சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி Khan11
மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி Www10

மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி

Go down

Sticky மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி

Post by rammalar on Thu 25 Apr 2019 - 7:12

மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி Umasankar_2_11171

பொதுமக்களிடம் மதப் பிரசாரம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, தமிழக ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், தேர்தல் கண்காணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. மூன்றாவது கட்டமாக இன்று, 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மத்தியப்பிரதேசத்தில், நான்கு கட்டங்களாக ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இந்நிலையில், மத்தியப்பிரதேசம் சித்தி மக்களவைத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 

உமாசங்கர்

உமாசங்கர், தலைவலிக்காக சித்தி மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் 
சென்றுள்ளார். அங்கு இருந்த நோயாளிகளிடம் அவர் மதப் பிரசாரம் 
செய்ததாகக் கூறப்படுகிறது. 

இதை அறிந்த மருத்துவர்கள் அவரிடம் வந்து,
‘ உங்களுக்கே உடல்நிலை சரியில்லை, இந்நிலையில் நீங்கள் 
இவ்வாறு செய்ய வேண்டாம். ஓய்வெடுங்கள்’ எனக் கூறியுள்ளனர். 

அதை ஏற்காத அதிகாரி, மீண்டும் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாது, தான் தங்கியுள்ள இடத்தில் இருப்பவர்களிடமும் மதப் பிரசாரம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, மத்தியப்பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி காந்தா ராவ், ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரை தேர்தல் கண்காணிப்பாளர் பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள், மதப் பிரசாரம் போன்றவற்றைச் செய்யக் கூடாது. ஆனால் உமாசங்கர், தான் தங்கியிருந்த இடத்தில் மதப் பிரசாரம் செய்துள்ளார். 

இதுகுறித்து விசாரணை நடத்திய பிறகு, அந்த அறிக்கை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சித்தி தொகுதியில் புதிய தேர்தல் கண்காணிப்பாளராக ஹிமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, சந்தராகர் பாரதி நியமிக்கப்பட்டுள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், மதப் பிரசாரம் செய்வது இது முதல்முறையல்ல. 2015-ம் ஆண்டு, அவர் இதேபோன்ற செயலில் ஈடுபட்டு வந்ததால், தமிழக அரசு அவரைக் கடுமையாகக் கண்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
-------------------------------
சத்யா கோபாலன்
-விகடன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum