சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

வாஸ்துப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா?

Go down

Sticky வாஸ்துப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா?

Post by rammalar on Wed 3 Apr 2019 - 7:15

 வாஸ்துப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா?  1474109153-2007


Last edited by rammalar on Wed 3 Apr 2019 - 7:17; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: வாஸ்துப்படி வீட்டில் மீன் தொட்டி வைக்கலாமா?

Post by rammalar on Wed 3 Apr 2019 - 7:16

Sasikala| 
வஸ்து என்பதன் விரிவாக்கமே வாஸ்து ஆகும். 
வாஸ்து என்றால் ஒத்து போதல் என்று பொருள்படும். 
எதிரே கசாப்புக்கடை, இடிந்த கோவில்கள், குத்துக்கல், 
அரிவாள் பட்டறை, சாயப்பட்டறை, மருத்துவமனை 
இருக்கக்கூடாது. 


வீட்டின் கீழ்புறம் ஓடை அல்லது நீர்நிலை ஓடுவது நல்ல 
அமைப்பாகும்.


வீட்டில் ஓடாத கடிகாரங்கள், வரவேற்பறையில் பாரதப்போர் 
படங்கள் வாஸ்து குற்றங்களைத் தரும். 


வாஸ்துமீனை தொட்டியில் வைத்து வீட்டில் வளர்ப்பதோ 
கூடாது. அப்படி வளர்த்தால் மன அமைதி குறையும். 
கடன் தொல்லை கூடும். 


மீன் தொட்டி வைப்பது என்பது பழமையான எந்த விதமான 
வாஸ்து சாஸ்திர நூல்களிலும் குறிப்பிடவில்லை. வாஸ்து 
ஆராய்ச்சியில் மீன் தொட்டி எந்தவிதமான நல்ல பலனையும் 
தருவதில்லை. மாறாக வீட்டில் உள்ள யாரவது ஒருத்தருக்கு 
உடல்நிலை பாதிக்கிறது. 
 
அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் வளர்க்கலாம். 
ஈசான்யத்தில் நீர் ஆதாரம் இருந்தாலே போதும். 
சாஸ்திரங்களில் விலக்கப்பட்ட ஒன்றை நாமும் விலக்குவது 
நல்லது.


வீட்டு முகப்பில் மணி பிளாண்ட்கொடியை போல படர
விட்டால் அந்த வீட்டில் தீயசக்திகள் நடமாட்டம் கூடும்.
 
வாழ்க்கையில் அலுவலகம், குடும்பத்தில் ஒத்துப்போவதை 
போல இயற்கை யோடு ஒத்துப்போவதே வாஸ்து ஆகும்.
 
வீட்டில் குபேரபொம்மைகள், தவளை, தலைக்கு மேல் வேல் 
உள்ள முருகன் படம், ஒரு அடிக்குமேல் சிலைகளும் வைக்கக்
கூடாது.
 
கடைகளுக்கான வியாபாரமனை வாஸ்துப்படி சதுரமாகவோ 
நீள் சதுரமாகவோ அமையலாம். வடக்கு கிழக்கு அதிகாமான 
இடம் விட வேண்டும். கடையில் பூஜை செய்தால் கிழக்கு 
பார்த்து வைக்கலாம். 


வாஸ்து தோஷங்கள் நீங்கிட வாஸ்து பரிகார எந்திரங்களும் 
பயன்படுத்தலாம்.
-------------------------------------------------
=சசிகலா
 நன்றி: மாலை முரசு & தமிழ் வெப்துனியா


-----------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum