சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

பெண்களுக்கான இல்லற உரிமைகள் Khan11

பெண்களுக்கான இல்லற உரிமைகள்

Go down

பெண்களுக்கான இல்லற உரிமைகள் Empty பெண்களுக்கான இல்லற உரிமைகள்

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 20:24

ஃபாத்திமுத்து சித்தீக்

[ கேரளத்து ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பு ஒன்றில், ''இந்தியாவில் இன்று வழக்கிலிருக்கும் சட்டங்களில், மிக நவீனமானதாக இருப்பதோடு தவறின் விளைவாக நேரும் மணமுறிவுக்குக்கூட அனுபவபூர்வமான பொறுப்பேற்று தீரப்பளிக்கும் ஒரே சட்டம் இஸ்லாமிய சட்டம்தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அறியாமையாலோ, காழ்ப்புணர்ச்சியாலோ நம்முடைய கட்டுப்பாடான வாழ்க்கை நெறிமுறைகளைப் பார்க்கும் பிறசமயத்தவர்களுக்கு சுலபத்தில் கைகொடுப்பது பலதாரமணம்தான்! மனித இயல்பை நன்கு புரிந்து கொண்டு, பலதார மணத்தைப் பொறுத்தவரை இஸ்லாம் இதை ஒரு சலுகையாகத்தான் தந்திருக்கிறது.

பலதாரமணம் மூலம் முஸ்லீம்கள் சட்டபூர்வமாக பெண்களுக்குத் தரும் அந்தஸ்தை பிறசமுதாய ஆண்கள் தருவதில்லை. சின்னவீடுகளாக, வைப்பாட்டிகளாக செட்அப் செய்து கொளவதோட சரி…! அல்லது ''சிகப்பு விளக்கு''ப் பகுதிகளுக்கச் சென்று சீரழிகிறார்கள். இதனால் ஏற்படும் தீமைகளை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. நாமும் தக்க தருணங்களில் சுட்டிக்காட்டுவதில்லை.]

அல்லாஹ் ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவாக்கி வைத்திருக்கும்போது அதன் அழுத்தம் பெண்களின் மேல்தான் அதிகமாகப் பதிகிறது. அப்படிப்பட்ட அழுத்தத்தில்தான் வேறுபாடுகள் இருக்கிறதா?
சுமூகத்தின் உயர்மட்டத்தினருக்கும் கீழ்மட்டத்தினருக்கும் தான் எத்தனையெத்தனை பாகுபாடுகள்?! நகரத்தில் வசிக்கும் பெண்களுக்கும், கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கும் இடையில்தான் எத்தனை பாகுபாடுகள்?!

முஸ்லீமல்லாத மலைவாழ் மக்களிடையேயும், சில பழங்குடியினரிடையேயும், சில இனங்களிலும் குடும்பத்தின் மூத்த மகன் மட்டுமே திருமணம் செய்த கொள்வதும், மற்ற உடன்பிறந்த சகோதரர்களுக்கும் அவளே மனைவியாயிருப்பாள் எனும் புராதன இதிகாசப் பழக்கம் இன்றைக்கும் காணப்படுகிறது.

மேலைநாட்டு முஸ்லீம் அறிஞர் முஹம்மது மர்மடியூக் பிக்தால் ''இஸ்லாமிய கலைப்பண்பு'' எனும் நூலில் எழுதியிருப்பது போன்று ''... பல்வேறு நாடுகளிலும் முஸ்லீம் பெண்கள் அனுபவித்த சுதந்திரம் வட்டாரப் பழக்கவழக்கங்களுக்கும் ஒத்ததாக இருந்தது. இஸ்லாமியச்சட்டம் அவர்களுக்கு உரிமைகளை வழங்கியிருந்தது...''

''திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது'' என்று புனித லேபிள் ஒட்டாத இஸ்லாம், சுதந்திரமான ஆண் - பெண்ணுக்குமிடையே நடக்கும் வாழ்க்கை ஒப்பந்தத்தையே திருமணம் என்கிறது. இந்த ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர், வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்வதில் மனப்பூர்வமான சம்மதம் இருப்பதை இரு சாட்சிகள் முன்னிலையில் வாய் வார்த்தையால் தெரிவிக்க வேண்டும்.

''எந்தப் பெண்ணையும் அவள் சம்மதமின்றி திருமணம் முடிக்கக் கூடாது'', வெட்கப்பட்டுக்கொண்டு மௌனமாக இருந்தால் ''அவளது மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொள்ளலாம்'' எனும் பொருள்பட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.
மனதுக்குப் பிடிக்காதவரைத் திருமணம் செய்துகொள்ளும் நிர்பந்தம் இஸ்லாத்தில் இல்லை. சகசமயத்தினரில் இதே காலகட்டத்தில் இதற்கு நேர்மாற்றமாக இருந்தது. பணத்துக்காக, பெண்ணைப் பெற்றவர்கள் வயதான மாப்பிள்ளை, மூளைபிசகியவர், இரண்டாம் தாரம், மூன்றாம் தாரமாக… என்று யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் இஷ்டத்துக்கு கட்டிவைத்து விடுவார்கள். பெண்களுக்கு மறுத்துப்பேச எவ்வித உரிமையும் இல்லாமலிருந்தது. ஆனால் முஸ்லீம்களிடத்தில் மணமகனுக்கு எந்த அளவுக்கு திருமணத்தில் சம்மதம் இருக்கிறதோ அந்த அளவுக்கு மணமகளின் சம்மதமும் முக்கியம் என்பது கட்டாயமாகும்.

வரதட்சணை எனும் வரன், பெண்வீட்டாரிடம் தட்சணை வாங்கும் காலத்தில், இல்லற வாழ்க்கையில் ஈடுபடவிருக்கும் பெண்ணுக்கு மணக்கொடை எனும் ''மஹர்'' கொடுத்து கௌரவிக்கச் சொன்னது இஸ்லாம். இது வாழ்க்கைத்துணையாக ஜோடி சேருபவருக்குத் தரப்படும் பாதுகாப்புக்கட்டணம் எனலாம். இதை கணிசமான ரொக்கமாக, நாகையாக, வீடாக, சொத்தாகப் பெறும் பெண் உண்மையிலேயே பாதுகாப்பு வளையத்தில் பத்திரமாக இருக்கிறாள். அவளது வயதான காலத்தில் இதுவே அவளுக்கு ஜீவனாம்சமாகவும் இருக்கும்.

இஸ்லாம் அவளுக்குத் தரச்சொல்லாத ஜீவனாம்சம் கேட்டு கோர்ட், கேஸ் என்று அலைய வேண்டியதில்லை. பைத்துல்மால் தேடிச்சென்று உதவிகேட்டு நிற்கவேண்டியதில்லை. இஸ்லாமிய நாடுகளில் இந்த அடிப்படைத் தத்துவத்தை பல்வேறு ரூபங்களில் வெளிப்படுத்துகிறார்கள். இப்படி பெருந்தொகையை, சொத்தை மஹராகத் தரும் பட்சத்தில் அநாவசியத் 'தலாக்கு'களைப் பற்றி எச்சரிக்கையுணர்வு உள்ளவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள். அதனால் மணமுவந்து திருமணக்கொடையாக பெருந்தொகையை பெண்களுக்களித்து செயல்படும்போது இறைமார்க்கம் பெண்களுக்களித்த உரிமையைப் பெற்றவர்களாகிறார்கள்.

கேரளத்து ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பு ஒன்றில், ''இந்தியாவில் இன்று வழக்கிலிருக்கும் சட்டங்களில், மிக நவீனமானதாக இருப்பதோடு தவறின் விளைவாக நேரும் மணமுறிவுக்குக்கூட அனுபவபூர்வமான பொறுப்பேற்று தீரப்பளிக்கும் ஒரே சட்டம் இஸ்லாமிய சட்டம்தான்'' என்று புகழ்ந்துரைத்திருப்பது இங்கு கவனிக்கத் தக்கது.

மணமுறிவு, பலதாரமணம்… போன்ற புனிதமான சலுகைகளை சமூகத்தில் ஒருசிலர் துஷ்பிரயோகம் செய்வதாலும், சினிமா செய்திப் பத்திரிகைகள் என்று ஊடகங்களின் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களாலும்தான் தவறான எண்ணங்கள் ஏற்படுகிறது என்று கருதலாம்.

அறியாமையாலோ, காழ்ப்புணர்ச்சியாலோ நம்முடைய கட்டுப்பாடான வாழ்க்கை நெறிமுறைகளைப் பார்க்கும் பிறசமயத்தவர்களுக்கு சுலபத்தில் கைகொடுப்பது பலதாரமணம்தான்! மனித இயல்பை நன்கு புரிந்து கொண்டு, பலதார மணத்தைப் பொறுத்தவரை இஸ்லாம் இதை ஒரு சலுகையாகத்தான் தந்திருக்கிறது.

ஒரே மனைவியோடு திருப்திபடாத, பாலுணர்வு அதிகமுள்ள ஒரு மனிதன் செல்வந்தனாகவும், இறையச்சமுள்ளவனாகவும் இருப்பின், மார்க்க ஒழுங்கு முறைகளுக்குப் புறம்பான வழியில் சென்ற கெட்டுப்போகாமல், பெண்ணுக்கு தக்க அந்தஸ்து அளித்து நீதி நெறிமுறை தவறாமல் நடக்க அளித்த சலுகைதானே தவிர வேறு எவ்வித கட்டாயமும் இல்லை. அதோடு இஸ்லாமியச்சட்டப்படி முதல் மனைவி இருக்கும்போது இரண்டாம் மணம் முடிப்பது அத்தனை சுலபமானதல்ல.

பலதாரமணம்; மூலம் முஸ்லீம்கள் சட்டபூர்வமாக பெண்களுக்குத் தரும் அந்தஸ்தை பிறசமுதாய ஆண்கள் தருவதில்லை. சின்னவீடுகளாக, வைப்பாட்டிகளாக செட்அப் செய்து கொளவதோட சரி…! அல்லது ''சிகப்பு விளக்கு''ப் பகுதிகளுக்கச் சென்று சீரழிகிறார்கள். இதனால் ஏற்படும் தீமைகளை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. நாமும் தக்க தருணங்களில் சுட்டிக்காட்டுவதில்லை.
முறைப்படி திருமணமில்லாத உறவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இனிஷியலும் போட முடியாமல் தவிக்கிறார்கள். அப்படி அவர்களை நிராதரவாக தவிக்கவிடாமல், அந்தப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் பலதாரமணம் மூலம் இஸ்லாம் சமூக அந்தஸ்து அளிக்கிறது. ஒரு விதத்தில் இந்த அபலைப் பெண்கள் பெறும் ''சமூக நீதி'' பெண்ணுரிமையைச் சேர்ந்ததுதான்.

எகிப்து, ஈரான், இராக், சூடான், மலேசியா, இந்தோனேஷியா போன்ற முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழும் நாடுகளில் பெண்கள் முன்னெறியவர்களாக இருக்கும்போது, இந்தியாவில் மட்டும் இப்படி பிற்போக்காக இருக்கிறார்கள் என்றால், அது நிச்சயமாக பிறசமூகத் தாக்கமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இந்நிலையிலிருந்து பிறசமயத்தவர் வேகமாக மீண்டுவிட நாம் மட்டும் நின்ற இடத்திலேயே நிற்கிறோமோ என்று நினைக்க வேண்டியுள்ளது!

இஸ்லாம் பெண்ணுக்களித்த உரிமைகளில் மிக முக்கியமான ஒன்று விதவை மறுமணம். பிற சமூகங்களில் கணவனை இழந்த கைம்பெண்கள் பட்ட அவதி ஒன்றல்ல இரண்டல்ல சொல்லி முடிப்பதற்கு! மோசமான இழிநிலையில் முடக்கிப்போட்டு, மொட்டையடித்து அவர்கள் அழகை குறைக்கும் விதமாக மிக மோசமான சடங்குகள் பல செய்து வதைத்திருக்கிறார்கள்.

ஆனால், மறுமலர்ச்சி மார்க்கமாகிய இஸ்லாம் ''பிறப்பும் இறப்பும் இறைக்கட்டளை'' தக்க துணையின்றி கணவனை இழந்த பெண் தனித்திரக்கத் தேவையில்லை… கௌரவமான பாதுகாப்பான வாழ்க்கைக்கு ''மறுமண உரிமையே மருந்து'' என்கிறது.

முஸ்லீம் பெண்கள் தங்கள் கடமைகளையும் உரிமைகளையும் இரு கண்களென கடைப்பிடிக்க வேண்டும். நம்மைத்தாக்குவத போன்று குறை கூறும் பிறசமய சகோதரிகளுக்கு தக்க பதில் தந்து விளக்கவது காலத்தின் கட்டாயம்.

நன்றி: சிந்தனை சரம், மாத இதழ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum