சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Khan11

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

4 posters

Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:10

நோன்பின் வகைகள்
நோன்பு அதன் சட்ட அமைப்பைப் பொறுத்து பலவகைப்படும் அவற்றில் ஃபர்ளான நோன்புகளும் உள்ளன. மேலதிக நோன்புகளும் உள்ளன. இன்னொரு வகையில் கூறுவதாயின் நோன்பில் வாஜிபானவை, முஸ்தஹப்பானவை, ஹராமானவை, மக்ரூஹானவை எனப்பல வகை உள்ளன.

வாஜிப் அல்லது ஃபர்ளு என்பது ஃபர்ளுஐனயே குறிக்கின்றது. அதாவது குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றுமாறு விதியாக்கப்பட்டதே வாஜிபாகும். அதுதான் ரமழான் மாத நோன்பாகும். அவற்றில் அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டிய உரிமை என்ற வகையில் குறிப்பிட்ட காலத்துக்கு நோற்கப்படும் வாஜிபான நோன்பும் உண்டு. அவை குற்றப் பரிகாரங்களுக்கான நோன்பாகும். உதாரணமாக சத்தியத்தை முறித்தால், மனைவியை ளிஹார் செய்தால், தவறுதலாக கொலை செய்தால் குற்றப் பரிகார நோன்பு நோற்கப்பட வேண்டும். மேலும் ஒருவர் தானே தன்மீது விதித்துக் கொள்ளும் நோன்பும் வாஜிபில் அடங்கும். அது நேர்ச்சை நோன்பு எனப்படும்.

நாம் முதற் பிரிவாகிய ரமழான் மாத நோன்பை அதற்கு இஸ்லாத்திலும் முஸ்லிம்களின் வாழ்விலும் ஒரு மகத்தான முக்கியத்துவம் இருப்பதால் அதனை முதலில் விளக்குகின்றேன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:10

ரமழான் நோன்பு இஸ்லாத்தின் தூண்

ரமழான் மாத நோன்பு ஒரு புனிதக் கடமை. இஸ்லாத்தின் மிகப்பெரிய வணக்க வழிபாடுகளில் ஒன்று. இந்த மார்க்கம் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஐந்து இயங்கும் தூண்களில் ஒன்று.
இது வாஜிப் என்பதும் ஃபர்ளு என்பதும் குர்ஆன், சுன்னா, இஜ்மா ஆகிய மூன்று மூலாதாரங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான். "ஈமான் கொண்டவர்களே நீங்கள் தக்வாவைப் பெறலாம் என்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது கடமையாக்கியது போன்று உங்கள் மீதும் குறிப்பிட்ட காலம் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது." (அல்பகரா 183, 184)

அடுத்த வசனத்தில் பின்வருமாறு கூறுகின்றான். "ரமழான் மாதம் அதிலேதான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடிய தெளிவான ஆதாரங்களையும் கொண்டதாக அல்குர்ஆன் இறக்கப்பட்டது." (அல்பகரா 185)

புகழ்பெற்ற ஹதீஸ் ஒன்றை உமர் ரளியல்லாஹு அன்ஹு பின்வருமாறு அறிவிக்கின்றார்கள். "இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்று சான்று பகர்வதும் தொழுகையை நிலைநாட்டுவதும் சகாத்தை வழங்குவதும் றமழானில் நோன்பு நோற்பதும் சக்திபெற்றிருப்பின் அல்லாஹ்வின் ஆலயத்தில் ஹஜ் செய்வதுமாகும்." (முஸ்லிம், அபுதாவூத், திர்மிதி, நஸாஈ)

இப்னு உமர் அறிவிக்கும் முஸ்லிம்கள் எல்லோரும் மனனமிட்டுள்ள இன்னொரு புகழ்பெற்ற ஹதீஸும் நோன்பு பற்றிக் கூறுகின்றது. இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது கட்டியெழுப்பப் பட்டுள்ளது என்று வரும் ஹதீஸில் அதில் ஒன்று றமழானில் நோன்பு நோற்றலாகும் (ஆதாரம்: முத்தபக் அலைஹி)

அபூஹுறைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் "ஒரு நாட்டுப்புற அறபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து நான் செய்தால் சுவர்க்கம் செல்லக்கூடிய ஒரு சொல்லை எனக்குக் காட்டித்தாருங்கள் என்று கேட்டார். அதற்கு நபிகளார் ‘அல்லாஹ்வுக்கு வழிப்படு, அவனுக்கு எதனையும் இணைவைக்காதே ஸ.றமழானில் நோன்புவை" (ஆதாரம் முத்தபக் அலைஹி)

றமழான் நோன்பு குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளது. ஸஹீஹுல் ஸித்தாவும் ஏனைய ஹதீஸ் கிரந்தங்களும் அவற்றைப் பதிவு செய்துள்ளன. அவையனைத்தும் முதவாதிரான ஆதாரமாகவும் காணப்படுகின்றன. எல்லா சட்ட சிந்தனைப் பிரிவுகளையும் சேர்ந்த அனைத்து முஸ்லிம்களும் நுபுவத்திலிருந்து இன்று வரை எல்லாக் காலப்பிரிவுகளிலும் றமழான் நோன்பு வாஜிப் என்பதிலும் பொறுப்பேற்கும் தகுதிபடைத்த எல்லா முஸ்லிம்கள் மீதும் அது பர்ளுஐன் என்பதிலும் ஏகோபித்த கருத்துக் கொண்டுள்ளனர். அன்றும் இன்றும் இதுவிடயத்தில் யாரும் தனித்த கருத்துக் கொண்டிருக்கவில்லை.

இது முதவாதிரான ஆதாரங்கள் மூலம் நிறுவப்பட்ட பர்ளான கடமைகளில் ஒன்றாகும். இது தனியானதா பொதுவானதா என்று ஆராய வேண்டிய, ஆதாரம் தேடவேண்டிய அவசியமில்லாத மார்க்கத்தில் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய கடமைகளில் ஒன்றாகும்.

எனவேதான் றமழான நோன்பு கடமையில்லை என்றோ அல்லது அதில் சந்தேகம் கொள்ளவோ அல்லது அதை அற்பமாக நினைப்பதோ அனைவரையும் காபிர், அல்லது முர்தத் என்பதில் அனைத்து இஸ்லாமிய சட்ட அறிஞர்களும் தீர்ப்பளித்துள்ளனர். நோன்பை மறுப்பது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பொய்ப்படுத்திவிட்டார் என்பதைத் தவிர அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்பதைத் தவிர வேறு பொருள் கிடையாது.

இந்த விஷயத்தில் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் வாழ்ந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் காரணம் கற்பிக்க முடியாது. அப்படியானவர்கள் இருந்தால் அவர் மார்க்கத்தில் விளக்கம் பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அறியாதிருந்தவற்றை அவர் அறிந்து கொள்ள வேண்டும். அது அவர் மீது கடமையாகும். அவ்வாறே அவருக்கு அறிய வைப்பதும் முஸ்லிம் சமூகத்தின் மீது குறிப்பாக அவருக்கு நெருங்கிய உறவினர் மீதும் கடமையாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:10

நோன்பு எப்போது விதியாக்கப்பட்டது?

இஸ்லாத்தின் பெரும்பாலான சட்டங்களைப் போல நோன்பும் ஹிஜ்ராவின்பின் மதினாவில் வைத்தே விதியாக்கப்பட்டது. மக்கா காலம் நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கு அடித்தளம் இடும் காலமாக இருந்தது. உள்ளங்களில் ஏகத்துவத்தின் அடிப்படைகளையும் ஈமானிய பெருமானங்களையும் ஒழுக்கங்களையும் பதியச் செய்து நம்பிக்கை சிந்தனை, ஒழுக்கம், நடத்தை என்பவற்றில் படிந்துள்ள ஜாஹிலிய்யப் பதிவுகளை விட்டும் தூய்மைப் படுத்துவதாகவே மக்கா காலம் அமைந்திருந்தது.

ஆனால் ஹிஜ்ராவின் பின்னர் "ஈமான் கொண்டவர்களே! என்று அழைக்கப்படும் அளவுக்கு முஸ்லிம்கள் தனித்தன்மை வாய்ந்த கட்டுக்கோப்பான சமூக அமைப்பாக மாறிவிட்டனர். அப்போதுதான் மார்க்கக் கடமைகள் சட்டமாக்கப்பட்டன. சட்ட வரையறைகள் போடப்பட்டன. அச்சட்டங்கள் தெளிவுற விளக்கவும் பட்டன. அதிலொன்றுதான் நோன்பு.

மக்காவில் ஐவேளைத் தொழுகையைத் தவிர வேறெதுவும் சட்டமாக்கப்படவில்லை. தொழுகைக்கு தனியான முக்கியத்துவம் இருந்ததே அதற்கான காரணமாகும். அதாவது தொழுகை நுபுவத்தின் பத்தாம் ஆண்டில் இஸ்ரா பயணத்தின் போதுதான் கடமையாக்கப்பட்டது. அதிலிருந்து சுமார் ஐந்து வருடங்களின் பிறகு ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில்தான் நோன்பு கடமையாக்கப்பட்டது. இதே ஆண்டில்தான் ஜிஹாதும் கடமையாக்கப்பட்டது. நபிகளார் மரணிக்கும் போது ஒன்பது ஆண்டுகள் றமழான் நோன்பை நோற்றிருந்தார்.

இது பற்றி இமாம் இப்னுல் கையிம் கூறும் போது, "உடல் தேவைகளை, அன்றாடப் பழக்கவழக்கங்களை விட்டும் மனித உள்ளங்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாக இருந்ததால்தான் நோன்பை சட்டமாக்குவது ஹிஜ்ராவுக்குப் பின் இஸ்லாத்தின் நடுப்பகுதிவரை பிற்போடப்பட்டது. மனித உள்ளங்களில் ஏகத்துவம், தொழுகையின் மீது நிலைபெற்று குர்ஆனின் ஏவல்களை ஏற்கப் பழகியபோது படிமுறை அடிப்படையில் நோன்பும் சட்டமாக்கப்பட்டது." (ஸாதுல் மஆத் – பாகம் 2, பக்கம் 30)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:11

நோன்பு சட்டமாக்கப்பட்ட கால கட்டங்கள்

இரண்டு கட்டங்களாக நோன்பு சட்டமாக்கப்பட்டது. முதலாவது கட்டம் – முகல்லபின் தெரிவுக்குரிய காலகட்டம். அதாவது இரண்டிலொன்றை தெரிவு செய்யும் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்த காலகட்டத்தைக் குறிக்கும். முகல்லப் சக்தியுள்ளவராயின் நோன்பு நோற்பதே மிகவும் சிறந்தது. இல்லாவிட்டால் பித்யாவுடன் நோன்பை விடமுடியும். பித்யாவாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். அதற்கு மேற்பட்டோருக்கு உணவளித்தாலும் அது அவருக்கு நன்மையாகவே அமையும்.
இது பற்றிக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது. "ஈமான் கொண்டவர்களே! நீங்கள் தக்வாவைப் பெறலாம் என்பதற்காக உங்களுக்கு முன்னால் இருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் ஒரு குறிப்பிட்ட காலம் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. உங்களில் நோயாளியாக இருப்பவர் அல்லது பிரயாணத்திலிருப்பவர் அதனை வேறுநாட்களில் நோற்றுக் கொள்ளட்டும். நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள் பித்யாவாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும். மேலதிகமாக உணவளிப்பவருக்கு அது நன்மையாகவே அமையும். நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்கு சிறந்தது" (அல்பகரா 183௧84) அதாவது விரும்பியவர் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் நோன்பை விட்டுவிட்டு ஃபித்யா கொடுக்கலாம் என்பதே இவ்வசனம் உணர்த்தும் கருத்தாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:11

கட்டாயமாக்கப்பட்ட காலப்பிரிவு

இரண்டாவது கட்டம் – முன்னைய வசனம் வழங்கிய தெரிவுரிமை மாற்றப்பட்டு, நோன்பு கட்டாயமாக்கப்பட்ட காலத்தை இது குறிக்கும். இது தொடர்பாக பின்வரும் வசனம் இறங்கியது.

"அல்குர்ஆன் இறக்கப்பட்ட றமழான் மாதம், அது மனிதர்களுக்கு நேர்வழியாகவும் ஹுதாவையும் புர்கானையும் தெளிவுபடுத்தும் ஆதாரமாகவும் இருக்கின்றது. உங்களில் அத்தகைய மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாக அல்லது பிரயாணத்திலிருப்பவர் அதை வேறு நாட்களில் நோற்கலாம். அல்லாஹ் உங்களுக்கு இலேசையே விரும்புகின்றான். அவன் உங்களுக்கு கஷ்டத்தை விரும்பவில்லை. குறிப்பிட்ட கால நோன்பை நீங்கள் பூரணப்படுத்தவும் உங்களுக்கு வழிகாட்டிய அல்லாஹ்வை உயர்த்துவதற்குமே இவ்வாறு கூறுகின்றான். இதனால் நீங்கள் நன்றியுடையவர்களாக மாறலாம்." (அல்பகரா 185)

ஸலமத் இப்னு அக்வஃ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் புகாரி, முஸ்லிமில் பதியப்பட்டுள்ள ஹதீஸ் பின்வருமாறு "நோன்பு நோற்க சக்தியற்றவர்கள் பித்யாவாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற வசனம் இறங்கிய போது விரும்பியவர்கள் நோன்பை விட்டுவிட்டு பித்யா கொடுத்துக் கொண்டிருந்தனர். இறுதியாக இதை அடுத்துள்ள ஆயத் இறங்கியதும் முன்னைய சலுகையை மாற்றிவிட்டது" (ஆதாரம் முத்தபக் அலைஹி – அல்லுஃலுஃவல் மர்ஜான் 702)

முஸ்லிமின் ஓர் அறிவிப்பில் "உங்களில் அம் மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்." என்ற வசனம் இறக்கப்பட்ட போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் "அது நோன்பு நோற்கப்படும் ஆஷுறாவாக இருந்தது. ரமழானில் நோன்பு விதியாக்கப்பட்ட போது விரும்பியவர் நோன்பை நோற்கலாம் விருப்பமில்லை என்றால் விட்டுவிடலாம் என்ற நிலையே இருந்தது." இவ்வாறே இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரின் அறிவிப்புக்களையும் தந்துள்ளார்.

ஊரிலிருக்கும் ஆரோக்கியமானவர்கள் மீது அல்லாஹ் நோன்பைக் கடமையாக்கி, நோயாளிக்கும் பிரயாணிக்கும் சலுகை வழங்கினான். இஸ்லாம் அனைத்து சட்டமாக்கல்களிலும் கையாண்டுள்ள நேரிய வழிமுறை இதுதான். ஃபர்ளான விஷயங்களை விதிப்பதாயினும் அல்லது ஹராமானவற்றைத் தடை செய்வதாயினும் இஸ்லாத்தில் இப்போக்கை காணலாம். அதுதான் சட்டமாக்குவதில் படிமுறைப் போக்கைக் கொள்வதாகும். அது கஷ்டத்தை ஏற்படுத்தாமல் இலகுவை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

நோன்பு கட்டாயமாக்கப்பட்ட இக்கால கட்டமும் இரு ஒழுங்கைப் பின்பற்றியே வந்தது. அதன் முதல் கட்டத்தில் அவர்கள் மீது கடுமையாகவும் அடுத்து கடுமையைக் குறைத்து அருளாகவும் அடைந்தது.

முதற்கட்டத்தில் அவர்கள் தூங்குவதற்கு அல்லது இஷா தொழுகைக்கு முன்னுள்ள நேரத்தில் உண்பவர்களாகவும் பருகுபவர்களாகவும் பெண்களோடு உறவாடுபவர்களாகவும் இருந்தனர். உறங்கிவிட்டால் அல்லது இஷாவைத் தொழுதுவிட்டால் அடுத்த இரவு வரும்வரை மேற்குறித்தவற்றில் எதுவும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

அன்ஸார் தோழர்களில் ஒருவருக்கு பின்வரும் சம்பவம் நடந்தது. அவர் பகல் மழுவதும் உழைத்துக் கொண்டிருந்தார். நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் உணவு சாப்பிட மனைவிடம் சென்றார். மனைவி வந்து அவரைப் பார்த்த போது அவருக்குத் தூக்கம் மிகைத்து சாப்பிடாமல் அப்படியே தூங்கிவிட்டார். மாறுநாள் பகலாகிய போது கடும் களைப்பினால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

அவ்வாறே உமர் ரளியல்லாஹு அன்ஹு, கஃபிப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு போன்ற சில சஹாபாக்கலும் உறங்கிய பிறகு அல்லது மனைவியர் உறங்கிய பிறகு தொடர்பு கொண்டிருந்தனர். இது அவர்களுக்கு பெரிய சங்கடமாக இருந்தது. எனவே இதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அவர்கள் முறையிட்டனர். உடனே அல்லாஹ் நோன்பு வசதியாக்கப்பட்ட மூன்றாவது கட்டத்தைப் பிரதிபலிக்கும் வசனத்தை இறக்கினான்.

"நோன்பின் இரவு நேரத்தில் உங்கள் மனைவியரோடு சல்லாபிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான். அவன் உங்கள் தௌபாவை ஏற்று உங்களை மன்னித்தும் விட்டான். இப்போது பெண்களோடு உறவாடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைப் பெற்றுக் கொள்ளுங்கள். பஜ்ரிலிருந்து அடிவானத்தில் மென்வெள்ளை தோன்றும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். பின் இரவானதும் நோன்பைப் பூரணப்படுத்துங்கள். பள்ளிவாயலில் இஃதிகாப் இருக்கும் போது பெண்களோடு பேசாதீர்கள். மேற்கூறியவை அல்லாஹ்வின் வரையறைகள். அதை நெருங்காதீர்கள். அவ்வாறே மனிதர்கள் தக்வாவைப் பெறலாம் என்பதற்காக அல்லாஹ் தனது வசனங்களை அவர்களுக்கு தெளிவுபடுத்துகின்றான்." (அல்பகரா 187)

இதைக் கேட்ட முஸ்லிம்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அல்லாஹ் உண்ணல், பருகல், உறவாடல் அனைத்தையும் பஜ்ர் வரை இரவின் எல்லா நேரங்களிலும் அனுமதித்துவிட்டான். ஏற்கனவே இருந்த தடைகளை அவர்களில் சிலர் மீறியதால் அவர்களை மன்னித்து அவர்கள் மேல் இரகசியம் கொண்டு இச்சலுகையை வழங்கினான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:12

நோன்புக்கு பிறைமாதத்தை ஏன் விதியாக்கப்பட்டது?

பல காரணங்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் அல்லாஹ் நோன்பைக் கணிப்பிட சந்திர மாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளான்.

முஸ்லிம்களின் அனைத்துக் கணிப்பீடுகளும் சந்திர மாதத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. உதாரணமாக சகாத் கணிப்பீடு, ஹஜ் யாத்திரை, பெண்களின் இத்தாக் காலம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். அல்லாஹ் இதுபற்றிச் சொல்லும் போது "நபியே அவர்கள் உம்மிடம் பிறைகளைப் பற்றிக் கேட்கின்றனர். நீங்கள் சொல்லுங்கள் அவை மனிதர்களுக்கு ஹஜ்யாத்திரைக்குரிய நேரக்கணிப்பீடுகளாக விளங்குகின்றன." (அல்பகரா 189)

முஸ்லிம்கள் சந்திர மாதங்களைக் கொண்டு கணிப்பீடு செய்வது ஓர் இயற்கையான விடயமே. பிறைகளின் தோற்றத்தை வைத்து கணிப்பீடு செய்வது ஓர் இயற்கையின் அடையாளத்தையே காட்டுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் சந்திர மாதங்கள் பருவகாலங்களில் மாறிமாறி வருகின்றது. ஒரு முறை கோடையில் வந்தால் மறுமுறை மாரியில் வருகின்றது. ஒரு தடவை வசந்த காலத்தில் வந்தால் மறு தடவை இலையுதிர் காலத்தில் வருகின்றது. சிலபோது பனிக்காலத்தில் வந்தால் அடுத்தமுறை வரட்சிக்காலத்தில் வருகின்றது. அப்போது சந்திர நாட்கள் நீண்டு செல்வதுமுண்டு, குறுகிவிடுவதுமுண்டு. சமநிலையாகவும் இருக்கும். இதன் மூலம் ஒரு முஸ்லிம் குளிர்காலத்திலும் வெயில் காலத்திலும் அல்லது நீண்ட நாட்களாகவும் குறுகிய நாட்களிலும் நோன்பு நோற்க வாய்ப்பு ஏற்படுகின்றது. ஒரு புறத்தில் நோக்கும் போது இதிலொரு சமநிலைத் தன்மை காணப்படுகின்றது. எல்லா நேரங்களிலும் எல்லா நிலைகளிலும் ஒரு முஸ்லிம் தனது இரட்சகனுக்கு வழிப்பட அவனது கடமைகளை மேற்கொள்ள ஒரு நடைமுறை உறுதிப்பாடாகவும் இருக்கிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:13

பிறை மாதத்தில் 29 அல்லது 30 நாட்கள்

சந்திர மாதம் 29 நாட்களைவிட குறைவாகவோ 30 நாட்களைவிட அதிகமாகவோ வருவதில்லை. நடைமுறையில் ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துவது போல ஷரிஆவின் சட்டவசனங்களும் உறுதிப்படுத்துகின்றன. ஒரு ஹதீஸில் சந்திர மாதம் 29 ஆக அல்லது 30 நாட்களாக இருக்கும் என்று வந்துள்ளது. இதனை நபிகளார் சொல்லிக் காட்டியும் தெளிவுபடுத்தியுள்ளார். (ஆதாரம் முத்தபக் அலைஹி, அல்லுஃலுஃ வல் மர்ஜான் 654, 655, 658)

சந்திர மாதம் 30ஆக இருந்தாலும் 29ஆக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் நோன்பு நோற்றதற்கான நின்று வணங்கியதற்கான கூலி ஒன்றேயாகும். இந்தக் கருத்தை பின்வரும் ஹதீஸ் குறிப்பிடுகின்றது.

"இரு மாதங்களின் கூலி குறைந்துவிடமாட்டாது. அவையாவன றமழானும் துல்ஹஜ்ஜுமாகும்" (ஆதாரம் முத்தபக் அலைஹி அல்லுஃலுஃ வல்மர்ஜான் 659) இஸ்லாத்தின் இரு பெரும் கடமைகள் இருப்பதே இம்மாதங்கள் இரண்டையும் விஷேடமாக குறிப்பிடுவதற்குக் காரணமாகும். முதலாவது நோன்பு மாதம். இரண்டாவது ஹஜ்மாதமாகும். இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். "நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் 30 நாட்கள் நோன்பு பிடித்ததைவிட 29 நாட்களே அதிகமாக நோன்பு பிடித்துள்ளோம்." (ஆதாரம் அபுதாவூத் 2322, திர்மிதி 689, அஹ்மத் 3776)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:13

ரமழான் மாதத்தை உறுதிப்படுத்துவதெப்படி?

சந்திர மாதத்தை அடிப்படையாகக் கொண்டு ரமழான் நோன்பை அல்லாஹ் விதியாக்கி இருப்பதால் அதற்குறிய பிறை தோன்றிவிட்டதா என்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும். றமழான் மாதம் வந்துவிட்டதென்பதற்கு பிறையே பிரத்தியட்சமான அடையாளமாகும். இதுபற்றி குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

"நபியே அவர்கள் உம்மிடம் பிறைகளைப் பற்றிக் கேட்கிறார்கள். நீங்கள் சொல்லுங்கள் அவை மனிதர்களுக்கும் ஹஜ்யாத்திரைக்கும் காலக்கணிப்பீடுகளாக அமைகின்றன." (அல்பகரா 189) இவ்வாறு சவ்வால் பிறையின் உதயத்தோடு அதுவும் வெளிவருகின்றது.

பிறையின் தோற்றத்தை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறை யாது? இங்கே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனைத்து சமூகங்களுக்கும் இலகுவான சிக்கல் இல்லாத இயற்கை வழிமுறை ஒன்றை விதித்துள்ளார்கள். அக்காலத்தில் அவரது சமூகம் எழுதவோ, கணிப்பிடவோ தெரியாத பாமரச்சமூகமாக இருந்தது. எனவேதான் கண்களால் பிறையைப் பார்த்து அறியும் வழிமுறையை குறிப்பிட்டார்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது; "பிறையைக் கண்டு நோன்பு பிடியுங்கள். அதனைக் கண்டு நோன்பை முடியுங்கள். பிறை உங்களுக்கு மறைந்திருந்தால் ஸஃபானின் காலத்தைக் கணித்து 30ஆக பூரணப்படுத்துங்கள்." (ஆதாரம் முத்தபக் அலைஹி அல் லுஃலுஃ வல் மர்ஜான் 656)

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் றமழானைக் குறிப்பிட்டுக் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது "பிறையைக் காணும் வரை நோன்பு நோக்க வேண்டாம். அதைக் காணும் வரை நோன்பை விடவும் வேண்டாம். மேகம் உங்களுக்கு மறைத்தால் முன்னைய மாதத்தோடு சேர்த்து முழுமையாக கணிப்பிட்டுக் கொள்ளுங்கள்." (ஆதாரம்: முத்தபக் அலைஹி அல் லுஃலுஃ வல் மர்ஜான் 653)

இது சமூகங்களுக்குக் கிடைத்த அருளாகும். வானியல் கணிப்பீடு பற்றி அக்கால சமூகம் அறியாததாலும் அதை சரிசெய்ய தெரியாததாலும் அல்லாஹ் அவர்கள் மீது அதை விதிக்கவில்லை. அதனை விதித்திருந்தால் மார்க்கத்தோடு உடன்படாத ஏனைய சமூகங்களை இதுவிடயத்தில் பின்பற்ற வேண்டியிருந்திருக்கும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:13

றமழானை உறுதிப்படுத்த மூன்று வழிமுறைகள்

பின்வரும் மூன்று வழிமுறைகளில் ஒன்றைக் கொண்டு றமழான் மாதம் தோன்றிவிட்டது என்பதை உறுதிப்படுத்தலாம் என்று ஸஹீஹான கதீஸ்கள் அறிவிக்கின்றன.
பிறையை பார்த்தல்

ஸஃபானிலிருந்து கணிப்பீட்டை 30 ஆக பூரணப்படுத்தல்

பிறையை வானியல் ரீதியாக திட்டமிட்டுக் கணித்தல்

முதல் வழிமுறை

பிறையைப் பார்ப்பதைப் பொறுத்தவரையில் சட்ட அறிஞர்கள் பல கருத்துக்களைக் கொண்டுள்ளனர். நேர்மையான ஒருவரின் பார்வையா? அல்லது நேர்மையான இருவரின் பார்வையா? அல்லது பெருந்தொகையானோர் பார்க்க வேண்டுமா? நேர்மையான ஒருவர் பார்த்தால் போதும் என்பதை ஏற்போர் இப்னு உமரின் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொள்கின்றனர். "மக்கள் பிறையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் பிறையைப் பார்த்ததாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அறிவித்தேன். அதைக் கேட்டு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு நேற்றதோடு மக்களையும் நோன்பு பிடிக்குமாறு ஏவினார்கள்." (ஆதாரம் அபூதாவூத் 2342)

மற்றொரு ஹதீஸில் நாட்டுப்புற அரபியொருவர் பிறையைப் பார்த்ததாக நபிகளாரிடம் அறிவிக்க அவர் பிலாலுக்குக் கட்டளையிட அவர் மக்களைப் பார்த்து "நின்று வணங்குங்கள். நோன்பு பிடியுங்கள்." என்று அறிவித்தார்கள். (அபுதாவூத் 2341) இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் விமர்சனங்கள் உண்டு. இபாதத்தில் நுழைவதற்கு நேர்மையான ஒருவரைக் கொண்டு உறுதிப்படுத்தல் மிகவும் பேணுதலானது என்று றமழானின் ஒருநாளில் நோன்பு திறப்பதைவிட ஸஃபானின் ஒரு தினத்தில் நோன்பு பிடிப்பது இலேசானது என்றும் இவர்கள் கூறியுள்ளனர்.

பிறை பார்ப்பதில் இரண்டு நேர்மையான சாட்சிகள் தேவை என்று நிபந்தனை விதிப்பவர்கள் அல்ஹுசையின் பின் ஹரீஸ் அல்குதலி என்பவரின் அறிவிப்பை ஆதாரமாகக் கொள்கின்றனர். மக்காவின் கவர்னர் அல்காரிஸ்பின் காலத்தில் பின்வருமாறு எங்களுக்கு பிரசங்கம் செய்தார். "இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறையைக் கண்டு நோன்பை அனுஷ்டிக்குமாறே எமக்கு கட்டளையிட்டுள்ளார். நாம் நேரடியாகக் காணாமல் இரண்டு நேர்மையான சாட்சிகள் காணுமிடத்து அவ்விருவரினுடைய சாட்சியத்தைக் கொண்டு நாம் நோன்பை அனுஷ்டிக்க முடியும்" (ஆதாரம் ஹாசியத்து இப்னி ஆபிதீன் பாகம் 2, பக்கம் 92) ஏனைய மாதங்களுடன் ஒப்பிட்டே இதைச் செய்ய வேண்டும். அது இரு நேர்மையான சாட்சிகளைக் கொண்டு நிறுவப்படுகின்றது.

பிறை பார்ப்பதற்கு பெருந்தொகையானோர் தேவை என்று நிபந்தனை விதிப்பவர்கள் ஹனஃபீக்களாவர். இது பிறை தெளிவாகத் தெரியும் பட்சத்திலே சாத்தியமாகும். மேகம் மூடிய நிலையில் ஒருவர் பார்த்தால் போதும் என்று ஹனபீக்கள் கூறுவர். மேகம் விலகும் போது ஒரேயொருவர் அதனைக் கண்டு ஏனையவர்கள் காணாத நிலையிலேயே இது இடம்பெறும். ஆனால் வானம் தெளிவாக இருந்தால் அதாவது மேகமோ, பார்வையை மறைக்கும் ஏதேனும் தடையோ இருந்தால் பலர் காணாமல் ஒரேயொருவர் மாத்திரம் கண்டால் என்ன செய்வது என்ற கேள்விக்கு பெருந்தொகையானோருக்கு அதை அறிவிப்பது அவசியம் என்று கூறுகின்றது. பெருந்தொகையானோர் பார்க்காமல் தனியொருவர் மாத்திரம் பார்ப்பதென்பது எவ்வளவுதான் பார்வைத் தெளிவு இருந்தாலும் அது ஒரு குழறுபடி என்பது உண்மை. (காஷியத்து இப்னு ஆபிதீன் பாகம் 2, பக்கம் 92)

இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு , நாட்டுப்புற அறபி ஆகியோரின் அறிவிப்பை பொருத்தவரையில் பிறையை உறுதிப்படுத்த ஒருவரின் பார்வை போதும் என்றாலும் அல்லாமா றஷீத் ரிழா ரஹ்மதுல்லாஹி அலைஹி, முஃனி என்ற நூலுக்கு எழுதிய விளக்கவுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "அவ்விரு அறிவிப்புக்களிலும் மனிதர்கள் பிறையைப் பார்த்தார்கள் என்றே இருக்கிறது. ஒரேயொருவரைத் தவிர வேறுயாரும் அதனைப் பார்க்கவில்லை என்று இல்லை. இது கருத்து வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டது. குறிப்பாக இமாம் அபூகனிபாவோடு இந்த அடிப்படையிலேயே இவ்விருவரின் அறிவிப்புக்களை கொண்டு எழுப்பப்பட்ட அனைத்தையும் அவர் நிராகரிக்கிறார்." (அத்தஃலீக் அலல்முஃனி மஆஃ அஷ்சரகில் கபீர் பாகம் 3, பக்கம் 93)

பிறையைப் பார்க்கவேண்டும் என்பதே இமாம் அல் காழி அவர்களின் கருத்தாகும். வரையறுக்கப்படாத ஒரு தொகையினர் பார்க்க வேண்டும் என்பதே நம்பகமான கருத்தாகும். (அல்இக்தியார் பீ ஷரகில் முக்தார் பாகம் 1, பக்கம் 129

ஷஅபானில் 29ஆம் நாள் மாலையில் பிறையைப் பார்க்கத் தொடங்குவது முஸ்லிம்கள் மீது வாஜிபாகும். "ஒரு வாஜிபை நிறைவேற்ற இன்னொன்று அவசியமாயின் அதுவும் வாஜிபாகக் கருதப்படும்" என்ற இஸ்லாமிய சட்டவிதிக்கேற்ப போதிய தொகையினர் பிறையைப் பார்ப்பது வாஜிபாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:14

இரண்டாவது வழிமுறை

ஆகாயம் தெளிவாக இருந்தாலும் மேகம் மறைத்திருந்தாலும் ஸஃபானை 30ஆக பூரணப்படுத்த வேண்டும் ஸஃபானின் 30ஆம் இரவில் பிறையைப் பார்த்தாலும் யாரும் பார்க்காவிட்டாலும் ஸஃபானை 30ஆக பூரணப்படுத்த வேண்டும்.

இங்கு ஸஃபான் மாதம் அது ஆரம்பத்திலிருந்து அது உறுதிப்படுத்தப்பட்டது அறியப்பட்டதாக இருக்க வேண்டும். பிறை தெளிவாக தெரியும் 30 ஆம் இரவில் அறிவதற்காக வேண்டியும் பிறையைக் காணாத போது மாதத்தைப் பூரணப்படுத்துவதற்காகவும் ஸஃபான் பிறை நிறுவப்பட்ட முறை அறியப்பட்டதாக இருப்பது அவசியமாகும்.

இது குறை நிகழக்கூடியதொரு விடயமே. மாதம் வந்துவிட்டதை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துவது இரண்டு மூன்று மாதங்களில் மட்டும் நிகழ முடியாதது. நோன்பில் பிரவேசித்தலை உறுதிப்படுத்த றமழான் இருக்கிறது. அதிலிருந்து வெளியேறிவிட்டதை உறுதிப்படுத்த ஷவ்வால் இருக்கிறது. அறபா தினத்தையும் அதற்குப் பின்னுள்ள வற்றையும் உறுதிப்படுத்த துல்ஹஜ் இருக்கிறது. எனவே சமூகத்தின் மீதும் பொறுப்பு தாரிகள் மீதும் இதனோடு தொடர்புபடும் அனைத்து மாதங்களையும் நுணுக்கமாக உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். ஏனெனில் அவற்றில் சிலவற்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:14

மூன்றாவது வழிமுறை

மேகமூட்டம் இருக்கும் போது பிறையை திட்டமிட்டு கணிப்பீடு செய்வதை இது குறிக்கும். இதை ஹதீஸ் பின்வருமாறு கூறியுள்ளது. "உங்களுக்கு மேகம் மறைத்தால் அல்லது தெளிவாகத் தெரியாவிட்டால்" அதாவது பார்ப்பதற்குத் தடையேதும் இருந்தால் என்பதே இதன் கருத்தாகும். மாலிக், நாபிஃ, இப்னு உமர் போன்ற அதிசிறந்த நம்பகமான சில அறிவிப்புகளில் "உங்களுக்கு மேகம் மறைத்தால் பிறையைத் திட்டமிட்டுக் கணித்துக் கொள்ளுங்கள்." (ஆதாரம்: புகாரி) என வந்துள்ளது. ‘திட்டமிட்டுக் கணித்தல்’ என்பதன் கருத்து யாது?

இமாம் அஹமத் பின் கம்பலும் ஒரு பிரிவினரும் கூறுவதாக இமாம் நபவி ரஹ்மதுல்லாஹி அலைஹி, அல் மஜ்முஃ என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். "இதன் கருத்து அதனைக் குறுக்குங்கள். மேகங்களை அடிப்படையாக வைத்து கணிப்பீடு செய்யுங்கள். கதீஸில் பாவிக்கப்பட்டுள்ள கதர் என்பதற்கு லையக்க என்பதே பொருளாகும். எனவே இவர்கள் மேகம் மூடியிருக்கும் அவ்விரவிலே நோன்பு நோற்பதை கடமையாக்கியுள்ளனர்.

தாபியீன்களில் ஒருவராகிய மித்ரப் பின் அப்தில்லா அபுல் அப்பாஸ் பின் சுறைச், இப்னு குதைபா ஆகியோர் சந்திரனின் தங்குமிடங்களுக்கேற்ப திட்டமிட்டு கணிப்பீடு செய்யுங்கள் என்பதே இதன் கருத்து எனக்கூறியுள்ளனர்.

இமாம்களான அபூ ஹனீஃபா, ஷாஃபீ, ஸலப் கலப் 30 நாட்கள் பூரணப்படுத்துவதற்கேற்ப திட்டமிட்டு கணிப்பீடு செய்யுங்கள் என்பதே இதன் கருத்தாகும் எனக் கூறியுள்ளனர்.

பெரும்பான்மையான சட்ட அறிஞர்கள் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட அறிவிப்புக்களையே ஆதாரமாக கொள்கின்றனர். அவை அனைத்தும் நம்பகமான தெளிவான அறிவிப்புக்களாகும். "30ஆக பூரணப்படுத்துங்கள்" "30 ஆக கணிப்பிடுங்கள்" போன்ற ஹதீஸ் பிரயோகங்கள் அதைத் திட்டமிட்டுக் கணிப்பீடு செய்யுங்கள் என்ற பொதுப்படையான அறிவிப்பை விளக்குவதாகவே அமைந்துள்ளன. (ஆ.அல் மஜ்மு பாகம் 6, பக்கம் 270)

இமாம் அபுல் அப்பாஸ் பின் சுறைஜ் இரு அறிவிப்புக்களில் ஒன்றை அடுத்தற்கு விளக்கமாகக் கொள்ளவில்லை. ஆனால் இதனை இப்னுல் அறபி அவரிடமிருந்து பின்வருமாறு எடுத்துக் கூறுகிறார். "அதனைத் திட்டமிட்டு கணிப்பீடு செய்யுங்கள்" என்பது அக்கலையில் தேர்ச்சி பெற்றோருக்கான பிரயோகமாகும். ‘காலத்தைப் பூரணப்படுத்துங்கள்’ என்பது பொதுவான பிரயோகமாகும்." (ஃபத்ஹுல் பாரி பாகம் 6, பக்கம் 23)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:15

சூழ்நிலைகளில் வேறுபாட்டுக்கு ஏற்ப சட்டப்பிரயோகம் வித்தியாசப்படுவது வழக்கமான அம்சமே. காலம், இடம், வர்த்தமானங்கள் மாறுவதற்கேற்ப சட்டத்தீர்ப்பும் மாற்றமடையும் என்பதற்கு இதுவே அடிப்படையாகும். இமாம் நபவி மேலும் கூறும் போது யார் சந்திரனின் தங்குமிடங்களுக்கேற்ப என்று கூறுகிறாரோ அவரது கூற்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் "நாம் எழுதத் தெரியாத கணிப்பிடத் தெரியாத பாமரச் சமூகம்" என்ற கூற்றுக்கு முரணானதாகும்.

ஏனெனில் கணிப்பீடு செய்வதை அம்மக்களுக்கு விதித்திருந்தால் அது அவர்களுக்கு கஷ்டமாக இருந்திருக்கும். ஏனெனில் அப்பெரும் பிரதேசங்களில் மிகச்சொற்ப தொகையினரே கணிதவியலை அறிந்திருந்தனர். (அல் மஜ்முஃ பாகம் 6, பக்கம் 270)

இமாம் நபவி ஆதாரமாக கொள்ளும் ஹதீஸில் உண்மையில் அவருக்கு ஆதாரம் கிடையாது. ஏனெனில் அந்த ஹதீஸ் அக்கால சமூகத்தின் நிலை பற்றியே பேசுகிறது. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட வேளையில் இருந்த சமூகத்தை அது வர்ணிக்கின்றது. மாறாக பாமரத் தனமாக தொடர்ந்தும் இருப்பது அவசியம் என்று அந்த ஹதீஸ் சொல்லவரவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது சமூகத்திற்கு எழுதக் கற்றுக் கொடுத்து அதனை பாமரத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காக கடுமையாக முயற்சித்துள்ளார்கள். பத்ர் போராட்டத்தில் வைத்தே அப்பணியை ஆரம்பித்து வைத்தார்கள். பிற்காலத்தில் ஒரு பெண் கணித வியலாளர் அச்சமூகத்தின் மத்தியில் தோன்றுவதையும் அவர் தடை செய்யவுமில்லை.

முஸ்லிம்கள் அவர்களது நாகரிகத்தின் வளர்ச்சி காலப்பிரிவுகளில் அறிந்துவைத்திருந்த வானியல் விஞ்ஞானம் இன்று மனிதன் சந்திரனுக்கு செல்லும் அளவுக்கு வளர்ச்சிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. வானியல் விஞ்ஞானக் கணிப்பீடு இஸ்லாம் வெறுத்தொதுக்கும் நட்சத்திர சோதிடக்கலை போன்ற ஒன்றல்ல.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:15

இமாம் நவவி ரஹ்மதுல்லாஹி அலைஹி குறிப்பிடும் வானியல் கணிப்பீடு பற்றி அப்பெரும் பிரதேசங்களில் மிகச்சிலரே அறிந்திருந்தனர் என்ற கருத்து அவரது காலத்தைப் பொறுத்தவரையில் சரியாக இருக்கலாம். ஆனால் நம்முடைய காலத்தைப் பொறுத்தவரையில் அது ஏற்புடைய கருத்தன்று. இன்று பல்வேறு பல்கலைக்கழகங்களில் வானியல் படிப்பிக்கப்படுகின்றது. இன்று அதி நுணுக்கமும் சிறப்பும் வாய்ந்த பாரிய வானியல் கருவிகளும் உயர் வசதிகளைக் கொண்ட வானியல் அவதான நிலையங்களும் இத்துறையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. புகழ்பெற்ற ஒரு கருத்துத்தான் வானியல் விஞ்ஞான அளவீடுகளில் இன்று தவறு நிகழ்வது ஒரு செக்கனுக்கு ஒரு இலச்சத்தில் ஒரு வீதமேயாகும் என்று சர்வதேச அளவில் சொல்லுமளவுக்கு இது ஒரு கோட்பாடாக மாறிவிட்டது.

அவ்வாறே இன்று பெரிய நாடுகளும் சின்னஞ்சிறு நாடுகளும் உகலம் என்றில்லாமல் ஒரேயொரு தேசத்தைப் போன்று நெருக்கமானவையாக மாறிவிட்டன. இதை பெரிய கிராமம் என்றழைக்கப்படுகிறது. ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்துக்கோ கிழக்கிலிருந்து மேற்கிற்கோ செய்தி பரிவர்த்தனைக்கு சரியாக ஒரு செக்கன்கூட எடுப்பதில்லை.

ஷாஃபிஈ சிந்தனைப் பிரிவைச் சேர்ந்த அபுல் அப்பாஸ் இப்னு சுறைஜ் ரஹ்மதுல்லாஹி அலைஹி வானியலையும் சந்திரனின் தங்குமிடங்களையும் ஒருவர் றமழான் தோன்றிவிட்டதையும் வானியல் மூலமாக அறியமுடியுமாயின் அவர் நோன்பு பிடிப்பது கடமையாகும் எனக் கூறுகிறார். ஏனெனில் அவர் ஆதாரபூர்வமாக மாதத்தை அறிந்துள்ளார். ஆதாரத்தின் மூலம் அறிந்ததையும் அல்காழி அபு தையிப் தெரிவு செய்துள்ளதையும் இது ஒத்துள்ளது. உத்தேச கருத்தின் அடிப்படையில் பெற்றதே அதற்கான காரணமாகும். நம்பத்தகுந்த ஒருவர் அதைக் கண்டதாக அறிவித்திருந்தாலும் அது இதனை ஒத்துள்ளது. அப்போது நோன்பு நோற்கக் கூடும் ஆனால் அவசியமில்லை. அவர்களில் சிலர் நம்பத்தகுந்த ஒருவரின் அறிவிப்பைப் பின்பற்றி நோன்பு பிடிப்பது ஆகும் எனக் கூறியுள்ளனர். (அல்மஜ்மூஃ பாகம் 6, பக்கம் 279,280)

நவீன காலத்தில் சில மூத்த ஆலிம்கள் திட்டவட்டமான வானியல் விஞ்ஞான கணிப்பீட்டின் படி பிறையை உறுதிப்படுத்த முடியும் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஹதீஸ்கலை அறிஞரான அல்லாமா அஹமத் முஹம்மத் ஷாகிர் ரஹ்மதுல்லாஹி அலைஹி ‘அரபு மாதங்களின் ஆரம்பத்தை வாணியல் கணிப்பீடு மூலம் உறுதிப்படுத்துவது ஷரிஅத் ரீதியாக கூடுமா?’ என்ற தனது ஆய்வில் இது பற்றி எழுதியுள்ளார். பலமான ஆதாரத்தினைக் கொண்டு இதனை நிறுவியுள்ளார். அதன் சுருக்கத்தை நாம் இங்கே தருகின்றோம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:15

பார்வையில் தங்கியிருப்பது எழுத கணிப்பிடத் தெரியாத சமூகத்தின் பாமரத்தன்மைக்காகவே. அச்சமூகத்தின் நிலை மாறிவிட்டால் அதாவது எழுதவும் கணித்துச் சொல்லவும் தெரிந்து கொண்டால் தன்னிலேயே தங்கி நிற்க சக்தி பெற்றிருந்து – வானியல் கணிப்பீட்டின் அடிப்படையில் மாதங்களை உறுதிப்படுத்திக் கொள்வதில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது தங்கிநிற்காமல் தன்னிலே தங்கி நிற்கச் சக்திபெற்று விட்டால் பிறையைப் பார்ப்பதற்குப் பதிலாக வானியல் கணிப்பீட்டையே எடுத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் ஐக்கியத்தைப் பேணுவதற்கு இது மிகச்சிறந்த காத்திரமான மிக நுண்ணிய ஒரு வழிமுறையாகும். முஸ்லிம்களில் சிலர் வியாழனும் வேறு சிலர் வெள்ளியும் ஏனையோர் சனியும் நோன்பு நோற்கும் அளவுக்கு முஸ்லிம் நாடுகளுக்கு மத்தியில் நாட்டுக்கு நாடு நோன்பு பிடிப்பதிலும் பெருநாள் கொண்டாடுவதிலும் இன்று நிலவும் பாரிய முரண்பாட்டை இந்த வானியல் கணிப்பீடு மூலம் நீக்க முடியும்.

இவருக்கு முதல் அல்லாமா அஸ்செய்யித் ரஷீத் றிழா அல்மனார் சஞ்சிகையில் நோன்பு பற்றிய வசனங்களுக்கு விளக்கமளிக்கும் போது திட்டவட்டமான வானியல் கனிப்பீட்டின் படி செயற்படுவதற்கு அழைப்புவிடுத்தார்.

நவீன காலப்பிரிவின் இன்னொரு மிகப்பெரும் சட்ட அறிஞர் முஸ்தபா அஹமத் அஸ்ஸர்கா அவர்களும் இக்கருத்தின் பக்கம் அழைப்புவிடுப்போரில் ஒருவராவார்.

சட்ட அறிஞர்கள் வானியல் கலையை மறுக்கிறார்கள் என்ற செய்திகளிலிருந்து தெரியவருவது என்னவெனில் அவர்கள் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சோதிடக் கலையையே மறுக்கின்றனர். அது நட்சத்திரங்களினூடாக எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சில மறைவான விசயங்களைப் பற்றிய அறிவு தனக்கிருப்பதாக வாதிடுவதாகும். இது பாத்திலாகும். இது பற்றி அபூதாவூத் அறிவிக்கின்ற ஒரு ஹதீஸ் வந்துள்ளது. "யார் நட்சத்திரம் பற்றிய சோதிட அறிவை எடுத்துக் கொள்கிறாரோ அவர் சூனியத்தின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டவராவார்."

இமாம் இப்னு தக்கீக் அல்யீத் பின்வருமாறு கூறுகிறார். "நான் கூறுவதெல்லாம் நட்சத்திர சோதிடவியலாளர்களின் கருத்துக்கேற்ப சந்திரனை சூரியனோடு ஒப்பிட்டு வானியல் கணிப்பீட்டின் படி நோன்பு பிடிப்பது கூடாது என்பதாகும். ஏனெனில் அச்சோதிடர்கள் கண்ணால் பார்ப்பதைவிட வானியல் கணிப்பீட்டின்படி மாதத்தில் ஒரு நாளையோ அல்லது இரு நாளையோ அவர்கள் முற்படுத்தி விடுகிறார்கள். இது அல்லாஹ் அனுமதி வழங்காத பகுதியில் புதிய சட்டத்தை நுழைத்து தலையிடுவதாக அமைகிறது. ஆனால் வானியல் கணிப்பீடு பார்க்க முடியுமான வகையில் பிறை தோன்றிவிட்டது என்பதைக் காட்டியும் மேகம் போன்றவற்றால் நேரடியாகப் பார்ப்பதற்கு தடை தோன்றும் போது ஷரியத் காரணம் இருப்பதனால் வானியல் கணிப்பீட்டைப் பின்பற்றுவது வாஜிபாகும்.

இதையடுத்து இமாம் இப்னுல் ஹஜர் கருத்து வெளியிடுகையில் செய்தியாளரின் நம்பகத்தன்மையை உடனடியாக நாம் ஏற்க மாட்டோம். அவர் ஒரு சாட்சியைக் காட்டுவது அவசியமாகும். சாட்சி இல்லாத நிலையில் அவரது கூற்று ஏற்கப்பட மாட்டாது. இதனை அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன். (தல்ஹீஸ் அல் ஹபீர் பாகம் 6, பக்கம் 266, 267)

ஆனால் நவீன வானியல் கலையில் உபகரணங்களின் துணையுடனும் திட்டவட்டமான கணிதவியல் கணிப்பின் மூலமும் இதனைத் தெளிவாகக் காணமுடியும். வானியல் கணிப்பீடு என்பது கலண்டர் தயாரிப்போரின் அல்லது பலாபலன் கணிப்பீட்டாளர்களின் கணிப்பீடு போன்றதே என்ற நம்பிக்கைதான் இன்றைய ஆலிம்களில் அதிகமானோரிடத்தில் காணப்படும் தவறாகும். அவ்வாறு பதிப்பித்து மக்களுக்கு விநியோகிக்கப்படும் பட்டியலில் தொழுகை நேரங்கள் சந்திர மாதங்களின் ஆரம்பம், அதன் முடிவுகள் இருப்பதைக் காணலாம். இத்தகைய கலண்டர்கள் ஸைதோ அம்ரோ தயாரித்ததாகவும் அதிலே பெரும்பாலான கலண்டர் தாயாரிப்பாளர்கள் பழைய நூல்களிலிருக்கும் நேரங்களையும் கால அளவுகளையும் தமது கலண்டர்களில் எடுத்தாள்கின்றனர்.

இதனால் இங்கே கலண்டருக்குக் கலண்டர் வித்தியாசம் காணப்படுகின்றது. அவற்றில் சில ஷஃபானை 29 நாட்களாகவும் வேறு சில 30 நாட்களாகவும் காண்பிக்கின்றனர். அவ்வாறே றமழானையும் துல்கஃதாவையும் அவை கணிப்பிட்டுள்ளன. இம்முரண்பாட்டின் காரணமாகவே அவர்கள் இதனை மறுக்கின்றனர். ஏனெனில் திட்டவட்டமான அறிவின் மீது அது அமைக்கப்பட வில்லை. திட்டவட்டமான அறிவு ஒன்றுடன் ஒன்று முரண்படாது. உண்மையும் அதுதான். ஆனால் நாம் கூறுகின்ற வானியல் விஞ்ஞானக் கணிப்பீடு அதுவல்ல.

இன்றைய நவீன வானியல் கலையால் உறுதிப்படுத்தப் படுவதைத்தான் நாம் இங்கே குறிப்பிடுகின்றோம். அது பரிசார்த்த அனுபவம். நேரடியாகக் காணல் என்பவற்றின் அடிப்படையில் நடைபெறுகின்றது. தொழில்நுட்ப, விஞ்ஞான சாதனைகள் மனிதனை சந்திரனின் மேற்பரப்பை அடைவதற்கு வழிவகுத்துள்ளன. இன்றும் அதிக தொலைவிலுள்ள கோள்களை நோக்கி வின்கலங்கள் அனுப்பப்படுகின்றன. ஒரு இலட்சத்தில் ஒரு வீதமே தவறு நிகழமுடியும். இதனால் பிறையின் தோற்றத்தை வானில் சரியாகக் கணிப்பிடுவது மிகவும் எளியவிடயமாக மாறிவிட்டது. நாம் விரும்பினால் எந்த இடத்தில் எந்த செக்கனில் பிறை தோன்றும் என்பதை மிகவும் துள்ளியமாகக் கூறமுடியும்.

நன்றி http://idrees.lk/?p=1202


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by jasmin Mon 1 Aug 2011 - 16:11

இந்த நவீன உலகில் அல்லாஹ் நமக்கு அளித்த வாய்ப்புககளை அறிய மறுக்கும் முல்லாக்கள் இருக்கும்வரை அதை நடைமுறைப் படுத்துவது சாத்தியமில்லை உறவே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 16:12

படித்து கருத்துப்பகிர்ந்தமைக்கு நன்றி உறவே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 18:26

பகிர்வுக்கு நன்றி.


நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by முனாஸ் சுலைமான் Mon 1 Aug 2011 - 18:27

இதனால் இங்கே கலண்டருக்குக் கலண்டர் வித்தியாசம் காணப்படுகின்றது. அவற்றில் சில ஷஃபானை 29 நாட்களாகவும் வேறு சில 30 நாட்களாகவும் காண்பிக்கின்றனர். அவ்வாறே றமழானையும் துல்கஃதாவையும் அவை கணிப்பிட்டுள்ளன. இம்முரண்பாட்டின் காரணமாகவே அவர்கள் இதனை மறுக்கின்றனர். ஏனெனில் திட்டவட்டமான அறிவின் மீது அது அமைக்கப்பட வில்லை. திட்டவட்டமான அறிவு ஒன்றுடன் ஒன்று முரண்படாது. உண்மையும் அதுதான். ஆனால் நாம் கூறுகின்ற வானியல் விஞ்ஞானக் கணிப்பீடு அதுவல்ல.
##* ://:-: :!@!:


:here:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 19:44

முனாஸ் சுலைமான் wrote:இதனால் இங்கே கலண்டருக்குக் கலண்டர் வித்தியாசம் காணப்படுகின்றது. அவற்றில் சில ஷஃபானை 29 நாட்களாகவும் வேறு சில 30 நாட்களாகவும் காண்பிக்கின்றனர். அவ்வாறே றமழானையும் துல்கஃதாவையும் அவை கணிப்பிட்டுள்ளன. இம்முரண்பாட்டின் காரணமாகவே அவர்கள் இதனை மறுக்கின்றனர். ஏனெனில் திட்டவட்டமான அறிவின் மீது அது அமைக்கப்பட வில்லை. திட்டவட்டமான அறிவு ஒன்றுடன் ஒன்று முரண்படாது. உண்மையும் அதுதான். ஆனால் நாம் கூறுகின்ற வானியல் விஞ்ஞானக் கணிப்பீடு அதுவல்ல.
##* ://:-: :!@!:


:here:
@. @. @.


நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 19:45

முனாஸ் சுலைமான் wrote:இதனால் இங்கே கலண்டருக்குக் கலண்டர் வித்தியாசம் காணப்படுகின்றது. அவற்றில் சில ஷஃபானை 29 நாட்களாகவும் வேறு சில 30 நாட்களாகவும் காண்பிக்கின்றனர். அவ்வாறே றமழானையும் துல்கஃதாவையும் அவை கணிப்பிட்டுள்ளன. இம்முரண்பாட்டின் காரணமாகவே அவர்கள் இதனை மறுக்கின்றனர். ஏனெனில் திட்டவட்டமான அறிவின் மீது அது அமைக்கப்பட வில்லை. திட்டவட்டமான அறிவு ஒன்றுடன் ஒன்று முரண்படாது. உண்மையும் அதுதான். ஆனால் நாம் கூறுகின்ற வானியல் விஞ்ஞானக் கணிப்பீடு அதுவல்ல.
##* ://:-: :!@!:


:here:
நல்ல கருத்து. @.


நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 21:15

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும் Empty Re: நோன்பும் அதனை உறுதிப்படுத்தும் முறையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum