சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53

» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

பற்கள்: இறுதிவரை உறுதி பெற... Khan11

பற்கள்: இறுதிவரை உறுதி பெற...

2 posters

Go down

பற்கள்: இறுதிவரை உறுதி பெற... Empty பற்கள்: இறுதிவரை உறுதி பெற...

Post by gud boy Sat 1 Oct 2011 - 18:48

- வைட்டமின் `சி' சத்து குறைபாடு!

- மது அதிகமாக அருந்துதல்!

- சத்துள்ள உணவுகளை சாப்பிடாமல் இருத்தல்...

போன்றவைகளால் பல் ஈறு நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. சிகரெட், `பான்', புகையிலை, பல்குச்சி உபயோகம் இவைகளும் ஈறு நோயை உண்டு பண்ணும். சொத்தைப் பல், பல்லில் பெரிய ஓட்டை, செயற்கைப் பல் செட் சரியாக பொருந்தாமை, பற்கள் வரிசையாக சீராக இல்லாமை, இவைகளும் ஈறு நோயை உண்டு பண்ணும்.

சர்க்கரை வியாதி, கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிடுதல் இவைகளும் ஈறுநோயை உருவாக்கும். சரிவர பல் துலக்காமலிருத்தல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, மற்ற நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகளின் பக்க விளைவுகள், ரத்தப் புற்றுநோய், எய்ட்ஸ் நோய் இவைகளும் மெதுவாக பல் ஈறுகளை பாதிக்கச் செய்து ஈறு நோயை உண்டு பண்ணுகிறது.

பல், ஈறு நோயின் ஆரம்ப அறிகுறிகள்:

எந்தப் பக்கம் பல் ஈறு பாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்தப் பக்க கன்னம் வீக்கம், ஈறு வீக்கம், ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதல், தாங்க முடியாத வலி, பற்களில் கூச்சம், பற்களைச் சுற்றி சீழ் வடிதல், மெல்லுகின்றபோது அதிகவலி, வாய் துர்நாற்றம் ஆகியவை. காறை இருக்கும் பற்களின் அடிப்பகுதியில் ஈறுகளும் பாதிப்புக்கு உள்ளாகும்.

ஈறுகள் பாதிக்கப்பட்டால் உள்ளேயிருக்கும் எலும்பும் பாதிக்கப்படும். ஈறும் எலும்பும் பாதிக்கப்பட்டால் பல்லுக்கு இயற்கையாக கிடைக்கக் கூடிய பக்கபலம் போய்விடும். பக்கபலம் இல்லாவிட்டால் பல் ஆட ஆரம்பித்துவிடும். அப்புறம் அவ்வளவுதான், உங்களுக்கே தெரியும். அந்தக் கெட்டுப்போன பல் தானாக விழ வேண்டும் அல்லது அது பிடுங்கப்பட வேண்டும்.

இதில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக நடந்தே தீரும். சமீபத்தில் நெல்லை சென்றிருந்தபோது வயதான ஒருவரைச் சந்தித்தேன். எல்லாப் பற்களும் தெரிய மிக லட்சணமாக இருந்தார், சிரித்தார். அதில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. எல்லாப் பற்களும் தெரிய சிரித்த அவரைப் பார்த்த எனக்கே அந்தக் காட்சி, மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

உங்கள் பற்களின் ரகசியம் என்ன? என்று கேட்டேன்.

அதிகாலையில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போதே வேலங்குச்சியால் பற்களை சுத்தமாக துலக்கி, நன்றாக பலமுறை ஆற்று தண்ணீரில் கொப்பளித்து முடித்து விடுவேன். மறுபடி மாலையிலும் வீட்டில் ஒரு முறை இதே மாதிரி செய்து விடுவேன்.

எந்த உணவையும் நன்றாக மென்று சாப்பிடுவேன், பற்களுக்கிடையில் உணவுத் துண்டுகள் தங்க விட மாட்டேன். மென்று சாப்பிட, சாப்பிட பற்களுக்கும் ஈறுகளுக்கும் பற்களைத் தாங்கியிருக்கும் தாடை எலும்புகளுக்கும் நல்ல பலம் கிடைக்கிறது. இதுதான் அவரது பளிச் பற்களின் ரகசியம்.

அவரது வயது என்ன தெரியுமா?

86.

அசந்துவிட்டேன். ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையில் இடைவெளியே இல்லை. எல்லாப் பற்களும் ஒழுங்காக வரிசையாக அவருக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நாம்தான் இந்தக் காலத்தில் அசைவ உணவை சாப்பிட்ட பின் பற்குச்சியைக் கொண்டு பற்களைக் குத்தி, குத்தி பற்களுக்கு இடையிலுள்ள இடைவெளியை அதிகமாக்கி விடுகிறோம்.

அது உணவுப் பொருட்களும், அழுக்குகளும் சேருவதற்கு அதிக வாய்ப்பாகி விடுகிறது. நம்மை அறியாமலே நாம் செய்யும் தவறு இந்தப் பல் குத்தும் பழக்கம். பல்லின் அடிப்பகுதி, பல்லைச் சுற்றியுள்ள ஈறு பகுதி, ஈறுக்கு அடியிலுள்ள எலும்புப் பகுதி இவை எல்லாமே சேர்ந்து பாதிக்கப்படும் நோய்க்கு `பெரிஓடன்டல் நோய்' என்று பெயர்.

உங்களது குடும்ப பல் டாக்டரிடம் சென்று உடனே இதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். பற்களின் வெளிப் பக்கமும், உள்பக்கமும் படிந்திருக்கும் காறையை கிளீன் பண்ணிக்கொள்ள வேண்டும். பல் டாக்டர்தான் பல்லுக்கு சிகிச்சை அளித்துவிட்டாரே என்று நினைத்துக்கொண்டு பற்களைப் பற்றி கவனமில்லாமல் இருக்கக்கூடாது. உங்களது கவனம்தான் ரொம்ப ரொம்ப முக்கியம்.

பற்கள் இறுதி வரை உறுதியாக இருக்க வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியவை:

* ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

* பற்களுக்கிடையில் அழுக்கு, காறை சேராமலிருக்க தினமும் பற்களுக்கிடையில் நூலை நுழைத்து முன்னும் பின்னும் இழுத்து இழுத்து கிளீன் பண்ணவேண்டும்.

* ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் நிறைய தண்ணீர் கொண்டு வாயை நன்றாக பலமுறை கொப்பளியுங்கள்.

* சாப்பிட்ட பின் வாயை வெளியே மட்டும் தண்ணீரால் துடைத்துவிட்டு வந்துவிடாதீர்கள். பலபேர் இதைத்தான் செய்கிறார்கள். இது மிகப்பெரிய தவறு. கேட்டால் வாய் கழுவும் தண்ணீர் உப்பாக இருக்கிறது என்பார்கள். அல்லது சாப்பிட்ட டேஸ்ட் போய்விடுமாம். இந்த இரண்டு பதிலுமே தவறானது.

* நான்கு அல்லது ஐந்து மாதத்துக்கொரு முறை பிரஷ்ஷை மாற்றிவிடுங்கள்.

ஒவ்வொரு பல்லுக்கும் அடியில் அதாவது வேர்ப்பகுதியில் ரத்தக்குழாயும், நரம்பும் இருக்கின்றன. ரத்தக்குழாயும், நரம்பும் கடுமையாக பாதிக்கப்பட்டால் தாங்க முடியாத பல்வலி, வீக்கம், பல் கூச்சம், ரத்தம் மற்றும் சீழ் வடிதல் முதலிய நிறைய பிரச்சினைகள் இந்த பாதிக்கப்பட்ட பல்லுக்கு ஏற்படும்.

முன்பெல்லாம் தாங்க முடியாத வலியுடன் மிகமிக கெட்டுப்போன ஒரு பல்லுடன் ஒருவர் டாக்டரிடம் வந்தால் அந்தப் பல்லைப் பிடுங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது அப்படியில்லை. ரூட் கெனால் தெரப்பி என்று சொல்லக்கூடிய சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்ட அந்தப் பல்லை பிடுங்காமல் சிகிச்சை அளித்து காப்பாற்றி விடலாம்.

விபத்தினால் பல் பாதிக்கப்பட்டாலோ, பல் உடைந்து போனாலோ பல்லில் ஓட்டை விழுந்திருந்தாலோ பல்லின் அடிப்பாகத்தில் சீழ் கட்டியிருந்தாலோ மேற்சொன்ன சிகிச்சை கைகொடுக்கும்.

இந்த சிகிச்சை முறையில் பல்லுக்கு அடியிலுள்ள பாதிக்கப்பட்ட நரம்பையோ, சீழையோ பல்லுக்கு நடுவில் மெல்லிய ஊசியை நுழைத்து உள்ளே போய் சுத்தம் செய்து எடுத்துவிட்டு பல்லுக்குள் ஏற்பட்ட ஓட்டையை அடைத்து விடுவார்கள். ஆனால் இது ஒரே ஒரு தடவையில் முடிகிற காரியமல்ல. சுமார் மூன்று அல்லது நான்கு முறை பல் டாக்டரிடம் சென்றுதான் ஆக வேண்டும்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பற்கள்: இறுதிவரை உறுதி பெற... Empty Re: பற்கள்: இறுதிவரை உறுதி பெற...

Post by Atchaya Sat 1 Oct 2011 - 18:52

அசத்தலான அருமையா பதிவுகளைத் தொடரும் கிவி அன்பு தோழருக்கு பாராட்டுக்கள்.... :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum