சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் Khan11
வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் Www10

வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

Go down

Sticky வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

Post by rammalar on Sat 19 Jan 2019 - 6:56

வண்ணாரப்பேட்டை - தேனாம்பேட்டை (ஏஜி- டி.எம்.எஸ்.) 
இடையே மெட்ரோ ரயில் வழித்தடத்தில் வெள்ளிக்கிழமை 
தொடங்கி வரும் 21-ஆம் தேதி வரை ஆய்வு நடைபெற 
உள்ளது. 

இந்த ஆய்வின் போது, 80 கிலோமீட்டர் வேகத்தில் மெட்ரோ 
ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. 

வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 
முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கி மலை 
வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் 
திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. 

இதில், இரண்டாவது வழித்தடப் பணிகள் நிறைவடைந்து 
மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

முதல் வழித் தடத்தில், தேனாம்பேட்டை (ஏ.ஜி.-டி.எம்.எஸ்) - 
வண்ணாரப்பேட்டை இடையே 10 கி.மீ. தொலைவுக்கு 
கட்டுமானப் பணிகள் மற்றும் சுரங்கப் பாதைப் பணிகள் 
அனைத்தும் நிறைவடைந்துள்ளன. 

இவற்றை மெட்ரோ ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு 
செய்து வந்தனர். மேலும், இங்கு மெட்ரோ ரயில்வே 
பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுக்காக தேவையான 
அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், வண்ணாரப் பேட்டை - ஏ.ஜி. - டி.எம்.எஸ்.
இடையே ஆய்வு மற்றும் மெட்ரோ ரயில் சோதனை 
ஓட்டம் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் 
தலைமையில் சனிக்கிழமை (ஜன.19) முதல் 
திங்கள்கிழமை (ஜன. 21) வரை மூன்று நாள்கள் 
நடைபெற உள்ளன. 

இதற்காக பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான 
குழுவினர் பெங்களூரில் இருந்து சனிக்கிழமை காலை 
சென்னைக்கு வரவுள்ளனர். வண்ணாரப் பேட்டையில் 
இருந்து சென்ட்ரல் வரை ரயில் பாதை மற்றும் 
நிலையங்களில் ஆய்வு நடத்தப்படுகிறது. 

ஞாயிற்றுக்கிழமை சென்ட்ரலில் இருந்து தேனாம்பேட்டை, 
டி.எம்.எஸ். வரை ரயில்பாதை மற்றும் நிலையங்கள் ஆய்வு 
செய்யப்பட உள்ளன. மாலையில், வண்ணாரப்பேட்டை - 
தேனாம்பேட்டை(ஏஜி - டி.எம்.எஸ்.) வரை 80 கிலோ மீட்டர்
வேகத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி பாதுகாப்பு ஆணையர்
கே.ஏ.மனோகரன் தலைமையிலான குழுவினர் சோதனை 
நடத்துகின்றனர். 

இதைத் தொடர்ந்து, நடைமேடையின் உள்புறம், 
வெளிப்புறத்தில் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. 

உள்புறத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், 
வெளிப்புறத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியன 
குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இதேபோல, 
திங்கள்கிழமை அன்று மூன்றாவது நாள் ஆய்வு நடைபெறும். 

இதில், ஏதாவது குறைகள் இருந்தால், அது தொடர்பாக 
மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திடம் பாதுகாப்பு ஆணையர் 
தெரிவிப்பார். ஆணையரின் அறிவுறுத்தல்படி, தேவையான 
திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. 

இது குறித்து மெட்ரோ ரயில்வே நிர்வாக அதிகாரி ஒருவர் 
கூறியது: 

மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் 
தலைமையில் நடைபெறும் ஆய்வு மற்றும் சோதனை ஓட்டம் 
முடிந்தபிறகு, அவர் தெரிவிக்கும் குறைகள் சரி செய்யப்படும். 

அதன்பிறகு, இந்த மாத இறுதிக்குள் வண்ணாரப்பேட்டை- 
தேனாம்பேட்டை(ஏ.ஜி- டி.எம்.எஸ்) இடையே மெட்ரோ ரயில் 
போக்குவரத்து தொடங்கும் என்றார் அவர்.
-
-------------------------------
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum