சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

தனிமனித ஒழுக்கம்! Khan11

தனிமனித ஒழுக்கம்!

3 posters

Go down

தனிமனித ஒழுக்கம்! Empty தனிமனித ஒழுக்கம்!

Post by Atchaya Tue 6 Sep 2011 - 5:48

நன்றி மானிடம்
"திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .." , " தனியொரு மனிதன் திருந்திவிட்டால் சிறைச்சாலைகள் தேவையில்லை ..." இரண்டும் புகழ்பெற்ற பாடல் வரிகள் . நாம் எவ்வளவுதான் சட்டங்கள் போட்டாலும் இன்னும் நம்மால் நிறைய விசயங்களை மாற்றமுடியவில்லை . செயல்படுத்துபவர்களும் , பின்பற்றுபவர்களும் சரியாக இல்லாதவரை சட்டங்களால் என்ன செய்ய முடியும் ? உலகமயமாக்கல் நம் முன் நிற்கும் மிகப்பெரிய ராட்சசன் .

அன்னா ஹசாரே , சமீபத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் . பாதிப்பேர் அவரை ஆதரிக்கிறார்கள் மீதிப்பேர் அவரையும் ,ஜன் லோக்பாலையும் எதிர்க்கிறார்கள் . அன்னாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான் விசயம் "அகிம்சை " . அவரது போராட்டத்தின் போது யாருக்கும் எந்த இடையூறும் ,முக்கியமாக பொதுச்சொத்துக்கு எந்தவிதமான சேதமும் ஏற்ப்படவில்லை. மற்றவர்கள் நடத்திய , நடத்தும் போராட்டங்களில் இவை சாத்தியமில்லை .அகிம்சையின் சக்தியை தற்போது எல்லோராலும் உணர முடிந்திருக்கிறது . இவரை காந்தியுடன் ஒப்பிடவேண்டிய அவசியம் இல்லை .

யாரும் எதுவும் செய்யமாட்டேன் என்கிறார்கள் , யாரவது எதாவது செய்யும் போது அவரை எதிர்க்க மட்டும் அணி திரண்டு விடுகிறார்கள் . இது ஒரு வகையான நோய் . கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி வெற்றிப்பெறும் போது அந்த அணி தோற்கவேண்டும் என்று எல்லோரும் வேண்டுகிறோம் . இது நம்மால் முடியாததை இன்னொருவன் செய்யும்போது ஏற்படும் ஆற்றாமையின் வெளிப்பாடு . நாமளும் எதுவும் செய்யக்கூடாது , அடுத்தவனும் எதுவும் செய்யக்கூடாது என்ற மனநிலையையே இதற்குக் காரணம் .

நாட்டில் ஊழலைவிடப் பெரிய பிரச்னைகள் இருக்கின்றன . அதில் கவனம் செலுத்தாத மக்கள் , "ஜன் லோக்பால்" மீது கவனம் செலுத்துவது நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை . உண்மையைச் சொல்லப்போனால் ஜன் லோக்பால் மூலமாக மற்ற பிரச்னைகளான இரோம் சர்மிளா , ஒரிசா போஸ்கோ , பழங்குடியினர் பிரச்னைகள் அதிக மக்களைச் சென்றடைந்திருக்கின்றன . மற்ற பிரச்னைகளை மக்கள் கவனிக்கவில்லை என்று சொல்பவர்கள் அதை அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் சொல்லியிருந்தால் அது எல்லோருக்கும் சென்று சேர்ந்திருக்குமே , அதைச் செய்யாமல் எல்லோரும் ஒவ்வொரு மூலையிலிருந்து எதிர்ப்புக் குரல் மட்டுமே கொடுத்தார்கள் .எப்போதும் போல் எதையும் செயல் படுத்தாமல் பேசிக்கொண்டே இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு விட்டார்களோ என்னவோ !


நம் சமூகத்தின் அடிப்படைப் பிரச்னை "தனிமனித ஒழுக்கம்" தான் ,சட்டங்கள் அல்ல . தனிமனித ஒழுக்கம் இல்லாதவரையில் எந்தச் சட்டங்களாலும் எந்தப்பயனும் இல்லை .தனிமனித ஒழுக்கத்திற்கு சமீபத்திய மிகச் சிறந்த உதாரணம் , ஜப்பான் மக்கள் . ஜப்பான் மக்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது . அவ்வளவு பெரிய பேரழிவு நிகழ்ந்தபோதும் அமைதியாக நேர்மையான வழியில் நடந்து கொண்டனர் . திறந்து கிடந்த கடையில் யாரும் திருடவில்லை , அமைதியாக வரிசையில் நின்று பொருட்கள் வாங்கினர் . பொது இடத்தில் கிடந்த பணத்தை எடுத்து தொடர்ந்து அரசுக்கு செலுத்தி வருகின்றனர் . இதுவரை 800 கோடிக்கும் அதிகமான பணம் அரசிடம் சேர்க்கப்பட்டிருக்கிறது . இவை எப்போதும் இந்தியாவில் சாத்தியமில்லை . காரணம் ?

நாம் இன்று செய்ய வேண்டியது தனிமனித ஒழுக்கத்தை இந்தியச் சமூகத்தில் பரவச் செய்வது மட்டுமே . போராட்டத்தில் கலந்து கொள்ளும் எல்லோரும் எதோ ஒரு வகையில் லஞ்சத்திற்கும் , ஊழலுக்கும் துணை போனவர்கள் தான் .தனி மனிதனாக நாம் நிறைய விசயங்களிடம் தொடர்ந்து தோற்றுக்கொண்டே தான் இருக்கிறோம். பிளாஸ்டிக்கிடம் தோற்கிறோம் , காலத்திடம் தோற்கிறோம், இயற்கையை ரசிக்க மறக்கிறோம் , உடலிடம் தோற்கிறோம் , உணவிடம் தோற்கிறோம் . இவ்வளவு விசயங்களில் தோற்றாலும் மீண்டும் அவற்றை வெற்றிக்கொள்ள தொடர்ந்து போராட வேண்டியிள்ளது .

இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களின் மிகப் பெரிய எதிரி " உலகமயமாக்கல் " மட்டுமே . உலகமயமாக்கல் , நம்மை நாமாக பார்க்க அனுமதிக்காமல் மற்றவர்களுடன் பொருத்திப் (Comparison) பார்க்கவே செய்கிறது .மற்றவர்கள் போல் இருக்க நாம் தினமும் தூண்டப்படுகிறோம் . நம் சுயத்தை இழக்கிறோம் . நம்மை நினைத்து நாம் பெருமைப் படுவதற்குப் பதிலாக , மற்றவர்களைச் கவனிக்கச் செய்து நம்மை கவலைப்பட வைப்பது தான் உலகமயமாக்கலின் தந்திரம் . முக அழகு கிரீம் , முடி வளர , முடி கொட்டாமல் இருக்க என்று விதவிதமான பொருட்களை நம் தலையில் கட்டுகிறார்கள் . நாம் உணவுக்குச் செலவு செய்வதை விட நம் ஆடம்பரத்துக்கு அதிகம் செலவழிக்கிறோம் . கடன் வாங்கியாவது நம் ஆடம்பரத்தை நிலை நாட்டுகிறோம் .

பழங்குடியினர் பிரச்னை, ஒரிசா போஸ்கோ பிரச்னை என்று பல பிரச்னைகளுக்கு உலகமயமாக்கல் தான் காரணம் . உலகமயமாக்கலால் மற்ற நாடுகள் சூடு பட்ட நிலையிலும் தற்போதைய காங்கிரஸ் அரசு , உலகமயமாக்கலின் உதவியுடன் இந்தியாவை மற்றவர்களின் அடிமை தேசமாக மாற்றவே தொடர்ந்து முயல்கிறது .

தொடர்ந்து பெரிய முதலாளிகளை வளர்ப்பது ,சிறிய முதலாளிகளைப் அழிப்பது , விவசாயத்தைக் கெடுப்பது , பூமியின் சுற்றுச்சூழலைப் பெருமளவு பாதிப்பது , பணத்தை ஒரே இடத்தில் சேர்ப்பது , பணக்காரனுக்கும் ஏழைக்கும் உள்ள வித்தியாசத்தை தாறுமாறாக உயர்த்துவது , ஒட்டுமொத்தப் பொருளாதாரமே ஒருசிலரை நம்பி இருப்பது , இவை தான் உலகமயமாக்களின் சாதனை .

தனிமனித ஒழுக்கமும், உலகமயமாக்கலும் தான் நமது பெரிய பிரச்னைகள் .

நமக்கு நடக்காத வரை எல்லாமும் வேடிக்கை தான் .
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தனிமனித ஒழுக்கம்! Empty Re: தனிமனித ஒழுக்கம்!

Post by *சம்ஸ் Tue 6 Sep 2011 - 6:39

பகிர்விற்க்கு நன்றி அண்ணா :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தனிமனித ஒழுக்கம்! Empty Re: தனிமனித ஒழுக்கம்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Sep 2011 - 7:17

தனி மனித ஒழுக்கத்தின் அவசியப்பற்றிய எடுத்துக்காட்டு மிகவும் அவசியமான கட்டுரை

தனிமனித ஒழுக்கத்தைப் பொறுத்தவரை அவரவர் திருந்த வேண்டிய விடயமும் கூட அது பற்றி தானே சிந்திக்காத விரை திருத்திட முடியாத
அதனால்தான் முக்கியமான பிரச்சினையாக தெரிகிறது

மிக்க நன்றி பகிர்வுக்கு அண்ணா


தனிமனித ஒழுக்கம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தனிமனித ஒழுக்கம்! Empty Re: தனிமனித ஒழுக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum