சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பரிசீலனை நிறைவு: 1,600 வேட்புமனுக்கள் ஏற்பு- கடந்த தேர்தலைவிட அதிக வேட்புமனுக்கள் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பரிசீலனை நிறைவு: 1,600 வேட்புமனுக்கள் ஏற்பு- கடந்த தேர்தலைவிட அதிக வேட்புமனுக்கள் Khan11
பரிசீலனை நிறைவு: 1,600 வேட்புமனுக்கள் ஏற்பு- கடந்த தேர்தலைவிட அதிக வேட்புமனுக்கள் Www10

பரிசீலனை நிறைவு: 1,600 வேட்புமனுக்கள் ஏற்பு- கடந்த தேர்தலைவிட அதிக வேட்புமனுக்கள்

Go down

Sticky பரிசீலனை நிறைவு: 1,600 வேட்புமனுக்கள் ஏற்பு- கடந்த தேர்தலைவிட அதிக வேட்புமனுக்கள்

Post by rammalar on Thu 28 Mar 2019 - 7:27

By DIN  |   தினமணி
பரிசீலனை நிறைவு: 1,600 வேட்புமனுக்கள் ஏற்பு- கடந்த தேர்தலைவிட அதிக வேட்புமனுக்கள் Sathyapratha-saku


மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நிறைவடைந்தது. 


பல இடங்களில் இரவு வரை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்ததால், இறுதி நிலவரம் வியாழக்கிழமையே தெரியும் என்று தேர்தல் துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 1,600-க்கும் மேற்பட்ட மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதேபோன்று, 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட 519 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

ஒரு வேட்பாளரே நான்கு வேட்பு மனுக்கள் வரை தாக்கல் செய்யலாம் என்பதாலும், மாற்று வேட்பாளர்களின் மனுக்களாலும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மனுக்கள் பரிசீலனை: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. தூத்துக்குடி தொகுதியில் பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களான தமிழிசை செளந்தரராஜன், கனிமொழி ஆகியோரது வேட்புமனுக்கள் சில மணி நேர காத்திருப்புக்குப் பிறகே ஏற்கப்பட்டன. 
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், கடலூரில்  அமமுக வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக மாற்று வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டது. மற்ற இடங்களில் பெரும்பாலான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் எந்த சிக்கலும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 

பல இடங்களில் புதன்கிழமை இரவு வரை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதையடுத்து இறுதி நிலவரம் வியாழக்கிழமையே தெரிய வரும் என தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

மனுக்கள் வாபஸ் பெற...:வேட்புமனுக்களை வாபஸ் பெற வெள்ளிக்கிழமை மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலையில் இருந்து வெள்ளிக்கிழமை மாலைக்குள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குப் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதன்பின், சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னம் வழங்கப்படலாம் என்று தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 
அமமுகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்ட பிறகு, பிற சுயேச்சைகளுக்கு சின்னங்கள் அவர்கள் கோரியபடி ஒதுக்கப்பட உள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியலைத் தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் பிரசார களம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
--
கடந்த தேர்தலைவிட அதிக வேட்புமனுக்கள்
--
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட 1, 601 வேட்புமனுக்களும்,  18 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட 519 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 1,255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது இந்தத் தேர்தலில் வேட்புமனுக்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு புதன்கிழமை தெரிவித்தார். 
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum