சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

மேயர் வேட்பாளர்கள் யார்? ம.தி.மு.க., முடிவு Khan11

மேயர் வேட்பாளர்கள் யார்? ம.தி.மு.க., முடிவு

2 posters

Go down

மேயர் வேட்பாளர்கள் யார்? ம.தி.மு.க., முடிவு Empty மேயர் வேட்பாளர்கள் யார்? ம.தி.மு.க., முடிவு

Post by kalainilaa Sun 21 Aug 2011 - 4:53

சென்னை:சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட ராஜ்யசபா எம்.பி.,க்கள் உட்பட 4 பேரும், தி.மு.க.,வில் சிட்டிங் மேயர் உட்பட 3 பேரின் பெயர்கள் அடிப்படுகிறது. சட்டசபை தேர்தலை புறக்கணித்த ம.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடருகிறது.அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும், எதிர்கட்சியினரும் தேர்தலில் போட்டியிட மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அ.தி.மு.க., கூட்டணியில் சட்டசபை தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்ட சதவீதம் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலிலும் ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.தே.மு.தி.க.,வை பொருத்தவரை, கூடுதல் சதவீத ஒதுக்கீட்டை பெற வேண்டும் என, விரும்புகிறது. அ.தி.மு.க.,வில் மாவட்ட வாரியாக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் போட்டியிடுவதற்கு ஆளுங்கட்சியினர் தயாராகியுள்ளனர்.

மேயர், நகராட்சி தலைவர்கள் பதவிக்கு நேரடி தேர்தல் நடக்கும் என ஆளுங்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். சென்னை மாநகராட்சியை பொருத்தவரை, இரண்டு முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட சீட் வழங்கக் கூடாது என்றும், 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை கவுன்சிலர்களாக இருந்து பொதுமக்களிடம் அதிருப்தியை சம்பாதித்தவர்களுக்கு மீண்டும் சீட் வழங்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் வன்முறை வெடித்தது. நியாயமாக தேர்தல் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களுக்கும், கட்சிக்கு விசுவாசமாக உழைத்து வருபவர்களுக்கும், பொதுமக்களிடம், தொண்டர்களிடமும் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மேயர் பதவியை இதுவரை அ.தி.மு.க., கைப்பற்றவில்லை. அதனால், இந்த முறை மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதில் கட்சியினர் தீவிரமாக பணியாற்ற முடிவெடுத்துள்ளனர்.

மேயர் பதவிக்கு ராஜ்யசபா எம்.பி., வகித்து வரும் பாலகங்கா, மைத்ரேயன் மற்றும் எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில செயலர் ஆதிராஜாராம், நடிகர் ராதாரவி ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சம் 150 வார்டுகளில் அ.தி.மு.க., போட்டியிடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க.,விலும் சென்னை மாநகராட்சியை கைப்பற்ற தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., வெளியேறி விட்டது. அக்கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. ஆனால், மற்றொரு கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

தி.மு.க., கூட்டணியில் நீடிக்கவே தங்கபாலு விருப்பம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலும் அவரே தலைவராக நீடிக்கவுள்ளார். இதற்கிடையில், ""தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடரும்,'' என தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்து விட்டதால் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தி.மு.க., சார்பில் மேயர் தேர்தலில் சிட்டிங் மேயர் மா.சுப்ரமணியன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., செங்கை சிவம், முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபு, ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்ற வக்கீல் முகமது அலி ஜின்னா, நடிகை குஷ்பு ஆகியாரின் பெயர்கள் அடிபடுகின்றன.

ம.தி.மு.க.,வை பொருத்தவரை, சட்டசபை தேர்லை புறக்கணித்திருந்தாலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க., அல்லது தி.மு.க.,விடம் கூட்டணி அமைத்து, அக்கட்சியின் தலைமையிடம் முறிந்த நட்பை புதுப்பிக்க விரும்புகிறது.இரு கட்சிகளும் ம.தி.மு.க., வை ஏற்கவில்லை என்றால் பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் ஆலோசித்து வருகிறது. எனவே உள்ளாட்சி தேர்தலில் புதிய கூட்டணிகள் உதயமாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. -எஸ்.சிந்தாஞானராஜ்-
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மேயர் வேட்பாளர்கள் யார்? ம.தி.மு.க., முடிவு Empty Re: மேயர் வேட்பாளர்கள் யார்? ம.தி.மு.க., முடிவு

Post by யாதுமானவள் Sun 21 Aug 2011 - 7:36

தி.மு.க., சார்பில் மேயர் தேர்தலில் சிட்டிங் மேயர் மா.சுப்ரமணியன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., செங்கை சிவம், முன்னாள் எம்.எல்.ஏ., சேகர்பாபு, ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோற்ற வக்கீல் முகமது அலி ஜின்னா, நடிகை குஷ்பு ஆகியாரின் பெயர்கள் அடிபடுகின்றன.

ம.தி.மு.க.,வை பொருத்தவரை, சட்டசபை தேர்லை புறக்கணித்திருந்தாலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க., அல்லது தி.மு.க.,விடம் கூட்டணி அமைத்து, அக்கட்சியின் தலைமையிடம் முறிந்த நட்பை புதுப்பிக்க விரும்புகிறது


திமுக ..-- குஷ்பூவை நிறுத்தும் பட்சத்தில்... மறுபடி நடிகையை நம்பி ஏமாறப் போகிறது

மதிமுக.. ஏதேனும் கட்சியுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் .. மீண்டும் கறிவேப்பிலையாக விளங்கப்போகிறது
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum