Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
தேவையற்ற உணவுகளை உண்பதால்
+2
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
தேவையற்ற உணவுகளை உண்பதால்
எதை உண்பது என்று அறியாமல் பசிக்கும் போதெல்லாம் கிடைத்ததை சாப்பிடுவதனால் உடல் எடை கூடி அவதிப்படுபவர் பலர். தேவையற்ற உணவுகளை உண்பதால் உடலில் உள்ள ஜீரணமண்டலம்தான் அதிகம் சிரமப்படுகிறது.
உணவை அரைத்து சத்தாக மாற்ற முடியாமல் போவதால் செரிமானக்கோளறுகள் ஏற்படுவதோடு பல வித நோய்களால் உணவுக்குழல் பாதிக்கப்படுகிறது. இதில் இருந்து பாதுகாக்க நார்ச்சத்துள்ள உணவை அதிகம் உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நார்ச்சத்து நன்மைகள்
நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானமாக முக்கிய பங்காற்றுவது நார்ச்சத்து. நார்ச்சத்து இரண்டு வகைப்படும். நீரில் கரையும் நார்ச்சத்து, கரையாத நார்ச்சத்து. கரையும் நார்ச்சத்து பெரும்பாலும் கரைந்தவுடன் ஜெல்போல ஆகிவிடும். இது பெக்டின் உள்ளவை. ஓட்ஸ் உமி, ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி, உமி, பார்லி, சாத்துக்குடி – ஆரஞ்சு போன்ற ‘சிட்ரஸ்’ பழங்கள், ஆப்பிள், கோதுமை, பருப்பு இவை கரையும் நார்ச்சத்து கொண்டவை. இது நாம் உண்ணும் உணவில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும்.
கரையாத நார்ச்சத்து
கரையாத நார்ச்சத்து என்று கூறப்படும் செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், லிக்னின் உள்ளவை. இவை பழங்கள், காய்கறிகள் தானியங்களிலும், காணப்படுகின்றன. ஆப்பிள்தோல், முட்டைக்கோஸ், பீட்ரூட், காலிஃப்ளவர், கேரட், போன்றவற்றில் கரையாத நார்ச்சத்துக்கள். காணப்படுகின்றன. இவை ஜீரணத்திற்குப் உதவும், மலச்சிக்கலைப் போக்கும்.
நார்ச்சத்தின் பயன்கள்
1960 –ல், டென்னிஸ் பர்கிட் என்ற ஆங்கிலேயர் கிராமங்களில் வசிக்கும் ஆப்ரிக்க மக்களுக்கு ஒருவகைக் குடல் புற்றுநோய் தாக்குவதை கண்டறிந்தார். ஆனால் ஐரோப்பியர்களை இந்த நோய் அபூர்வமாக தாக்குகிறது என்றும் இதற்கு காரணம் அவர்கள் உண்ணும் நார்ச்சத்து உள்ள உணவுதான் என்றும் கண்டுபிடித்தார். ஐரோப்பியர்கள் அதிக நார்ச்சத்து உள்ள உணவை உட்கொள்கின்றனர் என்று டென்னிஸ் நிரூபித்தார். உணவில் நார்ச்சத்து சேர்ந்து கொள்வதால் நுரையீரல், பிராஸ்டேட், கணைய புற்று நோய்கள் தடுக்கப்படுகின்றன. அதுவும் சைவ உணவு உண்பவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைக்கிறது. இதன் பிறகே நார்ச்சத்து பற்றிய ஆய்வுகள் நார்ச்சத்தின் மேன்மையை பறைசாற்றின.
புற்றுநோயை தடுக்கும்
கரையாத நார்ச்சத்து நீரை உறிஞ்சி மலத்திற்கு அடர்த்தியையும், திடத்தன்மையையும் கொடுக்கிறது. இதனால் மலம் மிருதுவாகிறது. இதனால் மலம் எளிதில் வெளியேறுவதால் மலச்சிக்கல் மறைகிறது. இதனால் குடல் அழற்சிகள் தடுக்கப்படுகின்றன. இதன் மூலம் குடல்களில் உண்டாகும் புற்றுநோய்கள் தடுக்கப்படுகின்றன. கரையாத நார்ச்சத்தினால் வயிறு நிரம்பிய உணர்வு உண்டாகிறது. 4 முதல் 6 மணி நேரம் வரை பசி எடுப்பதில்லை. இந்த செயல்பாடுகளால் பசியைத்தூண்டும் இன்சுலினை கட்டுப்படுத்துகிறது. இது உடல் எடையை அதிகமாக்காமல் பாதுகாப்பதால் குண்டானவர்களுக்கு எடை குறைய உதவுகிறது.
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
கரையும் நார்ச்சத்து பித்த உப்பு, கொழுப்பு அமிலங்களை ஸ்பாஞ்ச் போல உறிஞ்சி மலமாக வெளியேற்றுகிறது. கொழுப்பு மற்றும் கொழுப்பு அமிலங்களை குறைக்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது. சர்க்கரை செரிமானத்தை மந்தப்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உண்டு உடல் எடையை கூட்டுவதை விட எளிதில் ஜீரணமாகும் காய்கறி உணவுகளை உண்டு ஸ்லிம்மாக உடலை மெயின்டெய்ன் பண்ணுங்க.
Re: தேவையற்ற உணவுகளை உண்பதால்
முக்கிய பகிர்வு நன்றி நண்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தேவையற்ற உணவுகளை உண்பதால்
பயனுள்ள பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தேவையற்ற உணவுகளை உண்பதால்
ஹாசிமின் இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி*சம்ஸ் wrote:முக்கிய பகிர்வு நன்றி நண்பா
சம்ஸ் நீங்கள் அதிகதிகமாக ஆடு மாடு கோழி சாப்பிடுவதை விட்டு விட்டு நமது ஹாசிம் மாதிரி அதிகதிகமாக மரக்கறி வகைகள் சாப்பிடுங்கள் என்றும் ஆரோக்கியத்துடன் வாழலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேவையற்ற உணவுகளை உண்பதால்
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தேவையற்ற உணவுகளை உண்பதால்
நண்பன் wrote:ஹாசிமின் இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி*சம்ஸ் wrote:முக்கிய பகிர்வு நன்றி நண்பா
சம்ஸ் நீங்கள் அதிகதிகமாக ஆடு மாடு கோழி சாப்பிடுவதை விட்டு விட்டு நமது ஹாசிம் மாதிரி அதிகதிகமாக மரக்கறி வகைகள் சாப்பிடுங்கள் என்றும் ஆரோக்கியத்துடன் வாழலாம்
கண்டிப்பாக தொடர்கிறேன் நண்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தேவையற்ற உணவுகளை உண்பதால்
:cheers:*சம்ஸ் wrote:நண்பன் wrote:ஹாசிமின் இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி*சம்ஸ் wrote:முக்கிய பகிர்வு நன்றி நண்பா
சம்ஸ் நீங்கள் அதிகதிகமாக ஆடு மாடு கோழி சாப்பிடுவதை விட்டு விட்டு நமது ஹாசிம் மாதிரி அதிகதிகமாக மரக்கறி வகைகள் சாப்பிடுங்கள் என்றும் ஆரோக்கியத்துடன் வாழலாம்
கண்டிப்பாக தொடர்கிறேன் நண்பா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|