சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா. Khan11

சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா.

Go down

சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா. Empty சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா.

Post by ஹம்னா Sun 26 Dec 2010 - 18:38

சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா. Kuala_lumpur


எங்கும் தூசுப்படலம்; தெருக்களில் வாரி இறைத்த குப்பை; ரோட்டில் வாகனங்களின் பேரிரைச்சல்; வாகன நெரிசலில் நீந்திக் கடக்க “ஹாரன் அடித்து’ நொந்து போன மனம்…பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் எண்ணங்கள்… இவற்றிலிருந்து விடுதலை கிடைக்குமா…என ஏங்கி தவிப்பவரா… நீங்கள்?

வசதியும் வாய்ப்பும் கிடைத்தால், மலேசியாவை எட்டிப்பார்த்து விட்டு வாருங்கள். எங்கும் பசுமை; எதிலும் பசுமை; கண்களுக்கு குளுமை; தூசுகளுக்கு குட்பை. 99.9 சதவீதம், “நோ ஹாரன்’…நேர்த்தியான ரோடுகளில் விரைவாக செல்லும் லாவகம். பூலோகத்தின் சொர்க்கத்திற்கு வந்து விட்டோமோ என எண்ணத் தோன்றும் சில விநாடிகள்.”சலாமத் டடாங்’ என வரவேற்புடன், இனிமையான கனிவான மலேசிய ஏர்லைன்ஸ் விமான சேவை. விருந்தோம்பலை முன்னிறுத்தி, கனிவான பேச்சில் கவர்கிறது. விமான நிலையத்தை தொடும்போதே, பிரமாண்டத்தை கொட்டிக்காட்டுகிறது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம். 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமான சேவை செய்து வருகிறது. இன்னும் விரிவாக்கம் செய்து கொள்ள 10 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. எல்லா நாடுகளிலும் அடர்ந்த வனப்பகுதியில் விமான நிலையம் இருக்கும்.

ஆனால், இங்கோ விமான நிலையத்தில் வனத்தை உருவாக்கியுள்ளனர். நாடு முழுவதும் சுற்றி வாங்க நினைக்கும் பொருட்களை இங்கேயே வாங்கிக் கொள்ளலாம். விமான நிலையம் மட்டுமல்ல; பெரிய “ஷாப்பிங்’ சென்டரே உள்ளது. நேர்த்தியாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள கடைகள் ஏராளம். சர்வதேச அளவில் எந்த உணவாக இருந்தாலும் அதுவும் விமான நிலையத்திலேயே கிடைக்கும். வந்து செல்லும் பயணிகளின் விரைவுக்கு ஏற்ப ஆங்காங்கே “லிப்ட்’, தானியங்கி ஏணிப்படிகள் (எலிவேட்டர்) வசதிகள் உண்டு. புத்தம் புதியது போன்று எப்போதும் மின்னுகிறது விமான நிலையம்; அவ்வளவு சுத்தம்.மலேசியாவுக்குள் நுழைந்து விட்டாலே… பிரமாண்டங்களை காண முடியும்.


ரோட்டில் செல்லும்போதே இருபுறமும் பசுமையை கண்குளிர காணலாம். ரோடுகள் சுத்தமாகவும், நேராகவும், அகலமுள்ளதாகவும் உள்ளன.ரோட்டில் பயணிக்க ஆசையும் ஆர்வமும் நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு வாகனங்களுக்கும் இடைவெளி இருக்கும். முடிந்தவரை ரோடுகளின் குறுக்காக ரோடு அமைவதை தவிர்த்துள்ளனர். தேவையான இடங்களில் சிக்னல்களை அமைத்துள்ளனர். டிராபிக் போலீசையும் கூட காண்பது அரிது. ரோடுகளை கடப்போருக்கு உரிய மரியாதை கொடுக்கின்றனர் வாகன ஓட்டுனர்கள். வாகனத்தில் செல்வோர் பொறுமையை கையாள்வது வியப்பிற்குரியது.

விமான நிலையத்திலிருந்து 20 நிமிட பயணத்தை அடுத்தே, கோலாலம்பூரை தொட முடியும். நகருக்குள் நுழைந்ததுமே கோலாகலம் தொடங்கி விடும். அமைதியான, அழகாக வடிவமைக்கப்பட்ட கோலாலம்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உள்ளன. மூன்று கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வியக்க வைக்கின்றன. ஆட்சியாளர்களின் திட்டமிடும் திறனும், அதை செயல்படுத்தும் வேகமும் நாட்டை வேகமாக முன்னேற வைத்திருக்கிறது. எப்போதும், என்றும் கட்டுமான பணிகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.முன்னேறிய நாடுகளை பார்த்தால், அங்கு என்ன சிறப்பம்சம் இருக்கிறது என்பதையெல்லாம் ஒவ்வொரு நாடாக சென்று பார்த்த மலேயர்கள், அவற்றை தங்களது நாட்டில் ஏற்படுத்த முனைந்துள்ளனர். உலகையே சுற்றிப்பார்ப்பதும், மலேசியாவை சுற்றிப்பார்ப்பதும் சமமாக கருதலாம்.


ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா. Empty Re: சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா.

Post by ஹம்னா Sun 26 Dec 2010 - 18:47

இந்திய, சீனா, மலேய மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த மக்களிடையே எவ்வித இன பாகுபாடும் வேறுபாடும் கிடையாது; போராட்டங்கள் குறைவு. ஒரே மலேசியா (1எம்) என்ற உத்வேகம் இவர்களிடையே உண்டு. வேகமாக முன்னேற்றங்கள், திட்டமிடலில் மட்டுமே வந்துள்ளது. மலேசியாவின் பொருளாதாரம், விவசாயத்தின் அடிப்படையில் இருந்தது; தற்போதோ தலைகீழாக மாற்றப்பட்டு விட்டது. இன்ஜினியரிங் உற்பத்தி, பெட்ரோலிய ஏற்றுமதி, சுற்றுலா, விவசாயம் என முக்கிய வருவாய் தரும் இனங்கள் உள்ளன. எதில் எளிதாக வருவாய் ஈட்ட முடியும் என்பதை அறிந்து, அதில் முன்னேற்றத்தை காண்பிக்கின்றனர். உலகெங்கிலிருந்தும் மலேசியாவின் அழகை கண்டு ரசிக்க வேண்டும் என்ற எண்ணம், அதற்கேற்ற திட்டமிடல்; அவற்றை செயல்படுத்துதல் போன்றவை வருவாயை உயர்த்தியுள்ளன. மலேசியாவில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்… ஓரிரு நாட்களில் எல்லாவற்றையும் பார்த்து முடித்து விட முடியாது; ஓரிரு மாதங்கள் வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் சில நாட்களை செலவிட வேண்டும்.

பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம்: நகரின் நடுவே உலகின் அதிசயம்…”கோலாலம்பூர் பெட்ரோனாஸ்’ என்ற இரட்டை கோபுரம். உலகிலேயே உயரமான கோபுரம். 451.9 மீட்டர் உயரம் உள்ள இந்த கோபுரம், 88 அடுக்குகளை கொண்டது. 41, 42வது தளங்களில், இரு கோபுரங்களையும் இணைக்கும் பாலம் உள்ளது. இந்த பாலமே நில மட்டத்திலிருந்து, 557 அடி உயரத்தில் (170 மீ) அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்த உலக வர்த்தக மைய கோபுரம் அழிந்த பின், இதுவே உலகின் பிரமாண்டமாக கருதப்படுகிறது. தினமும் 1700 பேர் மட்டுமே இந்த கோபுரத்திற்குள் சென்று வர அனுமதி உண்டு. இந்த இரட்டை கோபுரம் அமைந்துள்ள 17 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளன. இரட்டை கோபுரத்திற்கு அருகிலேயே பிரமாண்டமான மீன் காட்சியகத்தை அமைத்துள்ளனர். உள்ளே நுழைந்ததும், கடலுக்குள் சென்று விட்ட பிரமிப்பை ஏற்படுத்தும். இந்த அமைப்பிற்குள் 300 வகையான உயிரினங்கள் இடம் பெற்றுள்ளன. 60 ஆயிரம் சதுர அடிப்பரப்பில் இடம் பெற்றுள்ளது.90 மீட்டர் தூரத்திற்கு நீருக்கடியில் நீளும் குகை அமைப்பில், நின்று கொண்டால் போதும், கீழ் உள்ள நகரும் அமைப்பு, முழுவதுமாக சுற்றிக் காண்பித்து விடும். அத்தனை மீன் வகைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்க முடியும்.

அருங்காட்சியகம் ஸ்ரீபடானா: கோலாலம்பூரில் எழில் மிக்க ஒரு மாளிகை ஸ்ரீபடானா. முன்னாள் பிரதமர் வசித்த மாளிகையை, இப்போது அருங்காட்சியமாக்கி விட்டனர். 50 ஆண்டு சுதந்திர தினத்தை பறைசாற்றும் நாணயத்தின் படத்தையும் ஓவியமாக வரைந்து பார்வைக்கு வைத்துள்ளனர். பார்லிமென்டில் உள்ள 228 உறுப்பினர்களின் பலத்தையும் உயர்த்திக் காட்டும் கை அமைப்பு அனைவரையும் கவர்கிறது.


பவுலியன்: கோலாலம்பூரின் மற்றொரு அம்சம், “பவுலியன்’ என்ற ஷாப்பிங் காம்ப்ளக்ஸ். இங்கு அனைத்து வகை பொருட்களும் விற்பனைக்கு வைத்துள்ளனர். அழகாகவும் நேர்த்தியாகவும், இடவசதியுடன் அமைந்துள்ள இக்கடைகளில், பொருட்களையும் அழகுடன் காட்சிப்படுத்தியுள்ளனர். ஷாப்பிங் செய்வதற்கென்றே “மெகா சேல்’ திட்டத்தை, மலேசிய சுற்றுலா வளர்ச்சி வாரியத்துடன் இணைந்து நடத்தினர். ஜூலை மாதம் துவங்கிய இந்த “மெகா சேல்’ தள்ளுபடி விற்பனை உலக நாடுகளையும் கூட எட்டிப் பார்க்க வைக்கும். 20 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை பொருட்களுக்கு தள்ளுபடி அளிக்கின்றனர். கைவினைப்பொருள் கண்காட்சியும் அதற்கென அமைக்கப்பட்டுள்ள தனி அரங்கில் துவங்கியுள்ளது. மலேசிய நாட்டின் பாரம்பரியமிக்க கலை நயமுடன் உருவாக்கப்படும் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.

சன்வே பிரமிட்: சிங்க முகம் கொண்ட மாபெரும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், சன்வே பிரமிட். நான்கு தளங்களைக் கொண்ட இந்த காம்ப்ளக்ஸ், அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தோற்றம், உட்புறத்தோற்றம் இரண்டிலுமே கவனமுடன் வடிவமைத்துள்ளனர்.





சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா. Empty Re: சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா.

Post by ஹம்னா Sun 26 Dec 2010 - 19:00

மலாக்கா: கோலாலம்பூரிலிருந்து மலாக்கா செல்வது எளிதானது; மலேசியா அமைத்துள்ள நீண்ட தூர “ஹைவே’ ரோட்டில், மணிக்கு 100 கி.மீ.,வேகத்திற்கும் மேல் பறக்க முடியும். நேர்த்தியான ரோட்டில், விரைவாக செல்லலாம். ரோடுகளில் குறுக்கீடுகள் கிடையாது; யாரும் கடப்பதும் இல்லை. விலங்கினங்கள் கூட இந்த “ஹைவே’யில், குறுக்கிடாது. பழமையான, பழம்பெரும் நகரம் மலாக்கா. 15ம் நூற்றாண்டில், மலேசிய நாட்டின் வர்த்தகம் இங்கு நடந்ததற்கான சான்றுகள் பல உள்ளன. பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த இந்த நகரத்தை, “மலேசியாவின் வெனிஸ்’ என அழைக்கின்றனர். 1500ம் ஆண்டுகளில், சுல்தான்கள் ஆட்சி இருந்தது. இதற்கான கோட்டை இடம் பெற்றுள்ளது. இந்த நகரில், புகழ் பெற்ற பானம் சென்டால். இந்த பானம், ஐஸ் கட்டிகளை உடைத்துபோட்டு, தென்னங்கருப்பட்டியை கலந்து தயாரிக்கின்றனர். மரத்தால் ஆன மாளிகை, இங்கே மன்னர்கள் சொகுசாக வாழ்ந்த வரலாற்றைக் கூறுகிறது. மன்னர்களின் படுக்கை அறைகளில், பட்டத்து அரசியே ஆனாலும் அனுமதியின்றி நுழைய முடியாது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர்.

பழம்பெரும் நகரமாக உள்ள இந்த மலாக்காவில், உள்ள அருங்காட்சியகத்தில், தமிழக மக்கள் பயன்படுத்திய பொருட் களை போன்றே பல உள்ளன. தமிழ் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாக இது திகழ்கிறது. சைக்கிள் முதல் இட்லி பாத்திரம் வரை பல வகை பொருட்களும் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த அருங்காட்சியகமும் பார்த்து ரசிக்க வேண்டிய இடம். ஒவ்வொரு பொருளும் ஒரு சரித்திரம் சொல்வதாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. நம்ம ஊரில் காணாமல்போன சைக்கிள் ரிக்ஷா சவாரியை அங்கு சுற்றுலா சவாரியாக்கியுள்ளனர். ரிக்ஷா முழுவதும் செயற்கை மலர் அலங்காரம் செய்து, அதில், பாடல் ஒலிபரப்பி, அழகாக ஒரு கி.மீ., தூரத்தை வட்டமிட்டு காட்டுகின்றனர். இதில், சவாரி செய்வதே ஒரு சிறப்பான அனுபவம் எனலாம்.


ஈபோ லாஸ்ட்வேர்ல்ட்: ஈபோ நகரில் உள்ள “லாஸ்ட் வேர்ல்டு’க்குள் நுழைந்து விட்டால், பல பல ஆச்சரியரிங்கள் காத்திருக்கின்றன. நுழை வாயிலில் ஆளுயர பூனை சிலைகள் வரவேற்கின்றன. இந்த பூனை சிலைகளை தெய்வமாகவும் இப்பகுதியினர் கருதுகின்றனர். “லாஸ்ட் வேர்ல்டு’ என்ற தீம் பார்க்கிற்குள் நுழைந்து விட்டால், உங்களையே இழந்து விடுவீர்கள்; அவ்வளவும் அதிசயம். இங்கு மட்டும் ஒரு நாள் முழுவதும் செலவிடலாம். மலைப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில், சுடுநீர் ஊற்றை உணரலாம். “ஊசிமலை’ என்பதை நேரடியாக காண முடியும் இங்கே…ஆங்கிலத்தில் “நீடில் ராக்’ என அழைக்கின்றனர். அழகு சூழ்ந்த சோலையில் இந்த ஊசிமலை அமைந்துள்ளது. இங்கு, இன்னும் சில அடி தூரத்தில் புலியை நேரில் பார்க்கலாம். ஜாலியாக உலா வரும் ஐந்து புலிகள், மிக அருகில் காணும் வாய்ப்பு இந்த உயிரியல் பூங்காவில் மட்டுமே காண முடியும். இன்னும் பல அதிசய பறவைகள், குட்டை ரக கோழி, முயல், எலி வகைகள் என அதிசய உலகம்…”லாஸ்ட் வேர்ல்டி’ல் உள்ளது. ஜாலியாக விளையாடவும், தண்ணீரில் துள்ளி குதித்து மகிழவும் அதிசய உலகம் இங்கு மட்டுமே உள்ளது.

“ஏ பாமஸா’ ரிசார்ட்: மலாக்கா அருகே உள்ள பந்தர் ஹிலரில் “ஏ பாமஸா’ ரிசார்ட்…மிகவும் சொகுசானது. இந்த ரிசார்ட்டை சுற்றிலும் கண்களுக்கு எட்டிய தூரம் வரை பசுமையை மட்டுமே காண முடியும். மாலை நேரங்களில், கோல்ப் விளையாட, இயற்கையான புல் தரைகள் உள்ளன. பல ஏக்கர் நிலங்களில் அமைந்துள்ள இந்த ரிசார்ட்டில் இரண்டு நாட்கள் தங்கி, ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். இங்குள்ள “கவ்பாய் டவுன்’ அதிசயமான இடம். தினம் மாலை, இரவு நேரங்களை கேளிக்கையுடன் கழிக்கலாம். கவ்பாய் டவுனில் செவ்விந்தியர்களின் “ரெட் இன்டியன் ÷ஷா’ வை கண்டுகளிக்கலாம். ஆடல், பாடலுடன் வரவேற்பு, அதையடுத்து, கவ்பாய் வேடம்;கையில், துப்பாக்கி தோளில் கிளி, தொப்பி சகிதம் வேடமிடலாம். அதோடு, மலைப்பாம்பையும் தோளில் சுமந்து கொண்டு போஸ் கொடுக்கலாம். உள்ளே… இன்னும் பல அதிசயங்கள் காத்திருக்கின்றன.



அடுத்த ஷோ… “4 டி’ தியேட்டர்: “3 டி’ஷோ தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம்… ஆனால், இங்கு “4டி’ ÷ஷா நடத்தி, திடுக்கிட வைக்கின்றனர். முப்பரிமாண படத்தில், “ஆவி…பூதம்…பேய்’ கதை வந்து மிரட்டிக் கொண்டிருக்கும்… படத்தில், மூழ்கிப்போன உங்களை, நீங்கள் அமர்ந்துள்ள நாற்காலி, திடீரென ஆட்டம் காண வைத்து மிரள வைக்கும். அதோடு, படத்தில் பெய்யும் மழையை, நிஜத்திலும் உணர முடியும். இந்த நான்காவது பரிமாணம் “ரியலி சூப்பர்’ திட்டம் என பாராட்டலாம்.ஈப்போவில், அடுத்த அதிசயம் சுண்ணாம்பு குகை கோவில். செங்குத்தாக நிற்கும் பல மலைகள் இங்குள்ளன. இயற்கையாக அமைந்த குகையின் முன்பகுதியில் புத்தர் சிலை வைத்துள்ளனர். அதற்கு பின்னும் ஒரு புத்தர் சிலை என கோவில்களை உள்ளடக்கியுள்ளது. சில மீட்டர் தூரம் செல்லும் இந்த குகை வழியாக பயணிக்க முடியும். ஈப்போவை அடுத்து, தைபிங் மிருக கண்காட்சி சாலையில் இரவு நேர சவாரி உண்டு. இரவு நேரத்தில் வனத்திற்குள் செல்லும் அனுபவம், அபூர்வமானது.


சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா. Empty Re: சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா.

Post by ஹம்னா Sun 26 Dec 2010 - 19:52

ஒராங்குட்டான் தீவு: மலேசியாவிற்கு சென்றால், ஒராங்குட்டான் குரங்குகளை கண்டே தீர வேண்டும். இங்கு மட்டுமே உள்ள இந்த அதிசய குரங்கினம்…ஆசிய கண்டத்தில் அபூர்வமானது. மனிதனின் செயல்பாடுகளில் 90 சதவீதத்தை இவையும் செய்கின்றன. மரத்தின் உச்சியில் கூடு கட்டி வசதிக்கும் பழக்கம் உடையவை இந்த ஒராங் குட்டான். “பேசத்தெரியாத மனிதன்’ என்று கூட அழைக்கலாம். அரிய உயிரினமான உராங் குட்டான் குரங்கை, பாதுகாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் ஏராளமாக செலவிட்டுள்ளது மலேசிய அரசு.

பினாங் போகலாம் வாங்க!மலேசியாவில் மகிழ்ச்சியை கொண்டாட வேண்டிய இடம் பினாங் தீவுதான். இங்குள்ள ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம், கடற்கரை, கேளிக்கை விடுதிகளில் புகுந்து விட்டால் போதும். நேரமும் நாளும் தானாக கரைந்து விடும். பினாங் தீவும், பாரம்பரியமிக்க இடம். வர்த்தக தலமாக விளங்கிய பினாங் தீவில், பார்க்க வேண்டிய இடம் ஏராளம். இங்கு அதிகம் பேர் தமிழ் பேசுவோர் உள்ளனர். அதோடு, சீனர்களும் உண்டு; மலேயர்களும் சம அளவில் உள்ளனர். பினாங் பாலம், இந்த நாட்டின் பெரிய அதிசயம் என்றே சொல்லலாம். பினாங் தீவை இணைக்கும் இப்பாலம், 13.5 கி.மீ., உள்ளது. இதில் ரோடு அமைத்துள்ளனர். இதற்கு இணையாக இன்னும் ஒரு பாலம் 18 கி.மீ., நீளத்திற்கு அமைத்து வருகின்றனர். மலேசியா… என்றும் பசுமையாக மனதில் பதிந்து விடும் நாடு. மீண்டும் ஒரு முறை செல்ல மாட்டோமா என ஏங்க வைக்கும். ஒரு முறை சென்றால், மீண்டும் செல்லத்தூண்டும். “மலேசியா, உண்மையான ஆசியா’ (malaysia, truely asia) என்பதை சொல்வதோடு மட்டுமல்ல, செய்தும் காண்பித்துள்ளனர். விழாக் காலங்களில் பாரம்பரிய உடைகள், நடனங்கள், கேளிக்கைகள் எல்லாமே உண்டு. சுற்றுலா நாடாகவே மாற்றியும் காட்டியுள்ளனர். சபாஷ் தான் சொல்ல வேண்டும்.


பிரமிப்புகள் தொடரும்! “எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என நாம் கூறினாலும், மலேசியர் எண்ணுவதெல்லாம், பிரமிப்பூட்டுபவை. “புத்ர ஜெயா’ நகரம், 1995 முதல் உருவாக்கப்பட்டு வருகிறது. பிரமாண்டங்களை கொண்ட இந்த நகரம், முற்றிலும் நவீனமயமானது. இங்கு, அரசு அலுவலங்கள், அவர்களுக் கான குடியிருப்புகள், ஆட்சியாளர்கள், அவர்களுக்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன; மேலும் கட்டுமான பணிகள்தொடர்கின்றன. நாட்டின் மின்சார தேவையை முற்றிலும் பூர்த்தி செய்கிறது நீர்மின் நிலையங்கள். இன்னும் ஒரு மெகா மின் உற்பத்தி திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இந்த மின் திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அருகில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு விற்கும் திட்டமும் உண்டு. விவசாய நாடாக பின் தங்கியிருந்த மலேசியாவை, தொழில் நாடாக முதன்மை பெறச் செய்துள்ளனர் ஆட்சியாளர்கள். விவசாயம், இப்போது கடைசியாக உள்ளது. இங்கு முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை வரிச் சலுகை அளிக்கின்றனர். தடையில்லா மின்சாரம் தருகின்றனர். தொழிலுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

ஆண்டு முழுவதும் கொண்டாட்டமே…!மலேசிய சுற்றுலாத் துறையில் பணியாற்றும் வழிகாட்டி அசார் கூறுகையில்,”"ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லலாம். குறிப்பிட்ட சுற்றுலா சீசன் கிடையாது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒவ்வொரு விழாக்கள் நடக்கும். இப்போது, மலேசியா நாடு முழுவதும் “மெகா சேல்’ தள்ளுபடி விற்பனை விழா நடக்கிறது. 20 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இந்த “மெகா சேல்’ நடக்கிறது. சுற்றுலா பயணிகளை இது வெகுவாக கவர்ந்துள்ளது,”என்றார்.

மலேசிய சுற்றுலா வாரிய அலுவலர் ஹனனி சுகிமன் கூறுகையில்,”"இந்தியர், மலேயர், சீனர்கள் என முப்பெரும் பிரிவினர் இங்கிருந்தாலும், அனைவரும் “மலேசியர்களாகவே வாழ்கிறோம்; விழாக்களையும் ஒன்றாகவே கொண்டாடுகிறோம்’ இதுவே ஒன்றுபட்ட மலேசியாவாக காட்டுகிறது. இந்த குறியீட்டிற்காக “1எம்’ என கூறுகின்றனர். சுற்றுலா பயணிகளை எங்களது விருந்தினர்களாகவே கருதுகிறோம்,” என்றார்.



சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா. Empty Re: சொக்க வைக்கும் சொர்க்க பூமி மலேசியா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum