சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு Khan11
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு Www10

வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு

Go down

Sticky வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு

Post by rammalar on Tue 23 Apr 2019 - 7:52

வேளாங்கண்ணி பேராலயத்துக்கு 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு Velangani
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸார்.


இலங்கை வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் 3 அடுக்குப் போலீஸார் பாதுகாப்புப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் தற்கொலை படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் முதல் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு துப்பாக்கி ஏந்திய  போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

பேராலயம் மற்றும் கடற்கரை பகுதிகளில் 3 அடுக்குப் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேராலயத்துக்குள் சோதனைக்குப் பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 
இதுகுறித்து, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கை வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 180 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரை பகுதியில் நாகை மாவட்டத்தில் உள்ள 53 மீனவ கிராமங்களிலும் போலீஸார் 24 மணிநேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துச் சோதனைச்சாவடிகளிலும்  கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உலகப்  புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை ஆகிய இடங்களிலும் 3 அடுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் துறை, கடலோர காவல் படை, கடலோரப் பாதுகாப்புக் குழுமம் , வனத்துறை ஆகியைவை இணைந்து கூட்டுப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது என்றார் விஜயகுமார். 

கோடியக்கரையில்...

நாகை மாவட்டம், கோடியக்கரை கடலோரப் பகுதியிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே நிகழ்ந்த போருக்கு முன்பு, போராளிகளுக்கு ஆதரவான பகுதியாக இருந்த இடங்களில் வேதாரண்யம் பகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்களுக்கு தொடர்புடையவர்கள் தமிழக கடற்கரை வாயிலாக ஊடுருவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு தமிழக கடற்கரை பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வனப்பரப்புடன் கூடிய கோடியக்கரை பகுதி இலங்கைக்கு அருகில் இருப்பதால் இங்கு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

வேதாரண்யம் கடலோரக் கிராமங்களான மணியன்தீவு, கோடியக்காடு, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், சிறுதலைக்காடு உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோடியக்கரையில் உள்ள இந்திய விமானப் படை கண்காணிப்புத் தளம், கடலோரக் காவல் குழும போலீஸார், தனிப்பிரிவினர் கண்காணிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum