சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

அல்பிரட் ஐன்ஸ்டைன். Khan11

அல்பிரட் ஐன்ஸ்டைன்.

Go down

அல்பிரட் ஐன்ஸ்டைன். Empty அல்பிரட் ஐன்ஸ்டைன்.

Post by *சம்ஸ் Sun 7 Nov 2010 - 22:41

அல்பிரட் ஐன்ஸ்டைன். Einstein
01. யுத்தத்திற்கு எந்நாளுமே தேவையில்லை ! யுத்தமே அநாவசியமானது. நல்லவர் பலரது உயிரைக்காவு கொள்ளும் யுத்தம் அநாகரிகத்தின் அதிசய உருவமாகும்
02. நல்லியல்புகள் பல கொண்ட மனிதத்தன்மைக்கு மாறானது யுத்தம். மனிதனை மனிதனாக வாழ விடாமல் மிருக இயல்புகளுக்கு ஆளாக்கும் யுத்தம் இன்றி வாழ்வதே அறிவுடைய செயலாகும்.
03. மனிதன் தான் விரும்பாத ஒன்றில் பற்றில்லாமல் வாழ அவனுக்கு உரிமையுண்டு.
04. உரிமைகள் அற்ற மனிதன் பொம்மையே. உரிமைகளுடன் வாழ்வதே எல்லையில்லாத இன்பத்தை தருவதாக அமையும்.
05. ஒருவன் எவ்வளவுதான் கல்வி மேம்பாடு உடையவனாக இருப்பினும், பிறருடைய உரிமைகளை மதிக்கத் தெரியாதவனாக இருப்பின் அவன் பயின்ற கல்வியால் ஆன பயன் எதுவும் இல்லை.
06. மாணவர்களிடம் மறைந்திருக்கும் உண்மையான திறமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கமாகும். மாறாக மாணவர் மண்டையில் எதையாவது திணிக்க முயல்வதல்ல கல்வி.
07. இராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாட்டில் ஒரு போதும் குடியுரிமை பெறக்கூடாது. அந்த நாட்டில் குடியுரிமை இருந்தால் அதைத்தூக்கி வீசிவிட வேண்டும்.
08. இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எது அடையாளம் என்பதற்கு ஐன்ஸ்டைன் கூறிய உதாரணம்.
ஓர் இடத்தில் ஐஸ்பழம் விற்கும் கடை ஒன்றில் நல்ல வியாபாரம் நடக்கிறது. அதைப் பார்த்ததும் இராணுவ சர்வாதிகாரிகள் அதன் அருகில் தாமும் ஒரு கடையைப் போடுவார்கள். பின் தமது கடையில்தான் கண்டிப்பாக ஐஸ்பழழ் வேண்ட வேணும் என்பார்கள். அடுத்து மற்றக்கடையில் ஐஸ்பழம் வாங்கக் கூடாது என்று தடைவிதிப்பார்கள். பொது மக்கள் எப்போதுமே அப்பாவிகள் அவர்கள் உத்தரவுக்கு அடி பணிவார்கள். இராணுவ சர்வாதிகாரம் எல்லாவற்றையும் சுரண்டி தனது வாயில் போடும்.
09. ஆசிரியரைப் பொறுத்தவரை நான் ஒரு முட்டாள், உங்களைப் பொறுத்தவரை நான் ஓர் அறிவாளி என்னைப் பொறுத்தவரை நான் யாரென்று தேடிக் கொண்டிருக்கிறேன் சரியாகப் புரியவில்லை.
10. எப்படிப்பட்ட கொடிய தண்டனைகள் கிடைத்தாலும் உண்மையை மட்டுமே உரைக்கிற அற்புதமான பழக்கம் வரவேண்டும், அதுவே வாழ்க்கைக்கு அழகு.
11. குழந்தைகளின் மனவியல் தெரியாது கற்பிக்கும் ஆசிரியர்கள் ஏறத்தாழ அவர்களுடைய மனவியல்பை கொல்லும் கொலைகாரரே.
12. இந்த இராணுவ அணிவகுப்புக்கள் எதற்காக ? எங்கோ யாரையோ கொல்வதற்காகத்தானே.. இவைகள் இல்லாமல் வாழ முடியாதா?
13. கத்தோலிக்கர் என்ற சொல்லின் பொருள் பரந்த மனப்பான்மை உடையவர் என்பதுதான். ஆனாஸ் இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜெர்மனியில் இருந்த கத்தோலிக்க பாதிரிமார் மதவெறி மிக்க கல்வியை கற்பித்த காரணத்தாலேயே நாஜிசம் தோன்றி உலகை அழித்தது. சர்வாதிகாரி ஹிட்லர் தோன்ற அக்கால கத்தோலிக்க ஆசிரியரே காரணம் என்பதால் ஜெர்மன் குடியுரிமையை தூக்கி வீசினார் ஐன்ஸ்டைன்.
14. கடவுள் இந்தப் பிரபஞ்சத்தை படைத்தது எப்படியென்ற இரகசியத்தை அறியவே வாழ்வு முழுவதும் போராடுவேன்
15. ஜேர்மனியில் உள்ள பாடசாலைகளில் நிலவும் கண்டிப்பும், தண்டனையும் எனக்கு கல்வியை தரவில்லை மாறாக தலைவலியைத்தான் தந்தது.
16. மதத்தின் பேராலும், இனத்தின் பேராலும் இரத்தம் சிந்தப்படுவதை வன்மையாக எதிர்க்கிறேன். மனித நேயமே என்மதம்.
17. இராணுவெறி, மதவெறி, போர்வெறி, இனவெறி, தேசவெறி இவைகள் எதுவும் இல்லாத உலகத்தில் வாழ ஆசைப்படுகிறேன்.
18. பிறருடைய சுக துக்கங்களில் பங்கு கொண்டு, அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து மாண்புடையோராக வாழ்வதே கல்வி கற்றோருக்கு அழகுடைய செயலாகும்.
19. உலகத்தினதும், பிரபஞ்சத்தினதும் இயக்கங்கள் அனைத்தும் ஈர்ப்பு சக்தி மின்காந்த சக்தி இரண்டினதும் அடிப்படையே. பொருளும் சக்தியும் ஒன்றே பொருளை சக்தியாக்கலாம் அதுபோல சக்தியைப் பொருளாக்கலாம்.
20. அடிப்படைக் கொள்கைகளில் நாடுகளுக்கிடையே ஒற்றுமை ஏற்படாவிட்டால் ஒப்பந்தங்களாலும் ஆயுத சேகரிப்பாலும் யாதொரு பயனும் கிடைக்காது.
21. வெற்றி பெற்ற மனிதனாக வாழ்வதைவிட உபயோகமுள்ள மனிதனாக வாழ முயற்சி.
22. உலக சமாதானம் என்பது முக்கியமானது, அது இல்லாவிட்டால் மனிதன் புவியில் நீடித்திருப்பது இயலாத காரியமாகும்.
23. கல்வி அறிவுள்ளவர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தால் அவர்கள் கதைப்பதைக் கேட்டு வீட்டில் உள்ள குழந்தைகள் அறிவு பெறுவார்கள். யுதர்கள் சபாத் என்று கொண்டாடும் விருந்துக்கு அறிஞரை அழைத்து வருவார்கள் அதன் மூலம் விருந்தை அர்த்தப்படுத்துவார்கள். ( குறிப்பு – விருந்திற்குப் போய் நாசகார கதை கதைக்கும் புலம் பெயர் தமிழ் பழக்கம் குழந்தைகளை நாசகார பழக்கத்தில் தள்ளும் என்பதை அறிக )
24. வறுமையாலும் அச்சத்தாலும் உந்தித்தள்ளப்படுகிறார்கள் போர் வீரர்கள். அவர்கள் வாழ்க்கை வியப்பிற்குரியதன்று, பாவம் அருவருப்பிற்குரியது. அவர்கள் மீது திணிக்கப்பட்ட போர் வெறிக்கு அவர்களும், அவர்களோடு எதிர்த்து போர் புரிவோரும் பலியிடப்பட்டிருக்கிறார்கள்.
25. நாம் காட்டுக்கு வேட்டைக்குப் போகிறோம். அப்போது எந்த மிருகம் நமது கைக்கு அகப்படப் போகிறது என்று தெரியாது. ஆகவே அந்த மிருகத்திற்கு எக்ஸ் என்று பெயரிடுகிறோம். நாம் முயலை வேட்டையாடினால் அந்த முயலே எக்ஸ் என்பதன் கருத்தாகும்.
26. இராணுவ வீரர்கள் மனிதத்தன்மையற்ற பிறவிகள் மிருகத்தனமான இயந்திரங்கள்.
27. இராணுவம் என்பது மனிதனை மனிதனாக நடக்க விடாமல் மிருகமாக நடப்பதற்கு ஊக்குவிக்கும் தாபனமே.
28. வறுமையில் ஒற்றுமை, இல்லாமையில் இனிமை, கடன் சுமையிலும் கடமை உணர்ச்சி என்றிருக்கும் குடும்பத்தை எவரும் அழிக்க முடியாது.
29. இயற்கையே இறைவன்.
30. ஒன்றே உலகம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அல்பிரட் ஐன்ஸ்டைன். Empty Re: அல்பிரட் ஐன்ஸ்டைன்.

Post by *சம்ஸ் Sun 7 Nov 2010 - 22:48

துயரத்துக்கு ஒரே மாற்று மருந்து சாதனைதான்.

போனால் வராதது ஒன்றே ஒன்று; அதுதான் காலம்.

பரிசுத்த இதயத்தைப் பெற்று இருப்பதே மனிதனின் முதல் தகுதி.

ஆண்களைவிடப் பெண்களுக்குப் பசி இருமடங்கு; புத்தி நான்கு மடங்கு; ஆனால் ஆசைகளோ எட்டு மடங்கு.

அழகுக்கு ஆற்றல் அதிகம்; ஆயினும் அதைவிட ஆற்றலுடையது பணமே!

செலவுக்குமேல் வரும்படி உள்ளவன் செல்வன்; வரவுக்குமேல் செலவழிப்பவன் ஏழை.

பெண்ணை ஒரு பொருள்போல் நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.

எழுதப்படும் சொல்லைவிட நாக்கால் பேசப்படும் சொல்லே வலிமை மிக்கது.

உன்னை நீ நம்பினால் ஊர் உன்னை நம்பும்.

பொறுமைசாலிக்குக் கோபம் வரும்பொழுது எச்சரிக்கையுடன் விலகிஇருந்துகொள்வது நல்லது.

துன்பங்கள் நிலையானவை அல்ல; அவை ஆற்றில் ஓடும் தண்ணீர்போல் ஓடிவிடும்.

வல்லமையற்ற நீதி ஆற்றலற்றது; நீதியற்ற வல்லமை கொடுங்கோன்மை.

நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது.

எந்த ஒரு முட்டாளும் பணம் ஈட்டமுடியும்; ஆனால் அறிவாளியால் மட்டுமே அதைக் காப்பாற்ற இயலும்.

ஒருவனைத் தனிமையில் கண்டிக்கவேண்டும்; பலர் முன் பாராட்டவேண்டும்.

சிந்தனையாளனுக்கு உலகம் ஒரு இன்பியல் நாடகம்; செயலற்றவர்கட்கோ துன்பியல் நாடகம்.

இயலுமாயின் பிறரைவிட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் கூறாதே

நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது.

துன்பம் வந்துவிடுமோ என்னும் அச்சம் துன்பத்தைவிடக் கொடியது; துயரமானது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum