சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு! Khan11

சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு!

5 posters

Go down

சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு! Empty சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு!

Post by யாதுமானவள் Fri 15 Jul 2011 - 7:24

சுமார் ஐந்தரை ஆண்டுகள் அமைதியின் சொரூபம். பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆக்ரோஷத் தாண்டவம். பொதுவில் சூரியனில் இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இப்போது சூரியன் ஆக்ரோஷத்தைக் காட்டவேண்டிய காலம். ஆனால், அமைதியாக இருக்கிறது. இது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர்.

கண்ணைக் கூச வைக்கிற அளவுக்கு மிகப் பிரகாசமான ஒளித்தட்டாக சூரியன் காட்சி அளிக்கிறது. ஆனாலும் குழந்தைகளுக்கு முகத்தில் வைக்கும் திருஷ்டிப் பொட்டுபோல, சூரியனின் மேற்புறத்தில் அவ்வப்போது கரும்புள்ளிகள் தென்படுகின்றன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம்.

இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ 1612-ம் ஆண்டில் தமது சிறிய தொலைநோக்கி மூலம் சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்து வரைபடமே தயாரித்தார். கட்டுரைகளையும் எழுதினார். கிட்டத்தட்ட அப்போதிலிருந்தே சூரியனின் ஒளித்தட்டு தொடர்ந்து ஆராயப்பட்டு வந்துள்ளது.

சூரியனில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது. ஒருசமயம் கரும்புள்ளிகளே இராது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒருகட்டத்தில் அது உச்சத்தை எட்டும். பின்னர் அதேபோல மறைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் கரும்புள்ளிகளே இராது. பிறகு மறுபடி அவை தோன்ற ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் ஒரு காலக்கணக்கு உள்ளது.

அதாவது கரும்புள்ளிகள் தெரிய ஆரம்பித்து உச்சத்தை எட்டுவதற்கு சுமார் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். பிறகு அவை படிப்படியாகக் குறைந்து புள்ளிகள் மறைவதற்கு அதேபோல ஐந்தரை ஆண்டுகள் பிடிக்கும்.

ஆக மொத்தம், 11 ஆண்டுகள் ஆகும். இது 11 ஆண்டு கரும்புள்ளிக் காலச்சுழற்சி என்று குறிப்பிடப்படுகிறது. சில சமயங்களில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 200 வரை இருக்கலாம். உதாரணமாக, 1954-ம் ஆண்டில் 201 கரும்புள்ளிகள் தென்பட்டன.

கரும்புள்ளிகள் முதலில் சூரியனின் நடுக்கோட்டுக்கு மேலேயும் கீழேயும்தான் தோன்றுகின்றன. பின்னர் சூரியனின் நடுப்பகுதியிலும் இவை தோன்றுகின்றன. பெயர்தான் கரும்புள்ளியே தவிர, கரும்புள்ளி ஒவ்வொன்றும் பிரம்மாண்டமானது. சிறிய கரும்புள்ளிகூட ஒரு பூமியை உள்ளே இறக்கி விடலாம் என்று சொல்லத்தக்க அளவில் மிகப்பெரியது. உண்மையில் சூரியனின் கரும்புள்ளிகள் கருமையானவை அல்ல. சூரியனின் மேற்புறத்தில் மற்ற இடங்களைவிட வெப்பம் குறைவான பகுதிகளே நமக்குக் கரும்புள்ளிகளாகத் தெரிகின்றன.

சூரியனில் மிக நீண்ட காலம் கரும்புள்ளிகளே தோன்றாமல் போகுமா? கடந்த காலத்தில் நமக்குத் தெரிந்து குறைந்தது நான்கு தடவை அவ்விதம் ஏற்பட்டுள்ளது. கி.பி. 1645 முதல் 1715-ம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்தவரான எட்வர்ட் மாண்டர் என்ற விஞ்ஞானியைக் கௌரவிக்கும் வகையில் இக் காலகட்டத்துக்கு "மாண்டர் மினிமம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கி.பி. 1280 - 1350 காலகட்டத்திலும் கி.பி.1460 - 1550 காலகட்டத்திலும் இவ்வித நிலைமை இருந்தது. மாண்டர் மினிமத்துக்குப் பிறகு கி.பி. 1790 முதல் 1830-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலும் இதேபோல சூரியனில் அனேகமாகக் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.

கரும்புள்ளிகள் நிறைய இருந்தால் என்ன அல்லது இல்லாவிட்டால் என்ன என்று கேட்கலாம். சூரியனில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுமானால் அது பூமியில் நம்மைப் பல வகைகளிலும் பாதிக்கிறது.

சூரியனிலிருந்து இயல்பாக ஆற்றல் மிக்க துகள்கள் (இதைச் சூரியக்காற்று என்றும் சொல்வதுண்டு) வெளிப்பட்டு வருகின்றன. கரும்புள்ளிகள் அதிகமாகத் தோன்றும் காலகட்டத்தில் சூரியனிலிருந்து இவ்விதத் துகள்கள் அதிக அளவில் அதிக வேகத்தில் வெளிப்படுகின்றன.

இவை பூமியை அதாவது மக்களைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது. சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்கும்போது சூரியனில் கடும் சீற்றம் ஏற்படுகிறது. தவிர, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்படுகிறது.

இந்த உருண்டை பூமியின் காந்த மண்டலத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதை விண்வெளியிலிருந்து பயங்கர மின்னல் தாக்குவதற்கு ஒப்பானது என்றும் கூறலாம்.

இதன் விளைவாக, நீண்ட தூரம் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் கம்பிகளில் கூடுதல் மின்சாரம் தோன்றி மின்சார டிரான்ஸ்பார்மர்கள் வெடிக்கும். இதனால் பெரிய பிராந்தியத்தில் மின்சப்ளை பாதிக்கப்படும்.

1989-ம் ஆண்டில் கனடாவின் கிழக்குப் பகுதியில் இவ்விதம் மின்சப்ளை பாதிக்கப்பட்டு 6 கோடி மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். வடகிழக்கு அமெரிக்காவிலும் மற்றும் சுவீடன் நாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இப்போது அது மாதிரி சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் முகில் தாக்குமானால் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு கோடானுகோடி மக்கள் பாதிக்கப்படுவர். மின்சார சாதனங்களையும் இயந்திரங்களையும் சீர்படுத்த பல ஆண்டுகள் பிடிக்கும். தவிர, சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான ஆற்றல் முகில், தொலைபேசித் தொடர்பு உள்பட தகவல் தொடர்பு சாதனங்களையும் பாதிக்கும். தரைக்கு மேலே அமைந்த எண்ணெய்க் குழாய்களையும் இது பாதிக்கும்.

பூமியைச் சுற்றுகிற செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை வேகம் பாதிக்கப்பட்டு அதனால் அவற்றின் ஆயுள் குறையும்.

பூமியைச் சுற்றுகிற விண்வெளி நிலையத்திலிருந்து யாரேனும் வெளியே வந்து அந்தரத்தில் பணியாற்ற நேர்ந்தால் கடும் கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். பூமியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இவ்விதம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

சூரியனில் கரும்புள்ளிகள் அனேகமாக இல்லாத காலம் முடிந்து புதிய 11 ஆண்டுகால சுழற்சி கடந்த 2008 டிசம்பரில் தொடங்கியது. அப்போதே அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸô 2011 வாக்கில் சூரியனின் ஒளித்தட்டில் 150 முதல் 200 கரும்புள்ளிகள் தென்படலாம் என்று கூறியது. ஆனால், அப்படி நிகழவில்லை.
2011-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி தொடர்ந்து 820 நாள்களுக்கு சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.

நியாயமாகப் பார்த்தால் 2012-ம் ஆண்டில் சூரியனின் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்ட வேண்டும். ஆனால், அப்படி நிகழும் என்று தோன்றவில்லை. சூரியனின் வழக்கமான போக்கு மாறிவிட்டது போலத் தோன்றுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் 2012-ம் ஆண்டு வாக்கில் சூரியனில் அதிகபட்சமாகக் கரும்புள்ளிகள் தோன்றும் என்றும், அதன் விளைவாக சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்படும் என்றும், அதையடுத்து பூமிக்கே ஆபத்து ஏற்படும் என்ற கற்பனை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட் தயாரிப்பாக ஓர் ஆங்கிலப் படம் வெளியானது. இந்தியாவிலும் அது திரையிடப்பட்டது.

உள்ளபடி இப்போது சூரியனில் கரும்புள்ளிகள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆகவே, சூரியனில் சீற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 2010 ஆகஸ்டிலும் 2011 பிப்ரவரியிலும் சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வெளிப்பட்டு பூமியை நோக்கி வந்தன என்றாலும் பொதுவில் சூரியன் அமைதியாக இருக்கிறது.

சூரியனின் கரும்புள்ளிகள் விஷயத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காணப்பட்டு வந்த 11 ஆண்டு காலச் சுழற்சி மறைந்து முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் நிகழ்ந்ததுபோல தொடர்ந்து நீண்ட காலம் சூரியன் அமைதியாக இருந்து வருமோ என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கியுள்ளனர்.

சூரியனில் அப்படியான அமைதி நிலை ஏற்பட்டால் பூமியில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பு ஒன்று உண்டு. அதாவது, பூமியில் குறிப்பாக வட பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை குறையும். முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் ஐரோப்பாவின் வட பகுதியில் அமைந்த நாடுகளில் பல பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டன.

அதுபோல இப்போது பொதுவில் பூமியில் வெப்ப நிலை குறையலாம். ஆனாலும் இது காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் பூமியின் சராசரி வெப்ப நிலை அதிகரித்து வருகிற பிரச்னையை சரிக்கட்டி விடாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்பட்டு, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்பட்டு, அது பூமியை நோக்கி வந்தால் பூமியில் தகவல் தொடர்பு உள்பட பலவும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறினோம்.

ஆகவே, இவை பற்றி முன்கூட்டி அறிந்து கொள்வதற்காக சூரியனை ஆராயும் பொருட்டு சில ஆளில்லா செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று "ஏசிஇ' என்பதாகும். இது தொடர்ந்து சூரியனை ஆராய்ந்து வருகிறது. சூரியனில் நிகழும் முக்கிய மாற்றங்களை இது ஆராய்ந்து தகவல் அனுப்புகிறது. ஆகவே, நாம் உஷாராகி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போதிய அவகாசம் கிடைக்கிறது.

சூரியனில் நிகழும் மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது பற்றி நீண்ட நாள்களாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பல கொள்கைகளும் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் நம்மால் இன்னும் சூரியனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆகவேதான் சூரியனில் கரும்புள்ளி இல்லாத காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நம்மால் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சூரியனின் கரும்புள்ளிகளுக்கும் பூமியின் பருவ நிலைமைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உள்ளது.

விஞ்ஞானிகள் விசேஷ கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை ஆராய்கிறார்கள். ஆகவே, சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளனவா என்று கண்டறிய ஒருபோதும் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கலாகாது. அவ்விதம் செய்தால் நிச்சயம் கண் பார்வை போய்விடும்.

மார் ஐந்தரை ஆண்டுகள் அமைதியின் சொரூபம். பின்னர் ஐந்தரை ஆண்டுகள் ஆக்ரோஷத் தாண்டவம். பொதுவில் சூரியனில் இதுதான் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இப்போது சூரியன் ஆக்ரோஷத்தைக் காட்டவேண்டிய காலம். ஆனால், அமைதியாக இருக்கிறது. இது ஏன் என்பதுதான் விளங்கவில்லை. விஞ்ஞானிகள் திகைத்து நிற்கின்றனர்.

கண்ணைக் கூச வைக்கிற அளவுக்கு மிகப் பிரகாசமான ஒளித்தட்டாக சூரியன் காட்சி அளிக்கிறது. ஆனாலும் குழந்தைகளுக்கு முகத்தில் வைக்கும் திருஷ்டிப் பொட்டுபோல, சூரியனின் மேற்புறத்தில் அவ்வப்போது கரும்புள்ளிகள் தென்படுகின்றன. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட விஷயம்.

இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ 1612-ம் ஆண்டில் தமது சிறிய தொலைநோக்கி மூலம் சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்து வரைபடமே தயாரித்தார். கட்டுரைகளையும் எழுதினார். கிட்டத்தட்ட அப்போதிலிருந்தே சூரியனின் ஒளித்தட்டு தொடர்ந்து ஆராயப்பட்டு வந்துள்ளது.

சூரியனில் கரும்புள்ளிகள் நிரந்தரமாக இருப்பது கிடையாது. ஒருசமயம் கரும்புள்ளிகளே இராது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒருகட்டத்தில் அது உச்சத்தை எட்டும். பின்னர் அதேபோல மறைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் கரும்புள்ளிகளே இராது. பிறகு மறுபடி அவை தோன்ற ஆரம்பிக்கும். இதற்கெல்லாம் ஒரு காலக்கணக்கு உள்ளது.

அதாவது கரும்புள்ளிகள் தெரிய ஆரம்பித்து உச்சத்தை எட்டுவதற்கு சுமார் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். பிறகு அவை படிப்படியாகக் குறைந்து புள்ளிகள் மறைவதற்கு அதேபோல ஐந்தரை ஆண்டுகள் பிடிக்கும்.

ஆக மொத்தம், 11 ஆண்டுகள் ஆகும். இது 11 ஆண்டு கரும்புள்ளிக் காலச்சுழற்சி என்று குறிப்பிடப்படுகிறது. சில சமயங்களில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 200 வரை இருக்கலாம். உதாரணமாக, 1954-ம் ஆண்டில் 201 கரும்புள்ளிகள் தென்பட்டன.

கரும்புள்ளிகள் முதலில் சூரியனின் நடுக்கோட்டுக்கு மேலேயும் கீழேயும்தான் தோன்றுகின்றன. பின்னர் சூரியனின் நடுப்பகுதியிலும் இவை தோன்றுகின்றன. பெயர்தான் கரும்புள்ளியே தவிர, கரும்புள்ளி ஒவ்வொன்றும் பிரம்மாண்டமானது. சிறிய கரும்புள்ளிகூட ஒரு பூமியை உள்ளே இறக்கி விடலாம் என்று சொல்லத்தக்க அளவில் மிகப்பெரியது. உண்மையில் சூரியனின் கரும்புள்ளிகள் கருமையானவை அல்ல. சூரியனின் மேற்புறத்தில் மற்ற இடங்களைவிட வெப்பம் குறைவான பகுதிகளே நமக்குக் கரும்புள்ளிகளாகத் தெரிகின்றன.

சூரியனில் மிக நீண்ட காலம் கரும்புள்ளிகளே தோன்றாமல் போகுமா? கடந்த காலத்தில் நமக்குத் தெரிந்து குறைந்தது நான்கு தடவை அவ்விதம் ஏற்பட்டுள்ளது. கி.பி. 1645 முதல் 1715-ம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை. சூரியனின் கரும்புள்ளிகளை ஆராய்ந்தவரான எட்வர்ட் மாண்டர் என்ற விஞ்ஞானியைக் கௌரவிக்கும் வகையில் இக் காலகட்டத்துக்கு "மாண்டர் மினிமம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கி.பி. 1280 - 1350 காலகட்டத்திலும் கி.பி.1460 - 1550 காலகட்டத்திலும் இவ்வித நிலைமை இருந்தது. மாண்டர் மினிமத்துக்குப் பிறகு கி.பி. 1790 முதல் 1830-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலும் இதேபோல சூரியனில் அனேகமாகக் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.

கரும்புள்ளிகள் நிறைய இருந்தால் என்ன அல்லது இல்லாவிட்டால் என்ன என்று கேட்கலாம். சூரியனில் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டுமானால் அது பூமியில் நம்மைப் பல வகைகளிலும் பாதிக்கிறது.

சூரியனிலிருந்து இயல்பாக ஆற்றல் மிக்க துகள்கள் (இதைச் சூரியக்காற்று என்றும் சொல்வதுண்டு) வெளிப்பட்டு வருகின்றன. கரும்புள்ளிகள் அதிகமாகத் தோன்றும் காலகட்டத்தில் சூரியனிலிருந்து இவ்விதத் துகள்கள் அதிக அளவில் அதிக வேகத்தில் வெளிப்படுகின்றன.

இவை பூமியை அதாவது மக்களைத் தாக்காதபடி பூமியின் காந்த மண்டலம் தடுத்து விடுகிறது. சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்கும்போது சூரியனில் கடும் சீற்றம் ஏற்படுகிறது. தவிர, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்படுகிறது.

இந்த உருண்டை பூமியின் காந்த மண்டலத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இதை விண்வெளியிலிருந்து பயங்கர மின்னல் தாக்குவதற்கு ஒப்பானது என்றும் கூறலாம்.
இதன் விளைவாக, நீண்ட தூரம் மின்சாரத்தை எடுத்துச்செல்லும் கம்பிகளில் கூடுதல் மின்சாரம் தோன்றி மின்சார
டிரான்ஸ்பார்மர்கள் வெடிக்கும். இதனால் பெரிய பிராந்தியத்தில் மின்சப்ளை பாதிக்கப்படும்.

1989-ம் ஆண்டில் கனடாவின் கிழக்குப் பகுதியில் இவ்விதம் மின்சப்ளை பாதிக்கப்பட்டு 6 கோடி மக்கள் பல மணி நேரம் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர். வடகிழக்கு அமெரிக்காவிலும் மற்றும் சுவீடன் நாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இப்போது அது மாதிரி சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் முகில் தாக்குமானால் பல நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டு கோடானுகோடி மக்கள் பாதிக்கப்படுவர். மின்சார சாதனங்களையும் இயந்திரங்களையும் சீர்படுத்த பல ஆண்டுகள் பிடிக்கும். தவிர, சூரியனிலிருந்து வெளிப்படும் ஆபத்தான ஆற்றல் முகில், தொலைபேசித் தொடர்பு உள்பட தகவல் தொடர்பு சாதனங்களையும் பாதிக்கும். தரைக்கு மேலே அமைந்த எண்ணெய்க் குழாய்களையும் இது பாதிக்கும்.

பூமியைச் சுற்றுகிற செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை வேகம் பாதிக்கப்பட்டு அதனால் அவற்றின் ஆயுள் குறையும்.

பூமியைச் சுற்றுகிற விண்வெளி நிலையத்திலிருந்து யாரேனும் வெளியே வந்து அந்தரத்தில் பணியாற்ற நேர்ந்தால் கடும் கதிரியக்கப் பாதிப்பு ஏற்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். பூமியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இவ்விதம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

சூரியனில் கரும்புள்ளிகள் அனேகமாக இல்லாத காலம் முடிந்து புதிய 11 ஆண்டுகால சுழற்சி கடந்த 2008 டிசம்பரில்
தொடங்கியது. அப்போதே அமெரிக்க விண்வெளி அமைப்பான நாஸô 2011 வாக்கில் சூரியனின் ஒளித்தட்டில் 150 முதல் 200 கரும்புள்ளிகள் தென்படலாம் என்று கூறியது. ஆனால், அப்படி நிகழவில்லை.
2011-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வரையிலான புள்ளிவிவரப்படி தொடர்ந்து 820 நாள்களுக்கு சூரியனில் கரும்புள்ளிகளே காணப்படவில்லை.

நியாயமாகப் பார்த்தால் 2012-ம் ஆண்டில் சூரியனின் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை உச்ச அளவை எட்ட வேண்டும். ஆனால், அப்படி நிகழும் என்று தோன்றவில்லை. சூரியனின் வழக்கமான போக்கு மாறிவிட்டது போலத் தோன்றுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் 2012-ம் ஆண்டு வாக்கில் சூரியனில் அதிகபட்சமாகக் கரும்புள்ளிகள் தோன்றும் என்றும், அதன் விளைவாக சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்படும் என்றும், அதையடுத்து பூமிக்கே ஆபத்து ஏற்படும் என்ற கற்பனை அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஹாலிவுட் தயாரிப்பாக ஓர் ஆங்கிலப் படம் வெளியானது. இந்தியாவிலும் அது திரையிடப்பட்டது.

உள்ளபடி இப்போது சூரியனில் கரும்புள்ளிகள் எண்ணிக்கை அதிக அளவில் இல்லை. ஆகவே, சூரியனில் சீற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 2010 ஆகஸ்டிலும் 2011 பிப்ரவரியிலும் சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வெளிப்பட்டு பூமியை நோக்கி வந்தன என்றாலும் பொதுவில் சூரியன் அமைதியாக இருக்கிறது.

சூரியனின் கரும்புள்ளிகள் விஷயத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து காணப்பட்டு வந்த 11 ஆண்டு காலச் சுழற்சி மறைந்து முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் நிகழ்ந்ததுபோல தொடர்ந்து நீண்ட காலம் சூரியன் அமைதியாக இருந்து வருமோ என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கியுள்ளனர்.

சூரியனில் அப்படியான அமைதி நிலை ஏற்பட்டால் பூமியில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பு ஒன்று உண்டு. அதாவது, பூமியில் குறிப்பாக வட பகுதியில் உள்ள நாடுகளில் வெப்ப நிலை குறையும். முன்பு மாண்டர் மினிமம் காலகட்டத்தில் ஐரோப்பாவின் வட பகுதியில் அமைந்த நாடுகளில் பல பகுதிகள் பனிக்கட்டியால் மூடப்பட்டன.

அதுபோல இப்போது பொதுவில் பூமியில் வெப்ப நிலை குறையலாம். ஆனாலும் இது காற்று மண்டலத்தில் கார்பன் சேர்மானம் அதிகரித்து வருவதால் பூமியின் சராசரி வெப்ப நிலை அதிகரித்து வருகிற பிரச்னையை சரிக்கட்டி விடாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சூரியனில் கடும் சீற்றங்கள் ஏற்பட்டு, சூரியனிலிருந்து ஆற்றல் முகில் தூக்கி எறியப்பட்டு, அது பூமியை நோக்கி வந்தால் பூமியில் தகவல் தொடர்பு உள்பட பலவும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறினோம்.

ஆகவே, இவை பற்றி முன்கூட்டி அறிந்து கொள்வதற்காக சூரியனை ஆராயும் பொருட்டு சில ஆளில்லா செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று "ஏசிஇ' என்பதாகும். இது தொடர்ந்து சூரியனை ஆராய்ந்து வருகிறது. சூரியனில் நிகழும் முக்கிய மாற்றங்களை இது ஆராய்ந்து தகவல் அனுப்புகிறது. ஆகவே, நாம் உஷாராகி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போதிய அவகாசம் கிடைக்கிறது.

சூரியனில் நிகழும் மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என்பது பற்றி நீண்ட நாள்களாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பல கொள்கைகளும் கூறப்பட்டுள்ளன. ஆனாலும் நம்மால் இன்னும் சூரியனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆகவேதான் சூரியனில் கரும்புள்ளி இல்லாத காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நம்மால் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. சூரியனின் கரும்புள்ளிகளுக்கும் பூமியின் பருவ நிலைமைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உள்ளது.

விஞ்ஞானிகள் விசேஷ கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை ஆராய்கிறார்கள். ஆகவே, சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளனவா என்று கண்டறிய ஒருபோதும் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கலாகாது. அவ்விதம் செய்தால் நிச்சயம் கண் பார்வை போய்விடும்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு! Empty Re: சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு!

Post by kalainilaa Fri 15 Jul 2011 - 10:38

##* :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு! Empty Re: சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு!

Post by நிலாம் Fri 15 Jul 2011 - 11:59

சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு! 517195 ://:-: ://:-:
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு! Empty Re: சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு!

Post by முனாஸ் சுலைமான் Fri 15 Jul 2011 - 12:04

விஞ்ஞானிகள் விசேஷ கருவிகளைப் பயன்படுத்தி சூரியனை ஆராய்கிறார்கள். ஆகவே, சூரியனில் கரும்புள்ளிகள் உள்ளனவா என்று கண்டறிய ஒருபோதும் சூரியனை வெறும் கண்ணால் பார்க்கலாகாது. அவ்விதம் செய்தால் நிச்சயம் கண் பார்வை போய்விடும்.
##* ://:-: ://:-: :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு! Empty Re: சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு!

Post by *சம்ஸ் Fri 15 Jul 2011 - 12:36

கரும்புள்ளிகள் உள்ளனவா என்று கண்டறிய முயற்சித்து எதை எல்லாம் இழக்கப் போகிறாங்களே தெரியலே.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு! Empty Re: சூரியனில் அமைதி - விஞ்ஞானிகள் திகைப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum