சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி! Khan11

வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி!

Go down

வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி! Empty வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி!

Post by rammalar Sat 12 Jan 2019 - 16:50

வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி! Bogi_1


 
மார்கழி மாதம் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளது. வரும் திங்கள் கிழமை (14/1/2019) மார்கழி மாதத்தின் கடைசி நாள். நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள். அதில் உத்திராயணம் என்பது பகல் பொழுது. தக்‌ஷிணாயனம் என்பது இரவுப்பொழுது. அதில் மார்கழி மாதம் என்பது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகிய விடியற்காலை பொழுதாகும். 

இன்றோடு தேவர்களின் இரவுப்பொழுது முடிவுறும் நாள். பழையன கழிதலும், புதியன புகுதலுமே போகியின் தத்துவமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. "வங்கக்கடல் கடைந்த மாதவனை" என்று தொடங்கும் திருப்பாவையின் முப்பதாவது பாடலுக்குரிய நாள்.

வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி! Lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Freligion%2Freligion-news%2F2019%2Fjan%2F12%2F%25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D-%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BF-%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B4%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%2595%25E0%25AE%25BF-3075737.html&referer=https%3A%2F%2Fwww.dinamani
போகிப்பண்டிகை
-
‘போகிப் பண்டிகை, தை மாதத்தில் தனது பயணத்தை மாற்றிக்கொள்ள இருக்கும் சூரியனை வரவேற்கும் விதமாகக் கொண்டாடப்பட்ட விழா’ என்று ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தப் பண்டிகை துயரங்களை போக்குவதாக கருதப்படுவதால் அதை ‘போக்கி’ என்றார்கள். அந்தச் சொல்லே நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது. தாழ்ந்த உலகியல் ஆசைகளான போக புத்தியை, ஞானம் என்னும் அக்னியால் எரிக்க வேண்டும் என்பதே இந்தப் பண்டிகையின் தத்துவம். 

அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசி நாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி! Bogi_2


பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். 

அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாகப் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்தப் போகி பண்டிகை அமைந்திருக்கும்.

போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். 

வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

இந்திர விழா

--
வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி! Bogi_5
இந்தப் போகி உருவானதற்குக் காரணமாக ஒரு கதையும் சொல்லப்படுகிறது. பண்டைய காலத்தில் மழையை நூல்கள் தேவர்களின் தலைவன் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இந்த விழா இந்திரா விழாவாகக் கொண்டாடப்பட்டது. போகம் எனும் மகிழ்ச்சிக்கு அடையாளமாக இருந்தவன் இந்திரன். எனவே, இந்த நாள் இந்திரனைப் போற்றும் விழாவாக ‘போகி’ என்றானது. இப்படிப் போகிப்பண்டிகை ஆன்மிக, கலாசார விழாவாக இன்றும் தொடர்ந்துவருகிறது.

ஆனால், கிருஷ்ண பரமாத்மா கோகுலத்தில் வளர்ந்த நாட்களில் இந்திரனுக்கு வழிபாடு செய்வதை நிறுத்தினர். அதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற இந்திரன், கோகுலத்தின் மீது 7 நாட்கள் தொடர்ந்து பெருமழை பெய்யச் செய்தான். 

தனது பகுதி மக்களை கோவர்த்தனகிரி மலையைக் குடையாக ஒற்றை விரலால் உயர்த்திப் பிடித்து காத்தார் கிருஷ்ணர். இதனால், கர்வம் அடங்கிய இந்திரன், கீதை தந்த கிருஷ்ண பரமாத்மாவின் பாதம் பணிந்தான். அவனை மன்னித்து இந்திர வழிபாடு செய்ய கிருஷ்ணர் ஒதுக்கிய நாள்தான் போகி என்கிறார்கள்.

ஜோதிடத்தில் போகி



வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி! Bogi_6
சரி! ஜோதிடத்தில் இந்தப் போகியின் நாயகர்கள் யாரென்று தெரியுமா உங்களுக்கு? சனீஸ்வர பகவானும் சுக்கிர பகவானும் தான். 

பழைய, முதிய, கழிந்த போன்ற வார்த்தைகளுக்கு காரகர் சொந்தக்காரர் சனீஸ்வரர் தான். உழைப்புக்கு சனீஸ்வர பகவானும் அதன் பலனான போக வாழ்விற்கு சுக்கிரனும் காரகமாக அமைந்தது பொருத்தம் தானே! புதிய விடியலான உத்திராயணத்திற்கு முன் தேவையற்ற விஷங்களைப் போக்கி சுத்தமாவதும் சிறப்பு தானே!

அதே போல "புதிய" என்ற வார்த்தையின் நாயகனே நம்ம சுக்கிரன் தான். புத்தாடை, புத்துணர்ச்சி, புது வீடு, புதிய வாகனம். இப்படி புதிய எனத் தொடங்குமிடத்திலெல்லாம் சுக்கிரனின் ஆட்சிதான். ஆகப் போகியன்று பழைய கஷ்டங்கள், பழைய பொருட்கள், பழமையைக் குறிக்கும் இருட்டு ஆகிய அனைத்தும் விலகி புதிய விடியலை ஏற்படுத்தும் தினம் என்பதால் சுக்கிரனுக்குரிய தினம்தானே!

வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி! Bogi7


போக வாழ்வை அருளும் கிரகமும் சுக்கிரன்தான். ஜோதிடத்தில் சுக்கிரனின் அதிதேவதையாக ஸ்ரீமகாலக்ஷமியின் அம்சமான இந்திராணி எனக் கூறப்படுகிறது. இந்திராணி ௭ன்பவள் இந்திரனின் மனைவி. இந்திரனுக்கும் இந்திராணிக்கும் எடுக்கும் விழாவான போகி சுக்கிரனுக்குமான விழா என்பது சரிதானே!

திருஷ்டி தோஷம்

போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளைத் தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும்.

வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி! Bogi8


போகி பண்டிகை தமிழர் திருநாளான பொங்கலுக்கு முன் வந்தாலும் தெலுங்கு பேசும் மக்களும் இதனைச் சிறப்பாக கொண்டாடுகின்றனர். அந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்கள், பூக்கள், அக்ஷதை எனப்படும் மங்கல அரிசி, நாணயங்கள், சிறிய கரும்பு துண்டுகள், கடலை ஆகியவற்றைக் கலந்து ”போகி பள்ளு” எனும் கலவையை போகியன்று மாலை சூரியன் மறையும் நேரத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களை குளிப்பாட்டி புத்தாடை அணியச்செய்து இருக்கைகளில் அமரச்செய்து பெரியவர்கள் அவர்களின்  தலையில் தெளித்து ஆசிர்வதிக்கிறார்கள். இதனால் அவர்கள் தீய சக்திகள் மற்றும் நோய்களில் இருந்தும் காக்கப்படுகிறார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை.

தேவையற்றதை தேவைப்படுபவர்களுக்குத் தரலாம்

வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி! Sukkiran


கால தேச வர்த்தமான ஜாதி மத நிற பேத யுக்தி ஸ்ருதி அனுபவம் தான் ஜோதிடம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் நமக்குத் தேவையற்ற அதே சமயத்தில் உபயோகப்படக்கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுத்து விடலாம். அதனால் சனியினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும் என்பது நிதர்சனம்!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
தினமணி
l
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum