Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
தொப்பையைக் குறைக்கும் உடற்பயிற்சி நீச்சல்
4 posters
Page 1 of 1
தொப்பையைக் குறைக்கும் உடற்பயிற்சி நீச்சல்
ஒவ்வொரு மனிதனுக்கும் உடற்பயிற்சி அவசியம். தினமும் ஏதோ ஒரு வகையில் உடற்பயிற்சி செய்து வந்தால் அதுவே ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். அத்தகைய உடற்பயிற்சிகளில் நீச்சலும் ஒன்று. கிராம மக்களில் ஆண், பெண் பாகுபாடின்றி அனைவருக்கும் நீச்சல் தெரிந்திருக்கும்.
கிராமத்தைச் சுற்றி ஏரி, குளம், கிணறுகள் இருப்பதால் அவற்றில் நீந்தி நீச்சல் கற்றுக்கொள்வார்கள். நன்கு நீந்திக் குளிப்பதால் கிராம மக்கள் இன்றும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். நகர மக்களில் வசதி படைத்தோர் நீச்சல் குளம் சென்று நீந்துகிறார்கள். நடுத்தர வர்க்கத்திற்கு இதுபோல் ஏதும் இல்லை. குளங்களும், ஏரிகளும் காணாமல் போய்விட்டன.
மீதம் இருக்கும் குளங்கள் சாக்கடைகளாக மாறிவிட்டன. இதனால் நீச்சல் என்றால் என்ன என்று கேள்வி கேட்கும் நிலைக்கு மாறிவிட்டனர் இன்றைய தலைமுறையினர். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒரே சமயத்தில் இயங்கக்கூடிய ஒரே உடற்பயற்சி நீச்சல் தான்.
மார்பு நீச்சல் அல்லது தவளை நீச்சல்:
இது தோள்பட்டை, கழுத்து, கால்களுக்கு நல்ல பயிற்சி கொடுக்கும் நீச்சலாகும்.
விரைவு நீச்சல்:
இடுப்புப்பகுதி தசைகளும், இடுப்பு எலும்பும், முதுகெலும்பும் உறுதியாகும்.
பின்நீச்சல்:
கெண்டைக்கால் தசைகள், இடுப்புப் பகுதி தசைகள் வலுப்பெறும்.
வண்ணத்துப்பூச்சி நீச்சல்:
இதனால் வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், முதுகுப் பக்கமுள்ள தசைகள் நன்கு வலுப்பெறுகின்றன.
நீச்சலின் பயன்கள்:
உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக்கூடியது. தொப்பையைக் குறைக்கும்.
* நீச்சலின்போது நீர் உடலுக்கு இயற்கை தடுப்பு ஆற்றலாகப் பயன்படுகிறது.
* உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.
* மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்கும். நீந்தும்போது மனச் சிதறல் நீங்கி, மனம் ஒருநிலையடைகிறது.
* உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
* கை, கால், தொடைப் பகுதி தசைகள் நன்கு வலுப்பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்கும்.
* இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பின் எலும்புமுடிச்சுகள் பலம் பெறுகின்றன.
* கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்கும்.
* செரிமான சக்தியைத் தூண்டும். அஜீரணக் கோளாறைப் போக்கும். நன்கு பசியைத் தூண்டச் செய்யும். மலச்சிக்கல் நீங்கும்.
* ஆழ்ந்த உறக்கத்திற்கு நீச்சல் மாபெரும் மருந்தாகும். உடலுக்கும், உள்ளத்திற்கும் பயன்தரும் நீச்சல் பயிற்சியை அனைவரும் மேற்கொண்டு ஆரோக்கியம் பெறுவோம்.
Re: தொப்பையைக் குறைக்கும் உடற்பயிற்சி நீச்சல்
வாழ்க்கையில் தினமும் எதிர்நீச்சல் போடுகிறார்களே.... அந்த நீச்சல் தொப்பை குறைக்க உதவாதா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தொப்பையைக் குறைக்கும் உடற்பயிற்சி நீச்சல்
யாதுமானவள் wrote:வாழ்க்கையில் தினமும் எதிர்நீச்சல் போடுகிறார்களே.... அந்த நீச்சல் தொப்பை குறைக்க உதவாதா?
அப்படிப்போர்றவங்களுக்கு தொப்பை இருக்குமா அக்கா
Re: தொப்பையைக் குறைக்கும் உடற்பயிற்சி நீச்சல்
சாதிக் wrote:யாதுமானவள் wrote:வாழ்க்கையில் தினமும் எதிர்நீச்சல் போடுகிறார்களே.... அந்த நீச்சல் தொப்பை குறைக்க உதவாதா?
அப்படிப்போர்றவங்களுக்கு தொப்பை இருக்குமா அக்கா
irukke..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தொப்பையைக் குறைக்கும் உடற்பயிற்சி நீச்சல்
யாதுமானவள் wrote:சாதிக் wrote:யாதுமானவள் wrote:வாழ்க்கையில் தினமும் எதிர்நீச்சல் போடுகிறார்களே.... அந்த நீச்சல் தொப்பை குறைக்க உதவாதா?
அப்படிப்போர்றவங்களுக்கு தொப்பை இருக்குமா அக்கா
irukke..
எனக்கு தெரிந்து இல்லை அக்கா.
ஏன் என்றால் என்னக்கு இல்லையே தொப்பை :.”: :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தொப்பையைக் குறைக்கும் நீச்சல் பயிற்சி
» எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல்
» தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
» தொப்பையைக் குறைக்க அன்னாசி சாப்பிடுங்கள்
» தொப்பையைக் குறைக்க “டயட்டில்” இருப்பவரா நீங்கள்.
» எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல்
» தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு!
» தொப்பையைக் குறைக்க அன்னாசி சாப்பிடுங்கள்
» தொப்பையைக் குறைக்க “டயட்டில்” இருப்பவரா நீங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|