சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

ஹில்லாரியிடம் இலங்கைப் பிரச்சினை குறித்து ஜெயலலிதா விவாதிப்பார்- அமெரிக்க தூதர் Khan11

ஹில்லாரியிடம் இலங்கைப் பிரச்சினை குறித்து ஜெயலலிதா விவாதிப்பார்- அமெரிக்க தூதர்

Go down

ஹில்லாரியிடம் இலங்கைப் பிரச்சினை குறித்து ஜெயலலிதா விவாதிப்பார்- அமெரிக்க தூதர் Empty ஹில்லாரியிடம் இலங்கைப் பிரச்சினை குறித்து ஜெயலலிதா விவாதிப்பார்- அமெரிக்க தூதர்

Post by யாதுமானவள் Mon 18 Jul 2011 - 16:40

சென்னை வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளி்ண்டனுடன், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா விவாதிப்பார் என்று அமெரிக்க அரசின் தெற்காசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.

ராபர்ட் பிளேக், 2006 முதல் 2009 வரை இலங்கையில் அமெரிக்கத் தூதராக பணியாற்றினார் என்பது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கை நிலவரம் குறித்தும், அங்குள்ள தமிழர்கள் குறித்தும் ஆறரை கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழக மக்கள்தான் பெரும் கவலையில் உள்ளனர். அவர்களுக்கு இந்த விவகாரத்தில் முக்கியப் பங்கு உள்ளது. எனவே ஹில்லாரி கிளிண்டனின் சென்னை விஜயத்தின்போது, அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும்போது நிச்சயம் இலங்கைத் தமிழர் பிரச்சினை எழுப்பப்படும்.

நிச்சயம் இரு தலைவர்களும் இலங்கை விவகாரம் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிப்பார்கள் என்றார் பிளேக்.

ஹில்லாரியின் முதலாவது சென்னை பயணம் குறித்து பிளேக் கூறுகையில், இந்தியாவின் இன்னொரு பகுதிதான் சென்னை. அங்கு வருவதற்கு ஹில்லாரி மகிழ்ச்சியுடன் உள்ளார். டெல்லி, வாஷிங்டன் இடையே மட்டும் அமெரிக்கர்களின் உறவு இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களுடனும் அமெரிக்கர்களுக்குத் தொடர்பு உள்ளது.அந்த வகையில் ஹில்லாரி சென்னை வருகிறார்.

தென் மாநிலங்களுக்கு ஹில்லாரி வந்ததில்லை. அந்த வகையில் சென்னைக்கு வருவதில் அவர் பெரும் ஆர்வத்துடன் உள்ளார். மேலும் ஒரு திறமையான, சக்தி வாய்ந்த பெண் முதல்வரின் ஆட்சியின் கீழ் உள்ள தமிழகத்திற்கு அவர் வருவது விசேஷமானது.

இது ஒரு அருமையான சந்தர்ப்பம். இரு நாட்டு உறவுகளுக்கும் ஹில்லாரியின் சென்னை பயணம் பெரும் உதவியாக இருக்கும் என்றார் பிளேக்.

இலங்கை விவகாரத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒரே கருத்தில் செயல்படுகிறதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இரு நாடுகளும் ஒரே மாதிரியான கருத்துடன்தான் உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதியில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற இலங்கை அரசு தீவிரமாக முயற்சிக்க வேண்டும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்துக்களில் இரு நாடுகளுமே ஒரே நிலையில்தான் உள்ளன என்றார் பிளேக்.

இதற்கிடையே, ஹில்லாரியின் சென்னை பயணம், அதிகாரப்பூர்வமற்ற ஒன்று, அதில் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசப்பட மாட்டாது என்று இந்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் பிளேக், நிச்சயம் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசப்படும் என்று கூறியுள்ளதால் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

ஹில்லாரியும், ஜெயலலிதாவும் சந்திக்கும்போது இலங்கைப் பிரச்சினை பேசப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு இதன் மூலம் எழுந்துள்ளது.

தட்ஸ் தமிழ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» அனைத்து தமிழர்களையும் அவமதித்த அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்; ஜெயலலிதா வற்புறுத்தல்
» சீன ஆக்கிரமிப்பு குறித்து கேட்ட இந்திய நிருபரை 'ஷட் அப்' என்று திட்டிய சீன தூதர்!
» பாக்கில் அமெரிக்க தூதர் கைது?
» தமிழர்களின் நிறத்தை இழித்துப் பேசிய அமெரிக்க உதவித் தூதர் லாச்சாரம் குறித்துப் படிக்கிறார்!
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கன்னிப்பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum