Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
17 நாட்களில் ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்!
4 posters
Page 1 of 1
17 நாட்களில் ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்!
17 நாட்களில் ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்!
‘இந்தியப் படங்களில் இதுவரை பிரமாண்டம் என்றால் ஷோலேதான். எந்திரன் ஒரு ஷோலே மாதிரி. நடிப்பு, பிரமாண்டம், கதை என எல்லாமே மிகச் சிறகப்பாக அமைந்துள்ள படம். சரித்திரம் படைக்கும்!’
-மும்பையில் நடந்த ரோபோ இசைவெளயீட்டு விழாவில் இதைச் சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவர் சொன்னதைப் போலவே அனைத்து விதங்களிலும் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது எந்திரன்.
வெளியான மூன்று வாரங்களுக்குள் ரூ 318 கோடியை வசூலித்து, இந்தியாவின் அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் தகர்த்துள்ளது எந்திரன் / ரோபோ.
ரஜினிகாந்த் – ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் எந்திரன். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ரூ 162 கோடி செலவில் உருவானது.
கடந்த அக்டோபர் முதல் தேதி உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. ஜப்பான் போன்ற சில நாடுகளில் இன்னும் இந்தப் படம் வெளியாகவில்லை.
படம் வெளியாகி 17 நாட்கள் முடிந்த நிலையில், இந்தப் படத்தின் வசூல் விவரங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தன. ஆனால் சன் பிக்ஸர்ஸ் அமைதி காத்தது. கடந்த வாரம் எந்திரனின் உலகளாவிய வசூல் ரூ 225 கோடி என முதல்முறையாக அறிவித்தது சன் பிக்ஸர்ஸ்.
அமெரிக்காவில் பி4யு, பிகஸ் மூவீஸ் இந்தப் படத்தை வெளியிட்டன. இங்கு மட்டும் ரூ 24 கோடி வரை (எந்திரன் / ரோபோ) இந்தப் படம் வசூலித்துள்ளளது. அய்ங்கரன் – ஈராஸ் வெளியீடாக பிரிட்டனில் திரையிடப்பட்ட இந்தப் படம் ரூ 8 கோடிக்கும் மேல் வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது. இன்னும் தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது.
எந்த இந்தியப் படமாக இருந்தாலும் ஒரு காட்சிக்கே அரங்கு நிறையாத ஸ்கான்டினேவியன் நாடுகளான நார்வே மற்றும் ஸ்வீடனில் ஒரு வாரம் ஓடிய ஒரே படம் எந்திரன்தான் என்கிறார்கள். ஐரோப்பாவின் மிகப்பெரிய அரங்கான நார்வே கொலோஸியம் கினோ-1-ல் இந்தப்படம் வெளியான முதல் நாளே, அதன் விநியோகஸ்தருக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. அதன் பிறகு ஓடியதெல்லாம் அவருக்குலாபக் கணக்குதான்.
வட இந்தியாவில் எந்திரன் / ரோபோ பெரும் சாதனை படைத்துள்ளது. இந்தியில் டப் செய்யப்பட்ட எந்திரன் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரூ 30 கோடியை வசூலித்துள்ளது.
தெலுங்கில் முன்னெப்போதும் கண்டிராத வெற்றி ரோபோவுக்கு கிடைத்துள்ளது. தெலுங்கில் இதுவரை சாதனை என்று கருதப்பட்ட மகாதீரா வசூலை முதல் வாரத்திலேயே தாண்டிவிட்டது ரோபோ. இந்தப் படத்துக்குப் பிறகு வெளியான மகேஷ்பாபுவின் கலேஜா கூட சுமாராகத்தான் போகிறது. ஆனால் எந்திரனுக்கு இன்றுவரை கூட்டம் குறையவில்லை ஆந்திராவில்.
தெலுங்கு ரோபோவுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழில் இந்தப் படம் ரூ 170 கோடியைக் குவித்து மிரள வைத்துள்ளது. இதுவரை தமிழ்ப் பட உலகம் கண்டும் கேட்டுமிராத பெரும் சாதனை இது.
இந்தியா உள்பட உலகளவில் இதுவரை ரூ 318 கோடியை எந்திரன் / ரோபோ குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சத்யம் சினிப்ளெக்ஸின் ஜெயேந்திரா பானர்ஜி கூறுகையில், “இந்த சாதனையை இன்னொரு படம் தொட ரொம்ப நாளாகும் என்று நினைக்கிறேன். ஒரு வேளை மீண்டும் ரஜினியே கூட இதை முறியடிக்கலாம்” என்றார். சத்யம் சினிப்ளெக்ஸில் 80 சதவீத பார்வையாளர்கள் இந்தி ரோபோவுக்கு வருவதாகவும், எந்திரனுக்கு இன்றும் 100 சதவீத பார்வையாளர்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்திய அளவில் வசூலில் சாதனை புரிந்த படமாக 3 இடியட்ஸை கூறி வந்தனர். ஆனால் அந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகி, இதுவரை வசூலித்த தொகைக்கும் அதிகமான தொகையை மூன்றே வாரத்தில் வசூலித்துள்ளது எந்திரன். 3 இடியட்ஸுக்கு கிடைத்த விநியோகஸ்தர்கள் பங்குத் தொகை ரூ 99 கோடி. ஆனால் எந்திரன் / ரோபோ 15 நாட்களில் ரூ 100 கோடிக்கும் அதிகமாக விநியோகஸ்தர்களுக்கு பங்குத் தொகை தந்துள்ளது.
இப்போதும் அகமதாபாத், சண்டிகர், ஜோத்பூர் உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் ரோபோ ஓடுவது சாதாரண விஷயமல்ல என்கிறார்கள்.
அஸ்ஸாமில் வெளியான முதல் தமிழ்ப் படம் எந்திரன் / ரோபோவாகத்தான் இருக்கும் என்கி்றார் பிரபல விநியோகஸ்தர் வினோத் மெஹ்ரா. அதேநேரம், முன்பு ரஜினியின் சிவாஜிக்கு கிடைத்த அளவு வரவேற்பு கொல்கத்தாவில் எந்திரனுக்குக் கிடைக்கவில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.
கேரளத்தில் இன்னும் 120 திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை (15 நாளில்) ரூ 6.12 கோடி வசூல் கிடைத்துள்ளதாம். இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டிருப்பவர் 7 ஆர்ட்ஸ் விஜயகுமார். இவர்தான் குசேலனை எடுத்தவர். அந்தப் படத்தில் விட்டதை, எந்திரனில் பிடித்த தெம்பிலிருக்கிறார். இந்தப்படம் ஒட்டுமொத்தமாக தமக்கு ரூ 9 கோடி வரை வசூலித்துத் தரும் என நம்புகிறார் விஜயகுமார். தீபாவளிக்கும் பல திரையரங்குகள் புதிய மலையாளப் படங்களை விட எந்திரனே இருக்கட்டும் என்று கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இப்போதும் 40 திரையரங்குகளில் ஓடும் எந்திரன், புறநகர்ப் பகுதிகளில் மட்டும் சில திரையரங்குகளில் எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த விநியோகஸ்தர், “இங்கெல்லாம் மூன்று அல்லது நான்கு அரங்குகளில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்திருந்தனர். எனவேதான் பூந்தமல்லி, ஆதம்பாக்கம் போன்ற இடங்களில் ஒரு திரையரங்கில் இந்தப் படத்தை எடுத்துள்ளனர். மற்றபடி வார இறுதி நாட்களில் இப்போதும் டிக்கெட் கிடைக்காத நிலைதான் உள்ளது,” என்றார்.
எந்திரன் வெளிநாட்டு வசூல் ரூ 61 கோடி! – அய்ங்கரன் அறிவிப்பு
எந்திரன் திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் ரூ 61 கோடியை வசூலித்துள்ளதாக அய்ங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அய்ங்கரன் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ள ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்திரன் தமிழ், தெலுங்கு பதிப்புகள் மட்டும் அமெரிக்காவில் ரூ 20 கோடியை ஈட்டியுள்ளது. இந்திப் பதிப்பும் கணிசமான வசூலைக் குவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் ரூ 20 கோடியும், பிரிட்டனில் ரூ 8 கோடியும், ஐக்கிய அரபு நாடுகளில் ரூ 7 கோடியும், மலேஷியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ரூ 21 கோடியும், பிற பகுதிகளில் ரூ 5 கோடியும் இதுவரை வசூலித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வசூல் ரஜினி – ஷங்கர் கூட்டணியில் முன்பு வந்த சிவாஜியை விட பல மடங்கு அதிகமாகும்.
இதுகுறித்து அய்ங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தி கூறுகையில், “இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றுள்ளது ரஜினியின் எந்திரன் / ரோபோ. ரஜினி, ஷங்கர், ரஹ்மான் என்ற வெற்றிக் கூட்டணி மீண்டும் ஜாக்பாட் அடித்துள்ளது. இந்தப் படம் அனைத்து பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் தகர்த்துவிட்டது. தமிழ்ப் படங்களை அதிக செலவில் தயாரித்து சர்வதேச அளவில் விற்க முடியும் என்ற நம்பிக்கையை அழுத்தமாக விதைத்துள்ளது எந்திரன்” என்றார்.
அய்ங்கரன் நிறுவனத்தின் 51 சதவீத பங்குதாரரான ஈராஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிஷோர் லுல்லா கூறுகையில், “எந்திரன் தமிழ்/தெலுங்கு பதிப்புகளை உலகமெங்கும் வெளியிட்டவர்கள் என்ற முறையில் பெருமை அடைகிறோம். இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது…,” என்றார்.
எந்திரன் படத்தை முதலில் ரூ 150 கோடியில் தயாரிக்கத் திட்டமிட்டு படப்பிடிப்பையும் துவக்கியவர்கள் இந்த அய்ங்கரனும் ஈராஸ் நிறுவனமும்தான். ஆனால், சர்வதேச நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, படத்தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டனர். அப்போதுதான், இந்தப் படத்தைத் தயாரிக்குமாறு சன் பிக்சர்ஸை கேட்டுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதன் பிறகு நடந்ததெல்லாம் தமிழ் சினிமா வரலாற்றில் அழுத்தமான பதிவுகளாகி வருகின்றன!
குறிப்பு: எந்திரன் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்த இந்தக் கட்டுரை ஏற்கெனவே இரு தினங்களுக்கு முன்பு நம்மால் வெளியிடப்பட்டதுதான். இந்தத் தகவல்கள் அனைத்தும் 99 சதவீதம் துல்லியமானவை (அதாவது டிக்கெட்டில் குறிப்பிடப்பட்ட கட்டணப்படி!). வருமான வரித்துறைக்கு காட்டப்பட்டிருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: 17 நாட்களில் ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்!
இப்பவே கண்ணக்கட்டுதே எந்திரன் முடியல!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 17 நாட்களில் ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்!
அய்யோ எவ்வளவு பணம் என் படத்திக்கு ஏன் இப்படி வசூல் இல்லை எனக்கு அழுகை வருது.... :!#: :pale:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 17 நாட்களில் ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்!
*ரசிகன் wrote:அய்யோ எவ்வளவு பணம் என் படத்திக்கு ஏன் இப்படி வசூல் இல்லை எனக்கு அழுகை
வருது.... :!#: :pale:
நீங்களும் நடிகனா சொல்லவே இல்லை !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 17 நாட்களில் ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்!
உலகம் ஒரு மேடை அதில் அனைவரும் நடிகர்கள் பாஸ் :];: :];:ரோஸ் wrote:*ரசிகன் wrote:அய்யோ எவ்வளவு பணம் என் படத்திக்கு ஏன் இப்படி வசூல் இல்லை எனக்கு அழுகை
வருது.... :!#: :pale:
நீங்களும் நடிகனா சொல்லவே இல்லை !
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 17 நாட்களில் ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்!
:“: :“:*ரசிகன் wrote:உலகம் ஒரு மேடை அதில் அனைவரும் நடிகர்கள் பாஸ் :];: :];:ரோஸ் wrote:*ரசிகன் wrote:அய்யோ எவ்வளவு பணம் என் படத்திக்கு ஏன் இப்படி வசூல் இல்லை எனக்கு அழுகை
வருது.... :!#: :pale:
நீங்களும் நடிகனா சொல்லவே இல்லை !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 17 நாட்களில் ரூ 318 கோடி… அனைத்து சாதனைகளையும் தகர்த்தது ரஜினியின் எந்திரன்!
:];: :];:ரோஸ் wrote::“: :“:*ரசிகன் wrote:உலகம் ஒரு மேடை அதில் அனைவரும் நடிகர்கள் பாஸ் :];: :];:ரோஸ் wrote:*ரசிகன் wrote:அய்யோ எவ்வளவு பணம் என் படத்திக்கு ஏன் இப்படி வசூல் இல்லை எனக்கு அழுகை
வருது.... :!#: :pale:
நீங்களும் நடிகனா சொல்லவே இல்லை !
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» விருது வேட்டயைத் தொடங்கியது ரஜினியின் எந்திரன்!!
» அனைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் என அறிவிக்கப்பட்ட முதல் இந்தியப் படம், எந்திரன்!
» மங்காத்தா : இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 3 கோடி
» எந்திரன் பாகம்- 2
» எந்திரன் – ஒரு பக்க கதை
» அனைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் என அறிவிக்கப்பட்ட முதல் இந்தியப் படம், எந்திரன்!
» மங்காத்தா : இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 3 கோடி
» எந்திரன் பாகம்- 2
» எந்திரன் – ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|