சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவர் யார்?  Khan11

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவர் யார்?

Go down

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவர் யார்?  Empty ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவர் யார்?

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 4:06

ரணில் இராஜினாமா செய்யாவிட்டால் இன்று சத்தியாக்கிரகம் - சஜித்
* செயற்குழுவை குழப்ப முயற்சிப்பது சூழ்ச்சி - ரணில்
* ரணிலை துரத்தும் மக்கள் போராட்டம் ஆரம்பம் - சஜித்
* மகாராஜாவால் கட்சியைக் கட்டுப்படுத்த முடியாது - ரணில்

ஸ்ரீகொத்தாவில் இன்று இறுதி முடிவு

நிரூஷி விமலவீர
இலங்கையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொருத்தமான தலைமை இல்லாமல் இன்னும் திண்டாடுவது கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மாத்திரமல்ல நாட்டு மக்களிடமும் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நீண்டகால வரலாறுள்ள இந்தக் கட்சிக்கு தலைவரைத் தெரிவுசெய்யும் மாநாடு இன்று ஐ.தே.க. தலைமைச் செயலகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெறுகிறது.

ஏற்கனவே பல துண்டுகளாகப் பிளவடைந்து கிடைக்கின்ற கட்சிக்கு ஒரு தலைவரை நியமிக்க வேண்டுமென்ற பரபரப்பான சூழ்நிலையில் ஐ.தே.க.வின் செயற்குழு இன்று கூடுகிறது. தலைமைப் பொறுப்பை கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கவேண்டுமென சஜித் தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ஐ.தே.க. பாராளுமன்றக் குழு கொண்டுவந்த தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றக் குழு புதிய தலைவரைத்

தேர்ந்தெடுத்தாலும் கட்சித் தலைமையை மாற்றும் அதிகாரம் அதற்குக் கிடையாது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் கட்சி யாப்பின்படி முழுமையான அதிகாரம் கொண்ட செயற்குழு இன்று கூடுகிறது. செயற்குழுவே கட்சியின் தலைவர் யார் என்பதை இன்று தீர்மானிக்கும்.

ஆனாலும், சஜித் தரப்புக்கு செயற்குழுவில் எதிர்பார்க்கும் அளவுக்கு செல்வாக்கு இல்லையென்பது தெரியவருகிறது. செயற்குழுவில் ரணிலை காப்பாற்றும் தீர்மானம் எடுக்கப்படுமாகவிருந்தால் அதற்கு எதிராக சத்தியாக்கிரகம் இருக்கப்போவதாக சஜித் பிரேமதாச தரப்பு தெரிவித்துள்ளது.

என்றாலும், சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுவோரை கட்சி ஆதரவாளர்களாக ஏற்றுக்கொள்ளமுடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று 16ஆம் திகதி நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வேட்புமனுச் சபை நியமனம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதற்காக நடைபெறவுள்ள விசேட செயற்குழுக் கூட்டத்தை குழப்புவதற்கு முயற்சிக்கின்றமை சூழ்ச்சிகரமான செயலாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எம்.ரி.வி. நிறுவனத்தின் தலைவர் மஹாராஜாவை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்காமையால் அவர் கட்சியைத் தொடர்ந்தும் தாக்கிவருவதாகவும், அவரின் ஆசையினை நிறைவேற்றிக் கொள்வதற்காக தொடர்ந்தும் அவர் ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சித்துவருவதாகவும் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, ஊடகவியலாளர்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ கட்சி ஒன்றினை கட்டுப்படுத்த உரிமை கிடையாது எனவும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில், ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அகற்றுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை இன்று 17ஆம் திகதி மாலை ஸ்ரீகொத்தாவில் காணமுடியுமென்றும் தெரிவித்தார்.

மக்களின் எதிர்ப்புக்கு மதிப்பளித்து கட்சித் தலைமைப் பதவியிலிருந்து ரணிலை இராஜினாமாச் செய்யவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக தலைமைப் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, மிகவும் கெளரவமான முறையில் இன்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவார் எனத் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அதற்கு எதிராக செயற்பட மக்கள் தலைவர் ஒருவரால் முடியாதெனக் கூறிய மத்தும பண்டார, மக்களின் எதிர்ப்பினை சம்பாதித்துக்கொள்ளாது கட்சித் தலைமைப்பதவி கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கவேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum