சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி Khan11
வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி Www10

வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி

Go down

Sticky வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி

Post by rammalar on Sat 19 Jan 2019 - 7:09

அ.தி.மு.க-வுடன் பாஜக கூட்டணி அமைப்பது அவசியம்' 
என ஆடிட்டர் குருமூர்த்தியும்
`பா.ஜ.க-வைத் தோளில் சுமக்க நாங்கள் பாவமா 
செய்திருக்கிறோம்' எனத் தம்பிதுரையும் எதிரெதிர் 
நிலைப்பாடுகளால் அரசியல் களத்தை அதகளமாக்கிக் 
கொண்டிருக்கின்றனர். 

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்
துக்ளக் வார இதழின் 49வது ஆண்டு நிறைவு விழா 
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆடிட்டர் 
குருமூர்த்தி, `பா.ஜ.க அறிமுகப்படுத்தும் அனைத்துமே 
தவறான திட்டங்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் 
விதைக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தமிழகத்தில் காலூன்ற முடியாத நிலையில் 
பா.ஜ.க உள்ளது. இதை மாற்றி தமிழகத்தில் வலுவாக 
காலூன்றுவதற்கு எதிர்வரும் தேர்தல்களில் அ.தி.மு.க-வுடன்
பாஜக கூட்டணி அமைப்பது அவசியம்' எனக் கூறியிருந்தார்.
-
வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி Gurumurthy_15011

ஆடிட்டர் குருமூர்த்தி
---
அவரது இந்தக் கருத்துக்குப் பதில் அளித்த மக்களவை துணை 
சபாநாயகர் தம்பிதுரை, `பா.ஜ.க-வுடன் நல்ல நட்போடுதான் 
இருக்கிறோம். அதற்காக, அவர்கள் கொண்டு வரும் எல்லா 
திட்டங்களையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. 

அ.தி.மு.க கொள்கையை உடைய கட்சி. பா.ஜ.க-வைக் 
தமிழகத்தில் காலூன்ற வைக்க அ.தி.மு.க-வுடன் கூட்டணி 
வைக்க வேண்டும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது
கேலியாக உள்ளது' என விமர்சித்திருந்தார். 

இதே கருத்தைப் பிரதிபலித்த அமைச்சர் ஜெயக்குமார்,
`அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க விரும்பினாலும், 
இணைத்து கொள்வது குறித்து நாங்கள் விரும்ப வேண்டும். 
அதுதான் முக்கியம். ஆகவே விருப்பம் முக்கியம். கூட்டணி 
குறித்து ஒருமித்த கருத்து முக்கியம்' எனக் கூறியிருந்தார். 


`ஒருமித்த கருத்து' என ஜெயக்குமார் சொல்வதில்தான் 
எடப்பாடி பழனிசாமியின் வியூகம் அமைந்திருக்கிறது 
என்கின்றனர் அ.தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள். 

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர், `
`தம்பிதுரை பிரதிபலிப்பது எடப்பாடி பழனிசாமியின் 
கருத்தைத்தான். ஜெயக்குமாரும் அதே வழியில்தான் பேசினார். 
தம்பிதுரைக்கு சில விஷயங்களில் பா.ஜ.க அரசு மீது கோபம் 
இருக்கிறது. 

அந்தக் கோபத்தை வெளிக்காட்டவும் இந்தச் சூழலைப்
பயன்படுத்திக் கொள்கிறார். அ.தி.மு.க-வின் கட்சி நிர்வாகிகள், 
எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் என யாருக்குமே பா.ஜ.கவுடன் கூட்டணி 
அமைப்பதில் உடன்பாடில்லை. 

உடன்பாடில்லை என்பதை நேரடியாகச் சொல்வதில் தயக்கம் 
இருப்பதால்தான் தம்பிதுரை உள்ளிட்டவர்களைப் பேச 
வைக்கிறார் முதல்வர். 

முந்தைய காலகட்டங்களில் கூட்டணி தொடர்பாக ஜெயலலிதா 
எந்த முடிவை எடுத்தாலும் அதை அனைவரும் ஏற்றுக் 
கொள்வார்கள். இன்று அப்படியொரு நிலை இல்லை. 

கட்சி நிர்வாகிகள் விரும்பவில்லை என்பதைக் கூட்டு முடிவாக 
அறிவித்து, பா.ஜ.க-வுடன் கூட்டணிக்குப் போகாமல் இருப்பது
எடப்பாடி பழனிசாமிக்குக் கூடுதல் லாபம். 

கூட்டணி அமைத்துவிட்டால், மத்திய, மாநில அரசுகள் மீது 
மக்களுக்கு இருக்கும் கோபத்தால் தி.மு.க, காங்கிரஸ் அணி 
40 இடங்களிலும் வென்றுவிடும். இதை உணர்ந்துதான் 
பா.ஜ.க கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி சிக்னல் 
கொடுக்கவில்லை. 

சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் ஓரம்
கட்டிவிட்டுத்தான் தலைமைப் பதவிக்கு வந்தார். 
இதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகப் பேசப்பட்டாலும், 
அ.தி.மு.கவின் உயர் அதிகாரத்தில் அவர் உட்கார்ந்துவிட்டார். 

தமிழிசை

`நாங்கள் மோடிக்கு அடிமையாக இல்லை' என்பதை 
நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாகத்தான் இதை அ.தி.மு.க.வினர் 
பார்க்கின்றனர். 

அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி இல்லை என்பதை அறிந்து
தமிழிசையும் பொன்னாரும் வேதனையில் உள்ளனர். 
காரணம், `அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைந்தால் இருமுனைப் 
போட்டியில் எம்.பி-யாக கரையேறிவிடலாம்' என 
எதிர்பார்த்தனர். 

ஆனால், தமிழக விவகாரங்களை கவனிக்கும் டெல்லி பிரமுகர் 
ஒருவர் அளித்த அறிக்கையில், `தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு
40 இடங்கள் வந்துவிடக் கூடாது. அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி 
அமைந்தால் நமக்குப் பெரும் பின்னடைவாக மாறிவிடும். 

இந்தக் கூட்டணி அமைந்தால் மற்றொரு கட்சியும் இடம்
பெறும். அந்தக் கட்சியால் எஸ்.சி மக்கள் வாக்குகள் வந்து 
சேராது. வடக்கு மாவட்டங்களில் பெரிய அளவுக்கு வாக்குகள் 
வந்து சேராது. 

கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளும் நமக்கு வந்து சேரப் 
போவதில்லை. தலித் அல்லாதோர் வாக்குகளும் வராமல்
போய்விட்டால் நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும். 

அணியைவிட தேர்தலுக்குப் பிந்தைய காலகட்டத்தில் 
அ.தி.மு.க-வின் ஆதரவைப் பெறுவோம்' எனக் கூறியிருக்கிறார். 
இதே கருத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் 
உறுதியாக இருக்கிறார்" என்றார் விரிவாக. 
-
------------------------------
நன்றி-விகடன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum