சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

அரசியல்(வியா) வாதி யுடன் ஒரு நாள்... Khan11

அரசியல்(வியா) வாதி யுடன் ஒரு நாள்...

Go down

அரசியல்(வியா) வாதி யுடன் ஒரு நாள்... Empty அரசியல்(வியா) வாதி யுடன் ஒரு நாள்...

Post by Atchaya Sat 23 Jul 2011 - 10:59

சென்ற வாரம் ஒரு நண்பரைப் பார்ப்பதற்காகப் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. நண்பர் அந்த ஊரின் செல்வாக்குமிகுந்த ஓர் அரசியல் கட்சித் தலைவரின் வலதுகரமாக இருப்பவர். அவரை எப்போது பார்ப்பதற்குப் போனாலும் பரபரப்பாக இருப்பார். கைப்பேசி ஒலித்துக்கொண்டே இருக்கும். நான்கைந்து பேர்களாவது சுற்றியிருப்பார்கள். நண்பருக்கு முற் போக்குக் கருத்துகளில் பிடிமானம் அதிகம். நாட்டு நடப்புகளை மனித உரிமைப் பார்வையிலே அலசுவார். அவ்வப்போது சில ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொள்வார். இக்காரணங்களே எனக்கு அவரிடம் நட்பு கொள்ள ஏதுவாக இருந்தது.

அன்று எங்களூர்க்காரர் ஒருவரின் வழக்குச் சம்பந்தமாக, நண்பரின் உதவியைக் கேட்டுப் போயிருந்தேன். ஒரு பொய்வழக்கில் எங்களூர்க்காரர் சிக்கிக்கொண்டு படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றியபோது நண்பரின் முகம்தான் உடனே நினைவுக்கு வந்தது. எங்களூர்க்காரர் மீது வழக்கு போடப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்படவில்லை, விசாரணை தொடங்கப்படவுமில்லை.

ஆர்ப்பாட்டத்தோடு என்னை வரவேற்ற நண்பர் விவரத்தைக் கேட்டு சிரித்தார். “எந்த நாட்டுல இருக்கீங்க? சார்ஜ் ஷீட்போடவே குறைஞ்சது ரெண்டு வருசமாகும். அப்புறம் அது கோர்ட்டுல சில மாதங்கள் காத்திருக்கணும். விசாரணைக்கு வந்து முடிய பல வருசமாகும்” வண்டி வண்டியாய் வழக்குகள் தேங்கியிருப்பதாகச் சொல்வது நினைவுக்கு வந்தது. ஊர்க்காரரோ பரம ஏழை. வழக்குக்காகவே ஆயுளில் பாதியையும், ஆஸ்தியில் பாதியையும் செலவழித்துவிடுவார் போலத் தெரிந்தது. ஆனாலும் ஏதாவது செய்துதான் ஆகவேண்டும். வழக்கின் நிலையை அறிந்துகொள்ள ஊர்க்காரர் வைத்திருக்கும் வழக்குரைஞரையும், அரசு வழக்குரைஞரையும் பார்த்துப் பேசலாமே என்றேன். நண்பர் ஒப்புக்கொள்ளவே, இருவருமாகக் கிளம்பினோம். மருத்துவமனை வீதியிலே நடந்து கொண்டிருந்த போது, இருபுறமும் இருந்த நடைபாதைக் கடைக்காரர்கள் நண்பருக்கு வணக்கம் வைத்தனர். அவர்கள் அங்கு இருப்பதே அவரால்தான். போனமாதம் இதற்காகவே ஒரு ஆர்ப்பாட்டத்தினை நண்பரின் கட்சி நடத்தியது. பாதசாரிகளுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று நகராட்சி சொன்ன போது, கடை இல்லையெனில் பிழைப்புக்கே இடைஞ்சலாய் இருக்குமே என்றார்கள் நண்பருடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்.

அரசு மருத்துவமனை வாசலுக்கு நேரெதிரிலே வந்தபோது ஒருவர் ஓடி வந்து நண்பரின் கைகளைப் பிடித்துக்கொண்டார். தன் மனைவியை பிரசவத்துக்குச் சேர்த்திருப்பதால், மருத்துவரிடம் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றார் அவர். நண்பர் என்னைப் பார்த்துக்கொண்டே கைப்பேசியில் மருத்துவரிடம் பேசி முடித்து விட்டு சில நிகழ்ச்சிகளை நினைவு கூறத் தொடங்கினார். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு நடந்தவை. நண்பருக்கு வேண்டிய ஒருவருக்கு சர்க்கரை நோய். வலது தொடையில் புண்வைத்து புரையோடிவிட்டிருக்கிறது. அரசு மருத்துவமனைக்குப் போனால் மருத்துவர் தொடக்கூட முடியாது என்று சொல்லி விட்டிருக்கிறார். நண்பர் பேசி, சொன்ன பிறகே நோயாளிக்கு சிகிச்சை கிடைத்திருக்கிறது. நண்பரின் உழைப்பாளி உறவுக்காரர் ஒருவர் சென்னைப் பொதுமருத்துவமனையில் இறந்து போயிருக்கிறார். உடலை ஊருக்குக் கொண்டுவந்து சேர்க்கப் பதினைந்தாயிரம் கேட்டிருக்கிறார்கள். நண்பர் இங்கேயிருக்கும் அரசு மருத்துவர் மூலமாகப் பேசியபிறகு டீசல் கட்டணத்தை மட்டுமே வாங்கிக் கொண்டு, உடலைக் கொண்டுவந்து சேர்த்து விட்டுப் போயிருக்கிறார்கள். நண்பர் அரசுப் பொது மருத்துவமனைகளைப் பற்றி மேலும் சில செய்திகளைச் சொன்னார்.

புற நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்க முதலில் அவர்களின் விவரங்களைப் பதியவேண்டும். அங்கிருந்தே எல்லாமும் தொடங்கிவிடும். இலவசமாகப் பதியவேண்டிய அதற்கு இரண்டு ரூபாய் தர வேண்டும். உள்நோயாளியாகப் படுக்கையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டுமெனில் மருந்தாளுனருக்கு அய்ம்பது ரூபாய் தந்தாக வேண்டும். இல்லையெனில் மருந்து மாத்திரைகள் சிலவற்றைத் தந்து நோயாளி வெளியே அனுப்பிவிடப்படுவார். குழந்தை பிறந்தாள், தன் குழந்தையின் முகம் பார்க்க பெற்றோர் ஆண் குழந்தைக்கு எழுநூற்று அய்ம்பதும், பெண் குழந்தைக்கு அய்நூறும் தர வேண்டும். குழந்தைப் பேற்றுக்குச் சேர்த்துக் கொள்ளப்பட சேர்க்கைக் கட்டணம் இருநூறு வாங்கப்படும். குளுக்கோஸ் ஏற்ற அய்ம்பது ரூபாய் தரவேண்டும். நோயாளி இறந்து போனால் கேட்கும் தொகையைத் தந்துவிட்டு உடலை எடுத்துவந்து விடலாம், தொகை இல்லையெனில் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட பிறகே உடல் தரப்படும். உடற்கூறாய்வுக்கு ஆயிரம் ரூபாய் செலவாகும். நோயாளிக்கு பித்தம் தேவையெனில் ஆயிரத்து அய்நூறு கொடுத்தால் கிடைத்துவிடும். நகரிலிருக்கும் பொது மருத்துவமனைகளில் அதிகப்படியான மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். எல்லோருமே பணிக்கு வரவேண்டியதில்லை. ஒரு ‘அன்புக்குரிய’ ஒப்பந்தத்தின் பெயரில் ஒருசிலர் எல்லாருடைய பணியையும் சேர்த்துப் பார்த்துக் கொள்வர். பிறர் தமது தனிச் சிகிச்சை மய்யங்களில் தமது சேவையைப் பார்த்துக்கொள்ளலாம். நண்பர் முடிக்கும்போது ‘எல்லாமே அன்புடன் மேற்கொள்ளப்படும் விட்டுக் கொடுப்பு தான்!’ என்று சிரித்தார். மருத்துவமனையை ஒட்டிய தெருவில் நுழைந்ததும் மூக்கைப் பொத்திய படியே நடக்க வேண்டியிருந்தது. தெருவின் இரண்டு பக்கங்களிலும் கழிந்து வைத்திருந்தார்கள். சிறுநீரின் உப்பு நெடி வயிற்றைப் புரட்டியது. அப்பகுதிக்கு வேலைக்கு வரும் துப் புரவுப் பணியாளர்களை நினைக்கும் போது மனம் பிசைந்தது. சுத்தப்படுத்தி, கிருமிநாசினி தெளித்து விட்டுப் போயிருந்த இடங்களில் மீண்டும் உட்கார்ந்தும், பெய்தும் வைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. சுவர் முழுக்க திரைப்படச் சுவரொட்டிகளும், அரசியல் கட்சிச் சுவரொட்டிகளும் நிறைந்திருந்தன. சில சுவரொட்டிகள் தனியாக கவனத்தை ஈர்த்தன. ‘நகர்மன்றத்தலைவரே, உடன்போகும் உறுப்பினர்களே மானமிருந்தால் உடனே பதவி விலகு’ என்று வம்புக்கு அழைத்தன அவை. கடந்த ஒரு வாரகாலமாக சுவரொட்டி யுத்தம் நகரில் அமளி துமளிபடுகிறது. யார் என்ன நினைக்கிறார்களோ, அச்சகக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள். தினமும் புதிய சுவரொட்டிகள் பதில் சொல்வதற்காக ஒட்டப்படுகின்றன. காலையில் ஒன்று, மாலையில் ஒன்று என ஒரே நாளில் இரண்டு சுவரொட்டிகள்கூட ஒட்டப்பட்டன என்றார் நண்பர்.

நடந்துகொண்டிருந்தபோதே வட்டாட்சியர் அலுவலகம் வந்துவிட்டது. வளாகத்தில் இருந்த மரத்தடியில் என்னைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு வட்ட வழங்கல் அலுவலகத்திற்குள் நுழைந்தார் நண்பர். சிறிது நேரத்துக்கெல்லாம் உள்ளேயிருந்து கூச்சல்கள் கேட்டன. கோபத்துடன் பேசியபடி வெளியே வந்தார் நண்பர்.

“எல்லாத்தையும் சட்டப்படியும், விதிப்படியும் செய்யிற மாதிரியில்ல பேசுறாங்க” என்றார் என்னிடம் வந்து நின்று. “முறைப்படி குடும்ப அட்டை கிடைக்க வேண்டிய ஒருத்தருக்கு இன்னும் அட்டை தரல. போய்க்கேட்டா சட்டம், அது இதுன்னு பேசுறாங்க” என்றார் நண்பர். ‘போன வாரம் கூட 50 புது அட்டைங்க வந்ததாம். அதை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் கொடுக்காம, அஞ்சு கடைக்கி பத்து, பத்துன்னு பிரிச்சுக் கொடுத்திட்டாராம் இந்த அதிகாரி. ஒரு கடைக்காரர் ஓர் அட்டைக்கு இருநூறு ரூபாயைக் கொடுத்திடணும். மாதத்திற்குப் போலி அட்டைகள் மூலமாகவே பல ஆயிரம் ரூபாய் கிடைக்கும்’ என்றார் எங்கள் அருகில் நின்றிருந்த ஒருவர். அவர் சொன்னது சரிதான் என்றார் நண்பர்.

தனிக் குடும்பத்தினருக்குக் குடும்ப உணவு வழங்கல் அட்டையை வழங்க வேண்டும் என்பது அரசின் விதி. அந்த அட்டையைப் பெறுகிறவர் திருமணம் ஆனவராக இருக்க வேண்டும். வேறு குடும்ப அட்டைகளில் அவரின் பெயர் இருக்கக்கூடாது. இருந்தால் நீக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் இருந்தும் முறைப்படி ஒருவருக்கு வழங்கல் அட்டை தரப்படுவதில்லை என்ற நிலை நீடிக்கிறது. இரண்டாயிரம் ரூபாயைத் தந்தால் எந்தத் தகுதியும் தேவையில்லை. ஒரு புதிய குடும்ப அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். கடந்த ஆண்டு வரை 99121 போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. 2005 ஆம் ஆண்டு தொடங்கி 2008 வரைக்கும் அய்ந்தாயிரத்து நூறு கோடி ரூபாயை அரசு உணவுமானியமாக வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 1,97,29,402. அப்படியானால் போலி அட்டைகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டிய தொகை 25,62,25,552. இவ்வளவு தொகையும் அதிகாரமட்டத்தில் இருக்கிறவர்களுக்குத் தான் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கின்றது.

போலி குடும்ப அட்டைகளுக்கு வழங்கியதாக எடுக்கப்பட்டுவிடும் அரிசி வெளியே கிலோ ஒன்றுக்கு ஏழு ரூபாயிலிருந்து ஒன்பது ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது. வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்படும் அரிசி விலை கிலோ ஒன்றுக்கு ஒன்பது ரூபாய். சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து மய்யங்களிலிருந்து முறை கேடாக எடுக்கப்படும் பருப்பு, எண்ணெய் முதலான மளிகைப் பொருட்களும் கூட இவ்விதமே வெளியே கள்ளச்சந்தையில் விற்கப்படும். முட்டையையும் விடுவதில்லை. ஒன்றரை ரூபாய்க்கு சத்துணவு முட்டை வெளியில் கிடைக்கிறது. ஊட்டச்சத்து மாவும் இதே போன்று திருட்டுத்தனமாக மூட்டை ஒன்று இருநூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இப்படி வாங்கப்படும் மாவு மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. சத்துணவு, ஊட்டச்சத்துப் பணியாளர்கள் மூலம் மய்யம் ஒன்றுக்கு மாதம் இருநூறு ரூபாய் வட்டார வளர்ச்சி அலுவலருக்குத் தரப்படுகிறது. ஒரு ஒன்றியத்தில் நாற்பது மய்யங்கள் உண்டெனில் சத்துணவு, ஊட்டச்சத்து திட்டத்திலிருந்து மட்டும் வ.வ.அலுவலருக்கு எட்டாயிரம் ரூபாய் கிம்பளமாகக் கிடைத்து விடும். போலி குடும்ப அட்டைகள் மூலமாகக் கிடைப்பதோ, தனி வருவாய் அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர், பறக்கும்படை அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் வரை பகிரப்படும்.

நண்பர் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்க நெஞ்சடைப்பது போலிருந்தது. ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு தேநீர் குடிக்கலாம் என்றேன். அதற்குள் ஒரு வேலை என்று சொல்லிவிட்டு மறுபடியும் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் போனார் நண்பர். நாங்கள் நடந்து வந்தபோது முதியோர் ஓய்வூதியம் ஒன்றை வாங்கித் தர வேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டு வந்தார் நண்பர். அதற்காகத்தான் இப்போது போகிறார் என்று நினைத்துக் கொண்டேன். போன வேகத்தோடு திரும்பிய நண்பரோடு தேநீர்க் கடைக்குப் போனேன். “நம்ம கட்சி அலுவலகத்துல உதவிசெஞ்சினு இருக்கிறார் ஒரு பெரியவர். அவருக்கு ஒரே மகன். குடும்பத்தோட பாம்பே போயிட்டான். இவரு கட்சி அலுவலகமே கதின்னு இருந்திட்டார். அவருக்குப் பேரன் வயசுல இருக்கிறவங்கூடவெல்லாம் அவரை டீ வாங்கிட்டு வரச் சொல்றான். ஆனா ஒருத்தருக்கும் அவருக்கொரு முதியோர் ஓய்வூதியம் எழுதிப் போடணும்னு தோணல” தேநீரை உறிஞ்சியபடி சொன்னார் நண்பர்.

“விதவையா இருந்தா நாற்பத்தைந்து வயதுக்குமேல இருக்கணும். மத்தவங்க அறுபதைக் கடந்திருக்கணும். உழைக்கும் திறன் இருக்கக்கூடாது. நிலம், வீடு, பிள்ளைகள் இருந்தாலும் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறவராக இருந்தால் முதியோர் ஓய்வூதியம் வாங்கலாம். ஆனால் இரண்டாயிரம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் ஓய்வூதியம் வாங்கிவிடலாம் என்ற நிலை இருக்கிறது. போன வாரம் நாற்பத்தெட்டு வயது நிரம்பிய ஒருத்தருக்கு, பணம் வாங்கிக்கிட்டு, ஓய்வூதியம் பெற அனுமதி வழங்கியதற்காக வருவாய் அலுவலரையும், கிராமநிர்வாக அலுவலரையும் மாவட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்ததை செய்தித்தாள்களில் படிச் சிருப்பீங்களே.” தேநீருக்கு நான் தர வந்த காசை கடைக்காரர் வாங்கவில்லை. நண்பருக்கு வணக்கம் சொல்லிவிட்டு தேநீர் போட்டுத் தந்தவர், இப்போதும் பவ்யமாக நின்றார்.

நீதிமன்ற வளாகத்தை நோக்கி நடந்தபோது எங்களுடன் ஒருவர் சேர்ந்துகொண்டார். அவர் நண்பரிடம் தனது ஊராட்சியில் நடக்கும் நடப்புகளைச் சொல்லியபடியே வந்தார். மறுநாள் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்த ஏலம் விடப்படுவதால், ஊரே பரபரப்பாக இருக்கிறது என்றார் புதியவர். அவரின் ஊராட்சி, மாவட்டத்தின் எல்லையோரப் பகுதியில் இருக்கிறது. போக்குவரத்து அரிதான மலை கிராமங்களைக் கொண்டது என்பதை அவரின் பேச்சின் வழியே அறியமுடிந்தது.

எல்லா கட்டுமான ஒப்பந்தங்களுக்கும் ஒதுக்கீட்டுத் தொகையிலிருந்து இருபது சதவிகிதத்தை சட்டமன்ற உறுப்பினருக்குத் தந்துவிட வேண்டும். இதை நிரந்தரமானதாக மாற்றிவிட்டார்கள். அதிகாரிக்குப் பத்து சதவிகிதம். மீதமிருக்கிற எழுபது சதவிகித ஒதுக்கீட்டுத் தொகையில் நாற்பது சதவிகிதம் வரையிலும் அந்த ஒப்பந்தக்காரர் கட்டுமானப்பணிக்குச் செலவிடுவார். மீதமுள்ளது ஒப்பந்தக்காரருக்குச் சேர்ந்துவிடும். ஒருலட்சம் ரூபாய் மதிப்புள்ள பணி எனில் முப்பதிலிருந்து நாற்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான பணிதான் நிறைவேற்றப்படும். இலவசத் தொகுப்பு வீடுகளுக்கு அரசு அய்ம்பத்து அய்ந்து ஆயிரம் ரூபாயை ஒரு பயனாளிக்கு ஒதுக்குகிறது. சில ஊராட்சிகளிலோ, சுமார் இருபது ஆயிரம் ரூபாயைப் பெற்றுக் கொண்டபிறகுதான் பயனாளிக்கு வீடு ஒதுக்கப்படுகிறது என்று சொல்லிக்கொண்டே வந்த புதியவர், கடந்த மாதத்திலே அவரின் ஊரில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நண்பரிடம் ஆதங்கத்துடன் விவரித்தார். ‘சேரியில ஒருத்தரு செத்துப் போயிட்டாருண்ணா. வெளியூர்லர்ந்து நிறைய்யபேரு வந்திருந்தாங்க. சாவுத்தேரை பொது வழியில எடுத்துனு போயி பொதச்சிட்டாங்க. உடனே ஊரு கவுண்டமாரு பஞ்சாயத்தப் போட்டு, சேரிக்காருங்க பொது வழியில பொணம் தூக்கினு போனதுக்காக மூனாயிரம் ரூபாயை அபராதமா கட்டணும்னு சொல்லிட்டாங்க”

“எது பொது வழியாம்?”

“ஊரு வழியா போறது தான் பொது வழியாம்”

யாரும் இதைக் கேட்கவில்லையா என்ற என் கேள்விக்கு, ஊர் வழக்கம் இது என்று எல்லோரும் மௌனம் காக்கிறார்கள் என்றார் அவர்.

நானும், புதியவரும் பேசிக்கொண்டு நின்றிருந்தோம். நண்பர் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று பேசிவிட்டு வந்தார். என்ன விவரம் என்றேன். பேசலாம் வாருங்கள் என்று சொல்லி விட்டார் நண்பர். அவருடைய அலுவலகத்திற்குப் போய்ச்சேரும் வரையில் மூன்று பேருமே பேசிக்கொள்ளவில்லை.

அலுவலகத்தைத் திறந்து கொண்டு உட்காரப் போனபோது அழுதபடியே ஒருவர் ஓடிவந்தார். மூவரின் உணர்வு நிலையும் சட்டென்று மாறிவிட்டது. உறவினர் கிராமத்துக்குப் போன தனது அம்மா, மயக்கம் போட்டுவிழுந்து இறந்துவிட்டதாகச் சொன்னார் ஓடிவந்தவர். அவரிடம் பொருள்நிலைமைகளை விசாரித்துக்கொண்டிருந்தார் நண்பர். அழுது கொண்டிருந்தவரிடம் அய்ந்நூறு ரூபாய்க்கு மேல் எதுவுமில்லை. சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்த நண்பர் கைப்பேசியின் வழியே ஒரு ஆட்டோக்காரரை அழைத்தார்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு வந்து சேர்ந்த ஆட்டோக்காரர் தயங்கிக் கொண்டிருந்தார். “அவருகிட்ட காசு இருந்தா உன்னைக் கூப்பிட்டிருக்கமாட்டேன். ஆயிரம் ரெண்டாயிரம்னு கொடுத்து அதுக்காகவே இருக்கிற வண்டியைக் கூப்பிட்டிருப்பேன். நோயாளியை உட்காரவச்சினு வர மாதிரி, ரெண்டுபேருக்கு நடுவுல உட்காரவச்சி கொண்டுவந்து சேர்த்துடு”.

“இல்லேண்ணா. பாடியை ஏத்தினு வந்த ஆட்டோவை யாரும் வாங்க மாட்டாங்களாம். ஏத்தினு வந்துட்ட பிறகு வாட்டர் சர்வீஸ் செஞ்சி பூஜை வேற போடணும்”

“உன் நம்பிக்கைகள் பத்தி நானு ஒண்ணும் சொல்ல வரல. உங்கம் மாவோ, பாட்டியோ இப்படி ஆயிட்டிருந்தா, எல்லாத்தையும் தூக்கிவச்சிட்டு ஏத்தினு வந்திடுவதானே. இப்பவும் அதுபோல ஒரு உதவி செய்யறதா நெனச்சுக்க”.

ஆட்டோக்காரர் தயக்கத்துடன் எழுந்துபோனார். நாங்கள் மூவரும் சிறிது நேரம் பேசாமல் உட்கார்ந்திருந்தோம்.
“ஒருமுறை இந்த ஆட்டோக்காரத் தம்பி வயசான பாட்டி ஒண்ணயும், அதனோட மூட்டையையும் ஏத்திக்கிட்டு பஸ் ஸ்டாண்டுக்குள்ளயே போயிட்டார். போலீஸ்காரர் பிடிச்சி, கேஸ் எழுதிட்டார். நான் போய் தான் மீத்துவிட்டேன். அன்றைக்கு மட்டும் விட்டிருந்தா, தண்டம் அது இதுன்னு ரெண்டாயிரம் வரை அறுந்திருக்கும். இப்ப நாம ஒரு உதவின்னு கூப்பிட்டா தயங்குறாரு”.

நான் வீட்டுக்குக் கிளம்புவதற்கு முன் வழக்கு விவரத்தைக் கேட்டேன். என் ஊர்க்காரர் வைத்திருக்கும் வழக்கறிஞர் மிக அதிகமான பணத்தை எதிர்பார்ப்பதாகச் சொன்னார் நண்பர். அரசு வழக்கறிஞருக்கும் பணம் தர வேண்டியிருக்கும் என்றார் அவர். கொஞ்சம் பணம் தேற்றிக் கொண்டு வரமுடியுமானால் காவல் ஆய்வாளரைப் பார்த்துப் பேசி, குற்றப்பத்திரிகையை விரைந்து போடச் சொல்லலாம் என்றும் சொன்னார்.

ஊருக்குப் போகும் பேருந்துக்காகக் காத்திருந்தபோது இருவேறு இந்தியா இயங்கிக்கொண்டிருப்பது புரிந்தது எனக்கு. தெளிந்திருக்கும் மேல்மட்ட நீரும், கசடுகள் நிறைந்த அடிமட்ட நீரும் கொண்ட ஒரு கோப்பையைப்போன்ற இந்தியா. சில நேரங்களில் கலங்கிக் குழம்பி ஒரே நீராக மாறும் இந்தியா. இது தான் தேசிய நீரோட்டம் போலிருக்கிறது என்று நினைத்தபடி வந்து நின்ற பேருந்தில் ஏறிக்கொண்டேன் நான்.

நன்றி.....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum