சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஆண்டவன் மறப்பதில்லை! Regist11


Latest topics
» என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:44

» இன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால்
by rammalar Tue 9 Jul 2019 - 14:42

» அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
by rammalar Tue 9 Jul 2019 - 14:41

» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:33

» பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’
by rammalar Tue 9 Jul 2019 - 14:30

» போதை ஏறி புத்தி மாறி
by rammalar Tue 9 Jul 2019 - 14:29

» எனக்கு கட்-அவுட்டா? சமந்தா வியப்பு
by rammalar Tue 9 Jul 2019 - 14:27

» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
by rammalar Tue 9 Jul 2019 - 14:26

» கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
by rammalar Tue 9 Jul 2019 - 14:25

» 17 வயது டைரக்டரின் விருது
by rammalar Tue 9 Jul 2019 - 14:23

» இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்
by rammalar Tue 9 Jul 2019 - 14:22

» த்ரிஷாவின் கர்ஜனை
by rammalar Tue 9 Jul 2019 - 14:20

» இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!
by rammalar Tue 9 Jul 2019 - 14:19

» தோழர் வெங்கடேசன் – சினிமா
by rammalar Tue 9 Jul 2019 - 14:18

» ரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா
by rammalar Tue 9 Jul 2019 - 14:16

» சேனையில் இருந்து விடை பெறுகிறேன்
by சே.குமார் Sun 7 Jul 2019 - 15:22

» பிக்பாஸ் - கிழியும் முகமூடிகள்
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சண்டை வந்தாச்சு
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சோகமழை
by சே.குமார் Sat 29 Jun 2019 - 16:25

» பிக்பாஸ் - வெடிக்கலையே...
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:56

» பிக்பாஸ் சீசன்-3 ஆரம்பம்
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:51

» ஹோலியும் ராதையும்
by rammalar Sun 23 Jun 2019 - 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Sun 23 Jun 2019 - 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Sun 23 Jun 2019 - 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Sun 23 Jun 2019 - 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

.
ஆண்டவன் மறப்பதில்லை! Khan11
ஆண்டவன் மறப்பதில்லை! Www10

ஆண்டவன் மறப்பதில்லை!

Go down

Sticky ஆண்டவன் மறப்பதில்லை!

Post by rammalar on Sun 28 Apr 2019 - 7:36

ஆண்டவன் மறப்பதில்லை! E_1556259918

-
உலகம் எப்படி தன் போக்கில் இயங்குகிறதோ,
அதுபோல, தெய்வமும் அருள்மழை பொழிந்து கொண்டே 
இருக்கும்.


அதை உணர்வது தான், உண்மையான பக்தனின் கடமை; 
ஆத்மார்த்தமான வழிபாடு ஒருபோதும் பொய்க்காது.


வழிபாடுகளில் மிகுந்த ஈடுபாடு உடைய அண்ணன் ஒருவர்,
 'தம்பி... இந்தா, இது சாளக்கிராமம்; மகாவிஷ்ணுவின் வடிவம். 
இதை வைத்து, ஒரு மாதம் பூஜை செய்து வா... கெடுதல் 
விலகும்; நன்மை உண்டாகும்...' என்று கூறி, சாளக்கிராமம் 
ஒன்றை, தம்பியிடம் தந்தார். 


திருமணமாகி, மூன்று பிள்ளைகள் உடைய தம்பியும், 
மூத்த சகோதரர் சொன்னபடி, முறையாக சாளக்கிராம 
பூஜையை செய்யத் துவங்கினார். 29 நாட்கள் முடிந்து, 30வது நாள்...


'ஹும்... ஒரு மாதமாக நீங்களும் பூஜை செய்து தான்
 இருக்கிறீர்கள். எதையும் காணோமே...' என்று அங்கலாய்த்தார், 
அவரது மனைவி.


சலிக்காமல் அவரும், 'அதைப் பற்றி கவலைப்படாதே...
 நான் பூஜை செய்வதைப் பார்த்து, நம் பிள்ளைகளும் பூஜை 
செய்யத் துவங்குவர் அல்லவா... நல்லது தானே அது...' என்று 
கூறியவர், 'சரி... பூஜைக்கு நேரமாகி விட்டது...' என்றார்.


அப்போது, அவரின் பிள்ளைகள் மூவரும், 'அப்பா... நாங்கள் 
கங்கையில் நீராட விரும்புகிறோம்...' என்றனர். 


தந்தைக்கு ஏனோ மனமில்லை. 'இப்போது வேண்டாம். 
இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்...' என்றார்.


அப்போது அங்கு வந்த குமாஸ்தா, 'ஏன் தடுக்கிறீர்கள்... என்ன 
பயம்? கவலைப்படாதீர்கள்... இவர்களுக்கு துணையாக நான் 
போகிறேன்; பத்திரமாக கூட்டி வருகிறேன்...' என்றார். 


அனுமதி கொடுத்த தந்தை, அவர்கள் புறப்பட்டுச் சென்றதும்,
 பூஜையில் அமர்ந்தார். முறைப்படி பூஜைகள் நடந்து முடிந்தன.


சற்று நேரம் ஆனது. கங்கைக்கு நீராடப் போயிருந்த நால்வரும், 
புழுதி படிந்த உடம்போடு வந்து நின்றனர்.


'என்ன ஆயிற்று?' என்று கேட்டார், தந்தை.


'நாங்கள் நால்வரும் கங்கையில் நீராடி திரும்பிக் 
கொண்டிருந்தோம். கண்களுக்கு எதிரில் பல அடுக்குகளுடன் 
ஒரு பெரும் மாளிகை, சரிந்து விழுந்து சிதறியது. ஓர் அடி 
முன்னால் போயிருந்தால் கூட, எங்கள் கதை முடிந்திருக்கும். 


'எங்களுக்கு முன் சென்று கொண்டிருந்த ஒரு காளை மாடு, 
ஒரு குதிரை, மூன்று ஆட்கள் என, ஐந்து ஜீவன்கள் உயிரிழந்தன. 
ஏதோ, தெய்வம் காப்பாற்றியது...' என்றார், குமாஸ்தா. 


பிள்ளைகள் பிழைத்ததை எண்ணி, பூஜை செய்து வந்த 
சாளக்கிராமத்தைப் பார்த்து, மனதார நன்றி செலுத்தினார். 


அங்கு வந்த அவரது மனைவி, 'நீங்கள் சொன்னது உண்மை 
தான். தெய்வம் ஏதோ ஒரு வழியில் நம்மைக் காப்பாற்றுகிறது 
என்பதை உணர்ந்தேன். நால்வரும் பிழைத்து விட்டனர்...' 
என்றார், கண்ணீர் மல்க.


நுாறு ஆண்டுகளுக்கு முன், வங்காளத்தில் நடந்த நிகழ்ச்சி இது. 
அடியார்களை காப்பாற்ற ஆண்டவன் மறப்பதில்லை; மறுப்பதும் 
இல்லை. 
-
--------------------------------------------


பி.என்.பரசுராமன்
வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15550
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஆண்டவன் மறப்பதில்லை!

Post by பானுஷபானா on Fri 3 May 2019 - 15:11

மகிழ்ச்சி மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum