சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

எதிரி ....  Khan11

எதிரி ....

Go down

எதிரி ....  Empty எதிரி ....

Post by Atchaya Sun 10 Jul 2011 - 6:14

தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி!
தமிழகத் தேர்தலும், தமிழர்களின் பழக்க தோசங்களும்-

ஆலமரத்தடி அரட்டை!

’’நேரம் ஆறு மணியாகப் போகிறது, எங்கே நம்மடை அரட்டைக் குறூப் மெம்பர்களை இன்னமும் காணோமே, எனத் தனக்குள் யோசித்தபடி, பாக்கெட்டினுள் இருந்த பக்கோடாவை மெல்லத் தொடங்கினார் மணியண்ணை.


முதலில் இளையபிள்ளை ஆச்சி, 'நாதஸ்வரம் பிப்பீபி......பிப்பீபி..........
மேளச் சத்தம் டும்டும்.....டும்டும்........எனப் பாடியவாறு, ஆல மரத்தடியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறா, ஆல மரத்தடியில் காத்திருந்த மணியத்தாரைக் கண்டதும், பாட்டை நைசாக லோ(Law) பிச்சிலில் குறைத்து முணு முணுத்துக் கொண்டு
’’என்ன மணியண்ணை, இண்டைக்கு கொஞ்சம் ஏழியா(Early) வந்திட்டீங்க..... ஆல மரத்தடிக்கு, ஏதும் ஸ்பெசல் இருக்கோ? எனக் கேட்கத் தொடங்கிறா......

மணியண்ணையும் பதிலுக்கு, இண்டைக்கு ஸ்பெசல் ஒன்றும் இல்லை, நீ லேட்டா வந்ததாலை, நான் ஏழியா வந்திட்டன் என ஒரு நக்கலைப் போட்டு விட்டு ’’அது சரி இளையபிள்ளை , நீங்கள் என்ன பாட்டுப் பாடிக் கொண்டு வந்தனீங்கள்?... எனக் கேட்கிறார்.

’’அதுவோ, இப்ப புதுசா றிலீஸ் ஆகி இருக்கிற ”லத்திகா’’ படத்திலை வாற குத்துப் பாட்டு, அதைத் தான் பாடிக் கொண்டு வாறன்... எனச் சமயோசிதமாகப் பேசித் தப்பிக்க நினைக்கிறா.

’’என்ன கிழவி, நீ, போய் பவர் ஸ்டாரோடை படத்தைப் பார்த்திட்டு, அதிலை வாற பாட்டைப் பாடுறாய், எனக்கு என்ன காதிலை பூவே சுத்தப் பார்க்கிறாய்? பழநிக்கே பஞ்சாமிர்தம் கொடுக்கிற கதையா எல்லோ உன்ரை கதை இருக்குது. நாதஸ்வரம் சீரியலிலை வாற பாட்டைப் பாடிப் போட்டு, இடியப்பத்துக்கு சொதி ஊத்தின மாதிரி வாய் குழையாமல் ஒரு பொய் வேறை பேசுறாய்
காலம் கெட்டுப் போச்சு...... என்று மணியத்தார் கூறி முடிக்கவும், நிரூபனும், குணத்தாரும் இரு வேறு திசைகளுக்கூடாக அரட்டை நடக்கும் வைற் ஹவுஸினை நோக்கி Sorry ஆலமரத்தினை நோக்கி வருகிறார்கள்.

ஏன் பொடியங்கள் லேட்? என்ன பிரச்சினை? என்று மணியத்தார், மிரட்டலுடனும், புன்னகையுடனும் கேட்கிறார்.

’’இல்லை மணியண்ணை, வாற வழியிலை, (On the way to the conference Hall) ஒரு பெரிய லேடிஸ் கிளப் மீட்டிங், மூன்றாவது தெருவிலை இருக்கிற தண்ணீர்ப் பம்படி தெரியுமே, அதிலை நடந்தது, அதனைத் தான் மறைந்திருந்து, துப்புத் துலக்கினம், ஸோ.. அது தான் லேட் என்று குணத்தான் கூறி முடிக்கவும், நீருபன் வில்லுப் பாட்டுக்கு ஆமாம் போடுறாள் மாதிரி, ஓமோம் மணியண்ணை என்று கூறி முடித்தான்.

’’பாரன் , நாசமாப் போன பயலுகளின்ரை பழக்கத்தை, இந்த வயசிலை பொம்பிளையள் மீட்டிங் வைச்சு, கதைக்கிறதை ஒட்டுக் கேட்குதுகளாம்... என்று மணியண்ணை பேசி முடிக்கவும், இளையபிள்ளை ஆச்சி திருடிப் பிடிபட்ட திருடன் போல முழுசிக் கொண்டு, பயந்த சுபாவத்துடன் நிற்கிறா.

’’என்னடா, தம்பியவை உந்த டேடீஸ் கிளப் மீட்டிங்கிலை நடந்தது? என்னடா பேசினவையள் பொம்பிளையள்? இது மணியத்தார்.

’’மணியண்ணை, கூட்டத்துக்கு தலைவி, உங்களுக்கு நன்கு பரிச்சயமான ஆள் தான்.
அதுவும் கொடும்பாவி எரிக்கப் போகினமாம். இது குணத்தான்.

’’எனக்கு நன்கு பரிச்சயமான ஆளோ, என் கிட்டப் போயி பின் நவீனத்துவ வித்தை காட்டமால் விடயத்தை விளக்கமாகச் சொல்லடா குணத்தான்.. கொடும்பாவி எரிக்கிறதென்றால் நல்ல விசயம் தானே?


’’மணியண்ணை, டீவியிலை வாற, நாதஸ்வரம் சீரியல் தெரியுமோ? அதிலை வாற வில்லி மாமியார் இருக்கிறா தானே, அவா சீரியல் கதாநாயகியை(மருமகளை) பயங்கரமா கொடுமைப்படுத்துறாவாம், அதனைக் கண்டித்து, ’’சிலோன் நாதஸ்வர சீரியல் மகளிர் அணி’’ சார்பாக கொடும்பாவி எரிக்கிறதா பெரிய ப்ளான் வேறை பண்ணியிருக்காங்க நம்மடை இளைய பிள்ளையாச்சி தலமையிலான லேடீஸ் கிளப் மெம்பர்ஸ் என்று நிரூபன் கூறி முடித்தான்.

’’இளைய பிள்ளை, உனக்கு என்ன லூசே.. நாட்டிலை நடக்கிற விசயங்கள் தெரியாமல் நீ இந்தக் கொடும்பாவி எரிப்பு என்று போய், உன்ரை நேரத்தையும் வீணடிக்கிறதோடு, ஏழரையைத் தூக்கி ஏரோப்பிளேனாச் சுமக்கிற ஐடியாவோ என்று மணியண்ணை பேசினார்....


’’நாடு இருக்கிற நிலமையிலை. உங்களுக்கு நாட்டு நடப்பை பற்றிக் கதைக்க(பேச) என்ன இருக்கிறது?
தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி, தமிழகத்திலை தேர்தல் என்றால் ஒராளை மாறி ஒராள் தனி மனித தாக்குதல் செய்கிறது, இலவசமா இலவசத்தையே கொடுக்கிறது, தான் போற நேரத்திலையும் தன்னோடை கிறாண்ட் சன் ஐ (Grand Son) மந்திரியாக்கிறது தொடர்பாக கலந்தாலோசிக்கிறது.

‘’எங்கடை நாட்டு அரசியலைப் பற்றிப் பேசினால் எரிமலையைப் பத்த வைச்சிட்டாள் கிழவி என்று வெள்ளை வான் வேறை வரும்.......இப்ப சிக்கலைத் தீர்க்க பெண்களுக்கு சீரியல் இருக்குத் தானே? கவலையை மறக்க கஸ்தூரி இருக்கிறா. அது தான் சீரியலோடை ஐக்கியமாகிட்டம் பெண்கள் எல்லோரும்.........என இளைய பிள்ளை ஆச்சி பேசி முடித்தா.....


தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி, ஒருத்தன் கட்சி ஆரம்பிச்சிட்டால் அவனுக்குப் போட்டியா பக்கத்து வீட்டுக்காரன் எதிர்க்கட்சி தொடங்கிறது, ஒருத்தன் போராட்டம் தொடங்கினால் அவனுக்கு எதிராக இன்னொரு போராட்ட அமைப்பைத் தொடங்கிறது. ஒருத்தன் ஒரு பொண்ணைக் கலியாணம் கட்டினால், பக்கத்து வீட்டுக்காரனும் பாய்ஞ்சடிச்சுக் கொண்டு போய் ஒற்றைக் காலிலை நின்று கலியாணம் கட்டுறது, இப்புடிப் பல விசயங்களை எங்கள் தமிழ்ப் பெரும் மக்கள் தயங்காமல் போட்டி போட்டுத் தானே செய்கிறார்கள்............ தமிழனாலை தானே தமிழன் அழிஞ்சு கொண்டிருக்கிறான். தமிழனால் தானே தமிழனுக்கே அழிவு..........இது குணத்தான்.

போட்டி போட்டுச் செய்தால் பரவாயில்லை, ஆனால் எங்களின் தமிழர்கள் பொறாமையோடு, எரிச்சலோடு, நான் முந்தியோ, நீ முந்தியோ என்று காரியங்களைச் செய்யப் போய்க் கடைசியிலை ஓட்டைச் சிரட்டையினுள் தண்ணியினை விட்டெல்லே நீந்திச் சாகிறாங்கள்.........என்று மணியண்ணை கூறி முடித்தார்.

ஓட்டைச் சிரட்டையினுள் தண்ணி ஊத்தி நீந்திச் சாவதிலும் பார்க்க எங்கடை தமிழர்கள் உள்ளங்கையினுள் உப்புத் தண்ணியை ஊத்திப் போட்டு, கடல் என்று நினைத்துக் கொண்டு விழுந்து செத்தால் நன்றாக இருக்கும்.........இது நிரூபன்.

தமிழரைப் பற்றிச் சொல்லத் தான் ஒரு மேட்டர் நினைவுக்கு வருகுது என இளைய பிள்ளையாச்சி தனது அலப்பறையினை நீட்டத் தொடங்கினா.
,
மூன்று தமிழர்கள், நடுக் கடலில் கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கிறாங்கள். திடீரென்று எழுந்த பாரிய அலைகள் கப்பலை உடைத்து விடுகிறது, மூன்று பேரும் கப்பலின் ஒரு பக்கத்தினைப் பிடித்துக் கொண்டு, நடுக் கடலில் தத்தளித்தவாறு, உதவியேதும் இல்லாமல் அவலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உலகமெல்லாம் உள்ள கடவுளர் எல்லோரையும் கூப்பிட்டு அழுகிறார்கள். இரஞ்சி மன்றாடிக் காப்பாற்றும் படி கேட்கிறார்கள். திடீரெனப் பார்த்தா; இம் மூவரின் முன்னுக்கும் ஒரு அழகிய தேவதை ஒளிப் பிளம்புடன் தோன்றியது,
இம் மூவரையும் தூக்கி ஒரு தீவில் கொண்டு போய் இறக்கி விட்டது.

இவர்களைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்த தேவதை, ஓ நீங்கள் தமிழரா! எனச் சிரித்துக் கொண்டது, இதோ களைப்பு நீங்கச் சாப்பிடுங்கள் என உணவும் கொடுத்தது, பின்னர் அத் தேவதை சொன்னது, உங்களுக்கு மூன்று வரங்கள் நான் தருகிறேன், கேளுங்கள் என்றது,

என்ன வரம் கேட்டாளும், தருவீங்களா என்றார்கள் அம் மூன்று தமிழர்களும்,

ஆம் நிச்சயம் தருவேன் என்று சொன்னது தேவதை.

முதலாவது தமிழன் கேட்டான், தேவதையே, என் நீண்ட நாள் ஆசை, நான் உலகிலே மிகப் பெரிய கோடிஸ்வரனாகி அமெரிக்காவிலை இருக்க வேண்டும். இதனை நிறை வேற்றி வைப்பாயா என்றான்.

ஆமாம், குழந்தாய், உனது ஆசைப் படியே இது நடக்கட்டு, இதோ உன்னை நான் இப்போதே பெரிய மாளிகை வீட்டில் பணக்காரனாக்கி அமெரிக்காவில் இருக்க விடுகிறேன் என்று கூறித் தன் மந்திர சக்தியால் முதலாவது தமிழனைத் தூக்கி, அமெரிக்காவில் விட்டது,

இப்போது இரண்டாவது, நபரின் முறை, முதலாவது தமிழன் அமெரிக்காவிற்குப் போனால், நான் மட்டும் இங்கிட்டு இருந்து என்ன பண்ணுறது? யோசித்தான்.

தேவதையே, எனக்கு முதலாவது தமிழனை விட அதிக வசதிகளுடன், நிறையப் பொன் பொருட்களுடன், உலகின் முதற் கோடீஸ்வரன் என்ற நாமத்துடன் இங்கிலாந்தில்(United kingdom) மாளிகை வீடு வேண்டும் என்று கூறினான்.
அப்படியே ஆகட்டும் எனத் தேவதை பதில் சொன்னது.

இப்போது மூன்றாவது தமிழனின் முறை. நன்றாக யோசித்தான். இந்த ரெண்டு தமிழரும் என்னை விட முன்னேறி நல்லா இருக்கவோ.......இது நடக்கவே நடக்க கூடாது..

தேவதையே, இப்போது எனது முறை தானே!

ஆமாம் குழந்தாய், நான் என்ன வரம் கேட்டாலும் தருவாயா?
ஆமாம் குழந்தாய், நிச்சயமாக?
சந்தேகமே இல்லை, நிச்சயமாக வரம் தருவேன் என்றது தேவதை.

அப்படியாயின் அந்த ரெண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து எனக்கு முன்னாலை விடு என்றான் மூன்றாவது தமிழன்......

நீங்களெல்லாம் உருப்படவே மாட்டீங்கடா, உங்களைப் போயி நடுக்கடலிலை காப்பாற்றினேன் பாரு.. என்னையைச் செருப்பாலை அடிக்க வேணும் எனச் சொல்லி விட்டு தேவதை மூன்று பேரையும் கடலினுள் தள்ளிய பின் மறைந்து விட்டது.............

இப்படி இளைய பிள்ளை ஆச்சி சொல்லி முடிக், எல்லோரும்.......கல கலவெனச் சிரிக்கத் தொடங்கினார்கள்.

தூரத்தே நாய் குரைக்கும் சத்தம் கேட்கிறது என்று நீருபன் சொன்னான்...
சொன்னது தான் தாமதம்............ஆலமரத்தடியே ஆளரவமற்ற இடமாய் அடுத்த விநாடியே மாறியது.


பிற் குறிப்பு: ஈழத் தமிழ் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது, புரியவில்லை எனும் பல உறவுகளின் வேண்டுகோளுக்கு அமைவாக என் பதிவினை முடிந்த வரை அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதியிருக்கிறேன். ஒரு சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளையும் சேர்த்திருக்கிறேன். பதிவில் இன்னும் மாற்றங்கள் செய்ய வேண்டும், இப்போதும் தமிழ் புரியவில்லை, கடினமாக இருக்கிறது என்றால் சொல்லுங்கள். கொஞ்சம் கூடிய கவனம் எடுத்து உங்களுக்காய் இன்னும் பல

நன்றி...நாற்று....

தமிழக அரசியலை இந்திய அரசியலை ஈழ தமிழர் பிட்டு பிட்டு வைக்கிறார்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum