சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

காலைக் கவனிப்பதுண்டா? எல்லாப் பாரத்தையும் தாங்குதே..... Khan11

காலைக் கவனிப்பதுண்டா? எல்லாப் பாரத்தையும் தாங்குதே.....

Go down

காலைக் கவனிப்பதுண்டா? எல்லாப் பாரத்தையும் தாங்குதே..... Empty காலைக் கவனிப்பதுண்டா? எல்லாப் பாரத்தையும் தாங்குதே.....

Post by ஹம்னா Sat 18 Dec 2010 - 17:13

காலை கவனிப்பதுண்டா? எல்லா பாரத்தையும் தாங்குதே

கால் – உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது இது தான். ஆனால், இதனை பராமரிப்பதில் எத்தனை பேர் அக்கறை காட் டுகின்றனர் என்பது கேள்விக்குறி தான். தினமும் காலை, மாலை வேளையில் குளிக்கும் போது, காலை சுத்தமாக கழுவிக்கொள்வதில் இருந்து, வெளியில் போய் விட்டு வீடு திரும்பினால், காலை சுத்தம் செய்வது வரை மிக முக்கியமானது.

ஆனால், காலை சரியாக கூட கழுவத்தெரியாதவர்கள் இல்லாமல் இல்லை. கால் வழியாக பாக்டீரியா கிருமிகள், உடலில் புகுவதற்கு இடமுண்டு; அதுபோல, பூச்சி கடித்து, அதன் மூலம் நோய் வரும் ஆபத்தும் உண்டு. அதனால் , கால் மீது அதிக கவனம் தேவை.

புறக்கணிப்பதா? : உடலில் மற்ற பாகங்களை போல கால் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், அதை அவ்வப்போது பராமரித்து வர வேண் டும். எங்காவது இடித்துக்கொண்டாலும், புண் ஏற்பட்டாலும், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. காலில் ஏதாவது அலர்ஜி ஏற்பட்டால், தோல் தடித் தால் கண்டுகொள்ளாமல் விட்டு விடக்கூடாது. தோல் சிகிச்சை நிபுணரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும்.

வறண்டு போவதேன்? : கால்களில் தான் அதிகமான வியர்வை சுரப்பிகள் உள்ளன. அவற்றில் சில எண்ணெய் சுரப்பிகளும் அடங்கும். அதனால் தான் கால் எப்போதும் வறண்டதாகவே இருக்கிறது. அதேசமயம், உள்ளங்கால்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை. அதனால், எண்ணெய் பசையுடன் வியர்வை வெளியேறுவதில்லை; வறண்டு போவதும் இல்லை. பொதுவான பாதிப்பு பெரும்பாலும் கோடை காலத்தில் கால்களில் பாதிப்பு வராது; ஆனால், மழைக் காலத்தில் தான் பாதிப்பு அதிகம். பெண்களுக்கு சேற் றுப் புண் வருவதுண்டு.

கால் விரல்களில் இடுக்குகளில் வியர்வை தங்குவதாலோ, அதிக நீர் கோர்த்தாலோ தடித்துப்போய் காளான் குடை போல பாதிப்பு வரும். அதிக புழுக்கம், அதிக மழை நீர் படுவதால் இப்படி ஏற்படும். சிலருக்கு சொறி, சிரங்கு போன்றவை வரும். வழக்கமாக காலுறை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும்; பெரும்பாலும் பருத்தியினாலான காலுறைகளை அணிய வேண்டும். வியர்வை தங்காமல் இருக்கும் வகையில் அணிய பருத்தி காலுறை தான் சிறந்தது. நைலான் காலுறை அணிந்தால், அவ்வப்போது சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.

காலாணி வருவதேன்? : கால் எப்போதும் உராயக்கூடியதும், அழுத்தம் ஏற்படுத் திக்கொள்வதுமாகத் தான் இருக்கும். அதனால் தான், காலாணி ஏற்படுகிறது. மூட்டு வலி இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு காணப்படும். காலின் வெளிப்பகுதியில் உள்ள தோல் அடர்த்தியாகிறது; அதனால், வலியும் ஏற்படுகிறது. சீரான வடிவத்தில் உள்ள காலில் காலாணி வராது; அப்படியே வந்தாலும் வலி அதிகமாக இருக்காது. அப்படியில்லாதவர்களுக்கு தான் காலாணி பாதிப்பு அதிகமாக இருக்கும். வெறுங்காலுடன் நடப்பது, காலில் அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் வேலை செய்வது, பொருத்தமில்லாத செருப்பை அணிவது போன்றவை தான் இதற்கு காரணம். வெதுவெதுப்பான தண்ணீரில் காலை சில நிமிடங்கள் வைத்து கொண்டால் வலி குறையும். காலாணியும் வராது.



ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காலைக் கவனிப்பதுண்டா? எல்லாப் பாரத்தையும் தாங்குதே..... Empty Re: காலைக் கவனிப்பதுண்டா? எல்லாப் பாரத்தையும் தாங்குதே.....

Post by ஹம்னா Sat 18 Dec 2010 - 17:15

நாற்றமெடுப்பதேன்? : சிலருக்கு அதிகமான வியர்வை சுரக்கும். அதனால் காலில் நாற்றம் எப்போதும் குடிகொண்டிருக்கும். காலை சுத்தம் செய்வதில் குறைபாடு, அடிக்கடி செருப்பு போடாமல் நடப்பது போன்றவற்றாலும் இது ஏற்படும். காலுறை மாற்றாமல் தொடர்ந்து நாலைந்து நாள் பயன்படுத்துவதாலும் கால் நாற்றம் அடிக்கும். பனியன் , ஜட்டி மாற்றுவது போல, காலுறையையும் தினமும் மாற்ற வேண்டும். ஆனால் இதை பலர் செய்வதில்லை. காலுறையையும், ஷூவையும் சுத்தம் செய்வதும் இல்லை.

வளைந்த நகங்கள் கைகளை போல, கால் விரல்களையும் சீராக வைத்திருக்க வேண்டும். அதற்காக அவ்வப்போது சீராக்கிக்கொள்ளவும், சுத்தம் செய்யவும் வேண்டும். அப்படியில்லாவிட்டால், காலில் உள்ள நகங்கள் வளைந்தும், உடைந்தும் இருக்கும். இப்படி இருந்தால் காலில் செருப்பு போட்டு நடக்க முடியாது; நகங்கள் வளைந்து இருப்பதன் மூலம் இடுக்குகள் வழியாக கிருமிகள் நுழைந்து விடும் ஆபத்தும் ஏற்படும்.

எப்படிப்பட்ட காலணி? : செருப்பு, ஷூ வாங்கி அணியும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இறுக்கமானதோ, மிகவும் பெரிதானதோ அணியக்கூடாது. அப்படி அணிந்தால் காலுக்கு வசதியாக இல்லாதது மட்டுமின்றி, பாதிப்பையும் ஏற்படுத்தும். காலில் மிகவும் இறுக்கமான காலணியை போடக்கூடாது. அதனால் தான் பல பிரச்னைகள் வரும். ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு சரும பாதிப்பும் வரும். காலணி போல, காலுறைகளையும் கவனமாக தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். பருத்தி காலுறையை தவிர, மற்ற வகையில் தயாரிக்கப்படும் காலுறைகளை பயன்படுத்தினாலும் தினமும் அதை மாற்ற வேண்டும்.

சுத்தம் முக்கியம் : காலுக்கு எப்போதும் சுத்தம் தான் மிக முக்கியம். குளிக்கும் போதும், வெளியில் போய்விட்டு திரும்பும் போதும் முழுமையாக கால்களை அலம்ப வேண்டும். குதிகாலில் தண்ணீர் படாமல் சிலர் காலை கழுவுவர்; அது தவறு.



காலைக் கவனிப்பதுண்டா? எல்லாப் பாரத்தையும் தாங்குதே..... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum