சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

» வாழி வாழி கதிரவா
by rammalar Sun 14 Apr 2024 - 14:55

நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது Khan11

நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது

Go down

நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது Empty நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது

Post by rammalar Thu 25 Apr 2019 - 7:08

நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது Train

-
சென்னை புறநகர் மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையான சென்னை கடற்கரை, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரையை அடையும் பாதையில் எதிரெதிர் திசைகளில் இரு சர்க்குலர் ரயில் சேவைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதனை பயணிகள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

அரக்கோணம் - செங்கல்பட்டு அகலப்பாதை மின்மயமாக்கல் பணி துவங்கியபோது அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள நிர்வாகத்தினர் இப்பணிகள் தங்களது விமான இயக்கத்தை பாதிக்கும் எனக்கூறி இப்பணிக்குத் தடை கோரினர். 


இதைத் தொடர்ந்து தக்கோலம் முதல் செங்கல்பட்டு வரை மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்றன. இப்பணியை மாற்றுப்பாதையில் மேற்கொண்டால் ஆகும் செலவுக்காக ரூ.54 கோடியை இரு தவணைகளாக ரயில்வே நிர்வாகத்திடம் பாதுகாப்புத்துறையினர் அளித்தனர்.

தெற்கு ரயில்வே நிர்வாகம் இப்பாதையில் கல்லாற்றில் இருந்து மேல்பாக்கம் வழியே அரக்கோணம் ரயில் நிலையம் வரை 9.5 கி.மீ. தூரத்திற்கு புதிய பாதையை அமைத்தது. 


இப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த டிசம்பரில் நிறைவடைந்தன. இப்பாதையை அரக்கோணம் ரயில் நிலையத்தோடு இணைக்கும் சிக்னல்கள் அமைக்கும் பணிகள் ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதனிடையே கல்லாற்றில் இருந்து பெருமூச்சி வழியாக அரக்கோணம் வரையில் இருந்த பழைய பாதையும் துண்டிக்கப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே புதிய பாதையில் அரக்கோணம் - தக்கோலம், புதுச்சேரி - திருப்பதி பயணிகள் ரயில்கள், மதுரை - குர்லா விரைவு ரயில், நாகர்கோயில் - மும்பை விரைவு ரயில்கள் டீசல் என்ஜின் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டன. 


இந்நிலையில் சுற்றுவட்டப்பாதையில் இரு சர்க்குலர் ரயில்கள் எதிரெதிர் திசையில் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் திங்கள்கிழமை அறிவித்தது
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23850
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது Empty Re: நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது

Post by rammalar Thu 25 Apr 2019 - 7:09

சர்க்குலர் ரயில்கள் இயக்கம்: செவ்வாய்க்கிழமை காலை 9.50 மணி அளவில் நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் தனது முதல் பயணத்தை சர்க்குலர் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் பாதையில் துவக்கியது. 

இதனையடுத்து எதிர்திசையில் இரண்டாம் சர்க்குலர் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணிக்கு அரக்கோணம் வழியே துவங்கியது. அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட நேரமான மதியம் 12.30க்கு பதில் 35 நிமிட தாமதத்துடன் 1.05க்கு அரக்கோணம் ரயில்நிலையத்திற்கு ரயில் வந்தது. 

சுற்றுவட்டப் பாதையில் செல்ல இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வந்த எம்இஎம்யு ( மெயின் லைன் எலெக்ட்ரிக் மோட்டார் யுனிட்) ரயிலை அரக்கோணத்தில் அரக்கோணம் ரயில்பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, செயலர் ரகுநாதன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் பிரபாகரன், சரவணன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். 

இந்த ரயிலை இயக்கி வந்த ஓட்டுநர் ராமகிருஷ்ணனுக்கு பொன்னாடைகள் போர்த்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இந்த ரயில் புதியபாதையில் 1.10க்கு தனது பயணத்தை அரக்கோணத்தில் இருந்து துவங்கியது. இதில் ரயிலில் பயணிகள் சங்க நிர்வாகிகளும் முக்கியப் பிரமுகர்களும் பயணிகளோடு பயணமாயினர்.

இதையடுத்து எதிர்திசையில் சென்னை கடற்கரையில் காலை 9.50க்கு புறப்பட்ட செங்கல்பட்டில் இருந்து 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் திருமால்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தநிலையில் அங்கு பயணிகள் சார்பிலும், ரயில்வே பணியாளர்கள் சார்பிலும் புதியபாதையில் முதலில் பயணத்தை துவக்க இருந்த மின்சார ரயிலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. 

இதையடுத்து அங்கு புறப்பட்ட இந்த மின்சார ரயில் அரக்கோணம் ரயில்நிலையத்தை பிற்பகல் 2.25க்கு அடைந்து தொடர்ந்து 2.30க்கு சென்னை கடற்கரைக்கு புறப்பட்டு சென்றது.

இரண்டு ரயில்களின் சேவை ரத்து: சுற்றுவட்டப் பாதையில் ரயில் சேவை தொடங்கிய நிலையில், கடற்கரை-திருமால்பூர்-சென்னை கடற்கரை சென்று வரும் (ரயில் எண் 66041-66042) ரயில் சேவையும், கடற்கரை-அரக்கோணம்-திருவள்ளூர்-சென்னை கடற்கரை ரயில் சேவையும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மேலும் 6 சேவைகள் தொடங்கப்படவுள்ளன. 

கட்டணம் மிக மிகக் குறைவு

பஸ் பயணத்தில் கட்டணம் மிக உயர்வு என்பது மட்டுமல்லாமல் பயண நேரமும் மிகவும் அதிகமாகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் ரயில் பயணத்தைத்தான் விரும்புகின்றனர்.

உதாரணமாக அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வரை செல்வதற்கு பேருந்தில் ரூ.20 முதல் ரூ.25 வரை கட்டணம். ஆனால் பயணிகள் ரயிலில் கட்டணம் ரூ.10 மட்டுமே.

பொதுவாக அலுவலகங்களுக்குச் செல்வோரும், பிற பணிகளுக்குச் செல்வோரும் சீசன் டிக்கெட் எடுத்துக் கொண்டால் ரயில் கட்டணம் மிக, மிகக் குறைவு. அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு ரயிலில் ரூ.15 மட்டுமே. சீசன் டிக்கெட் எடுத்துக் கொண்டால் மாதத்துக்கு ரூ.270 மட்டுமே. ஆனால் பேருந்தில் கட்டணம் அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு ரூ.55.

விரைவுபடுத்தக் கோரிக்கை 

தற்போது, தொடங்கப்பட்டுள்ள இச்சேவையில் கடற்கரையிலிருந்து மீண்டும் கடற்கரைக்குச் செல்ல சுமார் 6 மணி நேரம் ஆகிறது. எனவே, பயணிகள் சிரமத்துக்குள்ளாக நேரிடும் என்பதால், அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரைக்கும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரைக்குமான இச்சேவையை விரைவு ரயில்சேவையாக மாற்றவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மக்கள் வரவேற்பு 

தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவையால் காஞ்சிபுரம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டிலிருந்து மேற்கு மாவட்டங்களான தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, மாவட்டங்களுக்கும் கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இனி காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் சென்று அங்கிருந்து செல்லலாம். 

அதுபோல், அரக்கோணம், திருவள்ளூர், திருநின்றவூர், ஆவடி,பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டிருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லலாம். மேலும், அரக்கோணத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு உள்பட தென்மாவட்டங்களுக்கு இனி எளிதாக பயணிக்கலாம்.

அதுபோல், கட்டடத்தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், பெருநிறுவன ஊழியர்கள்,சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோருக்கு பெரிதும் உதவிடும் வகையாக இந்த வட்ட வழித்தட ரயில் சேவை திட்டம் அமைந்துள்ளது.
-
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23850
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum