சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 2:30 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 2:11 pm

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 10:19 am

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 12:23 am

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 12:10 am

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 12:08 am

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 12:04 am

» அட...ஆமால்ல?
by rammalar Sat May 11, 2024 8:02 pm

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat May 11, 2024 7:50 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat May 11, 2024 2:27 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat May 11, 2024 2:19 pm

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat May 11, 2024 11:23 am

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat May 11, 2024 11:12 am

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat May 11, 2024 11:06 am

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat May 11, 2024 10:39 am

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat May 11, 2024 10:32 am

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri May 10, 2024 7:22 pm

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri May 10, 2024 8:39 am

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri May 10, 2024 8:36 am

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am

» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி? Khan11

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?

4 posters

Go down

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி? Empty பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?

Post by நண்பன் Sat Jul 09, 2011 6:29 pm

இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம்களுக்கான இந்தியத் திருமண மணமுறிவுச்சட்டங்கள் ஒரு பார்வை

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?

இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திருமணம். திருமணம் என்ற சடங்கு நடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் உடன் வாழ்வது தேவையில்லாதது.

‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமே’ என்பதை புரிந்து கொண்டால், ‘மணவிலக்கு’ என்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது.

இரு மனங்கள் இணையும் திருமணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்திற்கு முன்னரே பிரிவது அனைவருக்கும் நலம் பயக்கும். ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்திற்கு முன் மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.

பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுப்பவர்களுக்கு சட்டம் வழிகாட்டுகிறது.

சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கான மணமுறிவு உரிமைகளை விளக்குகின்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி? Empty Re: பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?

Post by நண்பன் Sat Jul 09, 2011 6:30 pm

இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு

சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி
1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,

2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்,

3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு கைவிட்டுச் செல்லுதல்,

4. தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,

5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்படுதல்,

6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை தெரியாதிருத்தல்,

7. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி(Sodomy), விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) கொண்ட குற்றம் செய்தல்,

8. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை பெறுதல்

ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு கேட்டு மனுச் செய்யலாம்.

இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ/மனைவியோ இல்லறத்திலிருந்து விலகி துறவறம் மேற்கொண்டாலோ, இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலோ அதைக்காரணமாக கூறி மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மணவிலக்கு செய்ய வேண்டுமெனில், திருமணத்திற்கு பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி? Empty Re: பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?

Post by நண்பன் Sat Jul 09, 2011 6:30 pm

கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி திருமணம் செய்த கணவன்

1. திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத்தொழிலை விட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண்டாலோ,

2. உடலுறவு கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவு முறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,

3. மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன்மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),

4. வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறான புணர்வு, விலங்குகளுடன் புணர்தல்,

5. நெறிகெட்ட வாழ்க்கை காரணமாக பெண்ணை கொடுமை செய்தாலோ,

6. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டாலோ,

7. ஆண்மையற்று இருந்தாலோ மனைவி மணவிலக்கு கோரி உரிய நீதிமன்றத்தில் மணவிலக்கு கோரலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி? Empty Re: பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?

Post by நண்பன் Sat Jul 09, 2011 6:31 pm

முஸ்லிம்களுக்கான மணவிலக்கு சட்டம்

இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கான சட்டமும் மணவிலக்கு குறித்த அம்சங்களை விவரிக்கிறது.
மனைவிக்கு காரணத்தை தெரிவிக்காமலே "தலாக்" எனப்படும் மணமுறிவை அறிவிக்க முஸ்லிம் ஆண் உரிமை படைத்தவனாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலே கூட தலாக்கை செயல்படுத்தும் திறன் முஸ்லிம் ஆண்களுக்கு இருக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிடுவதில்லை.

இந்தியாவில் உள்ள முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர்கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி

நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய்விட்டால்,

மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத் தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத் தவறினால்,

கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிகமாகவோ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக் கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால்,

கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லாமலிருந்தால்

பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.

இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.

இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.

எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பமின்றி நீடிக்கவேண்டிய தேவையில்லை. அதே சமயம் முடிவெடுப்பதற்கு முன் உங்கள் எதிர்காலம் குறித்தும், குழந்தைகள் (இருந்தால்) எதிர்காலம் குறித்தும் ஆழச் சிந்தித்துவிட்டு...

நன்றி நீடூர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி? Empty Re: பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?

Post by யாதுமானவள் Sat Jul 09, 2011 10:38 pm

நல்ல பதிவு!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி? Empty Re: பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?

Post by ஹம்னா Sun Jul 10, 2011 12:33 am

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி? 480414 பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி? 480414


பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி? Empty Re: பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?

Post by முனாஸ் சுலைமான் Sun Jul 10, 2011 12:35 am

://:-: ://:-: :”@: இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி? Empty Re: பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum