சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

வேண்டாமே விபரீதம்: கூடங்குளம் அணுமின் நிலையம்!? Khan11

வேண்டாமே விபரீதம்: கூடங்குளம் அணுமின் நிலையம்!?

2 posters

Go down

வேண்டாமே விபரீதம்: கூடங்குளம் அணுமின் நிலையம்!? Empty வேண்டாமே விபரீதம்: கூடங்குளம் அணுமின் நிலையம்!?

Post by nazimudeen Wed 28 Sep 2011 - 9:41



வேண்டாமே விபரீதம்: கூடங்குளம் அணுமின் நிலையம்!? ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132a6db325c0e065&attid=0




யற்கையின்
இடர்பாடுகளால் மட்டுமல்ல, மனிதனின் சின்னஞ்சிறு தவறுகளினாலோ அல்லது
இயந்திர & மின்னணு சாதனங்களின் சின்னஞ்சிறு பழுதுகளினாலோ கூட
மிகப்பெரிய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன என்பது தான் அணுமின் நிலையங்களின்
வரலாறு. இதற்கு அமெரிக்காவின் ’த்ரீ மைல் ஐலேண்ட்’, ரஷ்யாவின் ’செர்னோபில்’
விபத்துக்களை உதாரணமாகக் கூறலாம்.




தவறான முடிவுகளை மிகச்சரியாக எடுப்பதில் நமது இந்திய நடுவண் அரசிற்கு
நிகர் வேறெதுவுமில்லை என்பதை நிரூபிப்பது போலத்தான் சமீபகால நிகழ்வுகள்
இருக்கின்றன. அதிலொன்று தான் கூடங்குளம் அணுமின் நிலையம். இயக்கத்தில்
இருக்கும் அணுமின் நிலையங்களை படிபடியாக மூடுவிழாவினை மேற்கத்திய
நாடுகளுடன் (அமெரிக்கா, ஐரோப்பா) தரத்திற்கும், பாதுகாப்பிற்கும்
உலகப்புகழ் பெற்ற, இயற்கையின் சீற்றத்தால் சீண்டப்பட்டு பேரழிவிற்கு உள்ளான
ஜப்பானும் நடத்திக்கொண்டேயிருக்க…. இந்தியா மட்டும் ஏனோ இதில் பேரார்வம்
காண்பிக்கின்றது. இதில் என்ன ஒரு கேலி என்றால், கூடங்குளம் அணுமின்
நிலையமனாது ரஷ்ய தொழில்நுட்பத்துடன் 4 அடுக்கு பாதுகாப்புகளுடன் கூடியது
என்கின்றனர். ஆனால் அந்நாட்டில் நிகழ்ந்த செர்னோபில் அணுமின் நிலைய விபத்து
தான் உலகிலேயே மிகக் கொடூரமானது.




த்ரீ மைல் ஐலேண்ட்(அமெரிக்கா) : 1979ம் ஆண்டு மார்ச் மாதம் 28ந் தேதி
அணு உலையினைக் குளிரூட்டும் சாதனத்தின் ஒரு இயந்திர வால்வில் ஏற்பட்ட
பழுதால், உலையினை குளிரூட்ட வேண்டிய திரவம் வராததினால், அதே நேரத்தில்
உலையிலுள்ள திரவத்தினை வெளியேற்றும் பம்ப்புகள் பணிபுரிந்ததால் அந்த
உலையின் உஷ்ணம் கூடியது. மாற்று ஏற்பாடாக எமர்ஜென்ஸி கூலிங் ஸிஸ்டம்
இருந்தும் போதுமானதாக இல்லை. குறை எங்கேயுள்ளது எனக் கண்டறிவதற்கே 2 மணி
நேரமாக அதற்குள் ஹைட்ரஜன் கூடிப்போக அவ்வுலை வெடித்து சிதறியது.




செர்னோபில் (ரஷ்யா): 1986ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ந்நதேதி
மின்நிலையத்தின் ஒரு யூனிட் வழமையான இயக்கத்திலன்றி, உலையின் பாதுகாப்பு /
மின்உற்பத்தி திறனை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். பரிசோதனையின் போது
நிகழ்ந்த விளைவுகள் சீராக இன்றி தாறுமாறாக வந்தவண்ணமிருந்தன.
கிராஃபைட்டுகளைக் கொண்டு இவர்கள் சில சோதனை முயற்சிகளை புரியும் போது
எதிர்பாராத விதமாக பெருந்தீ மூள அதனை அணைக்க திரவ நைட்ரஜன், மணல்,
நியூட்ரான்களை உள்வாங்கும் இராசயனங்கள் என வான் வழியாகவும், தரைவழியாகவும்
வரை கிட்டத்தட்ட 5000டன் (1 டன்= 1000கிலோ) பொருட்களை வீசிய பின்பே
தீயினைக் கட்டுக்குள் கொணர முயன்றது. இரண்டு நாட்களாக நிகழ்ந்த
இப்போராட்டங்களை வெளியுலகிற்கு தெரியாமலே இருக்க, வான் மேகக் கூட்டங்கள்
வாயிலாகவும், அங்குள்ள பறவை போன்ற உயிரினங்கள் மக்கள் அடர்த்தி மிகுந்த
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அணுக்கதிர் வீச்சையும் கழிவுகளையும் கொண்டு
சேர்த்தது.




[size=16]சு
வீடன் நாட்டு விஞ்ஞானிகளிகள் கிழக்கிலிருந்த
வந்த இயல்பிற்கும் மீறிய கதிர்வீச்சினைக் கண்டுபிடித்த பின்னரே உலக
அரங்கிற்க்கு இவ்விபத்து குறித்து தெரிய வந்தது. இரண்டாம் உலகப்போரில்
அமெரிக்கா ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டு வீசிய போது எழுந்த
கதிர்வீச்சினை விட 200 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருந்தது ரஷ்யாவின்
“செர்னோபில்” அணுமின் நிலைய விபத்தில்!




மற்ற ஆலைகளைப்போல் அணுமின் நிலையக் கழிவுகளை அவ்வளவு எளிதாக கருத்தில்
கொள்ளமுடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு சேமித்து பாதுகாப்புடன்
வைத்திருக்க வேண்டும். அணுகழிவுகளுக்காக 3 இலட்ச டன் சிமெண்ட்
அடர்த்திகொண்டு கான்கிரீட்டால் கட்டப்பட்ட அறையே விபத்திற்க்குப் பின்பு
இன்று கேள்விக்குறியாகிவிட்டது.



நம் நாட்டின் மொத்தத் தேவையான மின்சாரத்தில் 5% கூட ஒட்டு மொத்த
அணுமின்நிலையங்களால் கொடுத்துவிட முடியாது. உலகமே இதற்கு படிப்படியாக
மூடுவிழா நடத்தும் போது வளர்ந்த நாடுகள் நமக்கிற்கு உதவ முன்வருவதை
நினைத்தால்... அவர்களின் ஆராய்ச்சிக்கும், பரிசோதனைக்கும் நாம் ஒரு தளமாகி
வருகின்றோமோ எனும் ஐயம் நிறையவே எழுகின்றது.



இதுவரை மிகப்பெரியத் தொகையினை முதலீடு செய்த பின்பு பின்வாங்குவது உசிதமல்ல
என்கின்ற பொருளாதார / வணிக சிந்தனையை கழற்றிவிட்டு, மின் அணு உலை
விபத்தில் மாசடைந்த செர்னோபில் நகரை தூய்மைப்படுத்த இன்னமும் இயலவில்லை
என்கின்ற வேதனையான உண்மையினை உணர்ந்து வருங்காலங் குறித்த தொலைநோக்குப்
பார்வையுடன், மனித சமூகத்தின் பாதுகாப்பு உணர்வுடன் அணுக வேண்டியது தான்
இன்றைய தேவை!




பேரழிவு என்பது விபத்தின் போது மட்டுமல்ல… அதன்பின் வரும் பல
தலைமுறைகளுக்கும் புற்றுநோய் போன்றவைகள் மட்டுமல்ல.. மரபணு மாற்றங்களால்
மனித இனம் உட்பட அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படும் என்பதற்குச் சான்றாக
உள்ள புகைப்படங்கள் கொடூரமாக உள்ள காரணத்தினால் இந்தப் பதிவில்
சேர்க்கவில்லை.




சிக்கிமில் நிகழ்ந்த நிலநடுக்கம், கூடங்குளத்தில் நிகழாது என்பது என்ன நிச்சயம்?! இயற்கையை துல்லியமாகக் கணிப்பவர்கள் எவருமில்லை.





ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரிடும்
போது முக்கிய நகரங்களை மட்டுமல்ல தொழிற்சாலைகளையும், அணுமின்
நிலையங்களையும் தாக்கும் அபாயம் உள்ளது. 1980லிருந்து இதுவரை 6 முறை அணு
உலைகளின் மீது தாக்குதல் உலக நாடுகள் ஒன்றையொன்று தாக்கிக் கொள்ள முயற்சி
நடந்துள்ளது.






வறட்டுக்
கொள்கைகளுக்காகவோ அல்லது அரசியற் காழ்ப்புணர்விற்க்காகவோ கண்மூடித்தனமாக
அணுமின் நிலையங்களை எந்நிலையிலும் வரவேற்க வேண்டாம்!






கூடங்குள
மக்களின் போராட்டத்திற்க்கு தார்மீக ஆதரவு தெரிவிப்போம்! இது ஏதோ அந்த ஊர்
மக்களின் பிரச்னை என்றிராமல், ஒட்டுமொத்த தமிழகமும் அணிதிரண்டு ஆளும்
அரசிற்கு உணர்த்துவோம்! வென்றிடுவோம்!!

[/size]



நன்றி: தமிழ் தாயகம்
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

வேண்டாமே விபரீதம்: கூடங்குளம் அணுமின் நிலையம்!? Empty Re: வேண்டாமே விபரீதம்: கூடங்குளம் அணுமின் நிலையம்!?

Post by நண்பன் Wed 28 Sep 2011 - 10:23

இப்படியெல்லாம் அழிவுகள் நடந்துள்ளதா வேண்டாமே விபரீதம்: கூடங்குளம் அணுமின் நிலையம்!? 273751
இதெல்லாம் தெரிந்துமா இந்தியா தயங்காமல் முன் வந்துள்ளது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறதென்பதை 😕


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum