சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

காமந்த் வெல்த் பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்:  இங்கிலாந்து  3வது இடம். Khan11

காமந்த் வெல்த் பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்: இங்கிலாந்து 3வது இடம்.

Go down

காமந்த் வெல்த் பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்:  இங்கிலாந்து  3வது இடம். Empty காமந்த் வெல்த் பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்: இங்கிலாந்து 3வது இடம்.

Post by ஹம்னா Tue 14 Dec 2010 - 12:34

காமந்த் வெல்த் பதக்க பட்டியலில் இந்தியாவுக்கு 2வது இடம்:  இங்கிலாந்து  3வது இடம். Commonwealth-Games

காமன்வெல்த் போட்டியில் 101 பதக்கம் பெற்று இந்திய அணி பதக்க பட்டியலில் 2 வது இடத்தை பிடித்தது, இன்றைய பாட்மின்டன் போட்டியில் செய்னா 38 வது தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார், முன்னதாக நடந்த பாட்மின்டன் இரட்டையர் பிரிவிலும் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு ஒரு தங்கம் கிடைத்தது. இந்தியா கடந்த முறை 2006 ல் 4 வது இடத்தில் இருந்தது குறிப்பிடதக்ககது.

இன்று (14 ம் தேதி ) மதிய நேரப்படி 37 தங்கம் பெற்று இருந்தது. பதக்க பட்டியலில் இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ள யார் கூடுதல் தங்கம் பெறுவார்கள என்ற எதிர்பார்ப்பு இருந்த நேரத்தில் பாட்மின்டன் ஒற்றையர் போட்டியில் செய்னா வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றார். இதனையடுத்து இந்தியா 38 தங்க பதக்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கம் பெற்று பதக்க பட்டியலில் 2 வது இடத்தை பிடித்தது. ஆஸ்திரேலியா 74 தங்கம், 55, வெள்ளி, 48 வெண்கலம் பெற்று மொத்தம் 177 பதக்கம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 37 தங்கம் , 59 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம்142 பதக்கம் பெற்று 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த கால பட்டியல் ஓர் ஆய்வு : ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் ( 2006 ம் ஆண்டு ) நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கம், 17 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்கள் பெற்று 4 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கடந்த காலத்தை விட 51 பதக்கங்கள் கூடுதலாக பெற்றுள்ளது இந்தியா. கடந்த 2006 ல் ஆஸ்திரேலியா 84 தங்கம், 69 வெள்ளி, 68 வெண்கலம் என 221 பதக்கம் பெற்று முதல் இடத்தில் இருந்தது. தற்போதைய டில்லி போட்டியில் ஆஸ்திரேலியா 74 தங்கம், 54 , வெண்கலம், 48 வெள்ளி என மொத்தம் 176 பதக்கம் பெற்று முதல் இடத்தில் இருந்தாலும் கடந்த ஆண்டை விட ஆஸ்திரேலியா சற்று பின் தங்கி இருக்கிறது. என்பது உண்மை .

இரண்டாவது இடத்தில் இருந்த இங்கிலாந்து கடந்த கால போட்டியில் (36 தங்கம், 40 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 110 பதக்கம்) பெற்றது. இந்த ஆண்டில் இங்கிலாந்து தங்கம் மட்டும குறைந்து விட்டதால் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 37, 59 , 46 என 142 பதக்கம் பெற்று 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2006 போட்டியில் 3 வது இடத்தில் இருந்த கனடா ( மொத்தம் 86 பதக்கம் ) தற்போது 26 தங்கம், 17 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 75 பதக்கம் பெற்று 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 5 வது இடத்தில் இருந்த தென் ஆப்ரிக்கா ( கடந்த போட்டி ; 38 பதக்கம்) , தற்போது 12 தங்கம் 11 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கம் பெற்று 5 வது இடத்தை மீண்டும் தக்கவைத்துக்கொண்டது.

நேற்று நடந்த ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸ் பைனலில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், சுபாஜித் சகா ஜோடி, சிங்கப்பூரின் நிங் கயோ, ஜி யங் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான போட்டியின் முதல் செட்டை சிங்கப்பூர் ஜோடி 11-9 என கைப்பற்றியது. பின்னர் எழுச்சி கண்ட இந்திய ஜோடி அடுத்த இரண்டு செட்டை 12-10, 11-4 என தன்வசப்படுத்தியது. இதற்கு சிங்கப்பூர் ஜோடி 11-5 என 4வது செட்டில் பதிலடி கொடுத்தது. இதனால் போட்டி 2-2 என சமநிலை அடைந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஜோடி 11-8 என கைப்பற்றியது. இறுதியில் சரத்-சகா ஜோடி 9-11, 12-10, 11-4, 5-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றது.


மனோஜ் தங்கம்:ஆண்களுக்கான “லைட் வெல்டர் வெயிட்’ 64 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் மனோஜ் குமார், இங்கிலாந்தின் பிராட்லி சவுண்டர்சை எதிர்கொண்டார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மனோஜ் குமார் 11-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார்.

சுரன்ஜாய் அதிர்ஷ்டம்:ஆண்களுக்கான “பிளை வெயிட்’ 52 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் சுரன்ஜாய் சிங், கென்யாவின் பென்சன் ஜங்கிரு மோதுவதாக இருந்தது. ஆனால் கென்ய வீரர் காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காததால், சுரன்ஜாய் சிங் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

சமோதா அபாரம்:ஆண்களுக்கான “சூப்பர் ஹெவி வெயிட்’ +91 கி.கி., எடைப்பிரிவு குத்துச்சண்டை பைனலில் இந்தியாவின் பரம்ஜித் சமோதா, டிரினிடாட் டுபாகோவின் அப்துலை சந்தித்தார். இதில் சமோதா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றார். இதன்மூலம் குத்துச்சண்டை போட்டியில் 3 தங்கப் பதக்கம் கிடைத்தது.

நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் சரத் கமல் மற்றும் சுபாஜித் சகா ஜோடி இணைந்து இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்தது. குத்துச்சண்டையில் மனோஜ் குமார், சுரன்ஜாய் சிங், பரம்ஜித் சமோதா ஆகிய 3 இந்திய வீரர்கள் தங்கம் வென்று, சாதித்தனர்.



ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து
» 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'
» பலம் மிக்க 27 நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 8-வது இடம்
» முதியோர் நலனை சிறப்பாக பராமரிக்கும் 91 நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 73வது இடம்
» உலகப் பணக்கார நடிகர்களில் 2வது இடம் பிடித்த நடிகர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum