சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  Khan11

மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்

5 posters

Go down

மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  Empty மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Sep 2011 - 14:27

மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  Red_onions

மனிதனோட மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது வெங்காயம்.




ரத்தத்தைச் சுத்திகரிக்கும் என்கிற நம்பிக்கை இருந்ததால் பண்டைய கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக உட்கொண்டார்கள். ரோமைச் சேர்ந்த மல்யுத்த வீரர்கள், வெங்காயத்தை அரைத்து உடம்பில் பூசி கொள்வார்கள்.
இதற்கு உடல்வலிமையை அது கூட்டும் என்ற நம்பிக்கை தான் காரணம். வெயிலில் அலைந்து, வியர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள்ளேயே வந்ததும் சிலருக்கு நீர்ச்சுருக்கு வந்துவிடும். ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும்.

வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லையா? அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடுங்கள். சில நிமிடங்களில் நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் உடம்பில் ஏற்படும் கட்டிகளுக்கு வெங்காயம் மூலம் நிவாரணம் பெறலாம்.
வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து புண் உள்ள இடங்களில் தடவி வந்தால் கொப்புளம் உடைந்து சீழும், கிருமிகளும் வெளியேறும். வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டாலும் உடல் சூடு தணியும்.


மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  Empty Re: மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Sep 2011 - 14:29

மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  The+Onion-+A+True+Superfood
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.


மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  Empty Re: மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 30 Sep 2011 - 14:29

மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  10895
வெங்காயம் கார சட்னி


சின்ன வெங்காயம் - 1/4 கிலோ

காய்ந்த மிளகாய் - 10

பூண்டு - 2 பல்

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

புளி - சிறிதளவு

கடுகு - 1 தேக்கரண்டி

கருவேப்பில்லை - 5 இலை

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி


முதலில் வெங்காயத்தினை தோல் உரித்து கொள்ளவும்.

பின் ஒரு கடாயில் காய்ந்த மிளகாயினை போட்டு வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.

பின அதே கடாயில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயத்தினை போட்டு வதக்கவும்.

பிறகு வெங்காயத்தினை சிறிது நேரம் ஆறவிடவும்.

அதன் பின் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

ஒர் பனில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் கடுகு சேர்த்து தாளித்து பின் அதில் கருவேப்பில்லை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.

இதனை அரைத்து வைத்துள்ள வெங்காயத்துடன் சேர்த்து கிளறவும்.

இப்பொழுது சுவையான வெங்காயம் கார சட்னி ரெடி.


மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  Empty Re: மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்

Post by ஹம்னா Fri 30 Sep 2011 - 16:39

வெங்காயத்தைப்பற்றிய கட்டுரை மட்டும் தராமல்
வெங்காய சமையல் குறிப்பையும் சேர்த்து தந்த ஹாஸிம் அண்ணாவிற்க்கு நன்றிகளு பாராட்டுகளும்.


மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  Empty Re: மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்

Post by Inudeen Fri 30 Sep 2011 - 18:48

வெங்காயம் வெங்காயம்தான் மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  480414
Inudeen
Inudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  Empty Re: மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்

Post by நண்பன் Fri 30 Sep 2011 - 20:30

ஹம்னா wrote:வெங்காயத்தைப்பற்றிய கட்டுரை மட்டும் தராமல்
வெங்காய சமையல் குறிப்பையும் சேர்த்து தந்த ஹாஸிம் அண்ணாவிற்க்கு நன்றிகளு பாராட்டுகளும்.
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  Empty Re: மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்

Post by *சம்ஸ் Fri 30 Sep 2011 - 20:34

ஐனுதீன் wrote:வெங்காயம் வெங்காயம்தான் மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  480414

இது எங்களுக்கு தெரியாத விடையம் நல்ல வருகிறது எனக்கு சிரிப்பு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  Empty Re: மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்

Post by *சம்ஸ் Fri 30 Sep 2011 - 20:36

நண்பன் wrote:
ஹம்னா wrote:வெங்காயத்தைப்பற்றிய கட்டுரை மட்டும் தராமல்
வெங்காய சமையல் குறிப்பையும் சேர்த்து தந்த ஹாஸிம் அண்ணாவிற்க்கு நன்றிகளு பாராட்டுகளும்.
@. @.

ரிபீட் @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்  Empty Re: மிகப்பழமையான உணவுகளில் மிக முக்கியமான ஒன்று இந்த வெங்காயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum