சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Khan11

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

+9
rinos
*சம்ஸ்
நிலாம்
நேசமுடன் ஹாசிம்
ஹம்னா
நண்பன்
அப்துல்லாஹ்
kalainilaa
mdkhan
13 posters

Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by mdkhan Sun 18 Sep 2011 - 12:05


நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...






நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் 1197107206400036309metalmarious_Laptop.svg.med


Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு
லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான்
செய்யும்.

அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.

ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால்
ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால்
நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம்
எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும்
படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.
http://tamilcomputertips.blogspot.com/

இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக
சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி
வரலாம்.

லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த
மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று
தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு
கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று
முடிவுசெய்துகொள்ளுங்கள்.....


SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER

சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த
விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்...

Laptop Configuration

Processor

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக
பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக
தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5
அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.

எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3

என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள்
பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம்
குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள்
தேர்ந்தெடுக்கலாம்.
http://tamilcomputertips.blogspot.com/

இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று
குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன்
GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக
பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00
GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz
லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக
இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது
அவசியம்.

RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு
ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின்
வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு
வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும்
நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB
RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற
அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில்
பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப்
வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக
கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின்
இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான்
உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த
ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய
மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும்
கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும்
வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக
இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள்
லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக
இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.

ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன்
அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன்
என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே
மிக அதிகம்.

பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம்
அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM SPEED போன்றவை மிக
சிறந்தது. இதனை விட நீங்கள் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க்
ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை
தேர்ந்தெடுங்கள்.

DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD
டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட்
லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி
இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது
போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.

GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும்
லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக்
கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில்
எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?

நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக
இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால்
உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான
ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High
Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன்
தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள்
இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது
சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு
முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக்
கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என
இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.

இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால்
நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த
வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Card கொடுப்பதால்
கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி
அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப்
நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில்
அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம்
விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக
வாய்ப்பு இருக்கிறது.

அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக்
பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card
இணைந்துள்ளதா என
பார்த்துக்கொள்ளுங்கள்.http://tamilcomputertips.blogspot.com/

போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள்
பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள
லேப்டாப் வாங்கினால் போதும்.

Operating System ( OS)

விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங்
சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் சரியாக
இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே
சிரமம் என்று ஆகிவிடும்.

இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான்
இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல
வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professonal
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version

இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.

இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும்
மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள்
மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக
மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம்
வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை
தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home
Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.
http://tamilcomputertips.blogspot.com/

Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும்
நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த
முடியாது.



அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான்
வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள்
மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI
Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic,
Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.

இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.

இது போன்ற பல பயனுள்ள தகவல்களுக்கு என்னுடைய தமிழ் கம்ப்யூட்டர் தகவல்கள் தளத்துக்கு செல்லுங்கள்.


நன்றி ! அன்புடன்: கான்
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by kalainilaa Sun 18 Sep 2011 - 12:20

தல அருமையான தகவல் .இதற்க்கு பாராட்டவே வார்த்தைகளில்லை. எல்லோருடைய கனவுக்கு ,ஒரு வழிகாட்டி இது .கதவு திறந்தாச்சி ,என்று சொல்லு ,விருந்து உபசரிப்போடு ஒரு கவனிப்பு போல இந்த படைப்பு .நன்றி நன்றி நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by அப்துல்லாஹ் Sun 18 Sep 2011 - 12:37

சொல்ல வேண்டிய அருமையான செய்திகளை கிளிப்பிள்ளைக்கு சொல்லித்தருவது போல இலகுவாக விளங்க வைக்கும் பாங்கு கான் அவர்களின் தனிச் சிறப்பு...
நல்ல பயனுள்ள கட்டுரை. பதிந்து பகிர்ந்தமைக்கு கான் சாருக்கு என் அன்பும் மகிழ்ச்சியும் பகிர்ந்து கொள்ள....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 13:10

அனைவருக்கும் தேவையான சிறந்த தகவல்கள் சிறப்பாக தொகுத்து வளங்கிய அன்பு உறவு கான் ஜீ அவர்களுக்கு நன்றி இன்னும் உங்கள் படைப்புகள் சேனையை அலங்கரிக்கட்டும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by ஹம்னா Sun 18 Sep 2011 - 14:39

நண்பன் wrote:அனைவருக்கும் தேவையான சிறந்த தகவல்கள் சிறப்பாக தொகுத்து வளங்கிய அன்பு உறவு கான் ஜீ அவர்களுக்கு நன்றி இன்னும் உங்கள் படைப்புகள் சேனையை அலங்கரிக்கட்டும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
@. @.


நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Sep 2011 - 14:55

உண்மையில் இதுநாள்வரை நானும் பல சந்தேகங்களுடன் தான் இருந்தேன் இன்றுதான் மிகத்தெளிவு பிறந்திருக்கிறது இந்தவருட ஆரம்பத்தில்தான் நானும் லப்டொப் கொள்வனவு செய்தேன் இந்த பதிவின் பின்னர்தான் புரிந்து கொண்டேன் நானும் தரமான ஒரு லப்பைத்தான் வாங்கியிருக்கிறேன் என்பது மிக்க நன்றி தங்களின் இந்த அரிய பதிவுக்கும் விளக்கத்திற்கும்
உண்மையில் எமது தளங்களில் இடும் போது அதிகமாக பார்வையிடுவது குறைவு இவ்வாறான பொதுத்தளங்களில் பதியும்போதுதான் பார்வையிட ஞாபகமே வருகிறது உங்களது அரிய படைப்புகளை உங்கள் புளோக்கரில் பிரசுரிக்கும்போதே இங்கும் பதிந்து லிங் கொடுத்து விடுங்கள் மிகப்பெரும் சேவையாக அமைந்துவிடும்
செய்வது மிகவும் அரிய சேவை அதுவும் அடையாதவர்களையும் சென்றடைய வாய்ப்பாக அமையும்

ஐசாக்கள்ளாஹ் கைர்


நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by mdkhan Sun 18 Sep 2011 - 15:03

மிக்க நன்றி !

கலைநிலா, அப்துல்லாஹ், நண்பன், ஹம்னா, ஹாசிம் உங்கள் அனைவரின் பார்வைக்கு இந்த பதிவை கொடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் மூலம் புதிதாக லேப்டாப் வாங்கும் நண்பர்களுக்கு சில பயனுள்ள தகவ்கள் போய் சேறும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

- அன்புடன்: கான்

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் 2737039178
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by நிலாம் Sun 18 Sep 2011 - 15:03

மிக மிக தேவையான ஒரு பதிவு மிக்க நன்றி கான் சார்


நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் 480414 நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் 517195
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by mdkhan Sun 18 Sep 2011 - 15:04

nilam8355 wrote:மிக மிக தேவையான ஒரு பதிவு மிக்க நன்றி கான் சார்


நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் 480414 நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் 517195


நன்றி ! நிலாம்......

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் 2737039178
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by *சம்ஸ் Sun 18 Sep 2011 - 20:55

சிறப்பான பதிவை அருமையாக பகிர்ந்தமைக்கு நன்றி கான் இது போன்று அரிய அருமையான பதிவுகளை எங்களுக்கு தாருங்கள்.


நட்புடன் சம்ஸ்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by mdkhan Sun 18 Sep 2011 - 21:21

நன்றி ! சம்ஸ்.......உங்களின் வாழ்த்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி

mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by rinos Sun 18 Sep 2011 - 21:55

நண்பன் wrote:அனைவருக்கும் தேவையான சிறந்த தகவல்கள் சிறப்பாக தொகுத்து வளங்கிய அன்பு உறவு கான் ஜீ அவர்களுக்கு நன்றி இன்னும் உங்கள் படைப்புகள் சேனையை அலங்கரிக்கட்டும்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
@. @. :”@: :”@:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by kalainilaa Sun 18 Sep 2011 - 22:33

mdkhan wrote:மிக்க நன்றி !

கலைநிலா, அப்துல்லாஹ், நண்பன், ஹம்னா, ஹாசிம் உங்கள் அனைவரின் பார்வைக்கு இந்த பதிவை கொடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் மூலம் புதிதாக லேப்டாப் வாங்கும் நண்பர்களுக்கு சில பயனுள்ள தகவ்கள் போய் சேறும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

- அன்புடன்: கான்

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் 2737039178
@. @. @. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by mdkhan Tue 20 Sep 2011 - 7:51

நன்றி ! கலைநிலா மற்றும் RINOS.
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by jasmin Tue 20 Sep 2011 - 9:38

அனைவருக்கும் தேவையான குறிப்புக்களை அழகாக சொல்லியிருக்கிறார் கான் வாழ்த்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by mdkhan Tue 20 Sep 2011 - 10:10

நன்றி ! ஜாஸ்மீன்......
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by Atchaya Tue 20 Sep 2011 - 10:49

என்னைப் போல் குறைந்த கல்வி கற்றவர்களுக்கு உங்களின் எளிமையான கணினி கல்வி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
உங்களின் எளிய அணுகுமுறை என்னை மிகவும் ஈர்த்து விட்டது mr கான்! :];: :];: :];:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by mdkhan Tue 20 Sep 2011 - 11:04

நன்றி ! அட்சயா........

இதுபோல் இன்னும் பல பயனுள்ள பதிவுகளை விரைவில் தருகிறேன்.
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by Atchaya Tue 20 Sep 2011 - 11:10

போட்டோ ஷாப் பணம் கொடுத்து வாங்கி இன்ஸ்டால் பண்ணனுமா? ப்ரீ யா ? இதற்கு பதிலாக வேறு எதாகிலும் இருக்கின்றதா? (புதியவன் என்பதால் கேள்விகள் சிறுபிள்ளை கேள்வி போல் இருக்கும். கோபம் கொள்ளாதீர்கள் அன்பு உறவே !)
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by mdkhan Tue 20 Sep 2011 - 11:27

இலவசமாக இணையத்தில் சில இடங்களில் கிடைக்கும்
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by இன்பத் அஹ்மத் Tue 20 Sep 2011 - 13:25

அனைவருக்கும் தேவையான சிறந்த குறிப்பு நன்றி சார்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by நிலா Tue 20 Sep 2011 - 19:17

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் 517195 நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் 517195
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்...  அன்புடன்: கான் Empty Re: நீங்க லேப்டாப் வாங்க போரீங்களா உங்களுக்காக சில டிப்ஸ்... அன்புடன்: கான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum