சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

ஏ. டி. எம். இயந்திரங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருப்பது எப்படி? Khan11

ஏ. டி. எம். இயந்திரங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

Go down

ஏ. டி. எம். இயந்திரங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருப்பது எப்படி? Empty ஏ. டி. எம். இயந்திரங்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

Post by gud boy Thu 6 Oct 2011 - 21:23


ஏ. டி. எம். என்று சொல்லப்படும் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரகளைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் இருப்பதில்லை. அரைகுறையாய், ஏதோ தெரிந்ததை செய்து அவதிப்படுபவர்கள் தான் அதிகம். சின்ன சின்ன நுணுக்கங்களை தெரிந்து கொண்டால் சிக்கல் இல்லாமல் ஏ. டி. எம். இயந்திரத்தை பயன்படுத்தலாம்.

பணம் வழங்கும் இயந்திரங்கள் பலவகைப்பட்டவை. சிலவற்றில் அடையாள அட்டையை அதற்குரிய துளையில் சொருகி, உடனே வெளியில் எடுத்து விட வேண்டும். வேறு சில இயந்திரங்கள் அட்டையை உள்ளே இழுத்துக்கொண்டு ஒரு சில நொடிகள் கழித்தே வெளியே தள்ளும்.

அடையாள அட்டையின் ஓரத்தில் கருப்பு நிறப்பட்டை ஒன்று இருக்கும். அட்டையின் மேல், கீழ் பக்கங்களை எப்படி வைத்துக் கொண்டு இயந்திரத்திற்குள் கொடுக்க வேணும் என்பதற்கு ஓர் அம்புக்குறி அடையாளம் இருக்கும். அதைக் கவனித்து அதன்படி செருக வேண்டும்.

நீங்கள் வைத்திருக்கும் கணக்கு எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். பெரும்பாலும் சேமிப்புக் கணக்கிற்கான அட்டையைதான் அதிகம் வைத்திருப்பார்கள். சிலர் நடப்புக் கணக்கிற்கான அட்டையை வைத்திருக்கலாம். பணம் வழங்கும் இயந்திரம் உங்களுடைய கணக்கு எந்த வகையைச் சேர்ந்தது என்று கேட்கும். குறிப்பிட்ட கணக்கிற்கு நேராக உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். இயந்திரத்தின் முன் பக்கவாட்டில் நின்று கொண்டு இயக்குபவர்களுக்குப் பார்வைக் கோணம் வேறுபாடும். சேமிப்புக்கணக்கு என்பதற்குப் பதில் நடப்புக்கணக்கு என்பதற்குரிய பொத்தானை அழுத்திவிடுவார்கள். இயந்திரம் பணத்தை அளிக்காது.

சில நேரங்களில், இயந்திரத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பணம் மொத்தமும் கொடுக்கப்பட்டுத் தீர்ந்து போயிருக்கலாம். அம்மாதிரியான வேளைகளில் இயந்திரத்தில் சிறிய சிவப்புப் பட்டை ஒன்றில் விளக்கு எரியும்.

இதைக் கவனிக்காமல் தொடர்ந்து பணம் எடுப்பதற்கு முயற்சிக்கக்கூடாது.

மேலும், எந்த வகை நாணயத்தாள்கள் இயந்திரத்தின் உள்ளே வைக்கப்பட்டு இருக்கின்றனவோ அவற்றை மட்டும்தான் இயந்திரத்தால் வழங்க முடியும்.

இயந்திரத்திற்குள் ஐம்பது ரூபாய்த் தாள்களே வைக்கப்படாமல் இருக்கு. பணம் எடுக்க விரும்புகிறவர், இயந்திரத்தை இருநூற்றைம்பது ரூபாய் கொடு என்று கேட்டால் அது எப்படிக் கொடுக்கும்?

இதேபோல் பெரிய தொகைக்கான தாள்களும் தீர்ந்து போய் இருக்கலாம். நமக்கு ஆயிரம் ரூபாய்த் தாள்கள் தான் வேண்டும். இந்த இயந்திரம் ஐந்நூறு ரூபாய் தாள்களைதானே கொடுகிறது என்று குறைபட்டுக் கொள்ளக்கூடாது.

இயந்திரத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக, அடையாள அட்டையை எடுத்துக் கொண்டோமோ என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எடுக்கப்பட்ட பணத்தை அம்மையத்தில் உள்ள காமிராவின் முன் நின்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பின்னாளில் எடுக்கப்பட்ட பணத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் காமிராவில் பதிந்திருக்கும் காட்சிகள் நம் தரப்பு நியாயங்களை சொல்ல உதவும்.

பணம் எடுக்கும் அறைக்குள் வேறு யாரும் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் உள்ளே நுழைய முயற்சிக்க வேண்டாம்.

நீங்கள் உள்ளே இருக்கும்போது உங்களுக்கு பின்னால் வேறு யாரேனும் நின்று கொண்டிருக்கக்கூடும். எச்சரிக்கையாக திரும்பிப் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகே இயங்குங்கள்.

- நன்றி தினதந்தி தொழில் மலர்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum