சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

கவிஞர் அன்புடீன்: எழுத்தில் வாழும் இலக்கியவாதி! Khan11

கவிஞர் அன்புடீன்: எழுத்தில் வாழும் இலக்கியவாதி!

Go down

கவிஞர் அன்புடீன்: எழுத்தில் வாழும் இலக்கியவாதி! Empty கவிஞர் அன்புடீன்: எழுத்தில் வாழும் இலக்கியவாதி!

Post by *சம்ஸ் Thu 11 Aug 2011 - 18:52

கவிஞர் அன்புடீன்: எழுத்தில் வாழும் இலக்கியவாதி! Anbudeen-3
எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளிகளில்லாமல் வாழுகின்ற ஒரு அசாதாரண இலக்கியவாதி கவிஞர் அன்புடீன்! சொற்களை கோபத்தில் கூட கடுமையாக உச்சரிக்காதவர். மாறாத புன்னகையும், மனிதர்களை மதிக்கும் நாகரீகமும்
அன்புடீனின் தனி அடையாளங்கள்!
இலக்கியவாதிகளினதும், நண்பர்களினதும் மாலைநேரச் சந்திப்புக்கான ஆரோக்கிய இடம் அன்புடீன் வீடு! ஒவ்வொரு நாளும் சின்னதாய் ஒரு இலக்கியக் கூட்டமே இவர் வீட்டில் நடந்து முடியும்! இன்று வேகத்தோடு எழுதிவரும் பல இளைஞர்களுக்கு நடைவண்டியாகவும், தூண்டுகோலாகவும் இருந்தவர், இருக்கின்றவர்!

முகங்கள், சாமரையில் மொழிகலந்து எனும் இரண்டு கவிதைத் தொகுதிகளுக்குச் சொந்தமானவர். இலங்கையின் இலக்கியவாதிகள் குறித்து, குறிப்பாக முஸ்லிம் கவிஞர்களின் வரலாறு குறித்து நிறையவே தெரிந்துவைத்திருப்பவர்களில் அன்புடீனும் ஒருவர். இதுகுறித்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இவர் எழுதியிருக்கின்றார். அம்பாரை மாவட்டத்தின் பாலமுனையில் பிறந்த இவரின் வாழ்விடம் அட்டாளைச்சேனை!
கவிஞர் அன்புடீனின் இயற்பெயர் வேறு என்றாலும், அது குறித்து அனேகமானோருக்கு தெரியாது. அவரின் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் மட்டுமல்ல, பெயருக்கும் குணத்துக்கும் கூட, இடைவெளிகளில்லை!
மிக நீண்ட காலமாக இவரை நேர்காணவேண்டுமெனும் ஆவல் உள்ளுக்குள் இருந்துவந்த போதும், ஏனோ அது சாத்தியப்பட்டிருக்கவில்லை! சில வாரங்களுக்கு முன்னர் ஊருக்குப் போயிருந்தபோது ஒரு இரவுப்பொழுதில் நேர்காணலொன்றுக்காக அவரைச் சந்தித்தேன். அவருக்கேயுரிய பரபரப்பற்ற பாணியில் பதிலளித்தார்.
கேள்வி: இலக்கியம் என்பது ஒரு சமூகத்தில் எதை நிகழ்த்த வேண்டும்?
பதில்: இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி. அது சமூக மாற்றத்துக்கான கருவியும் கூட! உதாரணமாக கால்மாக்ஸை எடுத்துக் கொண்டால், அவரிலிருந்து இன்றைய படைப்பாளி வரை சமூக மாற்றத்துக்கானதொரு குரலாகவே இலக்கியத்தை பயன்படுத்தி வருகின்றனர். இலக்கியம் ஒரு சமூகத்தில் புதிய மாற்றத்தை, எழுச்சியை உண்டு பண்ணுவதற்கான சக்தியாகவே இருக்க வேண்டும். அவ்வாறுதான் இருந்தும் வந்திருக்கின்றது. சங்க காலத்திலும் சமகாலத்திலும் இலக்கியம் இதையே செய்கிறது!
கேள்வி: சிறுகதை, நாவல் போன்ற படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போதிலும் நீங்கள் கவிஞனாக அடையாளம் காணப்பட்டது எதனால்?
பதில்: ஆரம்பத்தில் நான் ஒரு நாடகக் கலைஞனாகவே கலைத்துறைக்குள் அறிமுகமானேன். பாடசாலைக் காலத்தில் ஒருமுறை நாடகமொன்றின் முக்கிய பாத்திரம் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அப்போது எனக்கு திக்குவாய். சரளமாகப் பேசமுடியாது. நாடக வசனங்களை மனனம் செய்திருந்தும் ஒத்திகையின் போது அவைகளை சரியாக என்னால் ஒப்புவிப்பதற்கு திக்குவாய் தடையாக இருந்தது. அதனால், பிரதான பாத்திரத்திலிருந்து விலக்கப்பட்டு, அந்த நாடக்கத்தில் வரும் நீதிமன்றக் காட்சியொன்றில் வரும் பொலிஸ்காரனாக நான் நடிக்க வைக்கப்பட்டேன். அந்தப்பாத்திரத்துக்கு வசனங்கள் எதுவும் இல்லை!
இந்த சம்பவத்தால் நான் நிறையவே மனதளவில் பாதிக்கப்பட்டேன். இதை அறிந்த எனது ஆசிரியர் ஒருவர் நிறைய புத்திமதிகள் சொல்லி, எனது திக்குவாய் நிலையை இல்லாமல் செய்வதற்காக சத்தமிட்டு வாசி;க்குமாறு கூறினார். வாசிப்பதற்கு சில கவிதைப் புத்தகங்களையும் தந்தார். நானும் நிறைய கவிதைப் புத்தகங்களைத் தேடி வாசிக்கத் தொடங்கினேன். எனது வாசிப்பு எல்லாத்துறைகள் நோக்கியும் விரிவடைந்தது. இருந்தாலும் கவிதையில்தான் ஈடுபாடுபாடு ஏற்பட்டது!
அந்தக் காலத்தில்தான் எஸ்.டி. சிவநாயகம் தினபதியில் கவிதா மண்டலம் எனும் பகுதியை ஆரம்பித்து, அதனூடாக புதிய கவிஞர் பரம்பரையொன்றை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது நிறைய கவிதைகளை வாசித்து அவை குறித்த உணர்வுகளோடு இருந்த எனக்கு, அந்த சந்தர்ப்பம் நல்ல வாய்ப்பாக அமைந்தது! தினபதிக்கு நானும் எழுதத் தொடங்கினேன். இதுதான் நான் கவிதை எழுத வந்த வரலாறு!
பின்னர் சுபைர் இளங்கீரனுடனான தொடர்பு, என்னை சிறுகதை எழுத வைத்தது. எனக்குள் சிறுகதை எழுதும் திறமை இருந்ததை அவர்தான் இனங்கண்டார்!
எவ்வளவுதான் சிறுகதைகள் எழுதியிருந்தாலும், கவிதை மீதே எப்போதும் எனக்குத் தணியாத ஈடுபாடு இருந்தது, இருக்கிறது! நான் கவிஞனாக அடையாளம் காணப்பட்டமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்!
கேள்வி: கவிதையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தலாமா?
பதில்: கவிதையே ஓர் ஆயுதம்தான்! பாரதியார் அவரின் தேசத்து மக்களிடையே சுதந்திர தாகத்தை ஏற்படுத்துவதற்கு கையாண்ட ஆயுதம் கவிதைதான். பலஸ்தீனக் கவிதைகளில் அனேகமானவை அவர்களின் பிரச்சினைகளையே பாடுபொருளாகக் கொண்டவை. அண்மையில் மறைந்த பலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தர்வேஷின் கவிதைகள் இதற்கு நல்லதொரு உதாரணமாகும். ஏன் இலங்கையில் கூட, போராட்டக் கவிதைகள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் காணலாம்!
கேள்வி: சிறந்த படைப்பு என்பது பிரசாரத்தன்மையற்றதாகவும், தீர்வுகளை முன்வைக்காததாகவும் இருத்தல் வேண்டும் என்கிறார்களே… அப்படியென்றால் நீங்கள் கூறுவதுபோல் கவிதையை ஆயுதமாகப் பயன்படுத்தும் போது, சிறந்த படைப்புக்கான தகைமையை அது இழந்து போகாதா?
பதில்: எல்லா இலக்கியப் படைப்புகளினதும் பிரதான நோக்கம் – சமூக மாற்றத்தை, மனித சுதந்திரத்தை, அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்துவதுதான்! அதேவேளை - கருத்துக்களை எழுத்தாளன் தனது படைப்புகளினுள் திணிக்கும் போது, அதன் அழகியல் சிதைந்துவிடும் என்பதும் உண்மைதான்! எனவே, படைப்புகளினூடாக கருத்துகளை முன்வைக்கும் போது, எப்போதும் – உறுத்தலில்லாமல் அவைகளை நுழைத்து விடக்கூடிய நுட்பத்தினைப் படைப்பாளி தெரிந்திருக்க வேண்டும். ஒரு போதும் நாம் படைப்பினுள் புகுந்து கதை சொல்லக் கூடாது!
இந்த நுட்பம் தெரிந்திருந்தால் கவிதையை ஆயுதமாக தாராளமாய் பயன்படுத்தலாம்!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிஞர் அன்புடீன்: எழுத்தில் வாழும் இலக்கியவாதி! Empty Re: கவிஞர் அன்புடீன்: எழுத்தில் வாழும் இலக்கியவாதி!

Post by *சம்ஸ் Thu 11 Aug 2011 - 18:53

கேள்வி: கவிதையை ஆயுதமாகப் பயன்படுத்தியதனூடாக நீங்கள் அடைந்து கொண்ட இலக்குகள் பற்றி சொல்லுங்களேன்?
கவிஞர் அன்புடீன்: எழுத்தில் வாழும் இலக்கியவாதி! Anbudeen-39
பதில்: ‘இனி நாம் தயாரில்லை’ எனும் கவிதையொன்றை பலகாலங்களுக்கு முன்னர் பத்திரிகையொன்றுக்கு எழுதியிருந்தேன். அந்தக் கவிதையை ஏறாவூரில் துண்டுப் பிரசுரமாக வெளியிட்டார்கள்.
அந்தக் கவிதைக்கான பின்னணி என்னவென்றால், ஒருநாள் நள்ளிரவு இரண்டாம் காட்சி சினிமா முடிந்து நண்பர்களுடன் நான் வந்துகொண்டிருந்தபோது – கூட்டுறவுக் கடையொன்றிலிருந்து வாகனமொன்றில் பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்ததை கண்டேன். அப்போதெல்லாம் மக்கள் கூட்டுறவுக்கடைகளிலேயே தமக்கான பொருட்களை அதிகம் வாங்கிக் கொள்வார்கள். அங்கு அனேகமாக எல்லாமே கிடைக்கும்! இந்தக் கடைகளிலிருந்து கள்ளச்சந்தைக்கும் பொருட்களை சிலர் கொடுத்துவிடுவதுண்டு. அப்படியானதொரு கள்ளத்தனமே அன்றிரவு நடந்தது. வீடுவந்தவுடன் நான் அதை ஒரு கவிதையாக எழுதினேன்!
பத்திரிகையில் வந்த அந்தக் கவிதையை, எங்கேயோ வேறோர் ஊரில் மீள்பிரசுரம் செய்து கொடுக்கிறார்கள் என்றால் மக்கள் மத்தியில் அது ஏதோ ஓர் தாக்கத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறதென்றுதானே அர்த்தமாகிறது!
மு.காங்கிரசின் தலைர் அஷ்ரப் மறைந்த பின்னர் நான் எழுதிய ஷபுலால் நாத்தம்ஷ என்கிற கவிதையும் பெரும் தாக்கத்தை ஏற்படுததியிருந்தது. இப்படி நிறையவே சொல்லாம்!
கேள்வி: ஒரு நல்ல படைப்புக்கு இருக்க வேண்டிய ஆகக்குறைந்த தகுதி அல்லது தகுதிகள் என்று நீங்கள் எவைகளைக் குறிப்பிடுவீர்கள்?
பதில்: ஒரு படைப்பு என்பது மக்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய மொழியாடல்களைக் கொண்டிருத்தல் வேண்டும். உதாரணமாக கவிஞர் அப்துல் ரகுமான் பால்வீதி எனும் கவிதைத் தொகுதியொன்றை எழுதியிருந்தார். ஆனால், அதை எவராலும் வாசித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுபற்றி அப்துல் ரகுமான் கூறுகையில்ளூ நான் இதை அறிவு ஜீவிகளை மனதில் வைத்தே எழுதினேன். ஆனால், அவர்களையும் இந்தக் கவிதைகள் சென்றடையவில்லை என்கிறார்!
அத்தோடு, ஒரு நல்ல படைப்பு எப்போதும் சமூகத்தில் சிறப்பான தாக்கத்தினை ஏற்படுத்துவதோடு, பிரச்சினைகளுக்கு விடிவைத் தேடிக்கொடுப்பவைகளாகவும் இக்கவேண்டும்.
கேள்வி: சோசலிசத்தை கடுமையாகக் கொண்டாகின்றவைகள் உங்கள் கவிதைகள்! தோற்றுப்போன கருத்தியலொன்றைப் பற்றி இன்னும் எத்தனை காலம்தான் பேசிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்?
பதில்: சோசலிசமோ, பொதுவுடமையோ தோற்றுப்போனதாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. லெனின், கால்;மாக்ஸ், மாஓசேதுங், சேகுவரா என்பவர்களெல்லாம் அடிப்படையில் சமதர்மக் கொள்கைளைச் சொன்னவர்கள்தான். ஷஎல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்ஷ எனும் நிலையை உருவாக்க உழைத்தவர்கள்தான் இவர்கள்! அதைத்தான் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் வலியுறுத்தியது. சுரண்டலுக்கெதிரான, சமநிலையுடைய வாழ்க்கையொன்றுக்கான விருப்பமும், ஆர்வமும் எப்படித்தோற்றுப்போக முடியும்? சோசலிசம் ஒரு போதும் தோற்றுப்போகவில்லை. வேண்டுமென்றால், தற்காலிகமாக அதில் தளர்சியொன்று ஏற்பட்டிருப்பதாகக் கூறலாம்!
கலை – இலக்கியத்துக்கும், புத்திஜீவிகளுக்கும் சோசலிசத்தை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு நிறையவே இருக்கின்றது!
இன்னுமொன்று, நாங்கள் சோஸலிசம் பற்றிப் பேசும்போதும் கார்ல்மாக்ஸையும், லெனினையும் தூக்கிப் பிடித்தாலும், அதற்கு முன்னரேயே இஸ்லாத்தில் முஹம்மது நபியவர்கள் சோசலிசத்தின் கொள்கைகளை மிக அழகாக வலியுறுத்தியிருக்கின்றார்கள். ஸகாத் என்று சொல்லப்படுகின்ற வி;;டயமே ஏழ்மையை இல்லாமல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட முக்கியமானதொரு விடயமாகும். அது – இருப்பவர்களிடமிருந்து பெற்று இல்லாதவர்களுக்குக் கொடுக்கின்றதொரு பங்கீட்டு முறைமையாகும்!
கேள்வி: இலக்கியம் அரசியலைப் பேசலாமா?
பதில்: அரசியல் இல்லாமல் எதுவுமேயில்லை. இலக்கியம் நிச்சயமாக அரசியலைப் பேசியே ஆக வேண்டும்! இலக்கியத்துக்குள் அரசியல் இருக்கிறது, அரசியலுக்குள் இலக்கியமும் இருக்கிறது. இலக்கியம் – நடைமுறை அரசியலைப் பேச வேண்டும், எதிர்கால அரசியல் பற்றிச் சிந்திக்க வேண்டும்!
கேள்வி: அன்படியென்றால் சமூகம் சார்ந்த உங்கள் தற்போதைய அரசியல் பார்வை பற்றி கொஞ்சம் பேசுங்களேன்?
பதில்: சமூகம் சார்ந்த இன்றைய முஸ்லிம் அரசியல் ஒரு சிக்கலான நிலைக்குள் இருக்கின்றது. முஸ்லிம் அரசியலில் இருந்த கூட்டுத்தன்மை இப்போது இல்லை.
இந்த இடத்;தில் ஒரு விடயத்தைக் அழுத்திச்சொல்ல வேண்டும். அதாவது, எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழர்களுடைய போராட்டமானது வீழ்ச்சிநிலை கண்டமைக்கு அவர்களின் போராட்ட இயக்கங்கங்கள் உடைந்து, பல பிரிவுகளாகவும், அமைப்புகளாகவும் சிதறிப்போனதே காரணமாகும்! அதனால்தான் அவர்களின் போராட்டம் கூர்மையிழந்தது.
இதே நிலைதான் இன்று முஸ்லிம் அரசியலுக்குள்ளும் நிகழ்ந்துவருகிறது. முஸ்லிம்களுக்கென்று ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், கூறுகளாகப் பிரிந்து பல கட்சிகள் தோன்றி விட்டன. இப்போது எல்லோரும் தலைவர்களாகிப் போய்விட்டார்கள்.
இதை இன்னும் திறந்து சொன்னால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதை பாராளுமன்றுக்குச் செல்லும் வாகனமாக பலர் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
முதலில் கட்சியில் வேட்பாளராகி, பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகி, அதன்பிறகு அமைச்சர்களாக மாறிப்போகும் நமது முஸ்லிம் பிரதிநிதிகளில் பலர், கடைசியில் தேசியத் தலைவர்;களாக மாறிப்போய்விடுகின்றனர்! இந்த நிலைமையானது, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இலக்குளை அடைந்து கொள்வதில் மிகப்பெரும் பலவீனங்களை ஏற்படுத்திவிடும்!
கேள்வி: இலக்கியவாதிகளுக்கும் அரசியலுக்குமிடையில் எவ்வாறான தொடர்புகள் இருக்க வேண்டுமெனக் கருதுகிறீர்கள்?
பதில்: அரசியலைப் பேசிய கால்மார்க்ஸ், சீனத்துப் பெருந்தலைவரான மாஓசேதுங் போன்றவர்களெல்லாம் நல்ல இலக்கியவாதிகள். தமிழக முதமைச்சர் கருணாநிதியும் ஓர் இலக்கியவாதிதான். இலங்கையில் மு.காங்கிரசின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் நல்லதொரு இலக்கியவாதி! இவர்களெல்லாம் அரசியலுக்குள் நுழைந்து மக்களுக்குத் தலைமை வகித்திருக்கின்றார்கள். எனவே, இலக்கியவாதிகள் அரசிலுக்குள் நுழையக்கூடாதென்றோ, அரசியல்வாதிகள் இலக்கியம் செய்யக்கூடாது என்றெல்லாம் எவுமில்லை!
ஒரு நல்ல அரசியலை இலக்கியவாதியொருவரால் செய்வதற்குரிய சாத்தியங்கள் அதிகமிருக்கின்றன. அரசியல் – இலக்கியவாதிளை ஒதுக்கிவிட முடியாது!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிஞர் அன்புடீன்: எழுத்தில் வாழும் இலக்கியவாதி! Empty Re: கவிஞர் அன்புடீன்: எழுத்தில் வாழும் இலக்கியவாதி!

Post by *சம்ஸ் Thu 11 Aug 2011 - 18:54

கேள்வி: நீங்கள் கவிதை எழுதத்தொடங்கிய காலத்தில் நீலாவணன் போன்ற மூத்த இலக்கியவாதிகள் உங்கள் பிரதேசத்தில் வீச்சுடன் செயற்பட்டுக்கொண்டிருந்ததாக அடிக்கடி கூறுவீர்கள். இலக்கியப் பரப்பில் அன்றிலிருந்து இன்றுவரை என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கருதுகின்றீர்கள்?


கவிஞர் அன்புடீன்: எழுத்தில் வாழும் இலக்கியவாதி! Anbudeen-11
பதில்: இலங்கையின் கவிதைப் பரப்பை தற்காலம், இடைக்காலம், அதற்கு முற்பட்ட காலம் என்று நாம் வகுத்தால்… முற்பட்ட காலத்தில் குறித்துச் சொல்லத்தக்கவராகத் திகழ்ந்தவர்களில் ஒருவர் மகாகவி! அவரின் சமகாலத்தில் எழுதியவர்கள்தான் நீலாவணன் மற்றும் முருகையன் போன்றோர். இடைக்காலத்தில் எம்.ஏ. நுஃமான், சண்முகம் சிவலிங்கம் போன்றோரைக் குறிப்பிடலாம். அதன்பிறகு பேசப்படவேண்டியவர்களில் முக்கியமானவர்கள் சோலைக்கிளி, சேரன் போன்றவர்கள்!
இதில் மகாகவி சௌ;யுள் வடிவங்களில் கவிதைகளை எழுதினார். ‘பாரதியின் அடுத்த கவி யுகச்சந்தி மகாகவி’ என்று சண்முகம் சிவலிங்கம் ஒரு தடைவை குறிப்பிட்டிருந்தார். அவரும் பேச்சுமொழியை அறிமுகப்படுத்தியிருந்தார். அதேவேளை பிரதேச மொழியைக் கையாண்டு எழுதியவர்களில் ஒருவர்தான் நீலாவணன்! அவருடைய தொடர்ச்சியாக பேச்சு மொழியைக் கையான்டவர்தான் எம்.ஏ. நுஃமான். அவரின் ‘நிலம் எனும் நல்லாள்’ இதற்கு உதாரணமாகச் சொல்லக்கூடிய மிக முக்கியமான கவிதையாகும். நுஃமானின் சமகாலத்தவர்களாக ஏ. இக்பால், பசீல்காரியப்பர் போன்றோரையெல்லாம் நாம் சொல்லலாம்.
நுஃமானுக்கு அடுத்த தலைமுறையாக 70 களில் எழுதவந்தவர்களாக நான் (அன்புடீன்), திக்குவலை கமால் போன்றோரைக் குறிப்பிடலாம்.
தற்காலத்தில் கவிதையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. மகாகவி ருத்ரமூத்தி, நீலாவணன் போன்றோர் அப்போது – ஒரு கட்டமைப்பில் இலக்கணத்தோடு, மரபுரீதியாக எழுதியவந்த கவிதை முறையை உடைத்து, தேவைக்கேற்றவாறு சந்திபிரித்து நுஃமான், சண்முகம் சிவலிங்கம் போன்றோர் மாற்றியிருந்தார்கள். இவர்களுக்குப் பிறகுதான் இந்தியாவில் வானம்பாடிகள் அமைப்பு உருவானது. இவர்களின் வருகைக்குப் பிறகுதான் புதுக்கவிதை ஜனரஞ்சகமாயிற்று! ஆனால், புதுக்கவிதையின் தோற்றுவாய் வானம்பாடிகளல்ல. அவர்களுக்கு முன்பே அது இருந்தது.
இவைகளுக்குப் பிறகு 80களில்தான் சோலைக்கிளி போன்றவர்களின் வரவு நிகழ்ந்தது. இவரின் கவிதைகள் அவர்சாந்த முஸ்லிம் மக்கள் பேசுகின்ற சொற்களால் ஆனவைகள்.
இவ்வாறு கவிதைப்பரப்பினில் நிகழ்ந்த மாற்றங்களெல்லாம் வளர்ச்சிகள்தான். அவை கவிதையை சிறப்பாக்கியதே தவிர, எந்தவொரு இடத்திலும் கீழிறக்கி விடவில்லை!
கேள்வி: சோலைக்கிளியின் கவிதைகளை மிக மூர்க்கமாக விமர்சித்தவர்களில் நீங்களும் ஒருவரல்லவா… இப்போது எப்படி?
பதில்: சோலைக்கிளியின் ஆரம்பகாலத்து கவிதைகளில் அவர் பயன்படுத்திய சில சொற்கள் அருவருப்பானவை. பீ, மூத்திரம், மூக்குப்பீ என்றெல்லாம் எழுதுவார். கவிதை என்பது அழகியல் சார்ந்தது என்பதால் அவ்வாறான சொற்களை சோலைக்கிளி பயன்படுத்தியபோது அதை நான் கடுமையாக விமர்சித்தேன்! ஆனால், சோலைக்கிளி அவ்வாறான சொற்களை குறிப்பிட்டதொரு காலம்தான் பயன்படுத்தியிருந்தார். அதன்பிறகு அவர் மிக அற்புதமான கவிதைகளையெல்லாம் படைத்திருக்கின்றார். சோலைக்கிளி கையாளுகின்ற சொற்கள், கவிதையைச் சொல்கின்ற முறைகள் போன்றவை – புதிதாகவும், காலத்தின் தேவையாகவும் இருக்கின்றன. சோலைக்கிளி தமிழின் குறிப்பிடத்தக்கதொரு கவிஞர்!
கேள்வி: ருத்ரமூர்தியை ஷமகா கவிஷயாகக் கொண்டாடுவது போல, நீலாவணனை தூக்கிப் பிடிக்காமைக்கு வடக்கு வாதமே காரணம் என்று சிலர் கூறுகிறார்களே… நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: அப்படிச்சொல்ல முடியாது! ருத்ரமூர்த்தியை தூக்கிப் பிடித்தவர்கள் யாழ்ப்பாணத்தவர்களல்லர். பேராசிரியர் கைலாசபதி மற்றும் சிவத்தம்பி போன்றவர்களே மகாகவியை பெரிதாக அடையாளம காட்டவில்லை என்கின்றதொரு குற்றச்சாட்டு இருக்கின்றது. உண்மையாகவே, பாரதியை நமது விபுலானந்த அடிகளார் கொண்டாடி – அவருக்கு ஒரு ராஜ கிரீடத்தைக் கொடுத்தது மாதிரி, மகாகவி ருத்ரமூர்த்தியை பெரியளவில் உயர்த்திப் பிடித்தவர் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள்தான்.
ருத்ரமூர்த்திக்கு நிகரான பல கவிதைகளை நீலாவணன் எழுதியிருந்தார். ஆனால், பொன்னான விளக்குக்கும் ஒரு தூண்டுகோல் வேண்டும் என்பார்களல்லவா. அந்த தூண்டுகோல் ருத்ரமூர்த்திக்கு கிடைத்ததுபோல் நீலாவணனுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
இதேபோல், சோலைக்கிளி என்கின்ற கவிஞனையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவரும் நுஃமான்தான்! சோலைக்கிளியின் கவிதைகள் சம்பந்தமாக ஒரு தடைவை மல்லிகையில் முருகையன் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். அதில் சோலைக்கிளியின் கவிதைகளில் வரும் மழைப்பழம், காத்துக்கட்டி போன்ற சொற்களைச் சுட்டிக்காட்டி அவைகளை அர்த்தமற்ற சொற்ளென முருகையன் விமர்சித்திருந்தார்.
சோலைக்கிளியின் – நானும் ஒரு பூனை கவிதைத் தொகுதிக்கு அணிந்துரை எழுதியிருந்தவர் நுஃமான்! அந்தவகையில், முருகையனின் விமர்சனத்துக்கு மல்லிகையில் நுஃமான் விளக்கமளிக்கத் தொடங்கினார். இதனால், சோலைக்கிளி வெளிச்சப்படுத்தப்பட்டார். அவரின் கவிதைகள் பிரபல்யமடையத் தொடங்கின.
வேறொரு கோணத்தில் பார்த்தால் சோலைக்கிளியை வெளி;ச்சத்துக்குக் கொண்டு வந்தவர் முருகையன் என்றும் கூறலாம். ஏனென்றால், மல்லிகையில் அவர் அந்த விமர்சனத்தை எழுதியிருக்காது விட்டால், அதற்கு நுஃமான் பதிலளித்திருக்கவும் மாட்டார், அந்த விடயம் உரத்துப் பேசப்பட்டிருக்கவும் மாட்டாது!
முருகையன் அவ்வாறு விமர்சித்திருந்தாலும் அதை – மோதிரக்கையால் சோலைக்கிளி பெற்றுக்கொண்ட குட்டென்றுதான் நான் சொல்வேன்!

(இந்த நேர்காணலை 21 மற்றும் 28 செப்டம்பர் 2008 ஆம் திகதிய ஞாயிறு ‘தினக்குரல்‘ பத்திரிகையிலும் காணலாம்)

நன்றி மப்றுக்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிஞர் அன்புடீன்: எழுத்தில் வாழும் இலக்கியவாதி! Empty Re: கவிஞர் அன்புடீன்: எழுத்தில் வாழும் இலக்கியவாதி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum