oct 2018 - 6:03

ஆசிரியை வாக்கு அருள் வாக்கு! E_1540440902

-
சிவகங்கை மாவட்டம், பொன்னலிக் கோட்டையில் உள்ள,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 2ம் வகுப்பு
படித்த போது நடந்த சம்பவம் இது!

வகுப்பு ஆசிரியை கிறிஸ்டி கரும்பலகையில், பாடத்தை
எழுதி போட்டு, சிலேட்டில் எழுத சொன்னார்.

எழுதுவதற்கு குச்சி இல்லை; சக மாணவர்களிடம்,
கேட்கவும் தயக்கம்! ‘என்ன செய்யலாம்!’ என யோசித்த
போது, ஓலைச்சுவடியும், எழுத்தாணியுமாக திருவள்ளுவர்
அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வகுப்பறையில்
பார்த்ததும், ஆணியை வைத்து எழுதுவது என்ற முடிவுக்கு
வந்தேன்.

அந்த காலத்தில், இரண்டு விதமான எழுது குச்சிகள்
இருந்தன. ஒன்று மாக்குச்சி மற்றொன்று கல்குச்சி.
இந்த கல்குச்சி, ஏறக்குறைய சிலேட்டின்
வண்ணத்திலேயே இருக்கும். ஆணியால் எழுதினாலும்,
கல்குச்சியால் எழுதியது போலவே இருக்கும்.

வகுப்பறையின் மூலையில், பழைய இரும்பு பொருட்களை
எல்லாம் குவித்து வைத்திருந்தனர். அதிலிருந்து, ஒரு
ஆணியை எடுத்து, ஆசிரியை எழுதிப் போட்ட பாடத்தை
எழுதி, நன்றும் வாங்கி விட்டேன்.

என் கெட்ட நேரம், இன்னொரு பாடத்தை எழுதி போட்டு,
அதையும் சிலேட்டில் எழுதச் சொன்னார் ஆசிரியை.
ஆணியால் எழுதிய பாடமோ அழிய மறுத்தது.

ஆசிரியை எழுதி விட்டு போட்ட, சின்ன சின்ன, ‘சாக்பீஸ்’
துண்டுகளை பொறுக்கி, அடுத்த பாடத்தை எழுதினேன்.

ஆசிரியை ஒரு கணம், திருவள்ளுவர் படத்தையும்,
என்னையும் மாறி மாறி பார்த்து விட்டு, சிரித்தபடியே
, ‘உனக்கு என்ன பெரிய எழுத்தாளர்ன்னு நினைப்பா…’
என்று, என் காதை பிடித்து, செல்லமாக திருகினார்.

பின், அனைத்து மாணவர்களும் கேட்கும் விதமாக,
‘நம்ம சரவணராஜ் எதிர்காலத்துல பெரிய எழுத்தாளரா
வந்தாலும் வருவாண்டா…’ என்றார் சிரித்தபடியே.

அன்றைக்கு ஆசிரியை விளையாட்டாகச் சொன்னது,
இன்று என் வாழ்வில் பலிக்க துவங்கியுள்ளது. தற்போது,
ஐந்து நுால்களை வெளியிட்டு உள்ளேன்.

பெரும்பாலான இதழ்களில், என் படைப்புகள் வெளி
வந்துள்ளன. பிரபலமான கவிஞர்களால், என் தொகுப்புகள்
கொண்டாடப்பட்டுள்ளன.

ஆசிரியை வாக்கு அருள் வாக்கு!

—————————
– துஷ்யந்த் சரவணராஜ், தேவக்கோட்டை.
சிறுவர் மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15639
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum