சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எருமை மாடு ஜோக்!
by rammalar Today at 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31

» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17

» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16

» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06

» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53

» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07

» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57

» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40

» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18

» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51

» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46

» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14

» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05

» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58

» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00

வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை Khan11

வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

Go down

வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை Empty வர்த்தக ஒப்பந்தத்தை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ - சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

Post by rammalar Mon 13 May 2019 - 5:21

வாஷிங்டன், 

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கான வரியை ஜனாதிபதி டிரம்ப் பன்மடங்கு உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. 

இதனால் உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு மத்தியில் வர்த்தக போர் உருவானது. அதன்பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசி இந்த வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்தனர்.


அத்துடன் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தக போருக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி இருதரப்பு பிரதிநிதிகள், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நிதி மந்திரிகள் இடையே பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய உடன்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், சீன துணை பிரதமர் லியு ஹி உள்பட உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்ட இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமை அமெரிக்காவில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்தது.

அதே சமயம் இருநாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்காக மீண்டும் சந்திக்கும் என்றும் ஆனால் முக்கிய கொள்கைகளில் சீனா ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சீனாவின் மூத்த பிரதிநிதி தெரிவித்தார்.

இந்த நிலையில் சீனா, அமெரிக்காவுடன் இப்போதே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டால் உண்டு, இல்லையென்றால் 2020-க்கு பிறகு நிலைமை இன்னும் மோசமாகி விடும் என ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர் டுவிட்டரில் கூறியதாவது:-

சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் சீனா மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கருதுகிறேன். அதனால் அவர்கள் பேச்சுவார்த்தையை அடுத்த ஜனாதிபதி தேர்தல் (அடுத்த ஆண்டு) வரை இழுத்தடிக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

தேர்தலில் ஜனநாயக கட்சி வென்றால், அமெரிக்காவில் இருந்து ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர் வரை எடுத்து செல்லலாம் என்பது அவர்களின் எண்ணம்.

ஆனால் அவர்களின் ஆசை நிராசையாகும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. எனென்றால் நான் மீண்டும் ஜனாதிபதியாகப் போகிறேன். அப்போது ஒப்பந்தம் செய்தால் இன்னும் மிக மிக மோசமாகப் போகிறது. இப்போதே ஒப்பந்தம் செய்தால் அவர்களுக்கு நல்லது.

வர்த்தக பேச்சுவார்த்தைகளில் தங்களின் வாக்குறுதிகளை சீனா காப்பாற்றவில்லை, சீனாவில் இறக்குமதியாகும் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கின்றனர், 

அதாவது 10% முதல் 25% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்தால் கூடுதல் கட்டணங்களை வர்த்தகர்கள் தவிர்க்க முடியும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum