சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


கழுத்தணிகளும் மார்பணிகளும் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
கழுத்தணிகளும் மார்பணிகளும் Khan11
கழுத்தணிகளும் மார்பணிகளும் Www10

கழுத்தணிகளும் மார்பணிகளும்

Go down

Sticky கழுத்தணிகளும் மார்பணிகளும்

Post by பர்வின் on Tue 17 May 2011 - 15:19

வானவில்லைப் போன்ற பல மணிகள் பதிக்கப்பட்ட பொன்ஆபரணங்களை அக்காலப் பெண்கள் கழுத்தணிகளாகவும் மார்பணிகளாகவும் பயன்படுத்தினார்கள் என்பது வரலாற்றுக் குறிப்புக்களில் இருந்து எமக்குத் தெரிய வருகிறது. அதாவது அவ்ஆபரணங்களில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டு செழுங்குடி பெண்களின் மார்பணிகளாகவும் கழுத்தணி களாகவும் அவை விளங்கின.

"வடங்களும் குழைகளும் வானவில்லென நீலமாலை வருதலை' என கம்பராமாயணத்தில் கம்பர் எமக்குக் கூறுகிறார். "வில்லுப்பணி புனைந்து வல்லிக் கமுகை வென்ற கழுத்தினாள்' என்பது திருக்குற்றால குறவஞ்சியில் காணப்படும் ஒரு வரியாகும். "பொன்னின்மா மணியாரம் மணியாகந் திலங்கும் மாலென்கிறாள்' என்பது திருமங்கையாழ்வாரின் திருமொழிஆகும். அதனாலே பொன்னிலே மணிகள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை பெண்கள் அணிந்திருந்தார்கள் என்பது எமக்குத் தெளிவாகிறது.

"ஆரம் தாழ்த்த அம்பகட்டு மார்பின்' என்பது திருமுருகாற்றுப் படையில் வருகின்ற ஒரு தொடராகும். இதிலிருந்து மார்பிலே அணிந்த ஆபரணங்களுக்கு "ஆரம்' என்ற பெயர் இருந்தது எனத்தெரிகிறது. "ஆரம்' ஆபரணம் தற்காலத்துக்குரிய பிரபல்யமான ஒரு ஆபாரணமாக உள்ளது. பூமாலைகளுக்கும் பொன் மாலைகளுக்கும் பொதுவாக ஆரம் என்ற பெயர் அக்காலங்களில் வழக்கில் இருந்துள்ளது. தற்காலத்தில் நாம் "சங்கிலி' என்று அழைக்கும் ஆபரணம் அக்காலத்தில் "தொடர்' என்று வழங்கப்பட்டுள்ளது. சங்கிலியை இணைக்கும் கொக்கியை "கயில்' என்று அழைக்கும் பழக்கமும் இருந்துள்ளது.

"கட்டிய கயிலணி காழ் கொள்வோரும்' என்பது பரிபாடலில் வருகின்ற ஒரு தொடர். இதிலிருந்து கொக்கியை "கயில்' என்ற சொல்லினாலே அழைத்தது புலனாகிறது. கண்டம் என்று சொன்னால் அது கழுத்தைக் குறிக்கிறது. எனவே கழுத்தில் அணியும் மாலையானது "கண்டாவழி' என்று அழைக்கப்பட்டது. கழுத்தில் சூட்டுகின்ற ஆபரணமாக கண்டாவழியை பரிபாடங் சுட்டிக் காட்டுகிறது. இக்கண்டாவழி உருமாறி தற்காலத்தில் "நெக்லஸ்' என்ற ஆபணமாகியுள்ளது.

இறுக்கமாக கழத்திலே கழத்துப்பட்டி போல பல ஆபரணங்கள் இப்பொழுது புழக்கத்தில் உள்ளன. ஆனாலும் பழைய இலக்கியங்களில் வருகின்ற ஆபரங்கள் உருமாறி அல்லது பெயர் மாறி தற்காலத்தில் உள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். அதனாலே கழுத்திலே அணிகின்ற மாலைக்கு கண்டாவழி, கண்டமாலை, கண்டிகை என்று அழைக்கப்பட்டமை தெளிவாகிறது. உருத்திராட்ச மாலைக்கு கண்டிகை என்ற பெயர் உண்டு. "ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே' என்பது பெரிய புராணத்தில் வருகின்ற ஒரு தொடராகும். எனவே கண்டிகை என்பது மார்பிலே அணிகின்ற உருத்திராட்ச மாலையாக இருந்திருக்கலாம் எனப் புலனாகிறது. முத்துக்கள் உட்பட சில மணிகள் அணிவதால் அது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியதாககூம் சில நன்மைகளைக் கொடுக்கக் கூடியதாகவும் கருதப்படுகிறது. தங்கம் என்பது மருத்துவப் பயன் கொண்டது. அத்தங்கத்திலே தண்ணீர் பட்டு உடம்பிலே சேரும் போது பல நோய்கள் இல்லாதொழிக்கின்றன. கழுத்திலே கண்டமாலை போன்ற கட்டிகள் சிலருக்குத் தோன்றும். அவர்கள் கழுத்திலே பொன் சங்கிலிகளை அணிவதன் மூலம் அக்கட்டிகளை அகற்ற முடியும் என்பது தற்காலத்திலும் உள்ள ஒரு கருத்தாகும்.

ஆகவே தங்கம் என்பது மருத்துவப்பயன் கொண்ட ஒரு உலோகமாகும். தங்கத்தைப் பொடியாக்கி "தங்கபஸ்பம்' ஆக மாற்றி அப்பொடியை உண்பதனால் ஆயுள் நீண்டு உடல் பளபளப்பாகும். ஆகவே பொன்னால் ஆன கழுத்தணிகளை அணிவது அழகிற்காக மட்டுமல்ல ஆரோக்கியமாக வாழ்வதற்கும் பொன் உதவுகிறது என்பதாலும் ஆகும். அக்காலத்து ஆபரணங்களில் பதிப்பதற்குரிய முக்கிய மணியாக முத்து கருதப்பட்டது. முத்து மாலைகளை பல வடங்களாக அணிந்து தங்கள் செல்வச் செழிப்பை அக்காலத்து மக்கள் பறைசாற்றினார்கள். முத்தும் பவளமும் கடலிலே இயற்கையாகக் கிடைக்கக் கூடிய செல்வங்களாகும். ஒரு முத்துக் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான விடயமல்ல. அதற்கு தவம் இருக்க வேண்டும். அதனால் தான் பெற்றெடுத்த குழந்தையை முத்தே என்று கொஞ்சுகிறோம் மிகவும் விலை உயர்ந்தது மட்டுமல்ல பெற்றுக்கொள்வதற்கு அரியது என்பதால் அதை முத்து என்று அழைத்தார்கள். முத்துக்குளித்தலுக்கு பாண்டி நாட்டு கொற்கை கடற்கரை, தூத்துக்குடி மற்றும் நம் நாட்டு சிலாபம் கடற்கரை ஆகியவை பெயர் பெற்றவை. ஒரு நல்முத்து அதாவது ஆணி முத்தைப் பெற கடலின் ஆழத்திற்கு செல்ல வேண்டும். அந்த ஆணி முத்தின் விலையை மதிக்க முடியாத அளவு உயர்ச்சி பொருந்தியதாகக் கருதப்படுகிறது.

நாம் ஆபரணங்களில் பதிக்கப்பயன்படுத்தப்படும் முத்து எவ்வாறு உருவாகிறது என்றும் நாம் பார்க்க வேண்டும்? ஐப்பசி மாதத்தில் பகல் 12 மணிக்கு வெயிலும் சாறல் மழையும் சேர்த்து இருக்க வேண்டும். ஆனால் பொதுவாக அப்படி வருவதற்கு சாத்தியமில்லை. அதே நேரம் அந்த ஐப்பசி மாதம் சோமவாரம் (திங்கட்கிழமை) அன்று சுவாதி நட்சத்திரமும் கூடி வரவேண்டும். இவ்வரிய நேரத்தில் கடல் ஆழத்தில் உள்ள சிற்பி நிமிர்ந்து மேலே வரவேண்டும். அந்த சிற்பிக்குள் ஒரு மழைத்துளியும் ஒரு நுண் மணலும் சேர வேண்டும். அந்த சிற்பியானது கடல் அடிக்குச் சென்று உருண்டு, பல ஆண்டுகள் கடந்து ஒரு முத்துக்குளிப்பவனுக்காகக் காத்திருக்கும். இப்படிப்பட்ட முத்தே நல்முத்தாகக் கருதப்படுகிறது.

எனவே இயற்கையாகக் கிடைக்கக் கூடிய நல்முத்துக்களைப் பயன்படுத்தி அரசிளங்குமரிகள், அரச பரம்பரையினர் முத்துமாலைகளை உருவாக்கி கழுத்தில் அணிந்து மகிழந்தார்கள். இம்முத்துக்கள் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்க கூடியதாகவும் நோய்கள் அண்டவிடாது இருப்பதாகவும் அக்காலத்து மக்கள் நம்பினார்கள். "தழைக்கும் நீள்கதிர் தண்முத்துமாலை' என்று திருவுடையர் புராணம் குறிப்பிடுவதில் இருந்து முத்து மாலைகள் குளிர்ச்சியைக் கொடுத்ததாக அறிய முடிகிறது. பழங்காலத்தில் பெண்கள் அணிந்த ஒரு ஆபரணமாக "காரை' விளங்குகிறது. பொற்கம்பியை வளைத்துச் செய்த கழுத்து வளையமாக இது இறுக்கப்பிடிந்திருந்ததாக தெரிகிறது. இப்படியான கழுத்து ஒட்டிய அட்டியலை நாம் இப்பொழுதும் பார்க்கலாம்.

"காரை பூணும்

கண்ணாடி காணும்'

என்று ஆண்டாள் நாச்சியாரைச் சொல்லும் போது அக்காலத்தில் "காரை'ஆபரணம் இருந்ததும் அதைப் பெண்கள் அணிந்து அழகு பார்த்ததும் புலனாகிறது. இரவைப் பகலாக்கக் கூடிய நவமணிகளைக் கொண்டு அக்காலத்தவர்கள் மாலைகளை உருவாக்கி இறைவனுக்கும் அணிவித்து தாமும் அணிந்தார்கள் என்பதை நாம் பல இலக்கியங்கங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

வெற்றிக்குறித்தும் வளம் குறித்தும் அணிகின்ற ஆரத்திற்கு "மதாணி' என்று பெயர் வழங்கப் படுகிறது. இன்றும் தில்லையில் நடராஜப் பெருமானுக்கு இவ் ஆபரணம் அணிவிக்கப்படுகிறது. இது மார்பிலே அணியப்படுகின்ற பதக்கமாகும். அதாவது "திருஎமர்' ஆரத்தை மதாணி என்று அழைத்தார்கள். "ஓங்குயர் வானின்

வாங்குவில் புரையும்

பூணணி கவியிய வாரணி நித்திலம்

நித்தில மதாணி

அத்தகு மதி மறுக்கும்

செய்யோள் சேர்ந்த

நின்மாசிலகலும்'

இது பரிபாடலில் வருகிற ஒரு குறிப்பாகும்.

"வளங்கொள் மணமகள் மார்பின் மதாணி போல்' இவ்வாறு பிரபுலிங்க லீலையில் சிவப்பிரகாசர் விளவழ தேசத்தின் சிறப்பினை சுட்டுகிறார். எனவே இம்மதாணிகளை ஆண்டவனுக்கு அணிவித்ததுடன் ஆண்களும் பெண்களும் அணிந்ததாக வரலாறு எமக்கு புலப்படுத்துகிறது. வெற்றிக்களிப் பாலும் வளத்தாலும் செருக்கோடு "மார்பிலே அணியப்படுவது என்ற காரணத்தால் அதை மதாணி' என்று அழைத்ததாகவும் நாம் அறிகிறோம். இதை அணியும் போது இயற்கையாகவே மதம் கொண்டு வெற்றிப் பெருமிதம் உண்டாகிறது. அக்காலப் பெண்கள் மார்பிலே கண்டிகை, ஆரம், நவமணி மாலைகள், முத்தாரங்கள், காரை போன்ற ஆபரணங்களை அணிந்திருந்தார்கள் என இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.

கடலிலே கிடைக்கின்ற முத்தைப்போன்ற அருஞ்செல்வமான பவள மாலையும் அக்காலப் பெண்கள் அணிந்திருந்தார்கள். பவளத்தில் 2 வகையுண்டு. ஒன்று நற்பவளம், மற்றையது சோற்றுப் பவளமாகும்.

"துகிர் ஒத்த உதடுடையவள்' என்று பெண்ணைச் சொல்வார்கள். அதாவது பவளம் போன்ற சிவந்த உதடுகளைக் கொண்டவள் என்பது அதன் பொருளாகும். சிவந்த பவளத்தை "துகிர்' என்று சிறப்பாக அழைத்தார்கள். இதை பவளக் கொடியில் இருந்து வெட்டி எடுத்து அதனை செம்மையாக்கி மாலையாக்கினார்கள். முத்தைப் போன்று பவளமும் உடல் வளத்தைக் கொடுக்கக் கூடியதாகும்.

மேற்கூறப்பட்ட குறிப்புக்களில் இருந்து பொன்னால் ஆன கழுத்தணிகள் அழகை மட்டும் கொடுக்கவில்லை என்பதோடு ஆரோக்கியத்தையும் கொடுத்ததாக தெரிய வருகிறது. இன்றைய காலத்தில் அக்கால ஆபரணப் பெயர்கள் மறைந்தாலும் மருவினாலும் புதிய பெயர்களோடு பொன் ஆபரணங்கள் நிலைத்து நிற்கின்றன என்றால் அது மிகையாகாது. அட்டியல், பதக்கம், நெக்லஸ், காசுமாலை, ஆரம், சங்கிலி முதலியவை இக்காலப் பெண்களின் கழுத்தணிகளாகவும் மார்பணிகளாகவும் விளங்குகின்றன. இவ் ஆபரணங்களுக்கு எல்லாம் முக்கிய ஆபரணமாக பெண்களுக்கு விளங்குவது தாலியாகும். "தாலி' தொடர்பான சம்பிரதாய விடயங்களை ஜனவரி மாத கலைக்கேசரியில் உங்களுக்கு வழங்கியிருந்தோம் என்பதை நினைவுபடுத்துகிறோம்.
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

Sticky Re: கழுத்தணிகளும் மார்பணிகளும்

Post by மீனு on Tue 17 May 2011 - 18:47

எம்புட்டு விளக்கம் பர்வின் அள்ளி வளங்கிறீர்கள் நன்றி நன்றி
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: கழுத்தணிகளும் மார்பணிகளும்

Post by ஹம்னா on Wed 18 May 2011 - 8:27

சிறந்த தகவலுக்கு நன்றி பர்வின்.


கழுத்தணிகளும் மார்பணிகளும் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: கழுத்தணிகளும் மார்பணிகளும்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 18 May 2011 - 9:28

நல்ல தகவல்கள் நன்றி


கழுத்தணிகளும் மார்பணிகளும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கழுத்தணிகளும் மார்பணிகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum