சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


நெடுநல்வாடை – விமர்சனம் Regist11


Latest topics
» ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே ....
by rammalar Today at 22:07

» சுட்ட கதை, சுடாத நீதி - குங்குமம் கதைகள்
by rammalar Today at 21:59

» பெண்களால் பெண்களுக்காகவே டூ வீலர்!
by rammalar Today at 21:45

» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!
by rammalar Today at 14:27

» மனசின் பக்கம் : அட்டு லவ்வும் அன்பு மனசும்
by சே.குமார் Today at 10:46

» எஸ்.எம்.எஸ் : சூர்யகுமாரன்- ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 14:47

» அந்நியன் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 14:46

» விருந்து சாப்பிடுகிறீர்களா?
by பானுஷபானா Yesterday at 14:45

» வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு
by rammalar Yesterday at 7:52

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by rammalar Yesterday at 7:41

» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை!
by rammalar Mon 22 Apr 2019 - 13:49

» மராட்டிய மக்களின் புத்தாண்டு
by rammalar Mon 22 Apr 2019 - 6:36

» போனில் ஒரு இளசு
by rammalar Mon 22 Apr 2019 - 6:28

» பொத அறிவு தகவல்
by rammalar Mon 22 Apr 2019 - 6:23

» 95 வயதிலும் ஒயாத உழைப்பு
by rammalar Mon 22 Apr 2019 - 5:59

» வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை
by rammalar Sun 21 Apr 2019 - 15:43

» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
by rammalar Sun 21 Apr 2019 - 15:40

» அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
by rammalar Sun 21 Apr 2019 - 15:38

» இடையன் இடைச்சி கவிதைகள்
by rammalar Sun 21 Apr 2019 - 11:53

» வாழ்வது வீழ்வதற்கே’னு தலைவர் எதைச் சொல்றார்?
by rammalar Sun 21 Apr 2019 - 11:04

» மனசு பேசுகிறது : எழுத்தாளர் நௌஷாத்கான்
by சே.குமார் Sun 21 Apr 2019 - 9:42

» சினிமா : நெடுநல்வாடை
by சே.குமார் Sun 21 Apr 2019 - 9:40

» இடம் மாறிய எழுத்துகள்- வார்த்தைகளை கண்டுபிடிங்க:
by rammalar Sat 20 Apr 2019 - 17:14

» இடம் மாறிப் பார்ப்போம்... - *இறையன்பு*IAS_
by rammalar Sat 20 Apr 2019 - 17:14

» பல்சுவை - தொடர் பதிவு
by rammalar Sat 20 Apr 2019 - 17:04

» பல்சுவை தகவல்கள்
by rammalar Sat 20 Apr 2019 - 16:55

» தலைவர் அப்செட் ஆயிட்டாரா... ஏன்?’’
by rammalar Sat 20 Apr 2019 - 16:38

» அலட்சியம் : மலர்மதி - ஒரு பக்க கதை
by rammalar Sat 20 Apr 2019 - 16:34

» கவிதைக்காரர்கள் வீதி - குங்குமம்
by rammalar Sat 20 Apr 2019 - 16:23

» சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் - காணொளி
by rammalar Sat 20 Apr 2019 - 10:57

» நம்ம தலைவர் பழசை மறக்காதவர்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:43

» டாஸ்மாக் குடிமகன்...!!
by rammalar Wed 17 Apr 2019 - 16:42

» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
by rammalar Wed 17 Apr 2019 - 16:40

» யாரோ எழுதிய கதை - புத்தக விமர்சனம்
by சே.குமார் Wed 17 Apr 2019 - 12:55

» ஒரு நிமிட கதைகள்
by பானுஷபானா Wed 17 Apr 2019 - 9:45

.
நெடுநல்வாடை – விமர்சனம் Khan11
நெடுநல்வாடை – விமர்சனம் Www10

நெடுநல்வாடை – விமர்சனம்

Go down

Sticky நெடுநல்வாடை – விமர்சனம்

Post by rammalar on Fri 22 Mar 2019 - 7:01

நெடுநல்வாடை – விமர்சனம் Nedunelvadai

தாத்தா பாசம்தான் பாடு பொருள். பேரன்பும் ஈரமும் நிரம்பிய
வெள்ளந்தித் தீவிரவாதி இந்த தாத்தா!

 வைரமுத்துவின் வார்த்தைகளில் தாத்தா அறிமுகம்
ஆகும் முதல் காட்சிலேயே நெடுநல்வாடை வீச துவங்கி
விடுகிறது.

கிராமத்து தெருக்கள், வரட்டிகள் ஒட்டப்பட்ட குட்டிச் சுவர்,
விவசாய பூமி, வெள்ளந்தி மக்கள், புன்னகை, விசாரிப்பு,
சினேகம், காதல்... வலி என பட்டிக்காட்டு சுற்றுப் பயணம்
காட்டும் விதத்தில் கவர்கிறது செல்வக்கண்ணனின்
இயக்கம்.

தந்தையால் கைவிடப்பட்ட பேரன் இளங்கோவை,
பாசமுமும் நேசமுமாக வளர்க்கிறார் தாத்தா பூ ராமு.
தாய், தங்கையுடன் தாத்தா வீட்டில் வளரும் இளங்கோவுக்கு,
தாய் மாமன் மைம் கோபி எதிரி. தன் உயிர் இருக்கும்
போதே பேரனை ஆளாக்கிவிட வேண்டும் என்பது
தாத்தாவின் கனவு, லட்சியம் எல்லாம்.

வாழ்க்கை ஓட்டத்தில்  இளங்கோவின் மனதை களவாடுகிறார்
அஞ்சலி நாயர். ஆனால் சில பல காரணங்களால்  இளங்கோ
- அஞ்சலி நாயர் காதலுக்கு முட்டுக் கட்டை இடுகிறார் பூராமு.

இடையில் அஞ்சலி நாயரின் வீட்டில் இருந்தும் சூறாவளி கிளம்ப,
காதல் ஜோடிக்கு என்ன ஆனது என்கிறது கதை.

 பூ ராமுவுக்கு இது வாழ்நாள் வாய்ப்பாக அமைந்த திரைப் படம்.
ஒரு கண்ணில் அப்பாவித்தனமும் இன்னொரு கண்ணில்
பரிதாபமும் மிதக்க வெகுளித் தாத்தாவாக அபாரமாக
உழைத்திருக்கிறார். தாத்தாவை அச்சு அசலாக கண் முன்
நிறுத்துகிறார்.

வாழ்க்கை இழந்து வரும் மகளின் கண்ணீரைத் துடைப்பது
தொடங்கி, அவளும் என் ரத்தம்தான்... என மகனிடம் மல்லுக்கு
நிற்பது வரை ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

 அத்தனை அலட்சியமான உடல் மொழி. ஒவ்வொரு வசன
உச்சரிப்பிலும் கலங்கடிக்கிறார்.  பேரனின் உணர்வுகளைப்
புரிந்து கொண்டு மௌனமாக இருப்பதாகட்டும் பொம்பள
புள்ளைய தவுட்டுக்கா வாங்கிட்டு வந்தேன்... என்று
ஆத்திரப்படுவதாகட்டும், தைரியமும், துயரமும் அலைக்கழிக்கும்
ஆண்மைக்கு உருவம் கொடுத்திருக்கிறார் பூ ராமு.

வாழ்த்துகள் தாத்தா!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15329
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: நெடுநல்வாடை – விமர்சனம்

Post by rammalar on Fri 22 Mar 2019 - 7:02

------------------
 முன் தொங்கும் இலக்கு. தாத்தாவின் வார்த்தைகளை
மீற முடியாத தவிப்பு எனத் தனது நடிப்பால், அறிமுகமா!
என்று ஆச்சரியப்படுத்துகிறார் இளங்கோ.

தேங்கித் தேங்கிப்  பயணிக்கும் நீராவி என்ஜின் பாசஞ்சர்
திரைக்கதைக்கு அவ்வப்போது கரி அள்ளிப் வெப்பத்தை
அதிகரிப்பது மாதிரி, திருநெல்வேலி வட்டார வழக்கு மொழி
 ஆச்சரியப்படுத்துகிறது.

இதுவரை வந்த எந்தப் படத்திலும் இந்தளவுக்கு இல்லை
என்று சொல்லுமளவுக்கு வட்டார மொழி பளிச்சிடுகிறது.

ஓங்குதாங்கான உடம்பில் திரியும் நாயகி அஞ்சலி நாயர்.
வாழ்நாள் பூரா ஒரு பொண்ண நினைச்சிக்கிட்டு ஒரு
ஆம்பளையால வாழ முடியும்.. ஆனா ஒரு பொம்பளைக்கு
அப்படி இல்ல.... என கலங்குகிற இடம் செமத்தியான
வெட்டு.

 தாத்தாவுக்கும் மகள் வழிப் பேரனுக்குமான அன்பு
எங்கெங்கும் நிரம்பிக் கிடப்பது கதையின் சிறந்த பலம்.
உறவின் மிச்சத்தையும், எச்சத்தையும் சொல்வதாக
வசனங்கள். அம்மாவுக்கு சொத்துல பங்கு இருக்கா தாத்தா...
இருந்து என்னடா செய்ய... ஊரு பய கொடுக்க வுடுவானா...
 ஏன்...?

பொம்பள பிள்ளையில்ல... அதுதான்... என வாழ்க்கை
மணக்கும் வசனங்கள்.

காதல் ரணகளம், மண் மணம், புழுதி, வயல் வரப்புகள்,
கரும்புக் காடு என ஒவ்வொரு இடத்தையும் கதையின்
பார்வையில் நின்று பதிவு செய்கிறது வினோத்
ரத்தினசாமியின் ஒளிப்பதிவு.
அதுதான் படத்தையே தாங்கிப் பிடிக்கிறது.

ஒரு கிழவனின் கண்ணீரோ.. தரையில் ஓடுது நதியாக...
நதியோடிய தடமெல்லாம்.. குடும்பம் வளருது பயிராக...
போன்ற வரிகளில் தன் பங்குக்குத் தாலாட்டுகிறது
வைரமுத்துவின் பேனா!

வரிகளுக்கு சரியாகப் பொருந்தி வருகிறது
ஜோஸ் ஃபிராங்க்ளினின் இசை.

 குறிப்பிட்ட நான்கு பேரையே சுற்றிச் சுற்றி வரும் கதையும்,
சமயங்களில் திக்கு திசை தெரியாமல் தேங்கி நிற்கும்
பரபரப்பில்லாத திரைக்கதையும்தான் நெடுநல்வாடையின்
வறட்சி முகம்.

 தமிழ் சினிமாவின் அசுரப் பசிக்கு, இது சங்கு பால் மட்டுமே.
ஆனாலும்... இது தாய்ப் பால்!
-
---------------------------------
By - ஜி. அசோக்
நன்றி-தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15329
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum