Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
நம் மனதில் உள்ளதை பாடலாக சொல்லும் தளம்
5 posters
Page 1 of 1
நம் மனதில் உள்ளதை பாடலாக சொல்லும் தளம்
பாடல்கள் மூலமே மனதில் உள்ளதை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?
மியூஸிட் இணையதளம் இதை தான் அழகாக செய்கிறது.
பகிர்தலை முற்றிலும் இசைமயமாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. அதாவது நண்பர்களிடம் எதை சொல்ல நினைக்கிறோமோ அந்த செய்தியை வார்த்தைகளில் அல்லாமல் பாடலாக சொல்ல வழி செய்கிறது இந்த தளம்.
சில நேரங்களில் மனதில் உள்ளதை சொல்ல நினைக்கும் போது அதற்கான வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுவோம். ஆனால் ஏதாவது ஒரு பாடலில் மிக அழகாக அந்த உணர்வை ஒரு கவிஞர் வரிகளாக்கியிருப்பார். அதை கேட்டதுமே மனம் துள்ளி குதிக்கும். இத்தகைய பாடல் வரிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது மியூஸிட்.
பாடல்கள் வடிவில் உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொள்ள உதவும் சேவை என்றவுடன் காதலர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தோன்றினாலும் கூட எல்லோரும் எல்லாவிதமான உணர்வுகளை இசை மயமாக பகிர இந்த தளம் கைகொடுக்கும்.
பிறந்த நாள் வாழ்த்து சொல்ல, நண்பர்களை ஊக்கப்படுத்த, தூக்கத்தில் இருந்து துயிலெழுப்ப, நன்றி தெரிவிக்க, கவலைப்படாதே என்று சொல்ல என எந்த விதமான உணர்வுக்கும் ஏற்ற பாடல்களை பகிர்ந்து கொள்ளலாம்.
முகப்பு பக்கத்திலேயே இப்படி பலவிதமான உணர்வுகளுக்கான பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொருத்தமான பாடலை தெர்வு செய்து அதனை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். மின்னஞ்சல் மூலமும் பாடல்களை அனுப்பலாம்.
இணையவாசிகள் வசதிக்காக பலவகையான தலைப்புகளின் கீழ் பாடல்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. தேவை என்றால் இணையவாசிகள் தங்களுக்கு பொருத்தமான பாடலை தேடிப்பார்த்து பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.
யூடியூப் தளத்தில் இருந்து பொருத்தமான பாடல் தேடித்தரப்படுகிறது. அதனை ஓட விட்டு தேவையான இடத்தில் மட்டும் கட் செய்து அந்த இசை துண்டை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.
ஒருவர் தேடி எடுக்கும் வரிகள் அப்படியே இந்த தளத்தில் சேமித்து வைக்கப்பட வகைபடுத்தவும் செய்யப்படுகிறது. எனவே பொருத்தமான பாடல் வரி தெரியாதவர்கள் இதில் இருந்து எடுத்து கொள்ளலாம். எதையுமே இசை மயமாக சொல்ல நினைப்பவர்களுக்கு இந்த சேவை மிகுந்த உற்சாகத்தை அளிக்கும்.
யோசித்து பாருங்கள் கவலையில் ஆழ்ந்திருக்கும் நண்பரை உற்சாகப்படுத்த நினைக்கும் போது, கவலைப்படாதே சகோதரா என்று தேவாவின் குரலில் ஒலிக்கும் பாடல் வரியை அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்.
அதே போலவே காதலி பேஸ்புக் பக்கத்தை திறந்ததுமே என் உயிர் நீ தானே என்னும் பாடல் காதலனிடம் இருந்து அனுப்பட்டால் எப்படி இருக்கும். இப்படி ஒவ்வொரு உணர்வுக்கும், சுழலுக்கும் பொருத்தமான பாடல்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.
அவர்றில் இருந்து நமக்கேற்ற பாடலை தேர்வு செய்து பகிர்ந்து கொள்ள உதவும் மியூஸிட் சேவையை இசை பிரியர்கள் நிச்சயம் விரும்புவார்கள். அதிலும் மனதில் அலைமோதும் உணர்வுகளை சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் இதனை மிகவும் விரும்புவார்கள்.
இந்த சேவையே கூட இத்தகைய உணர்வில் தான் பிறந்தது. இதன் நிறுவனரான ஆம்ரி கிலிங்கர் தனது காதலிக்கு கடிதம் ஒன்றை எழுத நினைத்த போது பொங்கும் நேசத்தை எல்லாம் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாமல் தவித்திருக்கிரார். அப்போது தான் அவருக்கு பாடல் வரியை பயன்படுத்தலாம் என்று தோன்றியிருக்கிறது.
அதன் பிறகு யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அனைவரும் மனநிலைக்கேற்ற பாடல்களை பகிர்ந்து கொள்ள உதவும் இந்த சேவையை உருவாக்கினார். நியூயார்க் டைம்ஸ் இந்த சேவையை பாடல் வரிகளை காதல் கடிதமாக மாற்றும் சேவை என்று வர்ணிக்கிறது.இங்கு சென்று பாடுங்கள்
Re: நம் மனதில் உள்ளதை பாடலாக சொல்லும் தளம்
விஞ்ஞானத்தின் இன்னொரு முன்னேற்றம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» இன்று பிகருடன் சினிமாவுக்கு போகலாமா, வேண்டாம்மா சொல்லும் தளம்
» நம் உடல் பாகத்தின் உறுப்புகளை பற்றி தெளிவாக சொல்லும் தளம்
» பாவ மன்னிப்பு - பாடலாக
» ''என்னங்க ,பிரிட்ஜில் உள்ளதை எல்லாம் உடனே காலி பண்ற பழக்கத்தை விட்டுட்டீங்களே !
» எழுதிய பாடல்களில் பிடித்த பாடலாக நீங்கள் கருதுவது...?- பதில்: வைரமுத்து
» நம் உடல் பாகத்தின் உறுப்புகளை பற்றி தெளிவாக சொல்லும் தளம்
» பாவ மன்னிப்பு - பாடலாக
» ''என்னங்க ,பிரிட்ஜில் உள்ளதை எல்லாம் உடனே காலி பண்ற பழக்கத்தை விட்டுட்டீங்களே !
» எழுதிய பாடல்களில் பிடித்த பாடலாக நீங்கள் கருதுவது...?- பதில்: வைரமுத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|