சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி Khan11

முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி

3 posters

Go down

முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி Empty முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி

Post by *சம்ஸ் Mon 20 Dec 2010 - 23:26

முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி Saroja1

தோல், வயது முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி என்று சொன்னால் அது மிகையில்லை. கருவறை முதல் கல்லறை வரை, தோலும் அதனுடைய பிற பகுதிகளும், தங்களுடைய அமைப்பிலும் வேலைகளிலும் மாற்றங்களைச் செய்து கொண்டே வருகின்றன அல்லது மாற்றங்களை அடைந்து கொண்டே வருகின்றன.மற்ற முக்கியமான உறுப்புகளில் வயதுக்கு ஏற்ப என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றனவோ, அதேபோல் தோலிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நம்முடைய உடல் உறுப்புகளிலேயே நம் கண்ணால் நேரடியாகப் பார்க்க முடிவது நம்முடைய தோலைத்தான். அந்தத் தோலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து நமக்கு வயது முதிர்ச்சி அடைகிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. அக, தோலை, வயது முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி என்று சொல்லலாம்.

ஒரு மனிதனுடைய மரபு, வயது, சுற்றுப்புறச் சூழல், தட்பவெப்ப நிலை போன்ற பலவகையான காரணங்களால், அவனுடைய தோல் என்னுடைய 'வயதை’ சீக்கிரமாகவோ அல்லது காலதாமதமாகவோ 'நிர்ணயித்துக்கொள்ளும்’.கருவில் தோல் கருவில் இருக்கும் குழந்தைக்கு, முதல் இரண்டு வாரங்களிலேயே ஆரம்ப நிலை தோல் உருவாகி விடுகிறது. மூன்று அல்லது நான்கு மாதங்களில் எமிடெர்மிஸ் அதாவது தோலில் மேல் பகுதியில் இருக்கும் பலவகையான செல்கள் உருவாகிவிடுகின்றன. ஐந்து மாதங்களில் டெர்மிஸ் எனப்படும் தோலின் மையப்பகுதி முழுமையாக உருவாகி விடும். ஆறு மாதங்களில் தோலின் அடிப்பகுதியான சப்&குடெனியஸ் (கொழுப்பு) செல்கள் உருவாகி விடுகின்றன. அதாவது, கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் கருவில் இருக்கும் குழந்தையின் முழுமையான தோல் உருவாகி விடும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி Empty Re: முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி

Post by *சம்ஸ் Mon 20 Dec 2010 - 23:27

பிறந்த குழந்தையின் தோல்

ஒரு குழந்தை கருவில் இருக்கும்போதே அதனுடைய தோல் முழுமையாக உருவாகி விட்டாலும், குழந்தை பிறந்தபிறகு பார்த்தால் அதனுடைய தோல் மிகவும் மிருதுவாக இருக்கும். ஏனெனில், அதனுடைய தோலின் மையப்பகுதியான டெர்மிஸின் தடிமன் மிகவும் குறைவாக, மெல்லியதாக இருக்கும். அதேபோல், இந்த டெர்மிஸ் பகுதியில் இருக்கும் கோலாஜன், எலாஸ்டிக் ஃபைப்ரில்ஸ் போன்ற பல்வேறு திசுக்களும் மிகவும் குறைவாகவும், முதிர்ச்சி அடையாத நிலையிலும் இருக்கும். அது தவிர, தோலில் இருக்கும் ரத்தக் குழாய்களும் நரம்புகளும் முதிர்ச்சி அடையாமலேயே இருக்கும். இவற்றைத் தவிர, மற்றவர்களுடைய தோலுக்கும் பிறந்த குழந்தையின் தோலுக்கும் வேறு பெரிய வித்தியாசங்கள் எதுவும் இருக்காது.
முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி Sarojadevi

சரி, எதற்காக இவ்வாறு ஒப்பிட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், பிறந்த குழந்தையின் தோல் மிருதுவாக இருப்பதால், அந்தத் தோல் மீது எதையாவது பூசினால், தோல் உடனே ரியாக்ஷன் காட்டத் தொடங்கி விடும். அதாவது, தொடக்கத்தில் குழந்தையின் தோலில் எதைப் பூசினாலும் அதைத் தோல் ஏற்றுக் கொள்வது. அதனால், பிறந்த குழந்தையின் தோல் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தையின் தோல் மீது மருந்தோ, எண்ணெய்யோ, பவுடரோ எதையாவது பூசுவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை நன்கு யோசித்தோ அல்லது ஒரு டாக்டரிடமோ ஆலோசனை பெற்றுச் செயல்படுவது நல்லது அல்லது எதுவுமே தடவாமல் இருப்பது மிகவும் நல்லது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி Empty Re: முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி

Post by *சம்ஸ் Mon 20 Dec 2010 - 23:27

பிறந்த குழந்தையின் தோல் மூலம் உடலுக்குள் இருந்து அதிகப்படியான நீர் வெளியாகும். அதுவும் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே அதாவது குறைப்பிரசவம் என்று சொல்வாகர்களே அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு மிக அதிகப்படியான நீர் வெளியாகும். அதாவது, பெரியவர்களைவிட குழந்தைகளுக்குத் தோல் மூலம் அதிக அளவில் நீர் வெளியாகும். ஆகவே, பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி தண்ணீர் கொடுக்கவேண்டியது மிகவும் அவசியம். பிறந்த ஏழு மாதங்களுக்குப் பிறகுதான், குழந்தையின் தோலில் இருக்கும் வியர்வை சுரப்பிகளும், வியர்வை நாளங்களும், வியர்வைத் துவாரங்களும் சரியாகவும் முழுமையாகவும் வேலை செய்யத் தொடங்கும்.

ஆகவே, குழந்தையை அதிக சூடான இடத்திலோ அல்லது சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருக்கும் இடத்திலோ பராமரிக்கக் கூடாது. இல்லையென்றால், குழந்தையின் உடலில் இருந்து அதிகப் படியான நீர் வெளியாகி, குழந்தையின் உடல் வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதனால், மிகுந்த கவனம் தேவை. குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில், நெற்றிப் பகுதியில் இருக்கும் வியர்வை சுரப்பிகள் மூலம் அதிக அளவில் வியர்வை வெளியாகி, வெப்பநிலை சீராக்கப்படுகிறது. அதேநேரத்தில், கைகள் மற்றும் பாதங்களில் அதிக அளவில் வியர்வை வந்தால், அந்தக் குழந்தை ஏதோ ஒரு 'மன அழுத்தத்துக்கு’ ஆளாகியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தையின் உடலில் தாயின் ஹார்மோன்கள் இருக்கும் வரை, அதன் தோலில் சீபம் எனப்படும் தோலின் எண்ணெய்ப் பசை இருக்கும். குழந்தைகள் வளர வளர, எண்ணெய்ச் சுரப்பிகளின் செயல்பாடுகள் குறைந்து கொண்டே சென்று ஒரு கட்டத்தில் முழுமையாக நின்றுவிடும். பிறகு, பருவ வயதைக் குழந்தைகள் எட்டும்போது, ஹார்மோன்கள் தூண்டுதலால் மீண்டும் எண்ணெய்ச் சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கிவிடும். பிறந்த குழந்தையின் தோலில் ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால், அதை மிகுந்த கவனத்தோடு பார்க்க வேண்டும். அதை நோய் என்று கருதக்கூடாது. ஏனெனில், பிறந்த குழந்தையின் தோலில் வெண்ணெய் (பசை) போன்ற ஒரு பொருள் உற்பத்தில் ஆகும். அதற்கு 'வெர்னிக்ஸ் கேசியோசியா’ என்று பெயர். அந்தப் பொருள்தான் சீபம் எனப்படும் எண்ணெய்ப் பசை. நாளாக நாளாக, அந்தப் பொருள் தானாகவே காய்ந்து உதிர்ந்து விடும். ஆகவே, பிறந்த குழந்தையின் தோலில் தொடக்கத்தில் ஏற்படும் இது போன்ற மாற்றங்களைப் பார்த்து பயந்துவிடக்கூடாது.

இந்த பசை போன்ற பொருள், வெளியில் இருந்து தாக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளில் இருந்து குழந்தையைக் காக்கும் சக்தி வாய்ந்தது. அதே நேரத்தில், அந்த பசையின் நிறத்தை நாம் அடிக்கடி கவனிக்க வேண்டும். தொடக்கத்தில் இந்தப் பசை, வெண்மை நிறத்தல் இருக்கும். அதுவே, பழுப்பாக இருந்தால் அக்குழந்தைக்கு ரத்த சோகை இருப்பதற்கான அறிகுறியாகக் கருதலாம் அல்லது வேறு ஏதாவது நிறமாக இருந்தால்,தாயின் வயிற்றில் அக்குழந்தை ஏதோ ஒருவித அழுத்தத்தில் இருந்திருக்கக் கூடும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

பிறந்த குழந்தைகளுக்கு அதிகமான அளவில் வரக்கூடிய நோய், 'நாப்கின் டெர்மடைடிஸ்’ அல்லது 'டயாபர் ராஷ்’. அதாவது, குழந்தை சிறுநீர் போகும்போதோ, மலம் கழிக்கும்போதோ அவை தோலில் பட்டு அதனால் ஏற்படக்கூடிய நோய் இது. பிறந்த குழந்தையின் இடுப்பில் டயாபர் என்ற துணியோ அல்லது குழந்தையின் தோல் பகுதியை நன்கு இறுக்கிப் பிடித்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாப்கினையோ அணிவிப்பதன் மூலம், சிறுநீரும் மலமும் அங்கேயே தங்கி, அவற்றின் மூலம் கிருமிகள் சேர்ந்து தோலில் ஒருவித அலர்ஜி நிலை அல்லது தோல் உரிதல், புன் ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

பிறந்த குழந்தையின் ரத்தத்தில், தாயின் ஹார்மோன்கள், ஆன்டிஜென், ஆன்டிபாடி போன்றவை சிறிது காலம் இருக்கும் என்பதால், அந்தக் காலகட்டத்தில் பெரியவர்களுக்கு ஏற்படுவதைப்போல், 'இன்ஃபேன்டைல் எக்ஸிமா’, 'இம்பெடைகோ’ போன்ற புண்கள், சிரங்குகள் ஏற்படக்கூடும். தாய்க்கு ஏதாவது தோல் நோய்கள் இருந்தால், அந்த நோய்களும் குழந்தைக்கு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அவை பற்றி, குழந்தையின் தாயிடம் எடுத்துச் சொல்லி குழந்தையை எப்படிப் பார்த்துக்கொள்வது என்று அறிவுறுத்த வேண்டியது மிகவும் முக்கியம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி Empty Re: முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி

Post by *சம்ஸ் Mon 20 Dec 2010 - 23:28

பள்ளிக் குழந்தைகளின் தோல்

குழந்தையின் தோலில் ஏற்படக்கூடிய எல்லா வகையான நோய்க்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது ஒரு தவறான அணுகுமுறை. நோய் எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொண்டு, முக்கியமானவற்றுக்கு மட்டும்சிகிச்சை அளிப்பதுதான் நல்லது. குழந்தைகளுக்குச் சாதாரணமாகவே வயதுக்கு ஏற்ப நாளுக்கு நாள் தோலில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட வயது வரை, இவ்வாறு தோலில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
பருவ வயதில் அக்குள், பிறப்பு உறுப்பில் முடி வளர்வது, முகத்தில் பருக்கள் உருவாவது, ஆண் குழந்தையாக இருந்தால் மீசை, தாடி வளர்வது போன்றவை இருக்கும். அதாவது, ஹார்மோன்களின் தூண்டுதலால் தோலில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட காலம் வரை வீட்டுக்குள் வைத்துப் பாதுகாக்கப்படும் குழந்தைகள், வெளி உலகுக்கு முதன்முறையாக வரும்போது, காற்றில் இருக்கும் பாக்டீரியா, வைரஸ் கிருமிகளாலும், சுற்றுப்புற தட்பவெப்ப நிலை மாறுபாடுகளாலும் தோலில் மாற்றங்கள் / நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன. கொசுக்கடி, பூச்சிக்கடிகளாலும், விளையாடும் இடங்களில் இருக்கும் செடிகளின் மகரந்தங்களாலும் குழந்தைகளின் தோலில் நோய்கள் வரலாம்.

குழந்தைகளின் முகத்தில் அதிகமாக வரும் நோய் 'பிட்ரியாஸிஸ் ஆல்பா’. அதாவது, தோலில் வெள்ளை நிறத்தில் தேமல் போல் இருக்கும். ஒவ்வாமையினால், சில குழந்தைகளின் தோல் வறண்டு காணப்படும். இந்த வறண்ட நிலை மற்றும் தேமலைப் பார்த்து குழந்தைகளின் பெற்றோரும் உறவினர்களும் பயந்து போகலாம். அதாவது குழந்தைக்கு லூகோடெர்மாவாக இருக்குமா? வெண் குஷ்டம் வந்து விட்டதா? தொகுநோய் வந்திருக்கிறதா? அல்லது படையாக இருக்குமா? என்று பயந்து கவலைப்படுவார்கள். ஆகவே, தோலில் ஏற்படும் மாற்றங்களைச் சரியாகக் கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிப்பது முக்கியம். உணவுச் சத்துக் குறைபாடு காரணமாகவும், ஹார்மோன்களின் குறைபாடு காரணமாகவும், குழந்தைகளின் தோலில் வரக்கூடிய நோய்கள் ஏராளம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி Empty Re: முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி

Post by *சம்ஸ் Mon 20 Dec 2010 - 23:28

பருவ வயதில் தோல்

பருவ வயதில் ஆண், பெண் இருவருக்கும் சீபம் எனப்படும் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும். அவரவர் பாலினத்துக்கு (ஆண் / பெண்) ஏற்ப உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதில் முக்கியமானது, ஹார்மோன் செயல்பாடுகளால் அக்குள் பகுதியில் இருக்கும் எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமாகச் செயல்பட்டு ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆக, இதைப் பற்றி ஒரு தெளிவான அறிவுரையைப் பருவ வயதினருக்குத் தெரிவிப்பது மிகப் பெரிய கடமை என்பதுடன் அது மிகவும் அவசியமாகிறது.

இரண்டு மூன்று முறை குளிப்பதாலும், அக்குள் பகுதியில் இருக்கும் முடிகளை அடிக்கடி நீக்குவதாலும், அந்த இடத்தை எப்போதும் உலர்ந்த நிலையில் வைத்துக் கொள்வதாலும், வெளிப் பொருள்களான பவுடர், டி யோடரண்ட் போன்றவற்றை உபயோகிப்பதாலும், இந்த துர்நாற்றப் பிச்னைக்குத் தீர்வு காணலாம். மேலும், அணியும் உடைகளைத் தினமும் மாற்றுவதாலும், அவற்றை நன்றாகத் துவைத்து அணிவதாலும் இப்பிரச்னையை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். பருவ வயதில் வரக்கூடிய இன்னொரு முக்கியமான பிரச்னை, 'முகப்பரு’. தோலில் இருக்கும் செபேஷியஸ் கிளான்ட்ஸ் என்று சொல்லப்படும் எண்ணெய்ச் சுரப்பிகளின் ஓட்டை அடைபடுவதால் முகப்பருக்கள் அதிகமாக வருகின்றன. அதே நேரத்தில், மற்ற வயதினருக்கு வரக்கூடிய பிற நோய்கள், இந்த வயதினருக்கும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

பெண்களுக்கு, மாதவிடாய் ஏற்படும் சமயத்தில் சில முக்கியமான தோல் மாற்றங்களும், நோய்களும் வருவது மிகவும் சாதாரண ஒன்று. மேலும், பருக்கள் அதிகமாவதோ, தோல் அதிகமாக வறண்டு விடுவதோ அல்லது, வியர்வையினால், தோலின் ஈரப்பதம் அதிகமாகி புண்ணாகிவிடுவதோ அதிகமாக இருக்கலாம். அதே நேரத்தில், பிறப்பு உறுப்பைச் சுற்றியுள்ள தோல் பகுதி சிவந்து, ஒருவித எரிச்சலைத் தரும். ஆனால், இது ஒரு தோல் நோயாக இல்லாவிட்டாலும், பெண்களைப் பொருத்தவரை மனத்தில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்திவிடுகிறது.

அதே போல், மெனோபாஸ் என்ற சொல்லப்படும் மாவிடாய் நிற்கும் 45 முதல் 50 வயது காலகட்டத்தில், பெண்களுடைய உடலில் ஏற்படும் ஹார்மோன் செயல்படுகளால், தோலில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக, அந்த வயதில் இருக்கும் பெண்களுடைய தோல் மெல்லியதாக, எண்ணெய்ப் பசை குறைந்து உலர்ந்த நிலையிலும் இருக்கும். உடலில் எங்கெல்லாம் முடிகள் இருக்கின்றனவோ, அவை எல்லாம் தடிமன் குறைந்து மெல்லியதாகி விடும். இவை, வயதில் பெண்களுக்கு ஏற்படும் சாதாரணமான செயல்பாடுகள்தான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி Empty Re: முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி

Post by *சம்ஸ் Mon 20 Dec 2010 - 23:28

முதியவர்களின் தோல்

வயதானவர்களுடைய தோல், அவர்களுடைய மரபு, இயற்கை உபாதைகள், பராமரிப்பு முறை ஆகியவற்றைப் பொறுத்தே அமையும். முதியவர்களின் தோல் மிகவும் மெல்லியதாக ஆகிவிடும். தோலில் நிறைய சுருக்கங்கள் ஏற்படும். கண்ணுக்குக் கீழேயும் வேறு சில இடங்களிலும் தோல் தொய்வடைந்த நிலைக்கு வந்துவிடும். எண்ணெய்ப் பசை இன்றி, காய்ந்து வறண்டு காணப்படும். முடிகள் 'இளைத்துவிடும். குறைந்துவிடும்’, மிக முக்கியமாக, நிறச் சத்தைக் கொடுக்கக்கூடிய செல்கள், வேலை செய்வதை நிறுத்துவிடுவதால், முடிகள் நரைத்து விடும். தோலில் வெள்ளை மற்றும் கறுப்புப் புள்ளிகள் அதிகமாகத் தோன்றும். நகங்கள், நீளவாக்கில் உடைந்து போகும்.
தோலில் ஏற்படும் கறுப்புப் புள்ளிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தட்ப வெப்ப நிலை, சூரிய ஒளி போன்றவற்றால்தான் இந்தக் கரும் புள்ளிகள் ஏற்படுகின்றன. இந்தக் கரும் புள்ளிகள், 'மெலோனாமா’ என்று சொல்லப்படும் புற்றுநோயாகக் கூட இருக்கலாம். ஆகையால், கூடுதல் கவனம் தேவை.

அதேபோல், முடி நரைப்பது என்பது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடிய சாதாரண நிகழ்ச்சிதான். ஆனால், சிலருக்கு 20 வயதிலேயே முடிகள் நரைக்கத் தொடங்கிவிடும். முடி நரைத்தல் என்பது மரபு சார்ந்த விஷயம். நரைத்தலுக்கு அடுத்து, வயதாவதால் வரக்கூடிய இன்னொரு பிரச்னை, தலையில் ஏற்படும் 'சொட்டை’. தலையில் அதிக அளவில் முடி உதிர்வதாலும், எண்ணிக்கை குறைவதாலும் ஏற்படும் வழுக்கையும் மிகவும் சாதாரண ஒன்றுதான்.அடுத்து, தோலில் இருக்கும் நரம்புகளும் சோர்வடைந்து விடுவதால், தோலின் தொடு உணர்ச்சிகளும் குறைந்து விடுகின்றன. தோலின் வயதான தன்மையினால், சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய புற்று நோய்களும், தோலில் ஏற்படக்கூடிய சிதைவுகளும் அதிகமாக இருக்கும்.

அகவே, வயதானவர்கள் கூடுமானவரை வெய்யிலில் அதிகமாகச் செல்லாமல் இருப்பது நல்லது. வயதான தோற்றமும், வெள்ளை முடிகளும் ஒரு மனினுக்குச் சமுதாயத்தில் ஒரு கௌரவத்தை உருவாக்கித் தருகின்றன. மேலும், அவர்களுக்கு அனுபவசாலிகள் என்ற ஒரு நிலையையும் அவை ஏற்படுத்தித் தருகின்றன.
ஆனால், வயதானாவர்களோ, எப்போதும் தங்களை இளமையானவர்களாக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதில் விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதற்காக, தங்களுடைய வெள்ளை முடிகளில் சாயங்கள் பூசிக் கொள்கிறார்கள். அதேபோல், தோல் சுருக்கத்தை மறைக்க பலவித களிம்புகளையும் தடவிக் கொள்கிறார்கள்.

ஆக, வயதானவர்களுடைய தோல், மிக அதிகமாகஅளவில் நோய்களுக்கும் சிதைவுகளுக்கும் ஆளாகிறது. தோலில் ஏற்படும் சுருக்கங்கள், தொய்வுகள், வறண்டுபோதல், உடலில் பல இடங்களில் அரிப்பு ஏற்படுதல், மிக விரைவாக கரப்பான் (ஏஸ்டாட்டிக் எக்ஸிமா) வருதல், கொப்புளங்கள் தோன்றுவது, மிக எளிதாக தோல் அடிபட்டு புண்ணாவது போன்றவை அதிக அளவில் காணப்படும்.வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய அரிப்பு என்பது, தோல் வறண்டு போவதால் போவதால் வரக்கூடிய ஒரு பிரச்னை. அதற்கு, கண்ட கண்ட மருந்துகளை வாங்கிப் பூசாமல், தேங்காய் எண்ணெய் அல்லது வாசிலின் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தோலின் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளக்கூடிய 'எமோலியன்ஸ்’ அடங்கிய களிம்புகளையும் பூசிக் கொள்ளலாம்.

கண்டது, கேட்டது, படித்தது என்று தாங்களாகவே ஏதோ ஒரு மருந்தை வாங்கியோ அல்லது கை வைத்தியமாக விட்டிலேயே மருந்து 'தயாரித்து’ பூசிக் கொண்டால் ஆபத்துதான். ஏனெனில், வயதானவர்களுடைய தோல், எளிதாக 'அலர்ஜிக் டெர்மடைடிஸ்’ என்று சொல்லப்படும் ஒவ்வாமையினால் ஏற்படக்கூடிய கரப்பான் என்ற தோல் நோய் தாக்குதலுக்கு ஆளாகும். இந்த கரப்பான் பாதிப்பு, உடல் முழுவதும் பரவிவிடுகின்ற அபாயம் நிறைந்தது.

எல்லாவற்றையும்விட மிக முக்கியமான விஷயம், தோலுக்கு வயதாவது மிகவும் சாதாரணமான ஒன்று. நடைமுறையில் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. எப்படி எல்லா உறுப்புகளும், நாளாக நாளாக வயதுக்கு ஏற்றால் போல் தங்களுடைய செல்பாட்டில் ஒரு தொய்வு நிலையை எட்டுகிந்றனவோ, அதுபோலவே தோலும் தனது செயல்பாட்டில் ஒரு தொய்வு நிலையைச் சந்திக்கிறது. இந்த மாற்றத்தை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி Empty Re: முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி

Post by நண்பன் Tue 21 Dec 2010 - 13:58

விரிவான கட்டுரைக்கு :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி Empty Re: முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி

Post by ஹனி Tue 21 Dec 2010 - 16:43

:”@: :”@: ://:-:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி Empty Re: முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum