சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

ஒரேஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வசீகரத்தை அள்ளித் தரக்கூடியது,

Go down

Sticky ஒரேஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வசீகரத்தை அள்ளித் தரக்கூடியது,

Post by நிலா on Wed 8 Dec 2010 - 19:38


கண்கள் ''ப்ளிச்'' ஆக...

ஒரேஞ்சு ஜுஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ''ப்ளிச்'' ஆகிவிடும்.
தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

ஜொலி ஜொலிக்க...

தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஒரேஞ் தோல் சிகிச்சை.
உலர்ந்த ஒரேஞ் தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலைப் பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா...
இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷ'னில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு றை தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.
இப்படி செய்துவந்தால் டி பளபளப்பாக வும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனைப் பவுடராகவும் பயன்படுத்தலாம்.

வடுக்கள் நீங்க...

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா?
ஒரேஞ் விழுது இருக்க கவலையேன்?
ஒரேஞ் தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது 1 டீஸ்பூன், சந்தனப் பவுடர் 2 சிட்டிகை... இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள்.

தினம் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது. கருமையை விரட்டியடிக்க....

சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்...
1 வேப்பங்கொழுந்துடன், ஒரேஞ் தோல் விழுது கால் டீஸ்பூன், கஸ்தூ மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
வாரம் இருறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.

ஒரேஞ் மசாஜ் சிகிச்சை...

தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும்.இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது.

ஒரேஞ் மசாஜ் சிகிச்சை.
உலர்ந்த ஒரேஞ் தோல் 100 கிராம், வெந்தயம் 100 கிராம், பிஞ்சுக் கடுக்காய் 10 கிராம், வால் மிளகு 10 கிராம், பச்சைப் பயறு கால் கிலோ...
எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இருமுறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள்.
அரிப்பு போவதுடன் சுத்தம், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.

ஒரேஞ் /ப்ருட் பேக்...

வெளித் தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஒரேஞ் /ப்ருட் பேக்.
ஒரேஞ் தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானி மட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை செய்யுங்கள்.
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: ஒரேஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வசீகரத்தை அள்ளித் தரக்கூடியது,

Post by ஹம்னா on Thu 30 Dec 2010 - 17:12

://:-: :”@: :”@:


ஒரேஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வசீகரத்தை அள்ளித் தரக்கூடியது, X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஒரேஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வசீகரத்தை அள்ளித் தரக்கூடியது,

Post by நிலா on Sat 16 Jul 2011 - 18:44

:”@: :”@:
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: ஒரேஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வசீகரத்தை அள்ளித் தரக்கூடியது,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum